Search

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD | இந்திய இயற்கை அமைப்பு

Friday, 16 November 2018

TNPSC | TRB |TET | GEOGRAPHY STUDY MATERIALS 🌾இந்தியா இயற்கை அமைப்பு🌾
இந்தியா உலகப் பரப்பளவில் 5% (2.4) மட்டும் கொண்டது.

உலக மக்கள் தொகையில் 16% பெற்றுள்ளது.

இந்தியா ஆசியக்கண்டத்தின் தென் பகுதியிலும் இந்தியப் பெருங்கடலின் தலைப்பகுதியிலும் அமைந்து உள்ளது.

வட அட்ச ரேகை (கடக ரேகை) இந்தியாவை “2” பகுதிகளாகப் பிரிக்கிறது.

இந்தியா புவிப்பரப்பின் அடிப்படையில் (Area) ‘7’ வது பெரிய நாடாகும்.

இந்தியாவின் மொத்தப்பரப்பு
3 மி.ச.கி.மீ.

இந்தியா வடக்கு தெற்காக 3214 கி.மீ. நீளம் கொண்டது.

இந்தியா கிழக்கு மேற்காக 2933 கி.மீ நீளம் கொண்டது.

இந்தியா கடற்கரை (தீவுகளைச் சேர்க்காமல்) 6600 கி.மீ.நீளம் கொண்டது.

🇮🇳கங்கை சமவெளி🇮🇳

இமயமலைகளுக்குத் தெற்கே அமைந்துள்ள கங்கைச் சமவெளி கங்கை ஆற்றினால் உருவாக்கப்பட்டது. இச்சமவெளி மேற்கு கிழக்காகப் பரந்து விரிந்துள்ளது.

கங்கை ஆறு இமயமலைகளில் உருவாகி பாறைகளை அரித்து, மலையடிவாரத்தில் வண்டலைப் படிய வைக்கிறது.

(செறிந்த வேளாண்மையினால்) இந்தியாவிலேயே (இங்குதான்) கங்கைச் சமவெளி மக்களடர்த்தி அதிகம் கொண்ட இடமாகும்.

கங்கைச் சமவெளிக்கு மேற்கில் சட்லஜ் சமவெளியும் கிழக்கில் பிரம்மபுத்திரா சமவெளியும் உள்ளன

🇮🇳கடற்கரைச்  சமவெளிகள்:

தீபகற்ப இந்தியாவின் மேற்கிலும், கிழக்கிலும் கடற்கரைச் சமவெளிகள் காணப்படுகின்றன.

மேற்குக் கடற்கரைச் சமவெளி

கிழக்கு கடற்கரைச் சமவெளி

மேற்குக் கடற்கரைச் சமவெளி(Western Coast)

இச்சமவெளி குஜராத் முதல் கேரளா வரை நீண்டு காணப்படுகிறது.

தீபகற்ப இந்தியாவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளது, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கில் வடக்கு தெற்காக ஏற்பட்ட பிளவின் வழியாக நிலப்பகுதி கடலில் அமிழ்ந்தது.

அவ்வாறு நிலப்பகுதி அமிழ்ந்ததால் தான் மேற்குக் கடற்கரை உருவானது. எனவேதான் மேற்குக் கடற்கரை நேராகவும், குறுகலாகவும் காணப்படுகின்றன.

🇮🇳புறதீபகற்ப இந்தியா:

கடக அட்சத்திற்கு (231/2) வடக்கே உள்ள சமவெளி மற்றும் இமயமலையை உள்ளடக்கிய நிலப்பகுதி புற தீபகற்ப இந்தியா எனப்படும்.

இது தீபகற்ப இந்தியாவைப் போலல்லாமல் சமீப காலத்தில் உருவானது.

படிவுப் பாறைகளால் ஆனது.இது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

இமயமலை

கங்கைச் சமவெளி

🇮🇳 பீடபூமிகள் :

தீபகற்ப பீடபூமி பல சிறிய பீடபூமிகளைக் கொண்டது.

வடக்கில் மாளவ பீடபூமியும்,

தெற்கில் தக்காணப் பீடபூமியும்

இடையில் தபதி நர்மதை பிளவுப் பள்ளத் தாக்குகளும் காணக் கிடைக்கின்றன.

