Search

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD |குருப்-2, மெயின் தேர்வு வினா]

Monday, 12 November 2018

 TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS |குருப்-2, மெயின் தேர்வு வினா

அமிலங்கள் - காரங்கள் - உப்புகள்
#அமிலங்கள் - 'எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை' என்பது மிகச் சரியான விளக்கம்.
அமிலங்கள் ஹைட்ரஜன் தொகுதியை கொண்டுள்ளன. எல்லாஅமிலங்களிலும் ஹைட்ரஜன் தொகுதி இல்லை.
அமிலங்கள் இளஞ்சிவப்பு நிறத்தை உண்டாக்குகின்றன
தாவர,விலங்குகளில் இருப்பது கரிம அமிலங்கள்
தயிரில் உள்ளது – லாக்டிக் அமிலம்
ஆப்பிளில் உள்ளது – மாலிக் அமிலம்
குளிர்பானங்களில் உள்ளதி – கார்போனிக் அமிலம்
எலுமிச்சை,ஆரஞ்சு – சிட்ரிக் அமிலம்
வினிகர் –அசிட்டிக் அமிலம்
தக்காளி – ஆக்ஸாலிக் அமிலம்
எறும்பு – ஃபார்மிக் அமிலம்
திராட்சை – டார் டாரிக் அமிலம்
கத்தரிக்காய் – அஸ்கார்பிக் அமிலம்
நைட்ரிக் அமிலத்தின் பொதுப் பெயர் அக்குவா போர்ட்டிஸ்ஸ்

தாதுபொருட்களில் இருந்து பெறப்படுவது கனிம அமிலங்கள்
வேதிப்பொருட்களின் அரசன் – கந்தக அமிலம்
மிகவும் வலிமை மிக்க அமிலம் – ஃப்ளூரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

#காரங்கள் ; உலோக ஆக்சைடு, ஹைட்ராக்சைடு சேர்மங்கள் போன்றவை காரங்கள்
எல்லா அல்கலிகளும் காரங்கள், எல்லா காரங்களும் அல்கலிகள் அல்ல.
நீர்ம கரைசல்களில் ஹைட்ராக்சில் அயனிகளை தர வல்லது
அல்கலி – மரச்சாம்பல்
சுட்டசுண்ணாம்பு – கால்சியம ஆக்சைடு
கால்சியம் ஹைட்ராக்சைடு – நீற்றுச் சுண்ணாம்பு
சோடியம் ஹைட்ராக்சைடு – காஸ்டிக் சோடா
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு – மெக்னீசிய பால்மம் –அமில நீக்கி
சோடியம் ஹைட்ராக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு – சோப்பு தயாரிக்க
அம்மொனியம் ஹைட்ராக்சைடு – கண்ணாடியை சுத்தம் செய்ய

அர்ஹீனியஸ் கொள்கை
* அர்ஹீனியஸ் கொள்கைப்படி, அமிலம் என்பது நீர்க் கரைசலில் ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுக்கக் கூடிய பொருள் காரம் என்பது நீர்க்கரைசலில் ஹைட்ராக்சைடு அயனிகளைக் கொடுக்கக் குடிய பொருளென்றும் வரையறுக்கப்படுகின்றன.
லெளரி-பிரான்ஸ்டெட் கொள்கை
இக்கொள்கைப்படி அமிலம் என்பது புரோட்டாணை (ஹைட்ரஜன் அயனியை) கொடுக்கக் குடிய பொருள். காரம் என்பது புரோட்டானை ஏற்கக் கூடிய பொருள்.

PH  அளவீடு
ஹைட்ரஜன் அயனிகளின் செறிவைப் பொறுத்து அமிலத் தன்மை அல்லது காரத்தன்மை அறியப்படுகிறது. PH என்பது அதன் ஹைட்ரஜன் அயனிச் செறிவின் பத்தை அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் எதிர்மதிப்பு ஆகும். இது மோல்/லிட்டர் என்ற அலகில் குறிக்கப்படுகிறது. PH = -log10 (H+)
சில கரைசல்களின் PH மதிப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இரத்தம் (7.3 - 7.5), உமிழ்நீர் (6.5 - 7.5), சிறுநீர் (5.5 - 7.5) காபி (4.5 - 5.5), இரைப்பை நீர் (1.0 - 3.0), குளிர்பானங்கள் (3.00), பால் (6.5), கடல் நீர் (8.5) ஆகும்.

