
பொதுத்துறை நிறுவனமான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் (NTRO) ஆண்டுதோறும் தேர்வு நடத்தி தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பி வருகிறது.
தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான 127 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 127
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரானிக்ஸ் - 52
2. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 75
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், பி.எஸ்சி. கம்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://ntrorectt.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ntrorectt.in/ntro/home என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment