Search

வேலை வேண்டுமா? - அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகலாம்

Wednesday, 27 March 2019


தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் (Computer Instructor-Grade-1) பதவியில் 814 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு இணையானது. இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் நடத்தவிருக்கிறது.

தகுதி; தேர்வு விவரம் இத்தேர்வு முதல்முறையாக ஆன்லைன் வழியில் நடத்தப்படவிருக்கிறது.

அனேகமாக மே மாதம் தேர்வு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. பி.எட். பட்டம் பெற்ற எம்.எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி), எம்.சி.ஏ. பட்டதாரி களும், எம்.டெக்., எம்.இ. பட்டதாரிகளும் (கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினீயரிங்) கணினி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு 57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வகுப்பினருக்கும் பொருந்தும். நேர்முகத்தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலே கணினி ஆசிரியர் வேலை உறுதி. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைத் (முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட்.) தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்.

உரிய கல்வித் தகுதி உடையவர்கள் ஆன்லைனில் விண்ணக்க வேண்டும். கூடுதல் தகவல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
Read More »

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை



 

பொதுத்துறை நிறுவனமான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் (NTRO) ஆண்டுதோறும் தேர்வு நடத்தி தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பி வருகிறது.





தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான 127 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 127

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரானிக்ஸ் - 52
2. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 75
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.





தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், பி.எஸ்சி. கம்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.





தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://ntrorectt.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ntrorectt.in/ntro/home என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Read More »

நேரு யுவகேந்திராவில் இளைஞர்களுக்கு வேலை





மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா சங்கேதனில் நிரப்பப்பட உள்ள 225 மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





மொத்த காலியிடங்கள்: 225

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: District Youth Coordinator (DYCs) - 100
பணி: Accounts Clerk cum Typist (ACTs) - 73
வயதுரம்பு: 0 1.01.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff (MTS) - 52
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.





தகுதி: ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கும், பிளஸ் 2 முடித்து தட்டச்சு மற்றும் கணினி அறிவு பெற்றவர்கள் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. ஓபிசி பெண்கள் ரூ.350. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://nyks.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.





மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://nyks.nic.in/recruitment/GuidelinesEnglish15032019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2019
Read More »

ஏய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் வேலை



 

மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு ஏய்ம்ஸ் மருத்துவமனையின் ஜோத்பூர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





மொத்த காலியிடங்கள்: 139

பணி: Professors

வயதுவரம்பு: 50 முதல் 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 7-வது ஊதியக்குழுவின் விதிமுறைப்படி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.3000. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1000, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.





விண்ணப்பிக்கும் முறை: www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2019
Read More »

தேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.?


தேசிய கடல்சார் பல்கலைக் கழக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்விற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அப்பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.





இதுகுறித்து கடல்சார் பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

தேசிய கடல்சார் பல்கலைக் கழகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக் கழகத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 23 கல்லூரிகளில் கடல்சார் படிப்புகளில் சேருவதற்கு எம்யூசெட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.





அதன்படி, வரும் கல்வியாண்டிற்கான நிதியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.imu.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பித்த வேண்டும்.



Read More »

ரயில்வே சுற்றுலாத்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு





இந்திய ரயில்வேயின் சுற்றுலாக்கழகத்திற்கு சொந்தமான உணவகங்களில் (ஐஆர்டிசிடிசி) நிரப்பப்பட உள்ள 74 மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேற்பார்வையாளர் (Supervisor (Hospitality))

காலியிடங்கள்: 74

பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா

சம்பளம்: மாதம் ரூ. 25,000 + இதர சலுகைகள்

தகுதி: Hospitality & Hotel Administration பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 1.3.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 2 ஆண்டுகள்


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றுகள் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019 முதல் 12.04.2019 வரை

1. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition(Catering College), G.V.Raja Road, Kovalam, Thiruvanthapuram, Kerala - 695 527.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019


2. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. Near M.S.Building & SKSJTI Hostel, S.J.Polytechnic Campus, Bengaluru - 560 001.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2019

3. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. 4th Cross Street, C.I.T.Campus, Tharamani PO, Chennai - 600 113
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.04.2019


இது குறித்து மேலும் முழுமையான விபரங்கள் அறியhttps://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/3/23/Notification-Contract_Supervisors-Catering-SZ.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Read More »

106 காலியிடங்களுக்கான ஜியாஜிஸ்ட் தேர்வு - 2019: யுபிஎஸ்சி அறிவிப்பு





மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 2019 ஆம் ஆண்டிற்கான Geologist & Geo-Scientist தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





தேர்வு: UPS - Combined Geo Scientist and Geologist Exam - 2019

மொத்த காலியிடங்கள்: 106

பணி வாரியான காலியிடங்கள் விவரம்:
Geologist - 50
Geophysicist - 14
Chemist - 15
Junior Hydrogelogists - 27

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். Junior Hydrogelogists பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.





தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, பெங்களூரு, திருனந்தபுரம், ஹைதராபாத்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.





விண்ணப்பிக்கும் முறை: www.upsonline.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2019

தேர்வு நடைபெறும் தேதி: 2 8.06.2019a
Read More »

அஞ்சல்துறையில் 4442 பணியிடங்கள்!

Post Office to distribute Atal pension scheme

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் வேலை காத்துள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கிராமப்புற ஊழியர்களுக்கான ஞசகஐசஉ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்துத்தேர்வு கிடையாது. பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மொத்தம் 4442 காலி பணியிடங்களுக்கு ர்ய்ப்ண்ய்ங் தேர்வு முறையில் நடைபெறுகிறது.






18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு (Basic Computer Knowledge) பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில/ பல்கலைக் கழக/ தனியார் நிறுவனங்களில் குறைந்த பட்சம் 60 நாளுக்கு குறையாமல் கணினி படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.






இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தேர்வு செய்யப்படும் அலுவலக எல்லைக்குள் குடியிருக்க வேண்டும். கிராம அஞ்சல் அதிகாரிகளாக (BPM) தேர்வு செய்யப்படுபவர்கள், தமது சொந்த பொறுப்பில் அலுவலகத்தை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அலுவலகமானது குறைந்தபட்சம் 10 பு 10 ச.அடி என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். மின்சார வசதி பெற்றிருக்க வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய அளவில் அலுவலகம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.






இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: http://appost.in/gdsonlineதொடர்புக்கு.. Helpline number: 044-28592844 email: staff.tn@indiapost.gov.inவிண்ணப்பிக்க கடைசித் தேதி :15.4.2019.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One