Search

TNPSC Counselling Dates: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் முக்கிய அறிவிப்பு!

Saturday, 23 March 2019


கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 26, 27ம் தேதி நடக்க உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-இல் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்தாண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்தப்பட்டது.


 அதற்கான தோ்வு முடிவுகள் (தரவரிசைப் பட்டியல்) ஜூலை 30-ல் வெளியிட்டது.


 அதனைத் தொடா்ந்து தரவரிசை மற்றும் இனசுழற்சி அடிப்படையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரா்களின் விவரங்களும் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


இதையடுத்த சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர், தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


 அதன்படி, வரும் 26 மற்றும் 27ம் தேதியில் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.


சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவற்றில் பங்கேற்காதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் மறுவாய்ப்பு எதுவும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இது தொடர்பான முழுமையான விபரங்களை டிஎன்பிஎஸ்சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.tnpsc.gov.in தெரிந்து கொள்ளலாம்.
Read More »

ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது மத்திய பாஸ்போர்ட் நிறுவனம்..!


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாஸ்போர்ட் அதிகாரி, துணை பாஸ்போர்ட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Passport Officer
காலியிடங்கள்: 03
சம்பளம்: ரூ. 67,700 - 2,08,700 வரை
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 56

 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


பணி அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணியிடம்: தில்லி, சூரத், ஜலந்தர்

பணி: Passport Officer
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.78,800 - 2,09,200 வரை


தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 56

 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


பணி அனுபவம்:


துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


.
பணியிடம்:

 அகமதாபாத், கொச்சி, ஜலந்தர், மும்பை

தேர்வு செய்யப்படும் முறை:


எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

www.mea.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள https://www.mea.gov.in/Images/amb1/Circular_PO_DPO_dated_18_03_2019.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2019

Read More »

விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!



விண்ணப்பதாரர்கள் தடகளம், கபடி, கால் பந்து, பேட்மிட்டன், டேபிள் டெனிஸ், கை பந்து, ஹாக்கி, நீச்சல், பாடி பில்டிங், கூடை பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சர்வதேசம் தேசிய, மாநில மற்றும் பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.


வருமான வரித்துறையில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எந்தெந்த பணியிடங்கள் காலியாக உள்ளன, என்ன தகுதி, கடைசி தேதி போன்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பணியிடம் 1: வருமான வரி ஆய்வாளர்

காலிப்பணியிடங்கள் - 01

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம்


வயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்குள்

சம்பளம்: மாதம் ரூ.9,300 முதல் 34,800 வரை

பணியிடம் 2: வருமான வரி அதிகாரி உதவியாளர்

காலிப்பணியிடம்: 18
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டத்துடன் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


பணியிடம் 3: சுருக்கெழுத்தாளர் கிரேடு

காலிப்பணியிடங்கள் - 08
கல்வித் தகுதி: 12வது தேர்ச்சி, நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன்.


பணியிடம் 1: மல்டி டாஸ்க்கிங் ஊழியர்

காலிப்பணியிடங்கள் - 08
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 27 வயதுக்குள்
சம்பளம்: மாதம் ரூ.5,200 முதல் 20,200 வரை

விளையாட்டு தகுதி:

விண்ணப்பதாரர்கள் தடகளம், கபடி, கால் பந்து, பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், கை பந்து, ஹாக்கி, நீச்சல், பாடி பில்டிங், கூடை பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சர்வதேசம் தேசிய, மாநில மற்றும் பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.


பணியாளர் தேர்வு முறை:

மேலே கூறியுள்ள காலிபணியிடங்களுக்கு விளையாட்டுத் திறன் மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவற்றை வைத்துத் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31/03/2019

முழு விவரம்: https://www.incometaxindia.gov.in/Lists/Latest%20News/Attachments/302/Advertisemen_MiscComm_11_3_19.pdf
Read More »
 

Most Reading

Tags

Sidebar One