1. குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
கந்தர் கலிவெண்பா
2. குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
இலக்கண விளக்கம்
3. குட்டித் திருவாசகம் எனப்படுவது?
திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி
4. ஓரடியில் நீதியை உரைக்கும் நூல்கள் எவை?
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, முதுமொழிக்காஞ்சி
5. நறுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?
வெற்றிவேற்கை
6. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - இவ்வரி இடம் பெறும் நூல் எது?
வெற்றிவேற்கை
7. வெற்றிவேற்கையின் ஆசிரியர் யார்? வெற்றிவேற்கையை எவ்வாறு அவர் குறிப்பிடுகிறார்?
ஆதிவீரராம பாண்டியர்-நறுந்தொகை என குறிப்பிடுகிறார்
8. வெற்றிவேற்கையில் இடம் பெறும் சிறப்பான வரிகள்கள் சில:
“கல்விக்கு அழகு கசடற மொழிதல்”
“செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்”
“அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்”
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”
“நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை”
“கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடு நன்றே”
“வழியே ஏகுக வழியே மீளுக”
9. உலகநீதியின் ஆசிரியர் யார்? உலகநாதர்
10. உலகநீதியில் இடம் பெறும் சிறப்பான வரிகள்கள் சில:
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
11. நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
குமரகுருபரர்
12. சிறுவயதிலேயே இறையருள் பெற்ற அருட்கவி யார்?
குமரகுருபரர்
13. காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான தமிழ்ப்பாட்டு எது?
நீதி நெறிவிளக்கத்தில் இடம் பெறும் “நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்.....” எனத்தொடங்கும் பாடல். தமிழகம் வந்த போது காந்தியடிகள் இப்பாடலில் இடம் பெறும்
“நீரில் எழுத்தாகும் யாக்கை” வரியை தன் கைப்பட எழுதி மோ.க.காந்தி என தமிழில் தன் கையொப்பம் இட்டு கொடுத்துள்ளார்.
14. கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர் யார்?
சிவப்பிரகாசர்
15. நன்னெறியின் ஆசிரியர் யார்?
கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர்
16. அறநெறிச்சாரத்தின் ஆசிரியர் யார்?
முனைப்பாடியார் (சமணர்)
17. அருட்கலச்செப்பு எனும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல் எது?
அறநெறிச்சாரம்
18. “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்” எனக்கூறியவர் யார்?
நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்
19. நட்டான் என்பதன் பொருள் என்ன?
நண்பன்
20. ஒளவையார் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் எவை?
நீதிநூல்கள்: ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டாம்) நல்வழி, கல்வியொழுக்கம்
பக்தி நூல் : விநாயகர் அகவல்
தத்துவ நூல் : ஒளவைக்குறள்
21. ஆத்திசூடி என்பதன் பொருள் என்ன?
ஆத்திப்பூமாலையை சூடிய சிவபெருமான்
22. ஆத்திசூடியில் ஒளவையார் கூறிய அமுத மொழிகள் சில...
அறம் செய விரும்பு, ஆறுவது சினம், மனம் தடுமாறேல், துன்பத்திற்கு இடங்கொடேல், நுண்மை நுகரேல் (சிற்றுண்டிகளை எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்காதே)
23. கொன்றைவேந்தனில் ஒளவையார் கூறிய அமுத மொழிகள் சில...
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்,
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை,
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
இல்லறம் அல்லது நல்லறம் அன்று,
மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்
ஏவா மக்கள் மூவா மருந்து,
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு,
பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
24. வாக்குண்டாம் என அழைக்கப்படுவது?
மூதுரை
25. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
மூதுரை 26. “பாலும் தெளித்தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்”
“சங்கத் தமிழ் மூன்றும்தா” எனக் கூறியவர்?
ஒளவையார் (நல்வழி)
27. “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்” எனக்கூறியவர் யார்?
நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்.
28. கல்வியொழுக்கத்தின் ஆசிரியர் யார்?
ஒளவையார்
29. அஞ்சு வயதில் ஆதியை ஓது
ஊமை என்பவர் ஓதாதவரே
ஏழை யென்பவர் எழுத்தறியாவர்
கண்ணில்லாதவன் கல்லாதவனே
தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்
30. கடல்கோளும் கரையானும் அழித்தது போக எஞ்சிய தமிழ்நூல்கள் எவை?
சங்க நூல்கள்