Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS | GEOGRAPHY FREE DOWNLOAD| 10 ஆம் வகுப்பு புவியியல் | PART-2

Sunday, 4 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS | 10 ஆம் வகுப்பு புவியியல் | PART-2
==========================
101) ஹிமாச்சல் மலைத்தொடரில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலைவாழிடங்கள் எவை?
 1) ஶ்ரீநகர் பாகல்கம்
 2) குல்மார்க்
 3) முசெளரி
 4) சிம்லா
 5) நைனிடால்
102) ஹிமாச்சல் மலைத்தொடரில் அமைந்துள்ள பள்ளத்தாக்குகள் எவை?
 1) காஷ்மீர் பள்ளத்தாக்கு
 2) காங்கிரா பள்ளத்தாக்கு
 3) குலு பள்ளத்தாக்கு
103) ஹிமாச்சல் மலைத்தொடரில் அமைந்துள்ள புனித இடங்கள் எவை?
 1) அமர்நாத்
 2) கேதார்நாத்
 3) பத்ரிநாத்
 4) வைஷ்ணவிதேவி கோயில்
104) இமயமலையின் தென் பகுதில் அமைந்துள்ள மலைகள் பெயர் என்ன?
 சிவாலிக் மலைகள்
105) சிவாலிக் மலைகளின் சராசரி உயரம் என்ன?
 1000 மீட்டர்
106) கலிமண்ணாலும், மென்பாறைகளாலும் ஆன தொடரச்சியற்ற இமையமலைத்தொடர் எது?
 சிவாலிக் மலைத்தொடர்
107) குறுகலான நீண்ட பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
 டூன் எனப்படும்
108) குறுகலான நீண்ட டூன் எனப்படும் பள்ளத்தாக்குகள் இமைய மலையின் எந்த மலைத்தொடரில் காணப்படுகிறது?
 சிவாலிக் மலைத்தொடர்
109) சிவாலிக் மலைத்தொடரின் வேறு பெயர்?
 வெளி இமயமலை
110) சிவாலிக் மலைத்தொடரில் அமைந்துள்ள சிறந்த டூன் எது?
 டேராடூன்
111) சிவாலிக் மலைத்தொடரின் தென்பகுதியில் ஆறுகளால் அடித்து வரப்பட்ட மென்துகள் படிவுகள் எதனை உருவாக்குகிறது?
 தராய் சமவெளி
112) டூன் பகுதிகளில் ஆறுகளால் அடித்து வரப்பட்ட மென்துகள் படிவுகளால் உருவாகும் தராய் சம்வெளியின் பயன் என்ன?
 1) அடர்ந்த காடுகள் உருவாக பயன்படுகிறது
 2) சதுப்பு நிலங்கள் உருவாகவதற்கு துணைபுரிகிறது
113) கிழக்கு இமயமலைத் தொடரின் வேறு பெயர்?
 பூர்வாஞ்சல் மலைத்தொடர்
114) இமயமலைகளின் கிழக்கு ஓரப் புவி எல்லையாக அமைவது?
 பிரம்மபுத்திரா ஆறு
115) இந்தியாவின் கிழக்கு எல்லைகளுடன் உள்ள இமயமலைகளை எவ்வாறு அழைக்கிறோம்?
 பூர்வாஞ்சல்
116) கிழக்கு இமயமலையில் அமைந்துள்ள குன்றுகள் யாவை?
 1) பட்காய் குன்று – வடக்கில் அமைந்துள்ளது
 2) நாகா குன்று - வடக்கில் அமைந்துள்ளது
 3) மீசோ குன்று – தெற்கில் அமைந்துள்ளது
117) வட பெரும் சமவெளி அமைவிடம்?
 இமயமலையின் தெற்கு பகுதி
118) வட பெரும் சமவெளிகள் எந்த ஆறுகளின் படிவுகளால் உருவானது?
 சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளின் படிவுகளால்
119) வட பெரும் சமவெளியின் நீளம்?
 2400 கிலோ மீட்டர்
120) வட பெரும் சமவெளியின் பரப்பு எவ்வளவு?
 ஏழு லட்சம் சதுர கிலோ மீட்டர்
121) வட பெரும் சமவெளியில் அமைந்துள்ள படிவுகள் எவை?
 1) பாகர் படிவுகள்
 2) தராய் படிவுகள்
 3) பங்கார் படிவுகள்
 4) காடர் படிவுகள்
122) வட பெரும் சமவெளியில் அமைந்துள்ள கரடுமுரடான படிவுகள் பெயர்?
 பாகர் படிவுகள்
123) வட பெரும் சமவெளியில் அமைந்துள்ள சதுப்பு படிவுகள் பெயர்?
 தராய் படிவுகள்
124) வட பெரும் சமவெளியில் அமைந்துள்ள பழைய வண்டல் படிவுகள் பெயர்?
 பங்கார் படிவுகள்
125) வட பெரும் சமவெளியில் அமைந்துள்ள புதிய வண்டல் படிவுகள் பெயர்?
 காடர் படிவுகள்
126) பாபர் மண் படிவுகள் மலையடிவாரத்தில் எவ்வளவு அகலத்திற்கு படிந்துள்ளது?
 8 முதல் 16 கிலோ மீட்டர் வரை
127) மலைகளிலிருந்து வரும் ஆறுகள் தாங்கள் கொண்டுவரும் படிவுகளை மலையடிவாரத்தில் எவ்வாறு படிய வைக்கிறது?
 வண்டல் விசிறிகளாக படிய வைக்கிறது
128) மலையடிவாரத்தில் படியும் வண்டல் விசிறிகளில் அதிகம் காணப்படும் நுண்துகளின் பயன்?
 நிலத்தடி நீர் உருவாக
129) இமயமலை அடிவாரத்தில் காணப்படும் சேறும் சகதியும் கொண்ட நிலப்பகுதி?
 தராய் எனப்படும்
130) பாபர் பகுதிகளில் மறைந்திருக்கும் ஆறுகள் எப்பகுதியில் மீண்டும் தோன்றுகின்றன?
 தராய் நிலப்பகுதியில்
131) பெரும்பாலான தராய் பகுதிகள் தற்போது எவ்வாறு மாற்றப்படுகிறது?
 தோட்டப் பகுதிகளாக மாற்றப்பட்டு வருகிறது
132) வண்டல் படிவுகளால் உருவான நிலத்தோற்றம்?
 பாங்கர்
133) பழைய வண்டல் படிவுகள் ஆன நிலத்தோற்றம்?
 பாங்கர்
134) பாங்கர் அமைந்துள்ள பகுதி?
 வெள்ளப்பெருக்குச் சமவெளி
135) பாங்கர் பெரும்பாலும் எவற்றால் ஆனவை?
 களிமண்
136) ஆறுகளால் கொண்டு வரப்படும் புதிய வண்டல் மண்?
 காடர்
137) வெள்ளப்பெருகுச் சமவெளியின் இரு கரைகளின் மீதும் படியவைக்கப்படும் படிவுகள்?
 காடர்
138) வட இந்தியச் சமவெளியின் நான்கு பிரிவுகள் எவை?
 1) ராஜஸ்தான் சமவெளி
 2) பஞ்சாப்-ஹரியானா சமவெளி
 3) கங்கைச் சமவெளி
 4) பிரம்மபுத்திரா சமவெளி
139) ராஜஸ்தான் சமவெளி அமைவிடம்?
 ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே
140) ஆரவல்லி மலைத்தொடரில் உருவாகும் பற்பல பருவகால நீரோடைகள் எந்த சமவெளியில் காணப்படுகிறது?
 ராஜஸ்தான் சமவெளி
141) ராஜஸ்தான் சமவெளியில் காணப்படும் முக்கிய ஆறாகத் திகழ்வது?
 லூனி ஆறு
142) லூனி ஆறு கடலில் கலக்குமிடம்?
 கட்ச் குடா
143) வேத காலத்திலும் வேதத்திற்கு முற்பட்ட காலத்திலும் வலிமையான ஆறாக இருந்தது எது?
 சரஸ்வதி ஆறு
144) பெருகிவரும் பாலைவனப் பரப்பிற்குள் சிறிது சிறிதாக மறைந்துபோன ஆறு எது?
 சரஸ்வதி ஆறு
145) மறைந்துபோன சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி என நம்பப்படும் ஆறு எது?
 காகர் ஆறு
146) பல உப்பு ஏறிகள் காணப்படும் சமவெளி?
 ராஜஸ்தான் சமவெளி
147) உப்பு ஏரிகளில் மிகப்பெரிய ஏரி எது?
 சாம்பார் ஏரி
148) சாம்பார் ஏரியின் அமைவிடம்?
 ஜெய்ப்பூருக்கு மேற்கே 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது
149) இந்தியப் பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ள வளமான சமவெளி எது?
 பஞ்சாப் – ஹரியானா சமவெளி
150) பஞ்சாப் – ஹரியானா சமவெளிகளை கங்கைச் சமவெளியிலிருந்து பிரிப்பது எது?
 டெல்லி முகடு
151) பஞ்சாப் – ஹரியான சமவெளியானது எந்த ஆறுகளினால் ஏற்படும் படிவுகளால் உருவானது?
 சட்லெஜ், பியாஸ், ராவி
152) பஞ்சாப் – ஹரியானா சமவெளியின் தென்கிழக்கு பகுதி எவ்வாறு அமைந்துள்ளது?
 மணற்பாங்கானதாகவும், நகருகின்ற மணற் திட்டுக்களாவும் அமந்துள்ளது
153) காக்ரா நதிக்கும் யமுனை நதிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு?
 ஹரியானா சமவெளி
154) இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட செழிப்பான வண்டல் மண் நிறைந்த சமவெளியின் பெயர்?
 தோ ஆப் (ஆற்றிடைச் சமவெளி)
155) தோ ஆப் எனும் ஆற்றிடைச் சமவெளிக்கு எடுத்துக்காட்டு?
 கங்கை மற்றும் யமுனை ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி
156) இந்தியாவின் மிகப்பரந்த சமவெளி?
 கங்கைச் சமவெளி
157) கங்கைச் சமவெளி கிழக்கு மேற்காக பரவியுள்ள எல்லை யாது?
 மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழகே வங்கதேசம் வரை
158) மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழகே வங்கதேசம் வரை கங்கைச் சமவெளி எத்தனை கி.மீ நீளத்துடன் பரவியுள்ளது?
 1500 கி.மீ
159) மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழகே வங்கதேசம் வரை பரவியுள்ள கங்கைச் சமவெளியின் சராசரி அகலம் எவ்வளவு?
 300 கி.மீ
160) கங்கைச் சமவெளி பரவியுள்ள மாநிலங்கள்?
 1) உத்திரப்பிரதேசம்
 2) பீகார்
 3) மேற்கு வங்கம்
161) வடக்கிலிருந்து உருவாகி கங்கை ஆற்றில் கலக்கும் கங்கையின் துணையாறுகள் எவை?
 1) ராம்கங்கா நதி
 2) கோமதி நதி
 3) காக்ரா நதி
 4) காண்டக் நதி
 5) கோசி நதி
162) தெற்கிலிருந்து உருவாகி கங்கை ஆற்றில் கலக்கும் கங்கையின் துணையாறுகள் எவை?
 1) சோன் நதி
 2) சம்பல் நதி
 3) பீட்வா நதி
163) கங்கைச் சமவெளியினுடைய சரிவு கிழக்கு மற்றும் தென்கிழக்கு நோக்கி எவ்வாறு அமைந்துள்ளது?
 மென்சரிவாக அமைந்துள்ளது
164) கங்கைச் சமவெளி கடல் மட்டத்திலிருந்து அமைந்துள்ள சராசரி உயரம் என்ன?
 200 மீட்டர்
165) கங்கைச் சமவெளியின் கிழக்கில் அமைந்துள்ள தாழ்நிலம்?
 ரோஹில்கண்ட் தாழ்நிலம்
166) இந்து மதத்தினை பின்பற்றும் மக்கள் எந்த ஆற்றினை புனிதமாகக் கருதுகின்றனர்?
 கங்கை மற்றும் யமுனை
167) கங்கை ஆற்றங்கறையில் அமைந்துள்ள புனிதத் தலங்கள் எவை?
 1) ஹரித்துவார்
 2) மதுரா
 3) வாரனாசி
 4) அலகாபாத்
168) பீகாரின் துயரம் என அழைக்கப்படுவது?
 கோசி ஆறு
169) பீகாரின் துயரம் என அழைக்கப்படும் கோசி ஆறு தன் ஆற்றுப்போக்கினை சமீப காலமாக எத்தனை கி.மீ. மாற்றியமைத்துள்ளது?
 100 கி.மீ
170) உலகிலேயே மிகப்பரந்த சமவெளி எது?
 கங்கைச் சமவெளி
171) கங்கைச் சமவெளியின் தாழ்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
 சுந்தரவனம்
172) ஓதத்தால் ஏற்படும் அடர்ந்த சதுப்புநில காடுகளைக் கொண்டுள்ள பகுதி?
 சுந்தரவனம்
173) கங்கைச் சமவெளியின் தாழ்பகுதியான சுந்தரவனம் பகுதியில் அமைந்துள்ளவை?
 1) கழிமுகங்கள்
 2) சதுப்புநிலக்காடுகள்
 3) மணல் திட்டுக்கள்
 4) தீவுகள்
174) பிரம்மபுத்திரா ஆறு எந்த பெயருடன் திபெத்தில் தோன்றுகிறது?
 சாங்போ
175)  பிரம்மபுத்திரா ஆறு இந்தியாவிற்குள் நுழையும்முன் உருவாக்கும் ஆழப் பள்ளத்தாக்கின் பெயர்?
 திகாங்
176) பிரம்மபுத்திரா ஆறு இந்தியாவிற்குள் நுழையும் இடம்?
 அஸ்ஸாம் பள்ளத்தாக்கு
177) பிரம்மபுத்திரா ஆறு தனது வண்டல் விசிறிகளால் உருவாக்கியுள்ள காடு?
 தராய் எனப்படும் சதுப்புநிலக் காடுகள்
178) களிமண் நிறைந்த சதுப்பு நிலங்கள் மிக அதிக அளவில் காணப்படும் ஆற்றுச் சமவெளி?
 பிரம்மபுத்திரா சமவெளி
179) வட இந்திய சமவெளிக்கு தெற்கே அமைந்துள்ள பீடபூமி?
 தீபகற்ப பீடபூமி
180) தீபகற்ப பீடபூமியின் வடிவம்?
 முக்கோண வடிவம்
181) தீபகற்ப பீடபூமியின் பரப்பளவு?
 16 இலட்சம் ச,கி,மீ
182) தீபகற்ப பீடபூமியின் வடக்கே அமைந்துள்ள மலைகள் யாவை?
 1) ஆரவல்லி மலைத்தொடர்
 2) விந்திய மலைத்தொடர்
 3) சாத்பூரா மலைத்தொடர்
 4) ராஜ்மகால் மலைத்தொடர்
183) தீபகற்ப பீடபூமியின் மேற்கே அமைந்துள்ள மலைத்தொடர் எது?
 மேற்கு தொடர்சி மலைகள்
184) தீபகற்ப பீடபூமியின் கிழக்கே அமைந்துள்ள மலைகள் யாவை?
 கிழக்கு தொடர்ச்சி மலைகள்
185) கடல் மட்டத்திலிருந்து தீபகற்ப பீடபூமியின் சராசரி உயரம்?
 600 முதல் 900 மீட்டர் உயரம்
186) தீபகற்ப பீடபூமியின் சரிவு எவ்வாறு அமைந்துள்ளது?
 மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்துள்ளது
187) நர்மதை மற்றும் தபதி அமைந்துள்ள தீபகற்ப பீடபூமி எவ்வாறு அமைந்துள்ளது?
 கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சரிந்துள்ளது
188) தீபகற்ப பீடபூமியை இரு சமமற்ற பகுதிகளாக பிரிக்கும் நதி எது?
 நர்மதை ஆறு
189) தீபகற்ப பீடபூமியின் வடபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
 மத்திய உயர்நிலங்கள்
190) தீபகற்ப பீடபூமியின் தென்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
 தக்காண பீடபூமி
191) தீபகற்ப பீடபூமியின் வடபகுதியான மத்திய உயர்நிலங்களில் அமைந்துள்ள பீடபூமிகள் யாவை?
 1) மாளவ பீடபூமி
 2) பண்டல்கான்ட் பீடபூமி
 3) பகல்கண்ட் பீடபூமி
 4) சோட்டாநாகபுரி பீடபூமி
192) தீபகற்ப பீடபூமியின் தென்பகுதியில் அமைந்துள்ள பீடபூமி?
 தக்காண பீடபூமி
193) மாளவப்பீடபூமியை சூழ்ந்துள்ள மலைகள்?
 1) ஆரவல்லி மலை
 2) விந்திய மலை
 3) பண்டல்கன்ட்
194) லாவா எனப்படும் எரிமலைக் குழம்பால் உருவாகி கருப்பு மண்ணால் ஆன பகுதி எது?
 மாளவப் பீடபூமி
195) மாளவப் பீடபூமியில் அமந்துள்ள முக்கிய நதி?
 சம்பல் நதி
196) மாளவப் பீடபூமியில் சம்பல் நதியின் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் எப்பகுதியில் அமைந்துள்ளன?
 மாளவப்பீடபூமியின் வட பகுதியில்
197) யமுனை ஆற்றின் தென் பகுதியில் அமைந்துள்ள நிலப்பரப்பு?
 பண்டல்கான்ட் உயர்நிலம்
198) பண்டல்கான்ட் உயர்நிலம் எவற்றால் ஆனது?
 தீப்பாறை மற்றும் உருமாறியப்பாறை
199) பண்டல்கான்ட் உயர்நிலத்தின் வடபகுதியில் அமைந்துள்ள நதிகள்?
 கங்கை மற்றும் யமுனை
200) பண்டல்கான்ட் உயர்நிலப்பகுதியில் ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்கும் ஆறுகள்?
 பீட்வா மற்றும் கென் ஆறுகள்
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS | GEOGRAPHY FREE DOWNLOAD| 10 ஆம் வகுப்பு புவியியல் |PART-1

