Search
TNPSC G.K STUDY MATERIALS DOWNLOAD
Sunday, 3 February 2019
Tags:
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB,
TRB TNPSC,
வேலைவாய்ப்பு
TNPSC - DEO போன்ற அரசுத் தேர்வுகளில் ஜெயிக்க இந்த 5 விஷயங்கள் முக்கியம்!
ஒவ்வொரு வருடமும் மத்திய மற்றும் மாநில அரசு பல போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்கிறனர். கண்டிப்பாக விடா முயற்சியும், திட்டமிடுதலும் இருந்தால் போட்டித் தேர்வுகளில் உங்களால் வெற்றி பெற முடியும் என்கிறார் தேனி மாவட்டத்தில், ஏழை மாணவர்களுக்காக போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் தமிழாசிரியர் கோ. செந்தில்குமார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்தத் திண்ணை அமைப்பின் மூலம் இதுவரை 150 -க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை செந்தில்குமாரும், அவரின் குழுவினரும் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் சொல்லும் கீழ்காணும் இந்த 5 விஷயங்களை கடைபிடித்தாலே போதும். போட்டித் தேர்வுகளை எளிதில் வெற்றி பெறலாம்.
TNPSC - DEO போட்டித் தேர்வைப் பற்றிய புரிதல்...!
போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கு முன்பு நம்முடைய கல்வி மற்றும் வயது, தகுதி என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 10, +2 படித்தவர்கள் என்னென்ன போட்டி தேர்வுகளில் பங்கேற்கலாம். பட்டதாரிகள் எந்தெந்த போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். வங்கி, ரயில்வே போன்ற துறைகளுக்கான கல்வித் தகுதி என்ன என்பதை எல்லாம் முதலில் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற் போல தயாராவது நல்லது. மொழியறிவும், கல்வித்தகுதிக்கும் ஏற்ப போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு அதில் உள்ள தேர்வு நுணுக்கங்கள் தெரிந்தால் போதும். வெற்றி பெறுவது எளிது.
அடிப்படையாக இந்த மூன்றும் முக்கியம்...!
ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர், மொழியறிவு நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் மிக அவசியம். ஏனென்றால் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில்தான் கேள்விகள் கேட்கப்படும். குறிப்பாக மொழிப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு, பொது அறிவு மிக மிக முக்கியம். மூன்றாவதாக அடிப்படை கணித அறிவு முக்கியம். இந்த மூன்றும் இருந்தாலே யார் வேண்டுமானாலும் குரூப் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம். பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொது அறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும். இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை...!
TNPSC - DEO போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு...!!
நாம் அந்த தேர்வு தகுதியுடன் இருக்கிறோமா என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். முழுமையான தகுதியை பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவும். அதாவது தற்போது நீங்கள் படித்துக் கொண்டிருந்தாலோ, தேர்வு எழுதி ரிசல்ட் வெளிவராமல் இருந்தாலோ அந்த நேரத்தில் நீங்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பது நல்லது. விண்ணப்பிக்கும் பொழுது உங்களுடைய பிறப்பு தேதி, படிப்பு, எந்த பாடம் என்பதையும் சரியாக நிரப்ப வேண்டும். தேர்வுக்கு எத்தனை முறை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
TNPSC - DEO போட்டித் தேர்வு குறித்த பயத்தை போக்குவது எப்படி...?
இத்தனை லட்சம் பேர் எழுதுகிறார்கள். இவர்களில் நாம் எப்படி எழுதி வெற்றி பெற முடியும் என்கிற பயம் பலருக்கு இருக்கும். எத்தனை லட்சம் பேர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தாலும், கடினமாக உழைக்கக் கூடியவர்கள் அதில் 10 % பேர்தான். குழுவாக படிப்பதுதான் போட்டித் தேர்வுக்கான ஆரோக்கிய படிப்பாகும். குழுவோடு இணைந்து படிக்கும் பொழுது மற்றவர்கள் மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். சில போட்டித் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் இவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இருக்கும். நான்கில் ஏதாவது ஒன்றில் நமக்கு குறைந்த அளவே தெரிந்திருக்கும். இதற்கு நீங்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் போதே அதிக அளவு ஈடுபாடு எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.
TNPSC - DEO - எதை படிக்கலாம்..? எவ்வளவு நேரம் படிக்கலாம்...?
சந்தையில் போட்டித் தேர்வுகளுக்கென ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்கப்படுகின்றன. போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளோ, மெட்டீரியல்களோ வெறும் வழிகாட்டியே தவிர, கேள்வி&பதில்களை அடிக்கடி நீங்களே தயாரித்து அதற்கான மாதிரி தேர்வுகளை நீங்களே எழுதிப் பார்க்கலாம். சராசரியாக ஒரு நாளைக்கு முழு மனதோடு இரண்டு முதல் மூன்று மணி நேரம் படித்தாலே போதும். சராசரி மதிப்பெண் பெற்ற மாணவன் என்னால் வெற்றி பெற முடியுமா என நிறைய பேர் கேட்கிறார்கள். பள்ளி, கல்லூரியில் எடுத்திருக்கும் மதிப்பெண்னை வைத்து போட்டித் தேர்வுகளை மதிப்பிட வேண்டாம். தங்க மெடல் பெற்றவர்கள் கூட 10 முறை போட்டித் தேர்வுகளில் முயற்சித்தும் தோல்வியடைந்தவர்கள் நிறைய பேர் உண்டு.
பொருளாதார சூழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியை தடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம் தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வெற்றி பெற TNPSCTRB -யின் மனமார்ந்த வாழ்த்துக்கள்'.
Tags:
TET STUDY MATERIALS,
TNPSC,
TRB,
TRB TNPSC,
வேலைவாய்ப்பு
தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் ஒருவித சராசரி வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறான். ஆனால் இந்த சராசரி வாழ்க்கையை மட்டுமே மனிதன் வாழ்வது போதுமானதல்ல. ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து ஒரு முத்திரையைப் பதிக்க வேண்டும். வெற்றிடமாக அமையும் தன் வாழ்க்கையை வெற்றியிடமாக மாற்றி அமைத்துக் கொள்வது பெரும்பாலும் அவரவர் கையிலேயே இருக்கிறது. அதிர்ஷ்டம் விதிப்பயன் என்பதெல்லாம் வெற்றி பெற்றவர்களின் வாழ்வில் குறுக்கிட்டதே இல்லை.
பயம் வேண்டாம்
துணிவு, தன்னம்பிக்கை, விடா முயற்சி என்ற திரிசூலம் எவர் கையிலிருந்தாலும் அவருக்கு வெற்றி உறுதி. வாழ்வில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணமாகும். படிப்பு, தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணத்தின் சிறு பகுதியாகும்.
மாணவர்களின் பொதுவான தேர்வுப் பிரச்சினைகள் என்னென்ன? அவற்றிலி ருந்து விடுபட்டு தேர்வை பயமின்றி எதிர் கொண்டு நினைத்தவாறு மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வது எப்படி?
இதோ, இவைதான் மாணவர்களின் பொதுவான பிரச்சினைகள்.
இவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படி படித்து முடிப்பது?
என்னதான் படித்தாலும் மனதில் நிற்காமல் மறந்து போகிறதே. நினைவில் நிறுத்தி வைப்பது எப்படி?
என்னதான் எழுதினாலும் முழுமையான மதிப்பெண் கிடைப்பதில்லையே ஏன்?
நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெறுவது எப்படி?
இவைகளுக்கான தீர்வு என்ன?
தேர்வில் வெற்றி பெறுவதோ அதிக மதிப்பெண்களைப் பெறுவதோ முதல் மாணவனாக வருவதோ கடினமான ஒரு காரியமல்ல. ஏனெனில் தேர்வு என்பது ஒரு எல்லைக்குள் விளையாடும் விளையாட்டு போன்றது. பாடத்திட்டம் என்ற எல்லைக்குள்தான் எல்லா வினாக்களும் அமைய முடியும். எனவே தேர்வில் வெற்றி பெறுவது மிக எளிமையான ஒரு காரியமாகும்.
ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெற முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவனது பாடத்திட்டத்தைத்தான். ஒவ்வொரு பாடநூலிலும் எத்தனை பாடங்கள் இருக்கின்றன, என்னென்ன பாடங்கள் இருக்கின்றன என்பதை ஒரு மாணவன் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பாடத்திட்டத்தை சரியாகப் புரிந்து கொண்டதும் இருக்கின்ற கால அளவிற் கேற்ப பாடங்களைப் பிரித்துப் படிப்பதற்கு வசதியாக நேரத்தைத் திட்டமிட வேண்டும். இந்த இரண்டையும் செய்து விட்டாலே பாதி வெற்றி கிட்டியது போலாகும். மீதி வெற்றி பாடத்திட்டத்தை நேரத்திட்டமிடலுக்கேற்ப செயல் படுத்துவதிலேயே இருக்கிறது
முயற்சியும் பயிற்சியும்
பயிற்சியின் மூலம் எதையும் சாதிக்க முடியும். மனப்பாடப் பகுதிகளை மனப்பாடம் செய்வதில் ஒரே மூச்சில் செய்ய முடியாது. மலையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து எடுப்பதைப் போல சிறுசிறு பகுதிகளாக மனப்பாடம் செய்ய வேண்டும். பொதுவாக மனப்பாடப் பகுதிகளை குறிப்பெடுத்து வைத்துள்ள காகிதத்தை எப்போதும் பையிலேயே வைத்திருக்கவும். ஓய்விருக்கும்போதெல்லாம் அதனை எடுத்துப் பார்த்துக் கொள்வது விரைவில் மனப்பாடம் செய்திட உதவும். ஆங்கில வினா விடைகள், தமிழ் செய்யுள் பகுதி, பாடங்களிலுள்ள வினாக்களுக்கான விடைகளில் வரும் தலைப்புகள், துணைத் தலைப்புகள் ஆகியவற்றைப் படிப்பதற்கு இந்த முறையைப் பின்பற்றலாம்.
பாட ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அடிக்கடி சந்தேகங்களை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற விரும்பும் மாணவர்கள் இந்த முறையைப் பின்பற்றியே ஆக வேண்டும்.
படிக்கும் முறை
படிக்கும் இடமும் நேரமும் மிகமிக இன்றியமையாதது. படிப்பதற்கு வீட்டில் தனியாக வசதியான அறை எல்லோருக்கும் இருக்காது. அப்படியானால் பகல் வேளைகளில் இயற்கையான தோட்டம், வயல் புறம் சென்று தனிமையில் படிக்கலாம். கணிதம் போன்ற பாடங்களை நண்பர்களுடன் கலந்துரையாடி படிப்பது நல்லது. (நண்பர்கள் கூட்டம் நேரத்தை வீணாக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்).
முதல் மாணவனாக வரவிரும்பும் மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படித்து வந்திருக்க வேண்டும். இல்லையேல் ஒருநாளைக்கு ஏழு அல்லது எட்டு மணி நேரம் படிக்க வேண்டும். மனமும் உடலும் சோர்வின்றி இருப்பதற்காக ஒவ்வொரு முப்பது நிமிடம் படித்து முடித்ததும் பத்து நிமிடம் இடைவெளி விடலாம். படிக்கும் பாடங்களையும் இடத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்வது நல்லது.
பொதுவாக வாய் விட்டுப்படிக்க வேண்டும். இல்லையேல் ல, ள, ர, ற, ன, ந, ண உச்சரிப்புப் பிரச்சினை ஏற்பட்டு தேர்வுத்தாளிலும் அவை தவறாகவேப் பதிவாகிவிடும்.
படித்தவற்றை தனக்குத்தானே எழுதிப் பார்த்து திருத்தி பார்த்துக் கொள்வது இன்னும் சிறந்தது. கடந்த பத்தாண்டுகளுக்கான வினாத்தாள்களைப் பரிசீலித்துப் படிப்பதன் மூலம் படிப்பு இன்னும் எளிதாகும். 100 சதவீத பாடங்களை 100 விழுக்காடு தயாரித்துக் கொண்டவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்களை (அதாவது 100 சதவீதம்) பெறுவது உறுதி. 100 விழுக்காடு பாடங்களை 50 விழுக்காடோ, 50 விழுக்காடு பாடங்களை 100 விழுக்காடோ தயார் செய்து கொண்டவர்கள் 50 விழுக்காடு மதிப்பெண்களை (அதாவது 200-க்கு 100) பெறுவது உறுதி

Subscribe to:
Posts (Atom)