மாளவ பீடபூமி (Malwa Plateau)

இது சிறிய முக்கோண வடிவத்தில் உள்ளது.

இதற்கு வடமேற்கில் ஆரவல்லித் தொடர்கள் அமைந்துள்ளன.

ஆரவல்லித் தொடர்கள் ஒரு காலத்தில் இமயமலையை விட உயரமாக இருந்தன.

ஆனால் அரிப்பின் காரணமாக உயரம் குறைந்து ஏறக்குறைய 500 மீட்டர் உயரத்தை மட்டுமே தற்சமயம் கொண்டமைந்துள்ளன.

🇮🇳மலைகள்  (Mountains) :

விந்திய சாத்பூரா மலைகள் (Vindhya – Satpura Mountains).

மேற்குத் தொடர்ச்சி மலைகள் (Western Ghats)

கிழக்குக் குன்றுகள் (Eastern Ghats)

விந்திய சாத்பூரா
 மலைகள்

விந்திய சாத்பூரா மலைகள் நர்மதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு கிழக்காகச் செல்லுகின்றன.

விந்திய மலைகள் நர்மதா பள்ளத்தாக்கின் பக்கச்சுவர்களே. அவை உண்மையில் மலைகள் அல்ல. இம்மலைகள் வாரணாசிக்கு அருகில் முடிவடைகின்றன.

சாத்பூரா மலைகள் நர்மதைக்கும் தபதிக்கும் இடையே காணப்படுகின்றன.

விந்திய மலைகளுக்குத் தெற்கில் அவற்றிற்கு இணையாகச் செல்கின்றன.

🇮🇳 தீபகற்ப இந்தியா:

கடக அட்சத்திற்கு (Tropic of Cancer) தெற்கே உள்ள நிலப் பகுதி தீபகற்ப இந்தியா எனப்படுகிறது. இந்தியா தீபகற்ப பகுதியில் உள்ள பாறைகள் பழமையானவை. இவை புவி தோன்றிய காலத்திலேயே உருவானவை.

 சூரியனிடமிருந்து பிரிந்து வந்த வாயு வளையம் காலப் போக்கில் குளிர்ந்து இறுகி புவிக்கோளமாக உருவெடுத்தது. புவி உருவான காலத்தில் அனைத்து நிலப்பகுதிகளும் ஓரே தொகுப்பாகக் காணப்பட்டது. அதற்குப் பெயர் பேஞ்சியா (Pangea)

பேஞ்சியாவை சுற்றி காணப்பட்ட நீர்ப்பரப்பு பேன்தலசா (Panthalasa).

பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் (Tethys) என்ற தாழ்வான கடலால் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

🇮🇳 நிலத்தோற்றமும் வடிகாலமைப்பும்(Relief & Drainage) :
 


இந்தியாவில் நிலத்தோற்றம் பல்வேறு பாறை அமைப்புகளைக் கொண்டது.

இந்தியாவில் மூன்று பாறை வகைகள் உள்ளன.

தீப்பாறைகள் (Volcanic Rock).

படிவுப் பாறைகள் (Sedimentary Rocks)

உருமாறிய பாறைகள்(Metamorphic Rocks)

இந்தியாவின் நிலத்தோற்றங்கள் அனைத்திலும் பழமையானது தக்காணப் பீடபூமி (Deccan Plateau)

இந்தியாவின் நிலத்தோற்றங்கள் அவை உருவான கால அட்டவணையின் அடிப்படையில் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

தீபகற்ப இந்தியா (Peninsular India).

புறதீபகற்ப இந்தியா (Extra – Peninsular India)
Read More »

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD

TNPSC | TRB |TET | GENERAL KNOWLEDGE

1. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் இணைந்து உருவாகும் சேர்மம் எது? - அம்மோனியா

2. சல்பர் ஆக்சிஜனுடன் இணைந்து உருவாகும் நிறமற்ற வாயு எது? - சல்பர்-டை-ஆக்ஸைடு

3. தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து பெறப்படும் சேர்மங்கள் ................. - கரிமச் சேர்மங்கள்

4. பிளாஸ்டிக் பொருள்கள் சிதைவுற ஏறக்குறைய எத்தனை ஆண்டுகள் ஆகும்? - 50,000

5. கண்ணாடியைக் கரைக்க வல்ல அமிலம் எது? - ஹைட்ரோ ஃபுள ரிக் அமிலம்.