TNPSC | TRB | TET STUDY MATERIALS | 10 ஆம்  வகுப்பு | GEOGRAPHY  PART-1
1)  தெற்கு ஆசியக்கண்டத்தின் வளமையான நாகரிகம் கொண்ட மிகப்பெரிய நாடு?
இந்தியா
2) இந்திய கலாச்சாரத் தாக்கம் இந்திய எல்லையையும் தாண்டி எதுவரை அடைந்துள்ளது?
கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள்
3) உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து இணைக்கும் நாடு எது?
இந்தியா
4) கீழை நாடுகளையும் மேலை நாடுகளையும் இணைக்கும் பாலமாக திகழும் நாடு?
இந்தியா
5) வரலாற்றுக் காலங்களில் இந்தியா எவ்வாறு அழைக்கப்பட்டது?
பாரதம் என்றும் இந்துஸ்தான் என்றும் அழைக்கப்பட்டது
6) எந்த வலிமையான அரசனை பின்பற்றி இந்தியாவை பாரதம் என அழைக்கப்பட்டது?
பரதன்
7) எந்த ஆற்றின் பெயரால் இந்தியாவை இந்துஸ்தான் என அழைக்கப்பட்டது?
சிந்து
8) எந்த சொல்லின் அடிப்படையில் இந்தியா என பெயரிடப்பட்டது?
சிந்து
9) இந்தியாவை ஒரு துணைக் கண்டம் என அழைக்க காரணங்கள்?
1) இயற்கை அமைப்பு
2) காலநிலை
3) இயற்கைத் தாவரங்கள்
4) பல்வேறு இனங்கள் மொழிகள்
5) மிகப்பரந்த நிலப்பரப்பு
10) உலக வரைபடத்தில் ஒரு அமைவிடத்தை அறிந்துகொள்ள உதவுவது?
அட்சக்கோடுகளும் தீர்க்கக்கோடுகளும்
11) இந்தியாவின் பரவல்?
வட அட்சம்  = 8.4 முதல் 37.6 வரை
கிழக்கு தீர்க்கம்  = 68.7 முதல் 97.25 வரை
12) இந்தியாவை இரு பகுதிகளாக பிரிக்கும் அட்சக்கோடு எது?
கடகரேகை
13) கடகரேகை இந்தியாவின் குறுக்காகச் சென்று எந்த வகையில் பிரிக்கிறது?
வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலம்
14) இந்தியாவின் பரப்பளவு?
32,87,263 சதுர கிலோ மீட்டர்
15) 2011-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு?
1.2 பில்லியன்
16) இந்தியாவின் வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரையான நீளம்?
3214 கிலோ மீட்டர்
17) இந்தியாவின் மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை எத்தனை கிலோ மீட்டர் அகலத்தைக் கொண்டுள்ளது?
2933 கிலோ மீட்டர்
18) இந்தியக் கடற்கரையின் நீளம்?
6000 கிலோ மீட்டர்
19) அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் இலட்சத் தீவு கடற்கரையும் சேர்த்து இந்தியாவின் மொத்த கடற்கரையின் நீளம்?
7516 கி.மீ
20) இந்தியா ஐரோப்பா நாடுகளுடன் வணிகம் மற்றும் பொருளாதார செயல்களில் ஈடுபட ஏதுவாக அமைந்துள்ளது எது?
சூயஸ் கால்வாய்
21)  இந்தியா சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் வணிகம் மற்றும் பொருளாதார செயல்களில் ஈடுபட ஏதுவாக அமைந்துள்ளது எது?
மலாக்கா நீர்ச்சந்தி
22) ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய நாடு?
இந்தியா
23) இந்தியா பாகிஸ்தானைவிட எத்தனை மடங்கு பெரியது?
நான்கு மடங்கு
24) ஜப்பானைவிட இந்தியா எத்தனை மடங்கு பெரியது?
எட்டு மடங்கு
25) இங்கிலாந்தைவிட இந்தியா எத்தனை மடங்கு பெரியது?
பன்னிரெண்டு மடங்கு
26) இந்தியாவைவிட ஐக்கிய அமெரிக்க நாடு எத்தனை மடங்கு பெரியது?
மூன்று மடங்கு
27) ஓர் இடத்தின் நேரத்தை கணக்கிடப் பயன்படுவது?
தீர்க்கக்கோடுகள்
28) இந்தியாவின் திட்ட நேரத்தை கணக்கிட உதவும் தீர்க்கக்கோடு எது?
82° 30´ கிழக்கு தீர்க்கம்
29) இந்தியாவில் 82° 30´ கிழக்கு தீர்க்கம் எந்த நகரத்தின் வழியாக செல்கிறது?
அலகாபாத்
30) இந்திய திட்ட நேரம் கிரின்விச் 0° தீர்க்கநேரத்தைவிட எத்தனை மணி முன்னதாக உள்ளது?
5 மணி 30 நிமிடம் முன்னதாக
31) இந்தியாவின் கிழக்கு மேற்க்காக சுமார் எத்தனை தீர்க்கங்களைக் கொண்டுள்ளது?
29° தீர்க்கங்களை கொண்டுள்ளது
32) இந்தியாவின் மேற்கு பகுதியைக் காட்டிலும் கிழக்குப் பகுதியில் சூரியன் எவ்வளவு நேரம் முன்னதாக உதிக்கவோ அல்லது மறையவோ செய்கிறது?
1 மணி 56 நிமிடம்
33) இந்தியாவை மியான்மரிலிருந்து பிரிக்கும் மலைத்தொடர்?
அரக்கோயோமா மலைத்தொடர்
34) இந்தியாவிற்கு தெற்கில் உள்ள இலங்கையை பிரிப்பது எது?
பாக் நீர்ச்சந்தி
35) இந்தியாவின் வடக்கு இயற்கை எல்லையாக அமைந்துள்ளது எது?
இமயமலைத்தொடர்
36) இந்தியாவின் அண்டை நாடுகள்களும் அவற்றின் திசைகளும்?
1) மேற்கில் பாகிஸ்தான்
2) வடமேற்கில் ஆப்கானிஸ்தான்
3) வடகிழக்கில் நேபாளம், பூடான் மற்றும் சீனா
4) கிழக்கில் வங்காள தேசம் மற்றும் மியான்மர்
37) இந்தியாவின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள கடல்?
அரபிக்கடல்
38) இந்தியாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ள நீர்பரப்பு?
வங்காள விரிகுடா
39) வங்காள விரிகுடாவில் உள்ள இந்திய யூனியன் பிரதேசம்?
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
40) அரபிக்கடலில் உள்ள இந்திய யூனியன் பிரதேசம் எது?
இலட்சத் தீவுகள்
41) இந்தியாவின் தனித்துவமான நில அமைப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன?
1) மிக உயர்ந்த மலைச்சிகரங்கள்
2) மிகக்குறைந்த சமவெளிகள்
42) உலகின் மிக உயர்ந்த சிகரம்?
எவரெஸ்ட்
43) எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள மலைத்தொடர்?
இமயமலைத்தொடர்
44) எவரெட்ஸ் சிகரம் அமைந்துள்ள இடம்?
நேபாளம் மற்றும் சீன எல்லையில்
45) கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?
8848 மீட்டர்
46) இந்தியாவின் கடகரேகைக்கு வடக்கே அமைந்துள்ள காலநிலை?
மிதவெப்பமண்டலக் காலநிலை
47) இந்தியாவின் கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள காலநிலை?
வெப்பமண்டலக் காலநிலை
48) மேற்கு தொடர்ச்சி மலையில் ஈரமிக்க பகுதிகளில் அமைந்துள்ள காடுகள்?
வெப்பமண்டலக் காடுகள்
49) மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள காடுகள்?
மாங்குரோவ் மரங்கள் கொண்ட சுந்தரவனக் காடுகள்
50) வேறுபட்ட இயற்கைச்சூழ்நிலை, காலநிலை, பல்வேறு வகையான தாவரங்கள், விளங்குகள் ஆகியவற்றிற்கு உகந்த ஓர் வாழிடமாத் திகழும் நாடு?
இந்தியா
51) இந்தியா 29 மாநிலங்களாகவும் 7 யூனியன் பிரதேசங்களும் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது?
1) மொழி அடிப்படையில்
2) நிர்வாக வசதிக்காக
52) பெரிதும் மாறுபட்ட நிலத்தோற்றங்களைக் கொண்ட நாடு?
இந்தியா
53) புவியிலுள்ள உறுதியான, தொன்மையான பாறை அமைப்புகளில் ஒன்றாக விளங்குவது?
இந்திய தீபகற்ப பீடபூமி
54) இந்தியாவின் நிலத்தோற்றங்களின் அடிப்படையில் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது?
ஐந்து பெரும்பிரிவுகள்
55) இந்தியாவின் நிலத்தோற்றங்களின் ஐந்து பிரிவுகள் யாவை?
1) வடக்கு மலைகள்
2) வடபெரும் சமவெளிகள்
3) தீபகற்ப பீடபூமி
4) கடற்கரைச் சமவெளிகள்
5) தீவுகள்
56) வடக்கு மலைகள் என்பது எதனைக் குறிக்கும்?
இமயமலை
57) பனி உறைவிடம் என அழைக்கப்படுவது?
இமயமலை
58) இமையமலை அமைந்துள்ள வடிவம் என்ன?
வில் போன்ற வடிவம்
59) வில் போன்ற வடிவில் அமைந்துள்ள இமையமலையின் நீளம்?
2,500 கிலோமீட்டர் (மேற்கு கிழக்காக)
60) இமயமலை மேற்கு கிழக்காக எதுவரை நீண்டுள்ளது?
1) மேற்கு = சிந்து பள்ளத்தாக்கு (ஜம்மு காஷ்ம்மீர்)
2) கிழக்கு = பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு (அருணாச்சல பிரதேசம்)
61)  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் புவியின் ஒரே நிலப்பகுதியின் பெயர்?
பாஞ்சியா
62)  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் புவியிலிருந்த ஒரே நிலப்பகுதியான பாஞ்சியாவை சுற்றியிருந்த நீர்ப்பகுதியின் பெயர்?
பாந்தலசா
63)  பரந்த நிலப்பகுதி இரு பகுதிகளாக பிரிந்த வடபகுதி மற்றும் தென்பகுதிகளுக்கு எவ்வாறு பெயரிடப்பட்டது?
வடபகுதி = அங்காரா (லாராஷியா)
தென்பகுதி = கோண்டுவானா
64)  அங்கார் மற்றும் கோண்டுவான ஆகிய நிலப்பகுதியை பிரிக்கும் நீர்ப்பகுதியின் பெயர்?
டெத்தீஸ் கடல்
65)  டெத்தீஸ் கடல் எந்த திசைகளில் பரவியிருந்தது?
கிழக்கு மேற்காக
66)  டெத்தீஸ் கடல் அடியில் இருந்த படிவு மடிக்கப்பட்டு உயர்த்தப்பட்டதால் தோன்றிய மலை?
இமயமலை என்ற மடிப்புமலை
67)  இமயமலையின் மூன்று உட்பிரிவுகள் யாவை?
1) மேற்கு இமயமலைகள்
2) மத்திய இமயமலைகள்
3) கிழக்கு இமயமலைகள்
68)  வடமேற்கு இந்தியாவில் உள்ள பாமீர் முடிச்சிலிருந்து கிழக்காக செல்லும் மலைகள் பெயர்?
காரகோரம்
69)  தென்மேற்கு காஷ்மீரில் அமைந்துள்ள மலை?
காரகோரம்
70)  ஆப்கானிஸ்தானிற்கும் சீனாவிற்கும் இடையில் இந்திய எல்லைகளாக அமைந்துள்ள மலை?
காரகோரம்
71)  உலகில் இரண்டாவது உயர்ந்த சிகரம்?
K2 எனப்படும் காட்வின் ஆஸ்டின்
72)  K2 எனப்படும் காட்வின் ஆஸ்டின் சிகரம் எந்த இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது?
காரகோரம் மலைத்தொடர்
73)  காரகோரம் மலைகளின் தெற்கே அமைந்துள்னொரு பெரும் பனியாறுகள் யாவை?
1) பல்டோரா
2) சியாச்சின்
74)  காரகோரம் மலைத்தொடருக்கு இணையாக அமைந்துள்ள மலைத்தொடர்கள் யாவை?
1) லடாக்
2) ஜாஸ்கர்
75)  லடாக் மலைத்தொடரின் தொடர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லடாக் பீடபூமி
76)  இந்தியாவின் மிக உயர்ந்த பீடபூமியாக அமைந்துள்ளது எது?
லடாக் பீடபூமி
77)  லடாக் பீடபூமி அமைந்துள்ள இடம்?
வடமேற்கு காஷ்மீர்
78)  பாமீர் முடிச்சிலிருந்து தென்கிழக்கு திசை நோக்கிச் செல்லும் இமயமலைகளின் பெயர்?
மத்திய இமயமலைகள்
79)  மத்திய இமயமலைகளில் வடக்கு தெற்காக இணையாக அமைந்துள்ள மலைத்தொடர்கள் எவை?
1) ஹிமாத்ரி
2) ஹிமாச்சல்
3) சிவாலிக்
80)  ஹிமாத்ரி மலையின் வேறு பெயர்?
 பெரிய இமயமலை
81) இமயமலையின் வடக்கு மலைத்தொடர்?
ஹிமாத்ரி மலைத்தொடர்
82)  ஹிமாத்ரி மலைத்தொடரின் சராசரி உயரம்?
 6000 மீட்டர்
83) ஹிமாத்ரி மலைத்தொடர் எல்லை எதுவரை அமைந்துள்ளது?
 வடமேற்கில் உள்ள சிந்து பள்ளத்தாக்கு முதல்
 வடகிழக்கில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை
84) உலகில் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் பல சிகரங்கள் அமைந்துள்ள மலைத்தொடர்?
 ஹிமாத்ரி மலைத்தொடர்
85) உலகிலேயே மிக உயரமுள்ள 8848 மீ உயரம் கொண்ட எவரெஸ்ட் மலைச்சிகரம் அமைந்துள்ள மலைத்தொடர்?
ஹிமாத்ரி மலைத்தொடர்
86) ஹிமாத்ரி மலைத்தொடரில் காணப்படும் சிகரங்கள்?
 1) கஞ்சன்ஜங்கா = 8598 மீட்டர்
 2) நங்கபர்வத் = 8126 மீட்டர்
 3) தவளகிரி = 8167 மீட்டர்
 4) நந்ததேவி = 7817 மீட்டர்
87) பல ஆறுகளின் உருவாக்கத்திற்கு ஆதாரமாக விளங்கும் பனியாறுகள் அமைந்துள்ள மலைத்தொடர்?
ஹிமாத்ரி மலைத்தொடர்
88) கங்கையின் பிறப்பிடம்?
 கங்கோத்ரி பனியாறு
89) கங்கோத்ரி அமைந்துள்ள மலைத்தொடர்?
 ஹிமாத்ரி மலைத்தொடர்
90) யமுனையின் பிறப்பிடம்?
 யமுனோத்ரி பனியாறு
91) மலைகளின் குறுக்கே காணப்படும் இயற்கைப் பாதைகளை எவ்வாறு அழைக்கிறோம்?
 கனவாய்
92) அண்டை நாடுகளுக்குச் செல்ல உதவும் மலைகளின் குறுக்கே காணப்படும் பாதைகளை எவ்வாறு அழைக்கிறோம்?
கணவாய்கள்
93) காஷ்மீரில் உள்ள கணவாய் பெயர்?
சொஜிலா கணவாய்
94) ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கணவாய்?
ஷிப்கிலா கணவாய்
95) சிக்கிமில் உள்ள கணவாய்?
நாதுலா கணவாய் & ஜலபுலா கணவாய்
96) ஹிமாத்ரி மலைத்தொடரில் உள்ள முக்கிய கணவாய்கள்?
1) சொஜிலா (காஷ்மீர்)
2) ஷிப்கிலா (இமாச்சல பிரதேசம்)
3) நாதுலா (சிக்கிம்)
4) ஜலபுலா (சிக்கிம்)
97) ஹிமாச்சல் மலைத்தொடரின் வேறு பெயர்?
சிறிய இமயமலை
98) ஹிமாச்சல் மலைத்தொடர் அமைந்துள்ள பகுதி?
வடக்கே ஹிமாத்ரி மலைத்தொடருக்கும் தெற்கே சிவாலிக் மலைத்தொடருக்கும் இடையே
99) இமாச்சல் மலைத்தொடரின் சராசரி அகலம்?
 80 கி.மீ
100) எந்த இமையமலைத்தொடரில் காஷ்மீரின் பீர்பாஞ்சல் மலைத்தொடர் அமைந்துள்ளது?
 ஹிமாச்சல் மலைத்தொடர்
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS | HISTORY FREE DOWNLOAD| 10 ஆம் வகுப்பு சமூகஅறிவியல்

பத்தாம் வகுப்பு
===========================
சமூக அறிவியல்
===========================
19 ஆம் நூற்றாண்டில் சமூகம் மற்றும் சமய சீர்த்திருத்த இயக்கங்கள்
===========================

1) இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நூற்றாண்டு எது?
விடை = பத்தொன்பதாம் நூற்றாண்டு
2) இந்திய மக்களால் மிகவும் கவரப்பட்ட மேற்கத்திய கருத்துக்கள் யாவை?
விடை = பகுத்தறிதல், சமத்துவம், சுதந்திரம், மனிதாபிமானம்
3) இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டவை?
விடை = சமூக சமய சீர்த்திருத்த இயக்கங்கள்
4) இந்திய சீர்த்திருந்த்தங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர்?
விடை = இராஜாராம் மோகன்ராய்
5) இராஜாராம் மோகன்ராய் எங்கு பிறந்தார்?
விடை = வங்காளம்
6) இராஜாராம் மோகன்ராய் கற்ற மொழிகள் யாவை?
விடை = அராபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு
7) இராஜாராம் மோகன்ராய் எந்த மொழிகளில் நூல்கள் பல இயற்றியுள்ளார்?
விடை = வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் ஆங்கிலம்
8) இராஜாராம் மோகன்ராய் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்க நூல்கள்?
விடை = ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி
9) இராஜாராம் மோகன்ராய் அவர்கள் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய காலம்?
விடை = 1805 முதல் 1814 வரை
10) இராஜாராம் மோகன்ராய் இங்கிலாந்து செல்ல காரணம்?
விடை = முகலாய மன்னர் இரண்டாம் அக்பருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை உயர்த்திப் பெற
11) இராஜாராம் மோகன்ராய் இறந்த ஆண்டு மற்றும் இடம் என்ன?
விடை = 1833 ஆம் ஆண்டு பிரிஸ்டல் என்னும் இடத்தில் இறந்தார்
12) இராஜாராம் மோகன்ராய் அவர்களுக்கு இராஜா என்ற பட்டம் வழங்கியவர்?
விடை = முகலாய மன்னர் இரண்டாம் அக்பர்
13) நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர்?
விடை = இராஜாராம் மோகன்ராய்
14) இந்து சமுதாயம் மற்றும் சமயத்தில் காணப்பட்ட பல்வேறு மூடப்பழக்கவழக்கங்களை நீக்கப் பாடுபட்டவர்?
விடை = இராஜாராம் மோகன்ராய்
15) ஆத்மீய சபாவை தோற்றுவித்தவர் யார் மற்றும் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
விடை = இராஜாராம் மோகன்ராய், 1815 ஆண்டு
16) 1815 ஆம் ஆண்டு தோற்ற்றுவிக்கப்பட்ட ஆத்மீய சபா, பின்னர் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
விடை = பிரம்ம சமாஜம்
17) பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை = 1828 ஆம் ஆண்டு
18) ஒரே கடவுள் என்ற கொள்கையின் அடிப்படையில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக அமைந்தது எது?
விடை = பிரம்ம சமாஜம்
19) இராஜாராம் மோகன்ராய் எதனை வன்மையாக கண்டித்தார்?
விடை = உருவ வழிபாடு, ஆடம்பரமான சடங்குகள், சமய விதிகள், சாதி வேறுபாடு, தீண்டாமை, உடன்கட்டை ஏறும் பழக்கம்
20) சதி எனும் சட்டத்தை கொண்டுவந்த ஆங்கில தலைமை ஆளுநர்?
விடை = வில்லியம் பெண்டிங் பிரபு
21) யாருடைய சீரிய முயற்சியினால் சதி எனும் சட்டம் கொண்டுவரப்பட்டது?
விடை = இராஜாராம் மோகன்ராய்
22) சதி எனும் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
விடை = 1829 ஆம் ஆண்டு
23) சதி சட்டத்தின் மூலம் வழங்கப்படும் அதிகப்பட்ச தண்டனை என்ன?
விடை = மரண தண்டனை
24) பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகப் போராடியவர்?
விடை = இராஜாராம் மோகன்ராய்
25) இராஜாராம் மோகன்ராய் அவர்கள் ஆதரித்தவை யாவை?
விடை = விதவைகள் மறுமணம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், கலப்புத் திருமணம்
26) இந்தியர்கள் எவற்றை பெறுமாறு இராஜாராம் மோகன்ராய் அவர்கள் வற்புறுத்தினார்?
விடை = மேலைநாட்டுக் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம்
27) மேலநாட்டுக்கல்வி எவற்றை நீக்க வழிவகுக்கும் என இராஜாராம் மோகன்ராய் நம்பினார்?
விடை = மூடநம்பிக்கைகள், கண்மூடித்தனமான பழக்கவழக்கங்கள்
28) இராஜாராம் மோகன்ராய் மறைவிற்கு பிறகு பிரம்ம சபையை ஏற்று நடத்தியவர்கள்?
விடை = திரு.கேசவ் சந்திரசென் & தேவேந்திரநாத் தாகூர்
29) பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடை செய்யும் சட்டம் யாருடைய முயற்சியால் இயற்றப்பட்டது மற்றும் இயற்றப்பட்ட ஆண்டு?
விடை = திரு.கேசவ் சந்திரசென், 1872 ஆம் ஆண்டு
30) கலப்புத் திருமணத்தையும் விதவைகள் மறுமணத்தையும் ஆதரித்த சட்டம்?
விடை = 1872 ஆண்டு சட்டம்
31) பிரார்த்தன சமாஜம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
விடை = ஆத்மராம் பாண்டுரங்
32) பிரார்த்தன சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை = 1867 ஆம் ஆண்டு
33) பிரார்த்தன சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட இடம்?
விடை = மும்பை
34) பல்வேறு சமூக சீர்த்திருத்தங்கள் ஏற்படக் காரணமாக இருந்த சபை?
விடை = பிரார்த்தன சமாஜம்
35) பிரார்த்தன சாமாஜம் ஈடுபட்ட நடவடிக்கைகள் எவை?
விடை = சமபந்தி உணவு, கலப்புத் திருமணம், விதவைகள் மறுமணம், பெண்கள் நலனை மேம்படுத்துதல், பிந்தங்கிய மக்களின் நலனை உயர்த்துதல், பர்தா அணியும் முறையை ஒழித்தல், குழந்தைத் திருமணம் ஒழிப்பு
36) தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இரவுப்பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களை நடத்திய அமைப்பு?
விடை = பிரார்த்தன சமாஜம்
37) பிரார்த்தன சபையின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்பணித்தவர்?
விடை = மகாதேவ கோவிந்தரானடே
38) ஆரிய சமாஜம் தோற்றுவித்தவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
39) ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை = 1875 ஆம் ஆண்டு
40) சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த ஊர்?
விடை = மூர்வி – குஜராத் – கத்தியவார் மாவட்டம்
41) சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர்?
விடை = மூல் சங்கர்
42) சுவாமி தயானந்த சரஸ்வதி யாருடைய சீடர்?
விடை = சுவாமி விராஜனந்தர்
43) வேதங்களிள் கூறப்பட்டுள்ள அனைத்துமே உண்மை என கண்டறிந்தவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
44) வேதங்களை பரப்புவதிலேயே தன் வாழ்க்கையை அர்பணித்தவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
45) சுவாமி தயானந்த சரஸ்வதியின் குறிக்கோள்?
விடை = வேதங்களை நோக்கிச் செல் என்பதாகும்
46) இந்து சமூகத்தை சீர்த்திருத்த எண்ணியவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
47) ஆரிய சமாஜம் எதிர்த்தவை எவை?
விடை = விலங்குகளை பலியிடுதல், உருவ வழிபாடு, மூடப்பழக்கங்கள், சொர்க்கம், நரகம் போன்ற கோட்பாடுகள், குழந்தை மணம், பலதார மணம், பர்தா அணியும் முறை, சாதி வேறுபாடுகள், உடன்கட்டை ஏறும் வழக்கம்
48) சுவாமி தயானந்த சரஸ்வதி தொடங்கிய இயக்கம்?
விடை = சுத்தி இயக்கம்
49) மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் எது?
விடை = சுத்தி இயக்கம்
50) ஆரிய சமாஜம் எதற்காக பாடுபட்டது?
விடை = பெண் கல்வி, கலப்பு மணம், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம்
51) சுவாமி தயானந்த சரஸ்வதியின் முக்கிய சீடர்கள்?
விடை = லாலாலஜபதி ராய், லாலா ஹன்ஸ்ராஜ், பண்டித குருதத்
52) ஆரிய சமாஜ கொள்கைகளை பரப்பியவர்கள்?
விடை = லாலாலஜபதி ராய், லாலா ஹன்ஸ்ராஜ், பண்டித குருதத்
53) ஆரிய சமாஜத்தின் தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்கள்?
விடை = பாலகங்காதரத் திலகர் & கோபால கிருஷ்ண கோகலே
54) சுதேசி மற்றும் இந்தியா இந்தியருக்கே போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கியவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
55) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்பட்டவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
56) பிரம்மஞான சபை எதற்காக துவங்கப்பட்டது?
விடை = கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவை பெறுவதற்காக
57) பிரம்மஞான சபை எங்கு துவங்கப்பட்டது?
விடை = நியூயார்க் நகரம் – அமெரிக்கா
58) பிரம்மஞான சபை எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
விடை = 1875 ஆம் ஆண்டு
59) பிரம்மஞான சபை யாரால் துவங்கப்பட்டது?
விடை = மேடம் பிளவாட்ஸ்கி அம்மையார் & ஹென்ரி எஸ்.ஆல்காட்
60) மேடம் பிளவாட்ஸ்கி அம்மையார் எந்த நாட்டை சேர்ந்தவர்?
விடை = இரஷ்ய பெண்மணி
61) ஹென்ரி எஸ்.ஆல்காட் எந்த நாட்டை சேர்ந்தவர்?
விடை = அமெரிக்கா
62) தியோஸ் என்றால் என்ன பொருள்?
விடை = கடவுள்
63) சோபாஸ் என்றால் என்ன பொருள்?
விடை = அறிவு
64) தியோசோபி என்றால் என்ன பொருள்?
விடை = கடவுளைப் பற்றிய அறிவு
65) பிரம்மஞான சபையின் முக்கிய நோக்கம்?
1) மக்களிடையே சகோதரத்துவம் வளர்ப்பது
2) பண்டைய சமயங்களைப் பற்றியும் மற்றும் தத்துவங்கள்
3) அறிவியல் மற்றும் இயற்கையின் நியதிகளை அறிந்து மக்களிடையே தெய்வீக சக்தியை வளர்ப்பது
66) திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார் பிரம்மஞான சபையின் தலைவராக பொறுப்பேற்ற ஆண்டு?
விடை = 1893 ஆம் ஆண்டு
67) இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்காவும், இந்தியக் கல்விக்காகவும் தன்னை அர்பணித்துக்கொண்டவர்?
விடை = திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார்
68) திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார் ஆற்றிய முக்கிய பணி?
விடை = கல்விப்பணி
69) திருமதி. அன்னிபெசன்ட் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்ட கல்லூரி எது?
விடை = பனாரஸ் இந்து கல்லூரி (காசி)
70) பிற்காலத்தில் பனாரஸ் இந்து கல்லூரி எவ்வாறு வளர்ச்சியுற்றது?
விடை = பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (காசி)
71) பிரம்மஞான சபையின் நோக்கங்களை பரப்புவதற்காக அன்னிபெசன்ட் அவர்கள் நடத்திய செய்தித்தாள்?
விடை = நியூ இந்தியா
72) பிரம்மஞான சபையின் தலைமையிடத்தை அன்னிபெசன்ட் அம்மையார் எங்கு நிறுவினார்?
விடை = சென்னை அடையார்
73) அடையாறில் ஒரு நூலகத்தை நிறுவி பழமையான சமஸ்கிருத நூல்களை பாதுகாத்து வந்தவர்?
விடை = அன்னிபெசன்ட் அம்மையார்
74) இந்தியர்களின் மறுமலர்ச்சிக்காக ஒரு முன்னோடி இயக்கமாக செயல்பட்ட சபை?
விடை = பிரம்மஞான சபை
75) இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
விடை = 1897 ஆம் ஆண்டு
76) தன்னார்வத் தொண்டு நிறுவனமாக செயல்படும் இயக்கம்?
விடை = இராமகிருஷ்ண இயக்கம்
77) இராமகிருஷ்ண இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
விடை = சுவாமி விவேகானந்தர்
78) இராமகிருஷ்ண இயக்கம் துவங்கப்பட்ட நாள்?
விடை = 01.05.1897
79) இராமகிருஷ்ணரின் முக்கிய சீடர்களில் ஒருவர்?
விடை = சுவாமி விவேகனந்தர்
80) இராமகிருஷ்ணரின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்பியவர்?
விடை = சுவாமி விவேகனந்தர்
81) இராமகிருஷ்ண மடம் யாரால் எங்கு எப்போது தொடங்கப்பட்டது?
விடை = சுவாமி விவேகானந்தர், பேலூர் (கல்கத்தா அருகே), 1897 ஆம் ஆண்டு
82) இராமகிருஷ்ண மடத்தின் தொண்டுகள் யாவை?
1) உடல் நலம்
2) பேரழிவு நிவாரணம்
3) கிராம முன்னேற்றம்
4) ஆதிவாசிகள் நலன்
5) துவக்கக்கல்வி
6) உயர்கல்வி
83) இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த இடம் மற்றும் ஆண்டு?
விடை = வங்காளம், 1836 ஆம் ஆண்டு
84) இராமகிருஷ்ண பரமஹம்சரின் துணைவியார் பெயர்?
விடை = சாரதாமணிதேவி
85) தட்சிணேஸ்வரம் எனும் இடத்தில் உள்ள காளி கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவர்?
விடை = இராமகிருஷ்ண பரமஹம்சர்
86) அனைத்து சமயங்களின் அடிப்படை உண்மைகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தவர்?
விடை = இராமகிருஷ்ண பரமஹம்சர்
87) விவேகானந்தர் என அழைக்கப்பட்டவர்?
விடை = நரேந்திரநாத் தத்தா
88) அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை = 1893 ஆம் ஆண்டு
89) 1893 ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு சகோதர சகோதரிகளே என உரையாற்றியவர்?
விடை = சுவாமி விவேகானந்தர்
90) இராமகிருஷ்ண இயக்கத்தின் நோக்கங்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தும் எதன் அடிப்படையில் அமைந்தன?
விடை = சமயம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில்
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS| TAMIL FREE DOWNLOAD| கலைச்சொற்களின் தமிழாக்கம்

பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்
===========================
கலைச்சொற்களின் தமிழாக்கம்.

===========================
1) International Law = அனைத்து நாட்டுச்சட்டம்
===========================
2) Constitutional Law = அரசியல் அமைப்புச்சட்டம்
===========================
3) Supreme Court = உச்சநீதிமன்றம்
===========================
4) Supreme Court = உச்சநீதிமன்றம்
===========================
5) High Court = உயர்நீதிமன்றம்
===========================
6) Writs = சட்ட ஆவணங்கள் (ஆணைகள்)
===========================
7) Substantive Law =உரிமைச்சட்டம்
===========================
8 ) Procedural Law = செயற்பாட்டு முறைச்சட்டங்கள்
===========================
9) Infian Penal Code = இந்திய தண்டனைச் சட்டத் தொகுப்பு
===========================
10) Criminal procedure Code = குற்றவியல் செயற்பாட்டு தொகுப்பு
===========================
11) Civil Procedure Code = உரிமையியல் செயற்பாட்டு தொகுப்பு
===========================
12) Indian Evidence Act = இந்தியச் சான்றுச் சட்டம்
===========================
13) Transfer of Property Act = சொத்துமாற்றுச் சட்டம்
===========================
14) Indian Succession Act = இந்திய வாரிசுரிமைச் சட்டம்
===========================
15) Court Fee Stamp = நீதிமன்றக் கட்டண வில்லை
===========================
16) Persistence of vision = பார்வை நிலைப்பு
===========================
17) Dubbing = ஒலிச்சேர்க்கை
===========================
18) Director = இயக்குநர்
===========================
19) Shooting = படப்பிடிப்பு
===========================
20) Cartoon = கருத்துப் படம்
===========================
21) Camera = படப்பிடிப்புக் கருவி
===========================
22) Troily = நகர்த்தும் கருவி
===========================
23) Microphone = நுண்ணொலிபெருக்கி
===========================
24) Projector = படவீழ்த்தி
===========================
25) Lenses = உருபெருக்கி
===========================
26) Motion Pictures = இயக்குபடங்கள்
===========================
27) Aesthetic = இயற்கை வனப்பு
===========================
28) Biology = உயிரியல்
===========================
29) Classical language = உயர்தனிச் செம்மொழி
===========================
30) Green Rooms = பாசறை
===========================
31) Instinct = இயற்கை அறிவு
===========================
32) Order of Nature = இயற்கை ஒழுங்கு
===========================
33) Snacks = சிற்றுணவு
===========================
34) B. A.,  Bachelor of Arts = இளங்கலை
===========================
35) M. A.,  Master of Arts = முதுகலை
===========================
36) B. Sc., Bachelor of Science = இளம் அறிவியல்
===========================
37) M. Sc., Master of Science = முது அறிவியல்
===========================
38) B. Com., Bachelor’ of Commerce = இளம் வணிகவியல்
===========================
39) M. Com., Master of Commerce = முது வணிகவியல்
===========================
40) B. Lit., Bachelor’ of literature = இளங்கலை  இலக்கியம்
===========================
41) B. Ed., Bachelor’ of Education = இளம்  கல்வியியல்
===========================
42) M. Ed.,  Master of Education = முது கல்வியியல்
===========================
43) PH. D.,   Doctor of Philosophy = முனைவர்
===========================
44) I. A. S.,  Indian Administration Services = இந்திய ஆட்சிப் பணி
===========================
45) I.P.S.,  Indian Police services = இந்திய காவல்ப் பணி
===========================
46) I.F.S.  Indian Forest Services = இந்திய வனப்பணி
===========================
47) I.R.S.,   Indian Revenue Services = இந்திய வருவாய்ப்பணி
===========================
48) B.E.,  Bachelor of Engineering = இளம் பொறியியல்
===========================
49) M.E.,   Master of Engineering = முது பொறியியல்
===========================
50) B.Tech.,   Bachelor’ of Technology = இளம் தொழில்நுட்பவியல்
===========================
51) M.Tech.,  Master of Technology = முது தொழில்நுட்பவியல்
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS| TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் | PART-11

