இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று
தேசிய நெருக்கடி நிலை
மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி
நிதி நெருக்கடி நிலை
தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து - 352
தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி
தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்
போர்
போர் மூலம் அபாயம்
வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு
வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்
உள்நாட்டுக் கலவரம்
தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.
6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி
ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து - 356
முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951
முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்
இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்
இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி
நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து- 360
நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்
நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.
நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.
மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை (Art 21)