குவாசியோர்கர்
  • அதிகப்படியான புரத குறைபாட்டால் இந்த நோய் ஏற்படுகிறது.
  • இந்த நோய் 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளைத் தாக்குகிறது. இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உணவில் முக்கியமாக கார்போஹைட்ரேட்டுகள் காணப்படும். ஆனால் புரதங்கள் மிக மிக குறைந்த அளவே காணப்படும்.

மராஸ்மஸ்
  • இந்த நோய் பொதுவாக ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளங் குழந்தைகளைத் தாக்குகிறது.
  • இந்த வயதில் இவர்களுடைய உணவில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படும்.

ஒரு குழந்தைக்குத் தேவையான பரிந்துரைக்கப்படும்  ஊட்டச்சத்துகளின் அளவு :
  • கார்போஹைட்ரேட்டுகள் 150-200 கிராம்
  • புரதங்கள் : 40 கிராம்
  • கொழுப்புகள் : 35 கிராம்
தாது உப்புக்களின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

முன் கழுத்துக் கழலை: (காய்டர்)

தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தின் கீழ்பகுதி வீங்கி காணப்படும். இந்த நோய் அயோடின் குறைபாட்டினால் வருகிறது.

வைட்டமினோசிஸ்
  • வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் `வைட்டமினோசிஸ்' என்று அழைக்கப்படுகிறது.
  • ஹைப்பர் வைட்டமினோசிஸ் எனப்படுவது வழக்கத்தைவிட அதிகப்படியான வைட்டமின்களின் அளவு இருப்பது ஆகும். இந்த நிலையினால் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தோன்றலாம்.
  • அதிகப்படியான அளவு வைட்டமின் A இருப்பதை "ஹைப்பர் வைட்டமினோசிஸ் A" என்று அழைக்கிறோம்.