TNPSC | TRB | TET STUDY MATERIALS | பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்| PART-11
===========================
1000) வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள் யாவை?
  1) சிறந்த சொற்பொழிவாளர்
  2) போதகாசிரியர்
  3) உரையாசிரியர்
  4) சித்த மருத்துவர்
  5) பசிப்பிணி போக்கிய அருளாளர்
  6) பதிப்பாசிரியர்
  7) நூலாசிரியர்
  8) இதழாசிரியர்
  9) இறையன்பர்
10) ஞானாசிரியர்
11) அருளாசிரியர்

1001) வள்ளலார் பதுப்பித்த நூல்கள் எவை?
1) சின்மய தீபிகை
2) ஒழிவிலொடுக்கம்
3) தொண்டை மண்டல சதகம்
1002) வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்கள்?
1) மனுமுறை கண்ட வாசகம்
2) ஜீவகாருண்ய ஒழுக்கம்
1003) ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் பிறந்து, மாபெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வித்திட்டவர்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர்
1004) தென்னிந்தியச் சமூகச் சீர்த்திருத்தத்தின் தந்தை என மக்கள் எல்லோராலும் போற்றப்பட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1005) அயோத்திதாசப் பண்டிதரின் நற்கருத்துகள் பசுமரத்தாணியாய் பதிந்துள்ள மாநிலங்கள் & நாடுகள்?
தமிழகம், மைசூர், ஆந்திரம், திருவிதாங்கூர், பர்மா, மலேஷியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை

1006) அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த இடம்?
சென்னை ஆயிரம் விளக்கு – மக்கிமா நகர்
1007) அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த நாள்?
20.05.1845
1008) அயோத்திதாசப் பண்டிதரின் தந்தையார் பெயர்?
கந்தசாமி
1009) அயோத்திதாசப் பண்டிதரின் பெற்றோர் இட்டபெயர்?
காத்தவராயன்
1010) காத்தவராயன் என்னும் அயோத்திதாசரின் பிஞ்சு நெஞ்சில் நஞ்சாய் இறங்கியது எது?
தீண்டாமைக் கொடுமை
1011) காத்தவராயன் யாரிடம் கல்வி கற்றார்?
வீ.அயோத்திதாசப்பண்டிதர்
1012) தம்முடைய குரு எழுதிய பாடலை, உயர் பிரிவைச் சார்ந்த ஒருவர் குற்றம் சாட்ட, அதனைக் கேட்டு கொதித்தெழுந்தவர்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர்
1013) தம் ஆசிரியர் எழுதிய கவிதையை பிற்காலத்தில் தாம் தொடங்கிய இதழில் வெளியிட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1014) ஒரு பைசாத் தமிழன் என்ற இதழை வெளியிட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1015) தம்முடைய ஆசிரியர் பெயரான அயோத்திதாசர் என்பதை தம்பெயராகச் சூட்டிக்கொண்டவர்?
காத்தவராயன்
1016) சமூகச்சீர்த்திருத்தக் கருத்துக்களை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்தவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1017) நீலகிரி மலைப்பகுதில் வாழும் தோடர் இனப்பிரிவில் கலப்புத்திருமணம் செய்துகொண்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1018) அயோத்திதாசப் பண்டிதர் தோடர் இனப்பிரிவில் கலப்புத்திருமணம் செய்துகொண்டு பத்து ஆண்டுகள் எங்கு சென்று வாழ்ந்தார்?
ரங்கூன்
1019) அக்காலத்தில் தேயிலை பறிப்போர், விவசாயக் கூலி வேலை செய்வோர், மரம் அறுப்போர் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1020) இந்து மதக் கருத்துகளை ஆழ்ந்து கற்றவர், புத்தநெறியால் கவரப்பெற்றவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1021) அயோத்திதாசப் பண்டிதரின் மகன்களின் பெயர்கள்?
பட்டாபிராமன், மாதவராமன், சானகிராமன், இராசாராம்
1022) அயோத்திதாசப் பண்டிதர் தம் மகள்களுக்கு விரும்பிச் சூட்டிய பெயர்கள்?
அம்பிகாதேவி, மாயாதேவி (புத்தமதப் பெயர்கள்)
1023) சித்த மருத்துவத்தில் கைதேர்ந்ததால், மருத்துவர் என்றும் பண்டிதர் என்றும் அழைக்கப்பட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1024) எவரையும் சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பது தவறு என்றவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1025) சென்னையில் முக்கியமான ஐந்து இடங்களில் தலித்துகளுக்கு ஆல்காட் (1832-1907) என்பவரால் இலவசப் பள்ளிகளை நிறுவியவர்?
அயோத்திதாசப் பண்டிதர்

1026) அயோத்திதாசப் பண்டிதரின் ஒருபைசாத் தமிழன் – என்ற இதழின் அன்றைய விலை?
காலனா
1027) அயோத்திதாசப் பண்டிதரின் ஒருபைசாத் தமிழன் – என்ற இதழ் முதன்முதலில் வெளிவந்த நாள்?
19.06.1907
1028) ஒருபைசாத் தமிழன் – என்ற இதழ் வார்ந்தோறும் வெளிவந்த நாள்?
புதன் கிழமை
1029) ஒருபைசாத் தமிழன் – என்ற இதழ் எங்கிருந்து வெளியிடப்பட்டது?
சென்னை இராயப்பேட்டை
1030) உயர்நிலையும் இடைநிலையும் கடைநிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றை செய்திகளாக்கியவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1031) பெளத்த சமயத்தில் ஆழங்கால்பட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1032) எள்செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி – என்று புதியதோர் விளக்கம் தந்தவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1033) நுகர்ப்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாக தீபாவளியைக் கொண்டாடும் நாடு?
சப்பான்
1034) புத்தரது “ஆதிவேதம்” என்ற நூலின் ஆசிரியர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1035) புத்தரது “ஆதிவேதம்” என்ற நூல் எத்தனை காதைகளை கொண்டது?
இருபத்தெட்டுக் காதைகள் = 28 காதைகள்
1036) அயோத்திதாசப் பண்டிதர் புத்தரது “ஆதிவேதம்” என்ற நூல் எழுதுவதற்குச் சான்றாக எந்த நூல்களை துணை நூல்களாகக் கொண்டார்?
1) பெருங்குறவஞ்சி
2) வீரசோழியம்
3) நன்னூள் விளக்கம்
4) நாயனார் திரிகுறம்
5) சித்தர் பாடல்கள்
6) வைராக்கிய சதகம்
7) மச்சமுனிவர் ஞானம்
1037) புத்தரது “ஆதிவேதம்” என்ற நூல் எழுதுவதற்கு எந்த மொழிகளின் துணையுடன் அயோத்திதாசப் பண்டிதர் எழுதினார்?
பாலி மொழி, ஆங்கில மொழி
1038) அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய நூல்களுள் பாராட்டத்தக்க நூல் எது?
இந்திரதேச சரித்திரம்
1039) இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறு நூல்களை வெளியிட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1040) வீரமாமுனிவரைப் போல் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தவர் & திருவாசகத்திற்கும் உரை எழுதியவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1041) உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் – என்று கூரியவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1042) அயோத்திதாசப் பண்டிதர் புகழுடம்பு எய்திய நாள்?
05.05.1914
1043) “பா” – நான்கு வகைப்படும் அவை யாவை?
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
1044) வெண்பாவின் வகைகள் எத்தனை? அவை யாவை?
ஆறு வகைப்படும்
1) குறள் வெண்பா 3) இன்னிசை வெண்பா 5) நேரிசைச் சிந்தியல் வெண்பா
2) நேரிசை வெண்பா 4) பஃறொடை வெண்பா 6) இன்னிசைச் சிந்தியல் வெண்பா
1045) ஆசிரியப்பாவின் வேறு பெயர்?
அகவற்பா
1046) ஆசிரியப்பா வகைகள் எத்தனை? அவை யாவை?
நான்கு வகைப்படும்
1) நேரிசை ஆசிரியப்பா 3) நிலைமண்டில ஆசிரியப்பா
2) இணைக்குறள் ஆசிரியப்பா 4) அடிமறி ஆசிரியப்பா
1047) அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் – என்னும் திருவருட்பா பாடல் இடம்பெறும் தலைப்பு?
சுத்த சன்மார்க்க வேண்டுகோள் – திருவருட்பா ஆறாம் திருமுறையில்
1048) அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் – இப்பாடலில் அமைந்துள்ள அணி?
இயல்புநவிற்சி அணி
1049) பாடலில் அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்றிவருவது?
எதுகை
1050) பாடலில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவருவது?
மோனை
1051) ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றிவருவது?
கூழை மோனை
1052) மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப்போல் – என்று பாடியவர்?
பாரதிதாசன்
1053) புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – என்று பாடியவர்?
பாரதிதாசன்
1054) இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் இலகுவது புலவர் தரும் சுவடிச் சாலை – பாடியவர்?
பாரதிதாசன்
1055) சீக்கிரம் செல்க நேர்வழியில் – என்று தொடங்கும் கவிதையை பாடியவர்?
சாலை இளந்திரையன்
1056) சீக்கிரம் செல்க நேர்வழியில் – என்ற கவிதை இடம்பெறும் தலைப்பு?
நிற்க நேரமில்லை
1057) இன்றிளைப்பாறுவம் என்றிருந்தால் வழி என்னென்னவாக்குமோ ஓரிரவில் – என்று பாடியவர்?
சாலை இளந்திரையன்
1058) சாலை இளந்திரையனின் பெற்றோர்?
இராமையா & அன்னலட்சுமி
1059) சாலை இளந்திரையன் பிறந்த ஊர்?
சாலைநயினார் பள்ளிவாசல் – நெல்லை மாவட்டம்
1060) தில்லி பல்கலைக்கழகத்தில் சாலை இளந்திரையன் ஆற்றிய பணி?
தமிழ்த்துறை விரிவுரையாளாகித் தமிழ்த்துறைத் தலைவரானார்
1061) சாலை இளந்திரையன் அவர்களால் தோன்ற காரணமாக இருந்த அமைப்புகள்?
1) உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்
2) இந்திய பல்கலைக்கழக தமிழ் ஆசிரியர் மன்றம்
3) தில்லி தமிழ் எழுத்தாளர் சங்கம்
4) உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
1062) சாலை இளந்திரையன் அவர்கள் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு?
1991
1063) தம் வாழ்நாள் முழுவதும் தமிழின முன்னேற்றத்திற்கான படைப்புகளை வழங்கி எழுச்சியூட்டியவர்?
சாலை இளந்திரையன்
1064) சாலை இளந்திரையன் அவர்கள் வாழ்ந்த காலம்?
06.09.1930 – 04.10.1998
1065) நிறக நேரமில்லை என்ற கவிதை தலைப்பு இடம்பெறும் கவிதைத் தொகுப்பு?
பூத்தது மானுடம்
1066) சாலை இளந்திரையன் அவர்களின் படைப்புகளில் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்ற நூலகள்?
1) புரட்சி முழக்கம்
2) உரை வீச்சு
1067) வினையே ஆடவர்கு உயிர் – எனக் கூறும் நூல்?
குறுந்தொகை
1068) முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை – எனக்கூறும் நூல்?
தொல்காப்பியம்
1069) உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே – என்று பாடியவர்?
திருமூலர்
1070) வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் – என்று பாடியவர்?
கவிஞர் தாராபாரதி
1071) Small rudders guide great ships – இணையான தமிழ்ப் பழமொழி கூறுக.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
1072) You must walk before run - இணையான தமிழ்ப் பழமொழி கூறுக.
சிந்தித்துச் செயல்படு
1073) Distance lends enchantment to the view - இணையான தமிழ்ப் பழமொழி கூறுக.
இக்கரைக்கு அக்கரை பச்சை
1074) Measure is a treasure - இணையான தமிழ்ப் பழமொழி கூறுக.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
1075) Make Hay While the Sun Shines - இணையான தமிழ்ப் பழமொழி கூறுக.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
1076) ஒரு நாள் உறங்குவதற்கு ஐந்து மணி நேரத்தை என் உதவியாளர் எனக்கு ஒதுக்கித் தந்தால், அதில் இரண்டு மணி நேரத்தைப் படிப்பதற்குத் திருடுகிறேன் – என்று கூறியவர்?
நேரு
1077) பீலிபெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் – இக்குறளில் பயின்று வரும் அணி?
பிரிதுமொழிதல் அணி
1078) தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வரும் அணி?
சொற்பொருள் பின்வருநிலையணி

1079) ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது?
பொருள் பின்வருநிலையணி
1080) முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது?
சொல்பின்வரு நிலையணி
1081) பழங்கால மக்கள் தனது எண்ணங்களையும் செய்திகளையும் வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்திய பொருட்கள்?
1) கற்பாறைகள்
2) களிமண் பலகைகள்
3) மரப்பட்டைகள்
4) தோல்கள்
5) துணிகள்
6) பனை ஓலைகள்
1082) பழங்கால தமிழக மக்கள் தனது எண்ணங்களையும் செய்திகளையும் வெளிப்படுத்துவதற்கு பெரும்பாலும்பயன்படுத்திய பொருள்?
பனை ஓலைகள்
1083) பனை ஓலைகளை பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள்?
1) துளசி
2) வேப்பிலை
3) மஞ்சள் நீர்
1084) உலக இலக்கித் துறையில் நடைபெற்ற மாபெரும் புரட்சி?
காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது
1085) ஒரு மனிதன் ஆண்டுக்கு எத்தனை பக்கங்கள் படித்தால், அன்றாட உலக நடப்புகளை அறிந்த மனிதனாக கருதப்படுவான்?
இரண்டாயிரம் பக்கங்கள் = 2000 பக்கங்கள் – யுனெஸ்கோ கூறுகிறது
1086) நூலகத்தின் பல்வேறு பெயர்கள்?
1) புத்தகச்சாலை
2) ஏடகம்
3) சுவடியகம்
4) சுவடிச்சாலை
5) வாசகசாலை
6) படிப்பகம்
7) நூல்நிலையம்
8) பண்டாரம்
1087) முதன்முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்த அரசு?
கிரீஸ் நகர அரசு
1088) நூலகம் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
லைப்ரரி
1089) இலத்தீன் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்கு என்ன பொருள்?
புத்தகம்
1090) ஆரில்லா ஊருக்கு அழகு பாழ் – நூலகமில்லா ஊருக்கு?
அறிவு பாழ்
1091) ஓர் அரசின் தலையாய கடமை?
மக்களை அறிவுடையோராக்குதல்

1092) இந்தியாவிலேயே முதன்முறையாக பொதுநூலகச் சட்டம் இயற்றிய மாநிலம் & ஆண்டு?
தமிழ்நாடு – 1948 ஆம் ஆண்டு
1093) நூலகப் பணிகளின் சீரான செயல்பாட்டிற்கு வித்திட்ட சட்டம்?
1948 ஆம் ஆண்டு சென்னை பொதுநூலகச் சட்டம்
1094) இந்தியாவில் உள்ள நூலகங்களில் முதன்மையானது?
கொல்கத்தா தேசிய நூலகம்
1095) கொல்கத்தா தேசிய நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை?
பத்து இலட்சம் நூல்கள்
1096) பாடநூல்களைக் கொண்டு அறிவை வளர்க்கும் களம்?
பள்ளி
1097) அறிவை வளர்த்துச் செழுமைப் படுத்தும் களம்?
நூலகம்
1098) பள்ளி மாணவர்கள் ஓரிடம், நூலகம் வேறிடம் என்ற நிலையை மாற்ற தொடங்கப்பட்டுள்ள திட்டம்?
புத்தகப்பூங்கொத்து
1099) புத்தகப்பூங்கொத்து எனும் வகுப்பறை நூலகத்திட்டத்தை துவக்கியுள்ள தமிழக அரசின் துறை?
பள்ளிக்கல்வித்துறை
1100) கி.மு.2000 ஆண்டிற்கு முந்தைய சுமார் 2500 களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?
பாபிலோனியாவில் உள்ள நிப்பூர் என்ற ஊரில்
1101) தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான நூலகங்கள் எவை?
  1) சரஸ்வதி மகால் நூலகம் = தஞ்சை = 1820
  2) அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் = சென்னை
  3) கன்னிமாரா நூலகம் = சென்னை = 1869
  4) சென்னைப் பல்கலைக்கழக நூலகம் = சென்னை = 1907
  5) அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம் = சிதம்பரம் = 1929
  6) டாக்டர்.உ.வே.சா.நூலகம் = சென்னை = 1947
  7) மறைமலை அடிகளார் நூலகம் = சென்னை = 1958
  8) மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் = மதுரை = 1966
  9) உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் = சென்னை = 1970
10) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் = தஞ்சை = 1981
1102) நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்தவர்?
சீர்காழி.சீ.இரா.அரங்கநாதன்
1103) இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படுபவர்?
சீர்காழி.சீ.இரா.அரங்கநாதன்
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS| TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் | PART-10

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்| PART-10
===========================
900) பன்பெனப்ப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – இவ்வரிகளின் பொருள்?
பன்பெனப்படுவது சான்றோர் வழி அறிந்து நடத்தல்
901) அன்பெனப்படுவது தன்கிளை செறாஅமை – இவ்வரிகளின் பொருள்?
அன்பெனப்படுவது தன்சுற்றம் (சொந்தம்) தழுவி வாழ்தல்
902) அறிவெனப்படுவது பேதையார் சொல்நோன்றல் - இவ்வரிகளின் பொருள்?
அறிவு எனப்படுவது அறிவில்லாதவர்களின் சொல்லை பொறுத்தல்
903) செறிவெனப் படுவது கூறியது மறா அமை – இவ்வரிகளின் பொருள்?
நெருக்கம் என்பது கொடுத்த வாக்கை காத்து நிற்றல்
904) நிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை - இவ்வரிகளின் பொருள்?
நிறைவு எனப்படுவது பிறர் அறியாது மறைபொருள் காத்தல்
905) முறையெனப்படுவது கண்ணோடாது உயிர்வெளவல் - இவ்வரிகளின் பொருள்?
நீதிமுறை எனப்படுவது ஒருபால் கோடாது ஒறுத்தல்
906) பொறையெனப்படுவது போற்றாரை பொறுத்தல் - இவ்வரிகளின் பொருள்?
பொறுமை எனப்படுவது இகழ்வாரையும் பொருத்துக் கொள்ளல்
907) கலித்தொகையை தொகுத்தவர்?
நல்லந்துவனார்
908) நெய்தல் கலியில் நல்லந்துவனார் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?
முப்பத்துமூன்று பாடல்கள்
909) சங்க இலக்கியங்கள் எவை?
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
910) எட்டுத்தொகை நூல்களில் நாடகப்பாங்கில் அமைந்துள்ள நூல்?
கலித்தொகை
911) இசையோடு பாடுவதற்கு ஏற்ற எட்டுத்தொகை நூல்?
கலித்தொகை
912) கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து எத்தனை பாடல்கள் அமைந்துள்ளன?
நூற்றைம்பது பாடல்கள் (149 + 1 = 150)
913) கலித்தொகை எத்தனை பெரும் பிரிகள் கொண்டது?
ஐந்து (குறிஞ்சிக்கலி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
914) கலிப்பா எவ்வகை ஓசையை கொண்டது?
துள்ளல் ஓசை
915) எப்பாடல்களை படிக்கும்பொழுது, கருத்தாழமும், ஓசையின்பமும் நம் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளும்?
நெய்தற்கலி பாடல்களை படிக்கும்பொழுது
916) “கற்றறிந்தார் ஏத்தும் கலி” – எனச் சான்றோர்கள் சிறப்பித்துக் கூறும் நூல்?
கலித்தொகை
917) பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகரா – இவ்வரிகள் இடம்பெறும் நூல்?
நந்திக் கலம்பகம்
918) பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகரா – இப்பாடலில் அமைந்துள்ள திணை?
பாடாண் திணை – நந்திவர்மனின் வீரச்செயலைப் புகழ்ந்து கூறுவதால்
919) நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர்?
அறியப்படவில்லை
920) நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன்?
மூன்றாம் நந்திவர்மன்
921) நந்திக்கலம்பகம் என பெயர்பெறக் காரணம்?
மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாக பாடப்பெற்ற கலம்பகம் ஆதலால்
922) நந்திக்கலம்பகம் எழுதப்பெற்ற ஆண்டு?
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
923) கலம்பகம் – பிரித்து எழுதுக.
கலம் + பகம்
924) கலம்பகம் எத்தனை உறுப்புகளைக் கொண்டு பாடப்படுகிறது?
பதினெட்டு உறுப்புகள்
925) கலம்பகத்தில் கலம் என்பது எத்தனை உறுப்புகளை கொண்டது?
பன்னிரண்டு உறுப்புகள்
926) கலம்பகத்தில் பகம் என்பது எத்தனை உறுப்புகளை கொண்டது?
ஆறு உறுப்புகள்
927) கலம்பகத்தில் உள்ள பதினெட்டு உறுப்புகளை எவை?
1. புயவகுப்பு
2. அம்மானை
3. கார்
4. ஊசல்
5. இரங்கல்
6. மறம்
7. தழி
8. தவம்
9. சித்து
10. பாண்
11. கைக்கிளை
12 தூது
13. வண்டு
14. குறம்
15. காலம்
16. மாதங்கி
17. களி
18. சம்பிரதம்
928) கலம்பகம் எவ்வகை நூல்?
96 சிற்றிலக்கியங்களுள் ஒன்று
929) பணை என்னும் சொல்லின் பொருள்?
மூங்கில்
930) கலம்பக நூல்களில் முதல் நூலாகக் கூறப்படுவது எது?
நந்திக் கலம்பகம்
931) மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன் – இப்பாடல் இடம்பெறு நூல்?
நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
932) மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன் – இப்பாடலை பாடியவர்?
குலசேகர ஆழ்வார்
933) குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர்?
திருவஞ்சைக்களம் – கேரளா
934) குலசேகர ஆழ்வாரை குலசேகரப் பெருமாள் எனவும் அழைக்கப்பட காரணம்?
இராமபிரானிடம் பக்தி மிகுதியாக வாய்க்கப்பெற்ற காரணத்தால்
935) நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் அருளிய பாசுரங்களின் பெயர்?
பெருமாள் திருமொழி
936) குலசேகர ஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் அமைந்துள்ள பாசுரங்கள் எத்தனை?
நூற்றைந்து பாடல்கள் – 105
937) குலசேகர ஆழ்வார் எந்த மொழிகளில் வல்லவர்?
வடமொழி & தென்மொழி
938) குலசேகரர் தமிழில் எழுதிய நூல்?
பெருமாள் திருமொழி
939) குலசேகரர் வடமொழியில் எழுதிய எழுதிய நூல்?
முகுந்தமாலை
940) திருவரங்கத்தில் மூன்றாவது மதிலை கட்டியவர்?
குலசேகர ஆழ்வார் (அதனால் குலசேகரன் வீதி என பெயரிடப்பட்டுள்ளது)
941) குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம்?
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
942) திருமாலை முழுமுதற் கடவுளாகக்கொண்டு போற்றும் சமயம்?
வைணவம்
943) தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் என அழைக்கப்படுவது?
நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
944) நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் பாடிய “பெருமாள் திருமொழி” அமைந்துள்ள பகுதி?
முதல் ஆயிரத்தில் உள்ளது (105 பாசுரங்கள்)
945) இலிங்கிச் செட்டி தெரு அமைந்துள்ள ஊர்?
சென்னை
946) சென்னை இலிங்கிச் செட்டித் தெருவில் “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” – என்னும் பாடலை பாடி அதற்கு நெடுநேரம் பொருள் கூறிய ஒன்பது வயது சிறுவன்?
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார்
947) சாதிகளிலும் மதங்களிலும் சமயச் சடங்குகளிலும் உழன்று கொண்டிருந்த மக்களை அவற்றிலிருந்து மீண்டுவர வள்ளலார் அமைத்த பாதை?
சமசர சுத்த சன்மார்க்கப்பாதை
948) எந்த நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என அறிஞர் போற்றுவர்?
பத்தொன்பதாம் நூற்றாண்டு
949) பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்த்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பினைப் பெற்றவர்?
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார்
950) வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
மருதூர் – சிதம்பரம் வட்டம் – கடலூர் மாவட்டம்
951) வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த தேதி?
05.10.1823
952) வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமைய்யா & சின்னம்மை
953) இராமைய்யா சின்னம்மைக்கு இராமலிங்க அடிகளார் எத்தனையாவது மகவாக பிறந்தார்?
ஐந்தாவது மகவு
954) இறைவழிபாட்டின்போது விழியசைக்காமல் இறைவனைப் பார்த்துச் சிறித்த குழந்தை?
இராமலிங்க அடிகளார்
955) தில்லை ஆலய அந்தணர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரை எவ்வாறு பாராட்டினார்?
இறையருள் பெற்ற திருக்குழந்தை
956) இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறியவர்?
வள்ளலார்
957) அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த – என்று பாடியவர்?
வள்ளலார்
958) இராமலிங்கர் பிறந்து எத்தனையாவது மாதத்தில் தன் தந்தையார் மறைந்தார்?
பிறந்த ஆறாவது திங்களில்
959) இராமலிங்கருக்கு ஐந்து வயதானவுடன், கல்வி கற்க அவரை தம் அண்ணன் யாரிடம் அனுப்பிவைத்தார்?
சபாபதி ஆசிரியர்
960) இராமலிங்க அடிகளார் எத்தனை வயதில் பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்?
ஒன்பது வயதில்
961) திருவொற்றியூர்ச் சன்னதி வீதியில் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்?
திகம்பர சாமியார்
962) தெருவில் செல்லும் மனிதர்களை “அதோ ஆடு போகிகிறது, அதோ மாடு போகிகிறது, அதோ நரி போகிறது” என்று அவரவர்களின் குணத் தன்மைகளுக்கேற்ப விலங்குகளின் பெயர்களால் கூறியவர்?
திகம்பர சாமியார்
963) இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார் என்று திகம்பர சாமியார் யாரை கூறினார்?
வள்ளலார் இராமலிங்க அடிகளார்
964) தருமமிகு சென்னையில் உள்ளா கந்தகோட்டத்து இறைவனை வணங்கி மனமுருகப் பாடியவர்?
இராமலிங்க அடிகளார்
965) இராமலிங்க அடிகளார் சென்னை கந்தகோட்டத்து இறைவனை பாடிய பாடல்களின் தொகுப்பு?
தெய்வமணிமாலை
966) ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் – என்று படியவர்?
இராமலிங்க அடிகளார்
967) உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – என்று பாடியவர்?
இராமலிங்க அடிகளார்
968) கற்போரை மனமுருகச் செய்யும் பாடல்கள் யாருடையது?
இராமலிங்க அடிகளார்
969) திருவொற்றியூர் சிவபெருமான்மீது இராமலிங்க அடிகளார் பாடிய பாடல்களின் தொகுப்பு?
எழுத்தறியும் பெருமான் மாலை
970) வடிவுடை மாணிக்கமாலை – என்ற நூலின் ஆசிரியர்?
வள்ளலார் இராமலிங்க அடிகளார்
971) பொதுமை உணர்வுடன் பிற தெய்வங்களின்மீதும் பாடல்களை பாடியவர்?
அருட்பிரகாச வள்ளலார்
972) எளிய இனிய பாடல்கள் மற்றும் கல்லார்க்கும் கற்றவர்க்கும் எளிதில் பொருள் விளங்கும் கருத்து நிறைந்த பாடல்கள் யாருடையது?
திருவருட் பிரகாச வள்ளலார்
973) மூடநம்பிக்கைகளாலும் சாதி மத வேறுபாடுகளாலும் மக்கள் துன்புறுவதனைக் கண்டு மனம் பதைத்தவர்?
திருவருட் பிரகாச வள்ளலார்
974) ஒருமைவாழ்வு, ஒருமையரசு, ஒருமையுலகம் காண விரும்பியவர்?
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
975) ஒருத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளனர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும் – என்று பாடியவர்?
வள்ளலார் இமாலிங்க அடிகள்
976) சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் – என்றவர்?
இராலிங்க அடிகளார்
977) வள்ளலார் அவர்கள் சிறுபிள்ளை விளையாட்டு என்று எதை இகழ்கிறார்?
சாதியையும் மதத்தையும்
978) ஆணும் பெண்ணும் சமம் என்று அன்றே உரைத்தவர்?
இரமலிங்க அடிகளார்
979) எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி – என்று பாடியவர்?
வள்ளலார்
980) மக்கள் அனைவரும் சாதி, சமயம், கோத்திரம், குலம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடற்றுச் சமரச மனப்பான்மைகொண்டு, மனிதநேயத்துடன் வாழவேண்டுமென்றும் மன்பதைக்கு உணர்த்தியவர்?
வள்ளலார்
981) பேரின்ப வீட்டின் திறவுகோல் – எது என்று வள்ளலார் கூறுகிறார்?
உயிரிரக்கம்
982) கடவுளின் பெயரால் உயிர்கொலை செய்தவனை அறவே வெறுத்தவர்?
வள்ளலார்
983) பலிகொள்ளும் சிறுத்தெய்வக் கோயிலைக் கண்டு நடுங்கியவர்?
வள்ளலார்
984) போரில்லா உலகினை படைக்க விழைந்தவர்?
வள்ளலார்
985) மண்ணுலகத்திலே உயிர்கள்படும் வருத்தத்தைக் கண்டும் கேட்டும் வள்ளலார் பாடிய பாடல்?
அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள் புரிதல் வேண்டும்
    ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
986) அருட்பெருஞ்ஜோதியாக விளங்கும் இறைவனை அடைவதற்கு கருவி எது என வள்ளலார் கூறுகிறார்?
தனிப்பெருங்கருணை
987) சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைக்கப்பட இடம்?
வடலூர்
988) சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் நோக்கம்?
1) சாதி, மத, சமய, இன வேறுபாடு கூடாது
2) எவ்வுயிரையும் கொல்லலாகாது
3) புலால் புசித்தல் கூடாது
4) எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் எண்ணுதல் வேண்டும்
5) ஏழை மக்களின் பசியை போக்குதல் வேண்டும்
6) உலக மக்கள் அனைவரையும் உடன்பிறப்புகளாய் நேசித்தல் வேண்டும்
989) அருட்கருணை நிறைந்த பாடல்கள் யாருடையது?
இராமலிங்க அடிகளார்
990) திருவருட்பா – என்ற நூலின் ஆசிரியர்?
வள்ளலார்
991) திருவருட்பா எத்தனை தொகுதிகளை கொண்ட நூல்?
ஆறு தொகுதிகள்
992) உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தவர்?
வள்ளலார் இராமலிங்கர்
993) உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்ற வடலூரில் வள்ளலார் அமைத்த சபை?
சத்திய ஞானசபை
994) மக்கள் அறியாமை நீங்கி அறிவு ஒளிபெற, அங்கே சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தியவர்?
வள்ளலார்
995) புதுநெறி கண்ட புலவர் யார்? அவ்வாறு போற்றியவர் யார்?
வள்ளலார் – போற்றியவர் பாரதியார் (சோதி தரிசனப் புதுமையை புகுத்தியதால்)
996) தமிழ் மொழியே இறவாத நிலை தரும் – என்று கருதியவர்?
வள்ளலார்
997) உலகெலாம் உய்ய உயரிய நெறி கண்டவர்?
வள்ளலார்
998) வள்ளலார் இறவாநிலை எய்திய நாள்?
தைப்பூசத் திருநாள் – 1874 ஆம் ஆண்டு
999) வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் யாவை?
1) தாய் தந்தை மொழியைத் தள்ளி நடக்காதே
2) குருவை வணங்கக் கூசி நிற்காதே
3) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
4) மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
5) நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே
6) பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
7) ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
8) பசித்தோர் முகத்தை பாராதிராதே
9) இரப்போர்க்குப் பிச்சையில்லை என்னாதே
10) தானம் கொடுப்போரை தடுத்து நிறுத்தாதே
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ் | PART -9