6. காரிமச் சேர்மங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - புரதம், மெழுகு, எண்ணெய், சர்க்கரை

7. மீன், இறைச்சி போன்றவை கெடாமல் பாதுகாக்கப் பயன்படுவது எது? - சாதாரண உப்பு

8. சலவைத் தொழிலிலும், கிருமி நாசினியாகவும், குடிநீர் சுத்திகரிப்பிலும் ................ பயன்படுகிறது? - சலவைத் தூள்

9. புவியில் அதிக அளவில் உள்ள தனிமம் எது? - ஆக்சிஜன்

10. இரும்புச் சல்பைடில், இரும்பும் சல்பரும் ............... என்ற விகிதத்தில் உள்ளன? - 7 : 4

11. பெரும்பாலான தனிமங்கள் ................... மற்றும் ஆக்சிஜனுடன் இணைகின்றன? - குளோரின்

12. ஹீலியம், நியான் தனிமங்களின் இணைதிறன் என்ன? - பு ஜ்ஜியம்

13. ..................... தனிமங்கள் எந்தத் தனிமத்துடனும் இணையக்கூடியவை அல்ல. - ஹீலியம், நியான்

14. எந்த உலோகங்கள் காரங்களுடன் வினைபுரிவதில்லை. - காப்பர், சில்வர், குரோமியம்

15. அமிலக் கரைசலின் pH மதிப்பு .............. - 7ஐ விட குறைவாக இருக்கும்.
Read More »

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD |ஒலியியல் பற்றிய சில தகவல்கள்

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS
ஒலியியல் பற்றிய சில தகவல்கள் :-

🔊 வெற்றிடத்தில்  வழியே ஒலி பரவாது என நிரூபித்தவர் - ராபர்ட் பாயில்

🔊 மின்காந்த அலைகள் மொத்தம் - குறுக்கலைகள்

🔊 எந்திர அலைகள் - 2
1. குறுக்கலைகள் (நீரின் மேற்சுரப்பி)
2. நெட்டலைகள் ( ஒலி அலைகள்)

🔊 ஊடகத்திலுள்ள துகள்கள் அலைபரவும் திசைக்கு இணையாகவோ (அ) அவற்றின் திசையிலேயோ அதிர்வுறுவதால் உண்டாகும் அலைகள் - நெட்டலைகள்

🔊 ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது உருவாவது - நெருக்கமும், நெகிழ்வும்

🔊 நெருக்கம் என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதி

🔊 நிகழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதி

🔊 ஊடகத்துகள்கள், அலைபரவும் திசைக்கு செங்குத்தான திசையில் அதிர்வுறுவதால் உருவாகும் அலைகள் - குறுக்கலைகள்

🔊 குறுக்கலைகள் உதாரணம் - நீரலைகள், இழுத்துக் கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள்

🔊 நடுநிலை புள்ளியிலிருந்து மேல் நோக்கி திசையில்  ஊடகத்துகளின் பெரும் இடப்பெயர்ச்சி - முகடு

🔊 நடுநிலை புள்ளியிலிருந்து கீல் நோக்கி திசையில்  ஊடகத்துகளின் பெரும் இடப்பெயர்ச்சி - அகடு

🔊 நடுநிலை புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி - வீச்சு

🔊 வீச்சு அலகு - மீட்டர்

🔊 ஊடகத் துகள் ஒரு வினாடியில் மேற்கொள்ளும் முழு அதிர்வுகளின் எண்ணிக்கை  - அதிர்வெண்

🔊 அதிர்வெண் அலகு - ஹெர்ட்ஸ்

🔊 ஒலி மூலத்திற்கு கேட்கு நபருக்கு இடையில் ஒரு சார்பியக்கம் உள்ள போது ஒலியின் அதிர்வெண்ணில் தோற்ற மாற்றம் ஏற்படும் நிகழ்வே - டாப்ளர் விளைவு

🔊 1842 ல் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியை பற்றிய ஆய்வின் மூலம் கண்டறிந்தவர் - டாப்ளர்

🔊 டாப்ளர் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவி - RADAR (Radio Deetin and Ranging)
Read More »
 

Most Reading

Tags

Sidebar One