இந்திய அரசியல் அமைப்பில் அவசர நிலைப்பிரகடனம் பற்றிய ஷரத்து எது?
ஷரத்து 352 முதல் 360 வரை.
இந்தியாவில் ஒற்றை ஆட்சி முறை நடைபெறும் தருணம் எது?
தேசிய அவசரநிலைப்பிரகடனத்தின் போது.
அவசரநிலை பிரடகனத்தின் வகைகள் யாவை?
தேசிய அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 352)
மாநில அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 356)
நிதிநிலை அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 360)
தேசிய அவசரநிலைப்பிரகடனம் செய்ய ஏற்ற சூழல்கள் எவை?
இந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும் போது
இந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும் என்று அச்சம் ஏற்படும் போது
இந்தியாவில் ஆயுதம் தாங்கிய கலவரம் நிகழும் போது.
குடியரசுத்தலைவர் எப்படி அவசரநிலைப்பிரகடனத்தை அறிவிக்கிறார்?
மத்திய அமைச்சரவையின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற்ற பிறகு.
தேசிய அவசரநிலைப்பிரகடனம் எத்தனை நாட்களுக்குள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்?
1 மாதத்திற்குள் (மக்களவை கலைக்கப்பட்டிருந்தால் புதிய மக்களவை கூடிய 1 மாதத்திற்குள்).
மக்களவை, மாநில சட்டபேரவைகளின் ஆயுட்காலம் எப்போது நீட்டிக்கப்பட வாய்ப்பு உண்டு?
தேசிய அவசரநிலைப்பிரகடனத்தின் போது.
மாநில அவசரநிலைப்பிரகடனம் எந்த மாநிலத்தில் முதன்முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது?
பஞ்சாப்.
மாநில அவசரநிலைப்பிரகடனம் எந்த மாநிலத்தில் அதிகமுறை பிரகடனப்படுத்தப்பட்டது?
கேரளா, உ.பி.
நிதிநிலை மாநில அவசரநிலைப்பிரகடனம் இதுவரை எத்தனை முறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது?
இதுவரை பிடகடனப்படுத்தப்படவில்லை.
இந்தியாவில் எத்தனை முறை தேசிய அவசரநிலைப்பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்டது?
சீனப்போர் 1962
பாகிஸ்தான் போர் 1971
உள்நாட்டு கலவரம் 1975
No comments:
Post a Comment