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ் | PART -9
===========================
800) ஐவகை நிலத்திற்கு உரிய விலங்கு?
வ.எண் திணை விலங்கு
1. குறிஞ்சி புலி, கரடி, சிங்கம்
2. முல்லை முயல், மான், புலி
3. மருதம் எருமை, நீர்நாய்
4. நெய்தல் முதலை, சுறா
5. பாலை வலியிழந்த யானை
801) ஐவகை நிலத்திற்கு உரிய பூ?
வ.எண் திணை பூ
1. குறிஞ்சி குறிஞ்சி, காந்தல்
2. முல்லை முல்லை, தோன்றி
3. மருதம் செங்கழுநீர், தாமரை
4. நெய்தல் தாழை, நெய்தல்
5. பாலை குரவம், பாதிரி
802) ஐவகை நிலத்திற்கு உரிய மரம்?
வ.எண் திணை மரம்
1. குறிஞ்சி அகில், வேங்க்கை
2. முல்லை கொன்றை, காயா
3. மருதம் காஞ்சி, மருதம்
4. நெய்தல் புன்னை, ஞாழல்
5. பாலை இலுப்பை, பாலை
803) ஐவகை நிலத்திற்கு உரிய பறவை?
வ.எண் திணை பறவை
1. குறிஞ்சி கிளி, மயில்
2. முல்லை காட்டுக்கோழி, மயில்
3. மருதம் நாரை, நீர்க்கோழி, அன்னம்
4. நெய்தல் கடற்காகம்
5. பாலை புறா, பருந்து
804) ஐவகை நிலத்திற்கு உரிய ஊர்?
வ.எண் திணை ஊர்
1. குறிஞ்சி சிறுகுடி
2. முல்லை பாடி, சேரி
3. மருதம் பேரூர், மூதூர்
4. நெய்தல் பட்டினம், பாக்கம்
5. பாலை குறும்பு
805) ஐவகை நிலத்திற்கு உரிய நீர்?
வ.எண் திணை    நீர்
1. குறிஞ்சி அருவிநீர், சுனைநீர்
2. முல்லை காட்டாறு
3. மருதம் மனைக்கிணறு, பொய்கை
4. நெய்தல் மணற்க்கிணறு, உவர்கழி
5. பாலை வற்றிய சுனை, கிணறு
806) ஐவகை நிலத்திற்கு உரிய பறை?
வ.எண் திணை பறை
1. குறிஞ்சி தொண்டகம்
2. முல்லை ஏறுகோட்பறை
3. மருதம் மணமுழா, நெல்லரிக்கிணை
4. நெய்தல் மீன்கோட்பறை
5. பாலை துடி
807) ஐவகை நிலத்திற்கு உரிய யாழ்?
வ.எண் திணை யாழ்
1. குறிஞ்சி குறிஞ்சி யாழ்
2. முல்லை முல்லை யாழ்
3. மருதம் மருதம் யாழ்
4. நெய்தல் விரளி யாழ்
5. பாலை பாலை யாழ்
808) ஐவகை நிலத்திற்கு உரிய பண்?
வ.எண் திணை பண்
1. குறிஞ்சி குறிஞ்சிப்பண்
2. முல்லை முல்லைப்பண்
3. மருதம் மருதம்ப்பண்
4. நெய்தல் செவ்வழிப்பண்
5. பாலை பஞ்சுரப்பண்
809) ஐவகை நிலத்திற்கு உரிய தொழில்?
வ.எண் திணை தொழில்
1. குறிஞ்சி தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
2. முல்லை ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
3. மருதம் நெல்லரிதல், களை பறித்தல்
4. நெய்தல் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
5. பாலை வழிப்பறி, நிரை கவர்தல்
810) தன்மேல் கொல்லப் பாய்ந்தவரைக்கூட மன்னித்து விட்டுவிடும்படி கூறியவர்?
தந்தை பெரியார்
811) தந்தை பெரியார் பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில் கத்தியுடன் அவர் மீது பாய்ந்து கொலை செய்ய திட்டம் நடந்த ஊர்?
விருதுநகர்
812) புலியிருக்கும் இடமறிந்து, அங்கே சென்று புலியைக் கண்டு இறையருள் புரிந்தவர்?
முகம்மது நபி
813) அகமது என்ற திருப்பெயர் பெற்றவர்?
நபிமுகம்மது
814) மலைகளில் வாழும் சிங்கத்திற்கு ஒப்பாகியவர்?
நபிமுகம்மது
815) இறைத்தூதர் – என்பவர்?
முகம்மதுநபி
816) சீறாப்புராணத்தை இயற்றியவர்?
உமறுப்புலவர்
817) உமறுப்புலவர் யாருடைய மாணவர்?
எட்டையபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்
818) அப்துல்காதிர் மரைக்காயர் என்பர்?
வள்ளல் சீதக்காதி
819) யாருடைய வேண்டுகோளுக்கினங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார்?
வள்ளல் சீதக்காதி
820) சீறாப்புராணத்தை எழுதி முடிக்கும் முன்னரே வள்ளல் சீதக்காதி இறந்ததமையால், யாருடைய உதவியால் சீராப்புராணத்தை உமறுப்புலவர் எழுதி முடித்தார்?
அபுல்காசிம் என்ற வள்ளல்
821) முதுமொழிமாலை என்ற நூலை எழுதியவர்?
உமறுப்புலவர்
822) முதுமொழிமாலை எத்தனை பாக்களைக் கொண்டது?
எண்பது பாக்கள் = 80 பாக்கள்
823) உமறுப்புலவர் வாழ்ந்த காலம்?
கி.பி.பதினேழாம் நூற்றாண்டு
824) இறைவனின் திருத்தூதர்?
நபிகள் நாயகம்
825) நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல்?
சீறாப்புராணம்
826) சீறா – என்பதன் பொருள்?
வாழ்க்கை
827) புராணம் – என்பதன் பொருள்?
வரலாறு
828) சீறாப்புராணம் எத்தனை பிரிவுகளை கொண்டுள்ள நூல்?
மூன்று பிரிவுகள்:-
1) விலாத்துக் காண்டம்
2) நுபுவ்வத்துக் காண்டம்
3) ஹிஜ்ரத்துக் காண்டம்
829) ஐயாயிரத்து இருபத்தேழு விருத்தப்பாக்களால் ஆன நூல்?
சீறாப்புராணம்
830) புலி வசினித்த படலம் – இடம்பெறும் நூல்?
சீறாப்புராணம்
831) சீறாப்புராணத்தில் புலிவசித்த படலம் இடம்பெறும் காண்டம்?
விலாத்துக் காண்டம்
832) இபான் – என்பது எந்த நாட்டின் இதழ்?
அமெரிக்கா
833) உலகம் உய்ய உற்றவழி கூறும் நூல்?
சத்திய சோதனை
834) காந்தியடிகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது படித்த நாடக நூல்?
சிரவண பிதுர்பத்தி
835) தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை: தீமை செய்தவர்க்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு – இது எந்த மொழிப்பாடல்?
குஜராத்தி மொழி
836) இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தினை காந்தியடிகளுக்குள் விதைத்த பாடல்?
தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை – என்ற குஜராத்தி மொழிப்பாடல்
837) பார்வையற்ற தன் தாய் தந்தையரைக் காவடியில் தூக்கிச் செல்லும் காட்சி அமைந்துள்ள நாடகம்?
சிரவண பிதுர்பத்தி
838) அரிச்சந்திரனை ஒரு பொய் பேசவைக்கவேண்டும் என்பதற்காகவே பல இன்னல்களுக்கு உள்ளாக்கியவர்?
விசுவாமித்திரர்
839) காந்தி, தான் ஒரு சத்தியவானாக இருக்கவேண்டும் என்று உறுதிகொண்ட நாடகம்?
அரிச்சந்திரன்
840) தீயவனை எதிர்க்காதே; அவனிடமுள்ள தீமையை எதிர்த்து நில்; பகைவனிடமும் அன்பு பாராட்டு என்று கூறும் நூல்?
பைபிள்
841) காந்தியடிகள் எந்த நூலை படித்ததன்மூலம் மனவுறுதியைப் பெற்றார்?
பகவத்கீதை
842) உருசிய அறிஞர்?
தால்சுதாய்
843) உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு – என்ற நூலின் ஆசிரியர்?
தால்சுதாய்
844) உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்ற நூலில் தால்சுதாய் எந்த திருக்குறளை மொழிபெயர்த்து எழுதியிருந்தார்?
இன்னா செய்தார்க்கும்
845) காந்தியடிகள் திருக்குறள்மீதும், தமிழ்மீதும் பற்றுகொள்ள காரணம்?
இன்னா செய்தார்க்கும் என்ற குறள்
846) அன்பு, உண்மை, உறுதி, இன்னா செய்யாமை ஆகிய உயர் பண்புகள் ஆகியவை இளம்பருவத்திலேயே எவருக்கு இயல்பாய் அமைந்தன?
காந்தியடிகள்
847) மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது, அதனை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாகவும் பிறருக்கு துன்பம் தராததாகவும் இருக்கவேண்டும் – என்றவர்?
காந்தியடிகள்
848) வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது – என்றவர்?
காந்தியடிகள்
849) மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த சான்றோர்?
காந்தியடிகள்
850) கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றவர்?
காந்தியடிகள்
851) பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதியவர்?
காந்தியடிகள்
852) காந்தியடிகள் எங்கு வந்தபோது ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதை கண்டார்?
தமிழ்நாட்டுக்கு வந்தபோது
853) எப்போதிலிருந்து காந்தியடிகள் மேலாடை அணிவதை நிறுத்திக்கொண்டார்?
தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதை கண்டபோதிலிருந்து
854) காந்தியடிகள் அரையாடையுடன் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டபோது அப்போதைய இங்கிலாந்தின் முதன்மையமைச்சர்?
சர்ச்சில்
855) காந்தியடிகளை அரைநிர்வாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர்?
சர்ச்சில்
856) மனிதனின், பெருமையை மனிதனுக்கு உணர்த்தி, எளியவர்களிடம் மறைந்திருக்கும் அருமையை உணர்த்தி அவர்களை வரலாற்று நாயகர்களாக மாற்றியவர்?
காந்தியடிகள்
857) என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும், மனிதாபிமானமும் ஒன்றுதான் என்று கூறியவர்?
காந்தியடிகள்
858) நான் ஒரு தேசபக்தன், அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும்தான் – என்று கூறியவர்?
காந்தியடிகள்
859) நான் மொழியால் குஜராத்தியன்; நாட்டால் இந்தியன்; உலக நிலையில் உலகன்; ஆனால், மனிதனாக இருத்தல் வேண்டும்; மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது என்று எண்ணவேண்டும் – என்று விழைந்தவர்?
காந்தியடிகள்
860) உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதாராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும் – என்றவர்?
காந்தியடிகள்
861) தென்ஆப்ரிக்காவில் காந்தியடிகளை சிறையில் அடைக்க காரணம்?
அங்கு இந்தியர்க்கு எதிரான கருப்புச்சட்டங்களை கொளுத்தியதால்
862) தென்ஆப்ரிக்காவில் காந்தியடிகளை சிறையில் அடைத்த ஆளுநர்?
ஸ்மட்ஸ்
863) தென் ஆப்ரிக்காவில் காந்தியடிகள் சிறையிலிருந்து வெளிவந்ததும் சிறையில் தாம் தைத்த செருப்பை யாருக்கு பரிசாக வழங்கினார்?
ஆளுநர் ஸ்மட்ஸ்
864) காந்தியடிகள் தென்ஆப்ரிக்காவில் சிறையில் தாம் தைத்த செருப்பை ஸ்மட்ஸ் என்பவர்க்கு பரிசாக வழங்கியதும், பதிலுக்கு ஸ்மட்ஸ் பரிசாக எதனைக் கொடுத்தார்?
விவிலியம் சார்ந்த இரு நூல்கள்
865) காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை, எனக்கு அன்பளிப்பாக அளித்தார், அதனை ஆர்வத்தோடு வாங்கி அணிந்தேன்; என் கால்கள் நடுங்கின; நிற்க முடியவில்லை. உடனே அதை எடுத்துச் சென்று பூசை அறையில் வைத்து வணங்கி வருகிறேன் – என்றவர்?
ஆளுநர் ஸ்மர்ட்ஸ்
866) காந்தியடிகளை சுட்டுக்கொல்லப்பட்ட நாள்?
சனவரித் திங்கள் முப்பதாம் நாள் – 1948
867) இந்தியாவின் வாழ்வு என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வுதான் – என்றவர்?
காந்தியடிகள்
868) ஈகத்தின் (தியாகம்) உச்சியில் நின்றவர்?
காந்தியடிகள்
869) தன்னாட்டுப் பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது – என்றவர்?
காந்தியடிகள்
870) கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பலனில்லை – என்றவர்?
காந்தியடிகள்
871) யாருடைய வாழ்வு முழுவதும் ஈகத்தினினால் மிகுந்து நிறைந்திருந்தது?
காந்தியடிகள்
872) வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களையும் சமூகநீதிக்கான போராளிகளாக ஆக்கியவர்?
காந்தியடிகள்
873) உள்ளத்தால் பொய்யாது ஒழுகி உலகத்தார் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கின்றவர்?
காந்தியடிகள்
874) சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் – என்று கூறியவர்?
காந்தியடிகள்
875) புறத்திணைகள் பன்னிரண்டினை கூறுக.
1. வெட்சி = போருக்கு முன் பகைநாட்டில் உள்ள ஆநிரைகளை கவர்தல்
2. கரந்தை = கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை கரந்தை பூச்சூடி மீட்பது
3. வஞ்சி = மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்றச் செல்வது
4. காஞ்சி = தன்நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போருக்கு செல்வது
5. நொச்சி = பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தன் மதிலை காத்தல்
6. உழிஞை = மாற்றரசன் கோட்டைக்குள் சென்று மதிலை சுற்றி வளைத்தல்
7. தும்பை = பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றே குறிக்கோளாக போரிடுவது
8. வாகை = வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது
9. பாடாண் = ஆண்மகனது கல்வி, வீரம், செல்வம், கருனை, புகழ் முதலிவற்றை போற்றிப் பாடுவது
10. பொதுவியல் = வெட்சிமுதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளில் கூறப்படாதவற்றைக் கூறுவது
11. கைக்கிளை = ஒருதலைக் காமம்
12. பெருந்திணை = பொருந்தாக் காமம்
876) புறப்பொருள் வெண்பாமலையில் உள்ள புறத்திணைகள்?
1. வெட்சி = நிரைகவர்தல்
2. கரந்தை = மீட்டல்
3. வஞ்சி = வட்கார்மேல் செல்வது
4. காஞ்சி = உட்காது எதிரூன்றல்
5. நொச்சி = எயில் காத்தல்
6. உழிஞை = அதுவளைத்தலாகும்
7. தும்பை = அதிரப்பொருவது
8. வாகை = செருவென்றது
877) அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் என்பது?
உலகியல்
878) வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றி கூறுவது?
புறப்பொருள்
879) புறப்பொருள் வெண்பாமலையில் உள்ள புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
பன்னிரண்டு
880) தேசியக் கவிஞர் என்று அனைவராலும் பாரட்டப்பெற்றவர்?
பாரதியார்
881) எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் இந்நாட்டு மன்னர் – என தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்தியவர்?
பாரதியார்
882) முன்னறி புலவன் என போற்றப்பட்டவர்?
பாரதியார்
883) சாதிவேரை முளையிலேயே கிள்ளி எறிய விரும்பியவர்?
பாரதியார்
884) “பாரதநாடு பார்க்கெல்லாம் திலகம்” – எனப்பாடிய பைந்தமிழ்ப் பாவலன்?
பாரதியார்
885) பாரதியாரின் பெற்றோர்?
சின்னசாமி & இலக்குமி அம்மையார்
886) பாரதியாரின் பிறந்தநாள்?
11.12.1882
887) பாரதியார் மறைந்த நாள்?
11.09.1921
888) பூங்கொடி என்றும் பொய்யாக் குலக்கொடி என்றும் அழைக்கப்படுவது?
வைகை நதி
889) சோழநாட்டை ஊட்டி வளர்ப்பது?
காவிரி ஆறு
890) எழுதுதல் திறனில் ஓர் உயர்நிலைத் திறனாக அமைவது?
கவிதை எழுதுதல்
891) காந்தி எனும் திரைப்படத்தில் காந்தியாக நடித்தவர்?
பென் கிங்ஸ்லி
892) A friend in need is a friend indeed - இணையான தமிழ் பழமொழி கூறுக.
உயிர்கொடுப்பான் தோழன்
893) Self help is the best help - இணையான தமிழ் பழமொழி கூறுக.
தன் கையே தனக்கு உதவி
894) Efforts never fail - இணையான தமிழ் பழமொழி கூறுக.
முயற்சி திருவினையாக்கும்
895) Live and let live - இணையான தமிழ் பழமொழி கூறுக.
வாழு, வாழவிடு
896) Think everybody alike – இணையான தமிழ் பழமொழி கூறுக.
உன்னைப்போல் பிறரையும் நேசி
897) ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – இச்செய்யுள் இடம்பெறும் நூல்?
கலித்தொகை
898) ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – இவ்வரிகளின் பொருள்?
இல்வாழ்வென்பது வருந்தி வந்தோர்க்கு உதவுதல்
899) போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை – இவ்வரிகளின் பொருள்?
பாதுகாப்பு என்பது அன்புடையோரைப் பிரியாமல் வாழ்தல்
Read More »

TNPSC | TRB | TET | STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் | PART -8

TNPSC | TRB | TET STUDY MATERIALS|பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்| PART-8
===========================
700) ஏராளமான முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்ட இடம்?
ஆதிச்சநல்லூர் – திருநெல்வேலி மாவட்டம்
701) ஆதிச்சநல்லூரில் முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்ட ஆண்டு?
1879 & 2003
702) ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சில் கண்டறியப்பட்ட முதுமக்கள்தாழிகள் எந்த காலத்தை சேர்ந்தது?
கி.மு.300 முதல் கி,பி.300 வரையிலானவை
703) வின்சென்ட் வான்கோக் என்பவர்?
கேட்புத்திறனற்ற மாற்றுத்திறனாளி, ஓவியம் வரைபவர்
704) முதுமக்கள்தாழிகளில் கண்டறியப்பட்டவை?
1) இறந்தோரின் எலும்புகள்
2) தங்கத்திலான நெற்றிப்பட்டம்
3) செம்பினாலான ஆண், பெண் தெய்வ உருவங்கள்
4) இரும்பினாலான கத்திகள்
5) விளக்குத் தாங்கிகள்
705) இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை எவ்வாறு அழைப்பர்?
விகாரப்புணர்ச்சி
706) அருஞ்சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகள் எவர்?
1) தாமசு ஆல்வா எடிசன்
2) கெலன் கெல்லர்
3) பீத்தோவன்
4) மைக்கேல் பாரடே,
5) சான்சன்
707) ஓவியர் பிகாசோவின் ஓவியம் பெரும்புகழ் பெற்றதுபோல் எவரது ஓவியங்கள் சிறப்பாக பேசப்படுகின்றன?
வின்சென்ட் வான்கோக்
708) பொய்யா விளக்கு என்பதன் பொருள்?
அணையா விளக்கு
709) கீழ்க்காணும் சொற்களுக்கு பொருள் கூறுக.
1) எண்பொருள் – இயல்பாய்க் கிடைக்கும்பொருள்
2) ஒண்பொருள் – சிறந்தபொருள்
3) உறுபொருள் – அரசுரிமையால் வரும்பொருள்
4) உல்குபொருள் – வரியாக வரும்பொருள்
710) திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு உலகுக்குப் பொது – என்று கூறியவர்?
திரு.வி.கலியாணசுந்தரம்
711) திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது – என்று கூறியவர்?
கி.ஆ.பெ.விசுவநாதம்
712) திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது – என்று கூறியவர்?
கி.ஆ.பெ.விசுவநாதம்
713) நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – என்று பாடியவர்?
அப்பர் என்கிற திருநாவுக்கரசர்
714) அப்பர் என்கிற திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?
திருவாமூர் (கடலூர் மாவட்டம் – பண்ணுருட்டியை அடுத்துள்ள ஊர்)
715) திருநாவுக்கரசரின் பெற்றோர்?
புகழனார், மாதினியார்
716) திருநாவுக்கரசரின் தமக்கை (அக்கா) யார்?
திலகவதியார்
717) திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்டபெயர்?
மருணீக்கியார்
718) திருநாவுக்கரசரின் வேறுபெயர்?
தருமசேனர், அப்பர், வாகீசர்
719) திருநாவுக்கரசர் பின்பற்றிய நெறி?
தொண்டுநெறி
720) சைவ அடியார்களை எவ்வாறு வழங்குவர்?
நாயன்மார்கள்
721) சைவ சமயக் குரவர் நால்வர்?
சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர்
722) திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் எவ்வாறு போற்றப்படுகிறது?
தேவாரம்
723) தாண்டகம் பாடுவதில் வல்லவர் யார் & தாண்டகவேந்தர் யார்?
திருநாவுக்கரசர்
724) திருநாவுக்கரசர் வாழ்ந்த காலம்?
கி.பி.ஏழாம் நூற்ற்றாண்டு
725) தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்றும் கூறப்படுவது?
தேவாரம் (தே + வாரம் = தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்)
726) தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை என்றும் கூறப்படுவது?
தேவாரம் (தே + ஆரம் = தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை)
727) சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழு திருமுறைகள்?
மூவர் தேவாரம்
728) திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் எத்தனையாவது திருமுறை?
நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள்
729) நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் – இப்பாடல் அமைந்துள்ள திருமுறை?
ஆறாந்திருமுறை
730) தமிழகத்தில் விடுதலை வேட்கைக் கனலைத் தம் வீறுகொண்ட பாக்களால் மக்களைத் தட்டியெழுப்பியவர்?
மகாகவி பாரதியார்
731) மகாகவி பாரதியாரின் “அச்சமில்லை அச்சமில்லை” என்ற பாடலின் முன்னோடியாக அமைந்த பாடல்?
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் – அப்பர்
732) தமிழர்தம் வாழ்வினை எதிரொலிப்பவை?
தமிழ் இலக்கியங்கள்
733) அறிவு அற்றம் காககும் கருவி – என்று கூறும் நூல்/
திருக்குறள்
734) சிந்தனைக் கருவூலமாகத் திகழ்வது?
தமிழ்மொழி
735) உலகம் உருண்டை - என்பதனை மேலை நாட்டினர் உறுதிசெய்த நூற்றாண்டு?
பதினாறாம் நூற்றாண்டு
736) ஆன்மஇயல் மற்றும் விண்ணியல் கூறும் நூல்?
திருவாசகம்
737) அண்டப் பகுதியில் உண்டைப் பிறக்கம் – இப்பாடல் இடம்பெறும் நூல்?
திருவாசகம்
738) தெளிந்த வானியல் அறிவை வெளிப்படுத்தும் நூல்?
திருவாசகம்
739) பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை ஆழமாக விளக்கம் கூறும் நூல்?
திருவாசகம்
740) உலகம் என்னும் தமிழ்ச்சொல் எந்த சொல்லின் அடியாகப் பிறந்தது?
உலவு
741) உலவு என்பதன் பொருள்?
சுற்றுதல்
742) ஞாலம் என்னும் தமிழ்ச் சொல் எந்த சொல்லடியாகத் தோன்றியது?
ஞால்
743) ஞால் என்பதன் பொருள்?
தொங்குதல்
744) எவ்விதப் பற்றுக்கோடுமின்றி அண்ட வெளியில் உலகம் தொங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தும் சொல்?
ஞால்
745) வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு என்பதை உணர்த்தும் புறநானூற்று வரி?
வறிது நிலைஇய காயமும் – புறநானூறு – 30வது பாடல்
746) தற்போதைய செயற்கைக் கோளைப் போன்றதாக கருதப்படும் சங்ககாலத்தவை?
வலவன் ஏவா வானூர்தி
747) வலவன் ஏவா வானூர்தி – இவ்வரிகள் இடம்பெறும் நுஉல்?
புறநானூறு – 27வது பாடல்
748) வலவன் என்பதன் பொருள்?
வானூர்தி செலுத்துபவன்
749) தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த – இவ்வரிகள் இடம்பெறும் நூல்?
பதிற்றுப்பத்து
750) பன்டைய காலத்தில் கரும்பை பிழிவதற்கு எந்திரங்கள் இருந்ததைக் கூறும் நூல்?
பதிற்றுப்பத்து
751) நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு, அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதை குறிப்பிடும் நூல்?
பெருங்கதை
752) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் – இவ்வரிகள் இடம்பெறும் நூல்?
பெருங்கதை
753) கிரேக்கத் தொன்மத்தில் குறிப்பிடப்படும் போர்?
டிராய் போர்
754) டிராய் போருடன் இணைத்துப் பேசப்படும் எந்திரக்குதிரையுடன் ஒத்தது?
எந்திரயானை
755) எந்திரயானை பற்றி குறிப்பிட்டும் நூல்?
பெருங்கதை
756) பல்வகை மணிகளையும், அதன் தன்மைகளையும் விளக்கும் நூல்?
சிலப்பதிகாரம் – ஊர்காண் காதை
757) ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
 இலங்குகதிர் விடூஉம் நலங்கெழும் மணிகளும் – இவ்வரிகள் இடம்பெரும் நூல்?
சிலப்பதிகாரம்
758) தற்போதய வேதியியல் கூறுகளை ஒப்புநோக்கத்தக்க சிலப்பதிகார வரிகள்?
ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழும் மணிகளும்
759) தமிழர்கள் நிலத்தின் வகைகளை எவ்வாறு வகைப்படுத்தினர்?
1) நிறத்தின் அடிப்படையில் – செம்மன் நிலம்
2) சுவையின் அடிப்படையில் – உவர்நிலம்
3) தன்மையின் அடிப்படையில் – களர் நிலம்
760) செம்மண் நிலத்தின் பயன்கருதி அதனை உணர்த்தும் வரிகள்?
செம்புலப் பெயல் நீர்போல – குறுந்தொகை
761) உவர்நிலத்தில் மிகுந்த நீரை பெற்றிருந்தும் பயன் இல்லை – என்பதனை உணர்ந்த்தும் வரிகள்?
அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம் – புறநானூறு
762) எதற்கும் பயன்பட்டாத நிலம்?
களர்நிலம்
763) எதற்கும் பயன்பட்டாத நிலத்தினை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிட்டுகிறார்?
பயவாக் களர் அனையர் கல்லாதவர்
764) அணுவியல் அறிவைப் பற்றி ஒளவையார் கூறுவது?
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி
765) அணுவியல் அறிவைப் பற்றி கம்பர் கூறுவது?
ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும்ம் உளன்
766) மழையை அமிழ்தம் என்றவர்?
திருவள்ளுவர்
767) உடம்பார் அழியின் உய்யிரார் அழிவர் – இவ்வரிகளை பாடியவர்?
திருமூலர்
768) உடல் உறுதியாய் இருப்பதற்கு காரணமாக அமைவது?
வாதம், பித்தம், சீதம் இம்மூன்றின் சமநிலை
769) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் – இவ்வரிகளை பாடியவர்?
திருவள்ளுவர்
770) சித்தர்கள் மொத்தம் எத்தனை பேர்?
பதினெண் சித்தர்கள் – 18
771) பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவம்?
சித்த மருத்துவம்
772) தமிழ் சித்தர்களில் சிலர்?
அகத்தியர், தேரையர், போகர், புலிப்பாணி
773) உலகில் பின்விளைவுகளற்ற மருத்துவங்களுள் ஒன்று/
சித்த மருத்துவம்
774) சித்த மருத்துவத்தின்ன் வேறுபெயர்?
மருந்தில்லா மருத்துவம், இயற்கை மருத்துவம்
775) உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி – இவ்வரிகளைப் பாடியவர்?
கம்பர்
776) மணிமேகலையின் தோழி?
சுதமதி
777) சரிந்த குடலை சரிசெய்த செய்தியை கூறும் நூல்?
மணிமேகலை - சுதமதியின் தந்தையை மாடு முட்டியதால்
778) பல்வேறு அறிவியல் செய்திகள், உயிரியல் செய்திகள், மருத்துவச் செய்திகள் விரவிக்கிடக்க்கின்ற நூல்?
திருவாசகம்
779) பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாகக் கூறும் நூல்?
திருவாசகம்
780) திருவாசகத்தில் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாகக் கூறும் வரிகள்?
புல்லாகிப் பூடாய் எனத்தொடங்கும் வரி
781) கருவியல் அறிவை நன்கு தெரிவிக்கும் திருவாசக வரிகள்?
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து கிருமி செருவினில் பிழைத்தும்
782) குறட்டை ஒலி – என்ற சிறுகதையின் ஆசிரியர்?
மு.வரதராசனார்
783) அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
ஏழு வகைப்படும்
784) அகத்திணையில் முதல் ஐந்து திணைகள்?
அன்பின் ஐந்திணை
785) அகப்பொருளுக்குரிய பொருள்கள் எவை?
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்
786) அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது?
அகத்திணை
787) பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படு, அவை:-
1) அகப்பொருள்
2) புறப்பொருள்
788) அகவொழுக்கம் நிகழ்வதற்கு காரணமான முதற்பொருள்?
நிலமும் பொழுதும்
789) அகவொழுக்கம் நிகழ்வதற்கு காரணமான நிலத்தின் வகைகள் யாவை?
1) குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த இடமும்
2) முல்லை - காடும் காடுசார்ந்த இடமும்
3) மருதம் - வயலும் வயல்சார்ந்த இடமும்
4) நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
5) பாலை - மணலும் மணல்சார்ந்த இடமும்
790) அகவொழுக்கம் நிகழ்வதற்கு காரணமான பொழுதின் வகைகள் யாவை?
பெரும்பொழுது, சிறுபொழுது
791) பெரும்பொழுதில் உள்ள ஆறு கூறுகள்?
1) கார்காலம் - ஆவணி, புரட்டாசி
2) குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
3) முன்பனிக்காலம் - மார்கழி, தை
4) பின்பனிக்காலம் - மாசி, பங்குனி
5) இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
6) முதுவேனிற்காலம் - ஆனி, ஆடி
792) பெரும்பொழுது என்பது?
ஓராண்டின் ஆறு கூறுகள்
793) சிறுபொழுது என்பது?
ஒருநாளின் ஆறு கூறுகள்
794) சிறுபொழுதில் உள்ள ஆறு கூறுகள்?
1) காலை - காலை 6 மணிமுதல் 10 மணிவரை
2) நண்பகல் - காலை 10 மணிமுதல் 2 மணிவரை
3) எற்பாடு - பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரை
4) மாலை - மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை
5) யாமம் - இரவு 10 மணிமுதல் இரவு 2 மணிவரை
6) வைகறை - இரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை
795) திணையும் பொழுதும் எழுதுக.
வ.எண் திணை பெரும்பொழுது சிறுபொழுது
1. குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம்
2. முல்லை கார்காலம் மாலை
3. மருதம் ஆறு பெரும்பொழுதும் வைகறை
4. நெய்தல் ஆறு பெரும்பொழுதும் எற்பாடு
5. பாலை இளவேனில், முதுவேனில், பின்பனி நண்பகல்
796) ஐவகை நிலத்திற்குரிய கருப்பொருள்கள் எவை?
தெய்வம், மக்கள், உணவு, விலங்கு
797) ஐவகை நிலத்திற்கு உரிய தெய்வங்கள் எவை?
வ.எண் திணை தெய்வம்
1. குறிஞ்சி முருகன்
2. முல்லை திருமால்
3. மருதம் இந்திரன்
4. நெய்தல் வருணன்
5. பாலை கொற்றவை
798) ஐவகை நிலத்திற்கு உரிய மக்கள் எவர்?
வ.எண் திணை மக்கள்
1. குறிஞ்சி வெற்பன், குறவன், குறத்தி
2. முல்லை தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்
3. மருதம் ஊரன், உழவர், உழத்தியர்
4. நெய்தல் சேர்ப்பன், பரதன், பரத்தியர்
5. பாலை எயினர், எயிற்றியர்
799) ஐவகை நிலத்திற்கு உரிய உணவு?
வ.எண் திணை உணவு
1. குறிஞ்சி மலைநெல், திணை
2. முல்லை வரகு, சாமை
3. மருதம் செந்நெல், வெண்ணெல்
4. நெய்தல் மீன், உப்புக்கு பெற்ற பொருள்
5. பாலை சூறையாடலால் வரும் பொருள்
Read More »

TNPSC| TRB | TET | STUDY MATERIALS| TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் | PART-7

