Search

அஞ்சல்துறையில் 4442 பணியிடங்கள்!

Wednesday, 27 March 2019

Post Office to distribute Atal pension scheme

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் வேலை காத்துள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கிராமப்புற ஊழியர்களுக்கான ஞசகஐசஉ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்துத்தேர்வு கிடையாது. பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மொத்தம் 4442 காலி பணியிடங்களுக்கு ர்ய்ப்ண்ய்ங் தேர்வு முறையில் நடைபெறுகிறது.






18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு (Basic Computer Knowledge) பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில/ பல்கலைக் கழக/ தனியார் நிறுவனங்களில் குறைந்த பட்சம் 60 நாளுக்கு குறையாமல் கணினி படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.






இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தேர்வு செய்யப்படும் அலுவலக எல்லைக்குள் குடியிருக்க வேண்டும். கிராம அஞ்சல் அதிகாரிகளாக (BPM) தேர்வு செய்யப்படுபவர்கள், தமது சொந்த பொறுப்பில் அலுவலகத்தை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அலுவலகமானது குறைந்தபட்சம் 10 பு 10 ச.அடி என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். மின்சார வசதி பெற்றிருக்க வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய அளவில் அலுவலகம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.






இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: http://appost.in/gdsonlineதொடர்புக்கு.. Helpline number: 044-28592844 email: staff.tn@indiapost.gov.inவிண்ணப்பிக்க கடைசித் தேதி :15.4.2019.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One