அமிலமும் காரமும் நடுநிலையாக்கள் வினையில் ஈடுபடும்போது உருவாகும் அயனிச் சேர்மங்களே உப்புகள்

சோடியம் குளோரைடு – உணவை கெடாமல் பாதுகாக்கவும்.சுவையை கூட்டவும்
சோடியம் கார்பனேட் – சலவை சோடா தயாரிக்க
சோடியம் பை கார்பனேட் – குளிர்பானம், ரொட்டி தயாரிக்க
காப்பர் சல்பேட் – பூச்சிக்கொல்லி தயாரிக்க
பொட்டாஷியம் நைட்ரேட் – வெடிமருந்து தயாரிக்க
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS FREE DOWNLOAD | குரூப் -2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடத்திட்டங்கள்

 TNPSC | TRB | TET STUDY MATERIALS
குருப்-2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடதிட்டங்கள்...தமிழில்
💥I. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கும், தாக்கமும்

👉இயற்பியல்:
💥பேரண்டத்தின் இயல்பு, பொது அறிவியல் விதிகள்/கோட்பாடுகள்

💥அறிவியல் கருவிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் சொல் அகராதி

💥இயற்பியல் அளவைகள், அலகுகள், எந்திரவியல் மற்றும் பருப்பொருளின் பண்புகள்

💥விசை, அசைவு, ஆற்றல், வெப்பம், ஒளியியல், ஒலியியல், காந்தவியல்,மின்சாரவியல், மின்னணுவியல்

👉வேதியியல்:

💥பருப்பொருள்கள், வேதியியல் மாற்றங்கள், தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

💥அமிலங்கள், காரங்கள், உப்புகள், ஆக்ஸிஜன் ஒடுக்கம் - ஆக்ஸிஜன் ஏற்றம்

💥கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள், உரங்கள், தீங்குயிரிக் கட்டுப்பாடு

👉உயிரியல்:

💥செல் உயிரியல், உயிரினங்களின் வகைப்பாடு, உணவூட்டம், தாது உப்புகளும் உயிர்ச்சத்துகளும்

💥இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைவுநிலை - தேசிய ஊட்டச்சத்து திட்டங்கள்

💥திட்ட உணவு, சுவாச மண்டலம், இரத்தம் மற்றும் இரத்த சுற்றோட்டத் தொகுப்பு

💥நாளிமில்லா சுரப்பி மண்டலம், விலங்குகளின் இனப்பெருக்க முறைகள்

💥தாவரங்களில் இனப்பெருக்கம், மனிதனின் இனப்பெருக்க மண்டலம்

💥அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

💥அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைகள்

💥ஆற்றல் - தன்னிறைவு, எண்ணெய் முற்றாய்வு, மரபியல், சுற்றுச்சூழல்

💥இயற்கை வளப் பாதுகாப்பு, சூழ்நிலை மண்டலம், சுத்தம் மற்றும் சுகாதாரம்

💥உயிரிப் பல்வகைத் தன்மை, பரவும் நோய்கள், பரவும் தன்மையற்ற நோய்கள்

💥அடிமையாதல், கணினி தொழில்நுட்பம்

💥II. மத்திய மற்றும் மாநில நிர்வாகம்

💥மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு, மாவட்ட நிர்வாகப் பணிகள் அவற்றின் அமைப்புகள்

💥தொழிற்சாலைகள் – தமிழ்நாடு, மாநில அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு

💥மாநில நிதி, மாநில அரசு பட்ஜெட், மாநில நிதி நிர்வாகம்

💥அரசியலில் தொழில்நுட்பத்தின் பங்குகள், தேசிய இணைய நிர்வாகத் திட்டம்

💥தமிழகத்தில் மின்னாட்சி, பேரிடர், சீரழிவு மேலாண்மை, தமிழக அரசின் திட்டங்கள்

💥மத்திய மாநில உறவுகள், இந்தியத் தொழிற்சாலைகள், பொதுப் பணிகள்

💥மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு

💥III. சமூகப் பொருளாதார பிரச்சினைகள்:

💥இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள்

💥இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகள்

💥குழந்தைத் தொழிலாளர், பொருளாதாரப் பிரச்சினைகள், பொது வாழ்வில் ஊழல்

💥ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கணக்குத் தணிக்கையாளர்

💥கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு, பெண்களுக்கு அதிகாரமளித்தல்

💥பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் குற்றவியல் வன்முறைகள்

💥தீவிரவாதம், வகுப்புவாதக் கலவரம், மனித உரிமைகள்

💥தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, மத்தியத் தகவல் ஆணையம்

💥மாநிலத் தகவல் ஆணையம், சமூக வளர்ச்சித் திட்டம்

💥வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் முன்னேற்றம்

💥சமூக நலத் திட்டங்களில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு

💥உடல்நலத்திற்கான அரசின் கொள்கைகள்

💥IV. கட்டுரைகள்
(மத்திய மற்றும் மாநிலப் பிரச்சினைகள்),

💥சமீபத்திய செய்திகள்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One