வங்கி என்றவுடனே நினைவுக்கு வருவது பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ.,தான். இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரத ஸ்டேட் வங்கி இந்திய சுதந்திர காலத்திற்கு முன்னரே இம்பீரியல் வங்கி என்ற பெயரில் இயங்கி வந்தது.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயர் மாற்றம் கண்டு இந்தியாவின் முன்னோடி வங்கியாக இது செயல்படத்துவங்கி இன்று வரை சிறப்புடன் இயங்கி வருகிறது.
முற்றிலும் நவீனமய வங்கிச் சேவைகள், நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளைகள் என்று இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 2000 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 2019 ஏப்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 1989 ஏப்., 2க்குப் பின்னரும், 1998 ஏப்., 1க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது பட்டப் படிப்பின் இறுதி செமஸ்டரை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: அப்ஜெக்டிவ் வகையிலான பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல், மருத்துவத் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ஸ்டேட் வங்கியின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.750/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2019 ஏப்., 22
விபரங்களுக்கு: www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf