Search

TNPSC | TRB | TET CIVICS STUDY MATERIALS FREE DOWNLOAD| 9 ஆம் வகுப்பு புது பதிப்பு |CIVICS PART-2

Tuesday, 6 November 2018

TNPSC | TRB | TET CIVICS STUDY MATERIALS| 9 ஆம் வகுப்பு புது பதிப்பு | CIVICS PART-2
#குடிமக்களின் உரிமைகளுக்கு – அரசியலமைப்பு மூலம் உத்திரவாதம் அளிக்ககப்படுகிறது.

#இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதி – உரிமைகளும் கடமைகளும்.

#42-வது அரசியலமைப்புத் சட்ட திருத்தம் – 1976, பகுதி IV-ல் குடிமக்களின் அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

#ஒரு ஜனநாயக நாடு உருவாக அடிப்படையாக உள்ளவை:-

#அரசு நெறிசெய் கோட்பாடுகள் பகுதி IV-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

#பகுதி – III , IV மற்றும் IVA.
அடிப்படை உரிமைகள்:-

இந்திய அரசியலைமைப்பு – பகுதி – III , சட்டப்பிரிவு 12 முதல் 35 வரை.

இதில் சில உரிமைகள் அடிப்படை உரிமைகள்
#சமத்துவ உரிமை – விதி 14 முதல் 18 வரை.

#சுதந்திர உரிமை – விதி 19 முதல் 22 வரை.

#சுரண்டலுக்கு எதிரான உரிமை – விதி 23 முதல் 24 வரை.

#பண்பாடு மற்றும் கல்வி உரிமை – பிரிவு 29 முதல் 30 வரை.

#அரசியலமைப்பிற்கு தீர்வுகாணும் உரிமை – பிரிவு 32.

கல்வி உரிமை:-
#விதி – 21A, 2009-ல் இலவச கட்டாயக் கல்வி 6 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம்.

அடிப்படை கடமைகள்:- {பகுதி- IVA, பிரிவு 51A }
#42-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் = 1976.

#42-வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் பகுதி- IVA, பிரிவு 51A-ல் இந்திய குடிமக்களின் கடமைகள் வலியுறுத்துகிறது.

அடிப்படை கடமைகள்:-
#ஒவ்வொரு இந்திய குடிமகனும், அரசியல் சட்டம், தேசிய சின்னம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு மதிப்பு அளித்தல்.

#சுதந்திரப் போராட்ட வீரர்களின் உன்னத உணர்வை நினைத்துப் பேனுதல்.

#நாட்டின் பாதுகாப்பிற்காக செயலாற்றுதல்.

#நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாத்தல்.

#மதம், மொழி, இனம், வகுப்பு வேற்றுமைகளைத் துறந்து, சகோதர உணர்வுடன் ஒற்றுமை ஓங்கச்செய்தல்.

#நம்முடைய பண்பாடு பன்முகப் பாரம்பரியக் கலாச்சாரத்தின் மென்மையை மதித்தல்.

#இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மேம்படுத்துதல்.

#அறிவியல் மனப்பான்மை மற்றும் மனித நேயம் வளர்த்தல்.

#பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.

#தன்னுடைய முயற்சியினால் அனைத்துத் துறைகளிலும் தனிமனித மற்றும் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.

#பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்களது குழந்தைகளுக்கு கல்வி பெறுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.

அரசு நெறிசெய் கோட்பாடுகள் அல்லது வழிகாட்டும் கோட்பாடுகள்:-
#பகுதி 4-ல் விதி 36 முதல் 51 வரை

#இந்திய அரசியலமைப்பு, நாட்டை வழிநடத்த அரசு நெறிமுறைக் கோட்பாடுகளை வழங்கியுள்ளது.

#அனைத்து குடிமக்களுக்கும் போதுமான சமூகப்பொருளாதார குறிக்கோள் மூலம் சமூக நலனை உருவாக்குவது.

#இந்திய அரசியலமைப்பு முகவுரை – பெரும்பான்மையான நெறிமுறை கோட்பாடுகள் – சமய, பொருளாதார நெறிகளை நிலைநாட்டுவதற்கு வழிகாட்டும் கோட்பாடுகள்.

#அரசு நெறிசெய் கோட்பாடுகள் 3 தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன:-
#அரசின் குறிக்கோள்.
#அரசின் திட்டங்களை வடிவமைப்பது.
#அனைத்து குடிமக்களுக்கும் பாராபட்சமின்றி நேர்மையாக செயல்படுதல்.
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS| CIVICS FREE DOWNLOAD| 9 ஆம் வகுப்பு குடிமையியல் புது பதிப்பு | CIVICS PART-1

TNPSC | TRB | TET STUDY MATERIALS|9 ஆம் வகுப்பு புது பதிப்பு| CIVICS - PART-1
தேசிய நெருக்கடி நிலை:-
#இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், போர், அயல்நாட்டுப் படையெடுப்பு மற்றும் இராணுவக் கிளர்ச்சி ஏற்படும் போது அதனை சமாளிப்பதற்கு விதி 352 வழிசெய்கிறது.

#நெருக்கடி நிலை அறிவித்து நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டுபவர்.

மாநில நெருக்கடி நிலை:-
#ஒரு மாநிலத்தில், மாநில அரசு சட்டத்தை மீறி செயல்படும்போது, அம்மாநிலத்தில் நெருக்கடி நிலையை கொண்டுவர வழிசெய்யும் விதி 356

#விதி 356-ன் படி மாநில நெருக்கடி அறிவிக்கப்படும்.

#விதி-356 மாநில நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ளும்.

நிதி நெருக்கடி நிலை:-
#இந்தியாவில் பொருளாதாரத்திற்கு நெருக்கடி ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்கு 360 வது பிரிவு வழிசெய்கிறது.

#விதி-360 , நாடு முழுவதும் அல்லது ஏதாவது ஒரு பகுதியில் நிதி நெருக்கடி நிலைமை அறிவிக்கப்படலாம்.
ஒன்பதாம் வகுப்பு – குடிமையியல் - சமச்சீர்
==================================
பாடம் (1) மத்திய அரசு
=================================
இந்திய அரசியலமைப்புச் சட்டம் – தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் தலைமையில் பாராளுமன்றம் அமைய வழி வகுக்கிறது.
=================================
பாராளுமன்ற அரசு எத்தனை அங்கங்களை கொண்டது – மூன்று.
#சட்டமன்றம்
#நிருவாகம்
#நீதித்துறை
=================================
இந்திய நாடாளுமன்றம்...
மாநிலங்கள் அவை ( ராஜ்யசபா )
மக்களவை (லோக் சபை)
=================================
250 உறுப்பினர்களுக்கு மிகாமல்
545 உறுப்பினர்களுக்கு மிகாமல்
12 பேர் ஜனதிபதி நியமனம்
2ஆங்கிலோ இந்தியன் ஜனதிபதி நியமனம்
238 பேர் மாநிலம்&யூனியன் பிரதேசம்
530 பேர் மக்களால் தேர்வு
=================================
13 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசத்திலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
=================================
மத்திய அரசின் சட்டமன்றம் – நாடாளுமன்றம்.
=================================
நாடாளுமன்றம் – மேல்சபை, கீழ்சபை என இரு சபைகளை கொண்டது.
=================================
மேல்சபை – மாநிலங்கள் அவை அல்லது ராஜ்யசபை.
=================================
கீழ்சபை – மக்களவை அல்லது லோக்சபை.
மக்களவை ( லோக்சபை ) :-
=================================
நாடாளுமன்றத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சபை.
=================================
மக்களவை உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர்.
=================================
தற்போதய உறுப்பினர்களின் எண்ணிக்கை – 543
=================================
பல்வேறு மாநிலங்களிலிருந்து – 530
=================================
யூனியன் பிரதேசத்திலிருந்து – 13
=================================
குடியரசுத் தலைவர் ஆங்கிலோ இந்தியன் நியமனம் – 2
=================================
நாட்டின் எப்பகுதியிலிருந்தும் மக்களவை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியும்.
=================================
MPஆக தகுதிகள்:-
#இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
#25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
#மத்திய, மாநில அரசுப் பணியில் சம்பளம் பெறுபவராக இருத்தல் கூடாது.
#மனவளர்ச்சி குன்றியவர்களும், பெற்ற கடனை திரும்பத்தர முடியாதவர்களும் போட்டியிட முடியாது.
=================================
MP பதவிக்காலம்:-
#மக்களவை முதல் கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படலாம்.
#பிரதமரின் பரிந்துரையில் குடியரசுத் தலைவர் மக்களவையை கலைக்கலாம்.
#எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் குடியரசுத் தலைவர் மக்களவையை கலைக்கலாம்.
=================================
MP தேர்தல் முறை:-
#மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை – மக்கள் தொகை அடிப்படையில்.
#தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படுவது - மக்கள் தொகை அடிப்படையில்.
#18 வயது நிரம்பிய ஆண், பெண் – வயதுவந்தோர் வாக்குரிமை.
#மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதால் மாநிலங்களவை உறுப்பினர்களைவிட அதிக அதிகாரம் படைத்தவர்கள்.
=================================
#நிதி மசோதா மக்களவையில் மட்டுமே கொண்டு வரமுடியும்.
=================================
#அமைச்சர்கள் அனைவரும் – கூட்டாகவும், தனித்தனியாகவும் லோக்சபைக்கு பொறுப்புடையவர்கள்.
=================================
மக்களவையின் தலைவர் – சபாநாயகர்.
=================================
மக்களவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுபவர் – சபாநாயகர்.
=================================
சபாநாயகர் இல்லாத காலங்களில் லோக்சபையை வழி நடத்துபவர் – துணை சபாநாயகர்.
=================================
இந்திய மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் – மீரா குமார்.
=================================
இந்திய மக்களவையின் இரண்டாவது பெண் சபாநாயகர் – சுமித்ரா மகாஜன்.
=================================
இந்திய மக்களவையின் முதல் தற்போதய சபாநாயகர் – சுமித்ரா மகாஜன்.
=================================
இராஜ்யசபா அல்லது மாநிலங்களவை அல்லது மேல்சபை:-
=================================
மாநிலங்களைவை – 250 உறுப்பினர்களைக் கொண்டது.
=================================
மாநிலம் & யூனியன் பிரதேசத்திலிருந்து மறைமுகமாக தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கை – 238
=================================
இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பு அறிவும், நடைமுறை அனுபவமும் உடையவர்கள் – 12 உறுப்பினர்கள்.
=================================
12 உறுப்பினர்களை குடியரரசுத் தலைவர் நேரடியாக நியமனம் செய்கிறார்.
=================================
தகுதிகள்:-
#இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
#30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
#நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளராயப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
#மத்திய, மாநில அரசு ஊழியராக இருக்கக்கூடாது.
#மக்களவை உறுப்பினராக இருக்கக்கூடாது.
#மனவளர்ச்சி குன்றியவராக இருக்கக்கூடாது.
#பெற்ற கடனை திரும்பத்தர முடியாதவராக இருக்கக்கூடாது.
=================================
பதவிக்காலம்:-
#மாநிலங்களவை ஒரு நிரந்தர அவை.
#இதனைக் கலைக்க முடியாது.
#மாநிலங்களவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் – ஆறு ஆண்டுகள்.
#உறுப்பினர்கள் 1/3 பகுதியினர் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுகின்றனர்.
#மாநிலங்களவையின் தலைவர் – துணை
குடியரசுத் தலைவர்.
#மாநிலங்களவை உறுப்பினர்களால் துணை குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.

தேர்தல்:-
#மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் – ஒற்றை மாற்று வாக்கு முறை மூலம் தேர்வு.

#இது மறைமுக தேர்தல் என அழைக்கப்படுகிறது.

#ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையின் எண்ண்ணிக்கைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் ,
பணிகள்:-
#மாநிலங்களவை + மக்களவை என இரு அவைகளைக் கொண்டது.

#இந்திய நாடாளுமன்றம் = ஈரவை முறைச் சார்ந்தது.

#முக்கியப் பணி = சீரிய முறையில் ஆட்சி நடப்பதற்கான சட்டம் இயற்றுதல் ஆகும்.

#நாட்டின் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சிக்காகவும் சட்டம் இயற்றப்படுகிறது.

#நாட்டின் நிதிநிலைக்கு முழு பொறுப்பு = நாடாளுமன்றம்,.

#வரவு, செலவு திட்டங்களை தாக்கல் செய்வது, வரி நிர்ணயம் செய்வது இதன் பணி.

#பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதியை பகிர்ந்தளிப்பது.

#அரசியலமைப்பு சட்ட விதிகளை திருத்தம் செய்வது.

#குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் அரசியலமைப்பு அதிகாரங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பது.

#குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம்.

#எந்த ஒரு மாநிலத்தின் மீதும், நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ய குடியரசுத் தலைவரை நாடாளுமன்றம் அனுமதிக்கிறது.

#மைய நிர்வாகம்:-
குடியரசுத் தலைவர் + பிரதமர் + அமைச்சரவை.

#நாட்டின் நிருவாகத் தலைவர் = குடியரசுத் தலைவர்.

#குடியரசுத் தலைவரின் நிர்வாகப் பொறுப்புகள் = அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

#பெரும்பான்மை பெற்ற கட்சித் தலைவர் = பிரதமர்.

இந்திய குடியரசுத் தலைவர்:-
#இந்திய குடியரசின் தலைவர்.

#இந்திய ஒன்றியத்தின் நிருவாகத் தலைவர்.

#நீதித் துறைக்கு பொறுப்புடையவர்.

#மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் இவரிடம் உள்ளது – விதி 53.

#இவரின் அதிகாரங்கள் நேரடியாகவோ, அவர் கீழ் இயங்கும் அலுவலர்கள் மூலமாகவோ செயல்படுத்தல்லாம்.

தகுதிகள்:-
#இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

#35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

#மக்களவைக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய தகுதி உடையவராக இருக்க வேண்டும்.

#மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் ஊதியம் பெறும் பதிவி வகித்தல் கூடாது.

#நாடாளுமன்ற இரு அவை, மாநில சட்ட மன்ற அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது.

#எம்.எல்.ஏ, எம்.பி ஆக இருந்தால் குடியரசுத் தலைவர் தேர்வுக்கு முன்னர் விலக வேண்டும்.

தேர்தல்:-
#விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படுகிறது.

#ஒற்றை மாற்று வாக்கு முறையில் தேர்வாளர் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்.

#இரு அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் + மாநில சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் = தேர்வாளர் குழு.

#பதவிக்காலம் முடியும் முன்னரே, குற்றவிசாரணை மூலம் குடியரசுத் தலைவரை பதிவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தால் முடியும் = விதி 61

#பதவிக் காலம் - 5 ஆண்டுகள்.

#மீண்டும் ஒருமுறை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க தகுதியுடையவராவர்.

#ராஜினாமா கடிதத்தை துணைக் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்.

#குடியரசுத் துணை தலைவர், மக்களவை தலைவருக்கு உடனடியாக குடியரசுத்தலைவர் ராஜினாமாவைப் பற்றி அறிவிப்பார்.

தேர்வாளர் குழு:-
#லோக்சபை உறுப்பினர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்)

#ராஜ்யசபா உறுப்பினர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்)

#மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்)

#குடியரசுத்தலைவரின் பணிகள்:-
(இரண்டு வகை)
1) நிருவாகப் பணிகள்
2) நெருக்கடி கால அதிகாரங்கள்.

#சாதாரண காலங்களில் குடியரசுத் தலைவரின் நிருவாகப் பணிகள்:-
#நிருவாக அதிகாரங்கள்.

#சட்ட மன்ற அதிகாரங்கள்.

#நிதி அதிகாரங்கள்.

#நீதித் துறை அதிகாரங்கள்.

#இராணுவ அதிகாரங்கள்.

#நெருக்கடிக்கால அதிகாரங்கள்.
#நாட்டின் நிர்வாகத் தலைவர் = இந்தியக் குடியரசுத் தலைவர்.

#நாட்டின் நிர்வாகம் யாருடைய பெயரால் மேற்கொள்ளப்படுகிறது – கு.தலைவர்

#பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் அனைத்துச் சட்டங்களும் இவரது ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக வெளியேறும்.

#பிரதமரை நியமனம் செய்பவர்.

#பிரதமரின் அலோசனை பேரில் மற்ற அமைச்சர்களை நியமிப்பவர்.

#உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிற நீதிபதிகளையும் நியமிப்பவர்.

#உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, பிற நீதிபதிகளையும் நியமிப்பவர்.

#தேர்தல் ஆணையத்தில் தலைவரை நியமனம் செய்பவர்.

#அட்டார்னி ஜெனரல் மற்றும் தணிக்கைக் குழு தலைவரை தேர்வு செய்பவர்.

#மத்திய பனியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் நியமனம் செய்பவர்.

#இராணுவப் படை தளபதிகளை நியமனம் செய்பவர்.

#முப்படைகளுக்கும் தலைவராக விளங்குபவர்.

#மத்திய நாடாளுமன்றத்தின் தலைவராக விளங்குபவர்.

#நாடாளுமன்றத்தின் இரு சபைகளைக் கூட்டவும், தொடர்ந்து நடத்தவும், கலைக்கவும் இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

#ஆண்டின் முதல் நாடாளுமன்றத்தின் கூட்டத்தைத் துவக்கி அதில் உரை நிகழ்த்துகிறார்.

#நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதாவும், இவரது இசைவு பெற்ற பின்னரே சட்டமாகிறது.

#பண மசோதா இவரது முன் அனுமதி பெற்றே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

#கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறப்பு பெற்றவர்களில் 12 உறுப்பினர்களை இராஜ்யசபைக்கு நியமனம் செய்பவர்.

நீதித் துறை அதிகாரங்கள்:-
#எந்த ஒரு நீதி மன்றத்திற்கும் கட்டுப்பட்டவர் அல்ல.

#பாராளுமன்றத்தில் அரசியல் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தலாம்.

#குற்றாவாளிகளின் தண்டனையை கூட்டவோ, குறைக்கவோ, தள்ளுபடி செய்யவோ இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

#மரண தண்டனையைகூட தள்ளுபடி செய்யும் அதிகாரம் பெற்றவர்.

நிதித் துறை அதிகாரங்கள்:-
#நாட்டின் நிதிக்கு குடியரசுத்தலைவரே முழு பொறுப்பாவார்.

#இவரின் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு நிதி மசோதாவும் நாடாளுமன்றத்தில் அறிகமுகப் படுத்த முடியாது.

#ஆண்டு வரவு, செலவு கணக்கு இவரது அனுமதியடன் நாடாளுமன்றாத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. (மத்திய நிதியமைச்சரால்)

#எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து எடுத்து செலவழிக்கும் உரிமையை கொண்டவர்

#எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து அரசுக்கு முன்பணம் வழங்க அதிகாரம் பெற்றவர்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One