 TNPSC | TRB | TET | STUDY MATERIALS| பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ் | PART-7
===========================
601) படப்பிடிப்புக்க் கருவியை இதில் பொருத்துவதும் உண்டு?
நகர்த்தும் வண்டி
602) கீழ்க்காணும் திரைப்படத்துறையில் பயன்படும் கலைச்சொற்களின் தமிழாக்கம் காண்க.
1. Persistence of vision பார்வை நிலைப்பு
2. Dubbing ஒலிச்சேர்க்கை
3. Director இயக்குநர்
4. Shooting படப்பிடிப்பு
5. cartoon கருத்துப் படம்
6. Negative எதிர்ச்சுருள்
7. Camera படப்பிடிப்புக்கருவி
8. Trolly நகர்த்தும் வண்டி
9. Microphone நுண்ணொலிப்பெருக்கி
10. Projector படவீழ்த்தி
11. Lense உருபெருக்கி
12. Motion Pictures இயங்குருப் படங்கள்
603) பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த இடம்?
கண்டி – இலங்கை
604) பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த ஆண்டு?
1917 - சனவரித் திங்கள் 17ஆம் நாள் (17.01.17)
605) பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரனின் பெற்றோர்?
கோபாலமேனன், சத்யபாமா
606) கோபாலமேனன், சத்யபாமா இணையருக்கு எத்தனையாவது மகனாக எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்தார்?
ஐந்தாவது மகன்
607) வறுமையின் காரணமாக எம்.ஜி.இராமச்சந்திரன் குடும்பம் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டில் எங்கு குடியேறியது?
கும்பகோணம்
608) அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல், பழகும் பண்பு, உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றால் கவரப்பட்டவர்?
எம்.ஜி.இராமச்சந்திரன்
609) நடிப்புக் கலையையும், அரசியலையும் தமது இரு கண்களாகக் கருதியவர்?
எம்.ஜி.இராமச்சந்திரன்
610) கடின உழைப்பே ஒரு நாட்டுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்று நம்பியவர்?
எம்.ஜி.இராமச்சந்திரன்
611) அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் கவர்ந்தவராக விளங்கியவர்?
எம்.ஜி.இராமச்சந்திரன்
612) அறிஞர் அண்ணா எம்.ஜி.இராமச்சந்திரனை எவ்விதம் போற்றினார்?
இதயக்கனி
613) எம்.ஜி.இராமச்சந்திரன் சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு?
1963
614) எம்.ஜி.இராமச்சந்திரன் பொதுத்தேர்தலில் எந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலில் வெற்றி பெற்றார்?
பரங்கிமலை – 1967
615) எம்.ஜி.இராமச்சந்திரன் தான் இருந்த இயக்கத்திலிருந்து விலகிப் புதிய கட்சி தொடங்கிய ஆண்டு?
1972
616) எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்முறையாக முதல்வராக பதவியேற்ற ஆண்டு?
1977
617) எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் முதல்வராக பணியாற்றிய காலம்?
பதினோராண்டுகள் (11 ஆண்டுகள்)
618) எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பணிகளைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பலகலைக்கழகம்?
சென்னை பல்கலைக்கழகம்
619) எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு இந்திய அரசு சிறந்த நடிகருக்காக வழங்கியது பட்டம்?
பாரத்
620) வறுமை, பசிக்கொடுமை ஆகிய இரண்டனையும் இளமையிலேயே உணர்ந்தவர்?
எம்.ஜி.ராமச்சந்திரன்
621) சத்துணவு திட்டத்தை செயல்படுத்தியவர்?
எம்.ஜி.ராமச்சந்திரன்
622) எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இயற்கை எய்திய நாள்?
24.12.1987
623) எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கிய ஆண்டு?
1988 – மறைவுக்குப்பின்
624) உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் வரும் உருபு?
உவம உருபு
625) நம் முன்னோர் தொன்றுதொட்டு எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது?
மரபு
626) அரியாசனம் உனக்கே ஆனால் உனக்கு சரி யாரும் உண்டோ தமிழே – இவ்வடிகள் இடம் பெறும் நூல்?
தமிழ்விடு தூது
627) உண்ணப்படும் தேனே உன்னோடு வந்து உரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் – இவ்வரிகள் இடம்பெறும் நூல்?
தமிழ்விடு தூது
628) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலின் வரப்புகளாக அமைவது?
நால்வகை பாக்கள்
629) நால்வகை பாக்கள் எவை?
1) வெண்பா, 2) ஆசிரியப்பா, 3) கலிப்பா, 4) வஞ்சிப்பா - வரப்புகள்
630) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலின் மடைகளாக அமைவது?
துறை, தாழிசை, விருத்தம் எனும் பாவினங்கள் - மடைகள்
631) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலில் நல்ல ஏர்களாக விளங்குவது?
நாற்கரணங்கள்
632) நாற்கரணங்கள் எவை?
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் -ஏர்கள்
633) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலில் உழவு செய்ய விதைகளாக அமைவது?
செய்யுள் நன்னெறிகள்
634) செய்யுளின் நன்னெறிகள் எவை?
வைதருப்பம், கெளடம், பாஞ்சாலம், மாகதம் – விதைகள்
635) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலில் கிடைக்கும் விளைபொருள்கள் எவை?
அறம், பொருள், இன்பம், வீடு - விளைபொருள்கள்
636) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலில் பயிர்களின் இடையே வளரும் களைகள் எவை?
போலிப்புலவர்கள் (களைகள்)
637) போலிப்புலவர்களின் கூட்டம் பெருகாமல் அவர்களின் தலையை குட்டுவதற்கு இருந்தவர்?
அதிவீரராம பான்டியன் - குட்டுவதற்கு
638) போலிப்புலவர்களின் கூட்டம் பெருகாமல் அவர்களின் செவியை அறுப்பதற்கு இருந்தவர்?
வில்லிபுத்தூரார் - அறுப்பதற்கு
639) போலிப்புலவர்களின் கூட்டம் பெருகாமல் அவர்களின் தலையை வெட்டுவதற்கு இருந்தவர்?
ஒட்டக்கூத்தர் - வெட்டுவதற்கு
640) தூது இலக்கியம் எவ்வகை இலக்கியம்?
96 சிற்றிலக்கியங்களில் ஒன்று
641) சந்து இலக்கியம் எனப்படுவது?
தூது இலக்கியம்
642) தூது இலக்கியம் பாடப்படும் பா வகை?
கலிவெண்பா
643) தூது இலக்கியத்தில் தூது அனுப்படுவது?
உயர்திணைப் பொருளையோ அஃறிணைப் பொருளையோ தூது அனுப்பப்படும்
644) மதுரையில் கோவில்கொண்டிருப்பவர்?
சொக்கநாதர்
645) சொக்கநாதர்மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி தூதாக அனுப்பப்படுவது யாது?
தமிழ்
646) தமிழ்விடு தூது என்ற நூலின் ஆசிரியர்?
இதுவரை அறியப்படவில்லை
647) முதல் மாந்தன் (மனிதன்) தோன்றிய இடம்?
இலெமுரியா
648) மனித நாகரிகத் தொட்டில் எனப்படுவது?
இலெமுரியா
649) தமிழகம் இன்றுபோல் இல்லாமல் குமரிமுனைக்கு தெற்கே விரிந்த நிலையில் உள்ளடக்கிய தமிழகத்தின் நதியும் மலையும் எவை?
பஃறுளி ஆறு, குமரிமலை
650) பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள – என்ற வரிகள் இடம்பெறும் நூல்?
சிலப்பதிகாரம்
651) திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் – என்று தமிழின் பழஞ்சிறப்பினை பாடியவர்?
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
652) தனக்குவமையில்லா ஒரு தனி இனம்?
தமிழினம்
653) தமிழக ஆடவர்கள் உயிராக கருதியது?
வினையை (தொழில், வேலை, பணி)
654) கல்வியின் முடிவெனப் போற்றப்படுவது?
சான்றோனாதல்
655) பழந்தமிழர்கள் எதன் வழியே வாணிகம் செய்தனர்?
அறத்தின் வழியே
656) கிறித்து பிறப்பதற்கு முன்பே அரிசி, மயில்தோகை, சந்தனமும் தமிழகத்திலிருந்து எந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டன?
கிரேக்கம், உரோமபுரி, எகிப்து
657) கி.மு. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன்?
சாலமன்
658) அரசன் சாலமனுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட பொருள்கள்?
யானைத் தந்தம், மயில்தோகை, வாசனைப் பொருள்கள்
659) தமிழர்களுக்கு கடல் வாணிகத் தொடர்பு இருந்த நாடு?
சாவக நாடு
660) கிறித்துவுக்கு முன்னரே மதுரையில் தமிழ்ச்சங்கம் இருந்தது வருகிறது, இத்தகைய மரபுச்செய்தி இடைவிடாது இருந்துவருகிறது, இந்தியாவில் இத்தகைய மரபுச்செய்தி வேறெங்கும் இல்லை – என்று கூறியவர்?
தனிநாயகம் அடிகள்
661) மதுரை தமிழ்ச்சங்கத்தினை தமிழ்கெழு கூடல் என்று குறிப்பிடும் நூல்?
புறநானூறு
662) மதுரை தமிழ்ச்சங்கத்தினை தமிழ்வேலி என்று குறிப்பிடும் நூல்?
பரிபாடல்
663) பழந்தமிழ்ச் சங்கத்தினை “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” – என்று கூறும் நூல்?
திருவாசகம் – மாணிக்கவாசகம்
664) உலகில் உள்ள உயரிய மனித இனத்தின் மரபுச் செல்வமாக விளங்குவது?
தமிழ்மொழி
665) உலகில் மொழி உருவம் பெருவதற்கு முன் பிறந்த கலை?
இசைக்கலை
666) பண்டைய காலத்து வாணிகப் பொருள்கள் துறைமுக நகரங்களிலிருந்து ஏற்றுமதி ஆயின எனக் கூறும் நூல்கள்?
பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி
667) நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும்  - இவ்வரிகள் இடம்பெரும் நூல்?
பட்டினப்பாலை
668) மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு கருவியாகத் திகழ்வது?
இசை
669) இசை மரபுகளை வெளிப்படுத்தும் நூல்கள்?
தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும்
670) இசை இலக்கணநூல் உண்டென உணரச்செய்யும் தொல்காப்பிய வரி?
நரம்பின் மறை
671) பண்டைய காலத்து இயலிசை நாடகக் கலைஞர்கள்?
பாணன், பாடினி, கூத்தன், விரலி
672) தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்புவரை முதலிடம் பெறுவது?
இசை
673) குழந்தையை தொட்டிலிட்டு பாடுவது?
தாலாட்டு
674) இறந்தவரைப் பற்றிப் பாடுவது?
ஒப்பாரி
675) ஒப்பாரி என்பதன் பொருள்?
இவருக்கு ஒப்பார் ஒருவரும் இல்லை
676) இன்றைய கருநாடக இசைக்குத் தாய்?
தமிழிசை
677) பண்ணொடு தமிழொப்பாய் – பண்ணும் தமிழும் பிரிக்க முடியாத ஒன்று எனக் கூறும் நூல்?
தேவாரம்
678) குழலினிது யாழினிது – என்று இசைபொழியும் கருவிகளை குறிப்பிடும் நூல்?
திருக்குறள்
679) பழந்தமிழர்களில் உயர்ந்தோராக மதிகப்பெற்றவர்கள்?
உழுபவர்
680) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் – என்று கூறும் நூல்?
திருக்குற்ள்
681) உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – என்று கூறும் நூல்?
மணிமேகலை, புறநானூறு
682) உழவுக்கு சிறப்புப் பெற்ற நிலம்?
மருதநிலம்
683) வயலும் வயல் சார்ந்த இடம்?
மருதநிலம்
684) களிறு எறிந்து பெயர்த்தல் காளைக்கு கடனே – என்று வீரத்தினை முதற்கடமையாக போற்றும் நூல்?
புறநானூறு
685) பெண்களின் பெருவீரத்தை பாடிய பெண்பாற்புலவர்?
ஒக்கூர் மாசாத்தியார்
686) திருவண்ணாமலையில் அமைந்துள்ள கல்வெட்டு எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டு
687) திருவண்ணாமலை கல்வெட்டில் எழுதப்பெற்ற சங்ககால மன்னன்?
நன்னன்
688) திருவண்ணாமலை கல்வெட்டில் எழுதப்பெற்ற சங்ககால நூல்?
மலைபடுகடாம்
689) மலைபடுகடாம் – என்ற நூலின் ஆசிரியர்?
பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
690) தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்பது?
தொல்பழங்காலத்தைப் பற்றிய ஆய்வு செய்தல்
691) தொல்லியலின் முதன்மையான நோக்கம்?
தொன்மையான காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வாணிகம், வேளாண்மை, அரசியல், நுண்கலைகள் முதலியவைபற்றி ஆராய்தல்
692) தொல்லியலை ஆங்கிலத்தில் எவ்வாறு குறிப்பிடுவர்?
ஆர்க்கியாலஜி
693) மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்திலிருந்து, வரலாற்றுக்கு முந்தைய காலம்வரை உள்ள காலத்தை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
தொன்மைக்காலம்
694) 1963 ஆம் ஆண்டு தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி செய்த இடம்?
கீழார்வெளி – பூம்புகார் அருகில் உள்ளது
695) 1963 ஆம் ஆண்டு தொல்லியல் துறையினர் கீழார்வெளியில் அகழாய்வின்போது கண்டறியப்பட்டவை?
கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டட இடிபாடுகள்
696) கீழார்வெளியில் அகழாய்வின்போது கண்டறியப்பட்ட எச்சங்கள்?
1) செங்கற்களால் கட்டப்பட்ட படகுத் துறை
2) அரைவட்ட வடிவ நீர்த்தேக்கம்
3) புத்தவிஹாரம் (பித்தபிக்குகள் தங்கும் இடம்)
4) வெண்கலத்தாலான புத்தர் பாதம்
697) மொகஞ்சதாரோவில் காணப்படும் தமிழர்களின் வீரவிளையாட்டு?
ஏறுதழுவுதல்
698) அகழாய்விற்குரிய இடங்களை தெரிவுசெய்வதற்கு உறுதுணையாக இருப்பவை?
பழமையான இலக்கியங்கள்
699) பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் எவ்வாறு புதைத்தனர்?
முதுமக்கள்தாழி
Read More »

TNPSC | TRB | TET STUDY | TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் | PART-6

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்| PART -6
===========================

501) மேடைப்பேச்சின் உயிர்நாடி எது?
கருத்துக்கள்
502) பேச்சுக்கலையில் வெற்றிபெற தேவையானது?
வலிமையான கருத்துக்கள்
503) மேடைப்பேச்சில் கருத்தை விளக்க கருவியாக அமைவது எது?
மொழி
504) மேடைப்பேச்சின் பேச்சு முறைகள் எத்தனை வகைப்படும்?
மூன்று வகைப்படும் - முக்கூறுகள்
505) மேடைப்பேசின் முக்கூறுகள் எவை?
1) தொடக்கம், 2) இடைப்பகுதி, 3) முடிவு
506) மேடைப்பேச்சின் முக்கூறுகளான தொடக்கம், இடைப்பகுதி, முடிவு ஆகியவற்றை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) எடுத்தல், 2) தொடுத்தல், 3) முடித்தல்
507) மேடைப்பேச்சினை தொடங்கும்போது எவ்வாறு தொடங்குதல் வேண்டும்?
எடுப்புடன் தொடங்குதல் வேண்டும்
508) பேச்சைத் தொடங்குவது?
எடுப்பு
509) மேடைப்பேச்சில் தொடக்கம் எவ்வாறு அமைதல் வேண்டும்?
கேட்போரை வயப்படுத்தும் முறையில்
510) மேடைப்பேச்சில் தொடக்க உரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை?
தொடுத்தல்
511) மேடைப்பேச்சின் இடையிடையே சுவைமிக்க சொற்களும் குணமிக்க கருத்துக்களும் பிணைத்துப் பேசுவது?
தொடுத்தல்
512) மருந்தின்மேலிட்ட இனிப்புப்போன்றது எது?
இலக்கியக்கூறுகள்
513) மேடைப்பேச்சில் சிறந்த பேச்சு எத்தகையதாக இருத்தல் வேண்டும்?
இடையிடையே உவமைகள், எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல்வேறு நடைகள், சிறுசிறு கதைகள் முதலியவற்றை அமைத்து பேசுதல்
514) உயிருள்ள பேச்சு எது?
உணர்ச்சியுள்ள பேச்சு
515) மேடைப்பேச்சினை எவ்வாறு முடித்தல் வேண்டும்?
1) பேச்சின் சுருக்கத்தை கூறி முடித்தல்
2) உணர்ச்சியை தூண்டும் முறையில் முடித்தல்
3) பாராட்டி முடித்தல்
4) பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல்
516) தொல்காப்பியத்தைப் படித்து படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன்; வள்ளுவர் குறளைப் படித்து என் உள்ளம் தழைத்தேன் – என்று கூறியவர்?
ரா.பி.சேதுபிள்ளை
517) உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு! – என்று அன்பு ஆணையிட்டவர்?
அறிஞர் அண்ணா
518) தமிழர் திருநாள் தை முதல் நாளாம், அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாளாம் – என்று பாடியவர்?
கவிஞர் முடியரசன்
519) காஞ்சி இதழ் மூலம் கருத்து விருந்து அளித்தவர்?
அறிஞர் அண்ணா
520) காஞ்சி இதழ் மூலம் தம்பிக்கு கடிதம் எழுதிய நாள்?
14.01.1968
521) அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெற்ச் செய்தவர்?
பேரறிஞர் அண்ணா
522) பொருத்தமாகவும் தெளிவாகவும் விரைவாகவும் விடைகூறும் ஆற்றல் எவரிடம் இயல்பாக அமைந்திருந்தது?
அறிஞர் அண்ணா
523) அப்பூதியடிகள் எங்கு தோன்றினார்?
திங்களூர்
524) திருநாவுக்கரசரிடம் பேரன்புடையவர்?
அப்பூதியடிகள்
525) திருநாவுக்கரசரிடம் பேரன்புகொண்டமையால் அபூதியடிகள் எதற்கெல்லாம் திருநாவுக்கரசர் என பெயரிட்டார்?
தம்மக்கள், அளவை, நிறைகோல், பசுக்கள், எருமைகள், தாம் வைத்த தண்ணீர் பந்தல்
526) திங்களூர் வந்த திருநாவுக்கரசர் முதலில் எதைக்கண்டு வியப்புற்றார்?
தண்ணீர் பந்தல்
527) ஒன்றுகொலாம் என்னும் திருப்பதிகம் பாடியவர்?
திருநாவுக்கரசர்
528) களவு, பொய், காமம், சினம் முதலிய குற்றங்கள் நீங்கியவர்?
அப்பூதியடிகள்
529) தன் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் திருநாவுக்கரசரின் பெயரை சூட்டி வாழும் வழக்கம் உடையவர்?
அப்பூதியடிகள்
530) வாசீகர் என அழைக்கப்படுபவர்?
திருநாவுக்கரசர்
531) கல்லோடு சேர்த்துக்கட்டிக் கடலில் எறிந்தபோது, அக்கல்லினையே தெப்பமாக்கிக் கொண்டு கரையேறியவர்?
திருநாவுக்கரசர்
532) சூலை எனும் கொடிய வயிற்று வலியால் ஆட்கொள்ளப்பட்டு சைவ சமயம் வந்தடைந்தவர்?
திருநாவுக்கரசர்
533) நல்ல தாயும் தந்தையும் ஏவ, அதன்படி நான் இப்பணி செய்யும் பேறு பெற்றேன் – என்று கூறியவர்?
மூத்த திருநாவுக்கரசு
534) திருநாவுக்கரசருக்கு அமுது படைக்க அப்பூதியடிகள் தன் மூத்த மகனாகிய மூத்த திருநாவுக்கரசரை வாழைக்குருத்தை அரிந்து வரச்செய்யுமாறு கட்டளையிட்டார், அதன்படி வாழைக்குருத்து அரியும்போது மிக வருந்தும் வகையில் கூரிய பற்களால், அவனை பாம்பு எங்கு தீண்டியது?
உள்ளங்கையில்
535) அப்பூதியடிகளும் அவர் மனைவியாரும் தம் மூத்த திருநாவுக்கரசர் இறந்ததை எவ்வாறு அறிந்துகொண்டனர்?
கையினில் குருதி வழியும் வடு, உடற்குறியைக் கண்டும் விடம் ஏறியதை கண்டும்
536) நான்மறை கற்று வாய்மை தவறாத அந்தணர்?
அப்பூதியடிகள்
537) அன்புடைய உங்கள் மூத்த பிள்ளையையும் திருநீறு அணியச் செய்வதற்குக் காட்டுவீராக – என்று கூறியவர்?
திருநாவுக்கரசர்
538) இப்போது, இங்கு அவன் உதவான் – என்று கூறியவர்?
அப்பூதியடிகள் (திருநாவுக்கரசரிடம் கூறியது)
539) ஒன்றுகொலாம் – எனத்தொடங்கும் திருப்பதிகம் பாடி, பாம்பின் விடத்தைப் போக்கியருளியவர்?
திருநாவுக்கரசர்
540) பணிவிடம் – என்பதன் பொருள்?
பாம்பின் நஞ்சு
541) பெரியபுராணத்தை அருளியவர்?
சேக்கிழார்
542) சேக்கிழார் பிறந்த ஊர்?
குன்றத்தூர்
543) சேக்கிழார் பிறந்த குன்றத்தூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
காஞ்சிபுரம்
544) சேக்கிழாரின் இயற்பெயர்?
அருண்மொழித்தேவர்
545) சேக்கிழார் யாருடைய அரசவையில் தலைமை அமைச்சராக பணியாற்றினார்?
அனபாயச்சோழன்
546) உத்தமசோழ பல்லவர் – என்னும் பட்டம் பெற்றவர்?
சேக்கிழார்
547) சேக்கிழார் எவ்வாறு போற்றப்படுகிறார்?
தெய்வ சேக்கிழார், தொண்டர் சீர்பரவுவார்
548) சேக்கிழார் வாழ்ந்த காலம்/
கி.பி.12 ஆம் நூற்றாண்டு
549) தனியடியார்கள் எத்தனை பேர்?
அறுபத்துமூவர் – 63
550) தொகையடியார்கள் எத்தனை பேர்?
ஒன்பதின்மர் – 9 பேர்
551) சிவனடியார்கள் எத்தனை பேர்?
எழுபத்திருவர் – 72 பேர்
552) எழுபத்திரு சிவனடியார்களின் வரலாற்றை கூறி, பெருமை பெற்றது என்னும் பொருளில் அமைந்த நூல்?
பெரியபுராணம்
553) பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்?
திருத்தொண்டர் புராணம்
554) தில்லை நடராசப்பெருமான், “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்றதென கூறும் நூல்?
பெரியபுராணம்
555) எவருடைய பாடல்கள் அனைத்தும் தெய்வ மணம் கமழும் தன்மையுடையன?
சேக்கிழார்
556) பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ – என்று போற்றப்பட்டவர்?
சேக்கிழார்
557) சேக்கிழாரை பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ – என்று புகழ்ந்துரைத்தவர்?
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
558) உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் – எது?
பெரியபுராணம்
559) உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரியபுராணம் – என்று கூறியவர்?
திரு.வி.கல்யாணசுந்தரனார்
560) அங்கணர் – என்பதன் பொருள்?
அழகிய நெற்றியை உடைய சிவன்
561) அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே – என்று பாடியவர்?
தாயுமானவர்
562) நம் வாழ்வின் உயிர்நாடி எனப்படுவது?
கலைகள்
563) உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் உலகமொழி?
திரைப்படம்
564) உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி?
திரைப்படம்
565) மக்களை தன்வயப்படுத்தும் ஆற்றல் எந்த கலைக்கு உண்டு?
திரைப்படக்கலை
566) ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடித்த ஆண்டு?
கி.பி 1830
567) முதன்முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றவர்?
எட்வர்டு மைபிரிசு – என்ற ஆங்கிலேயர்
568) படச்சுருள் உருவாக்கும் முறையை கண்டுபிடித்தவர்?
ஈஸ்ட்மன்
569) ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர்?
எடிசன்
570) இயக்கப்படத்தை பலரும் பார்க்கும் வகையில் அமைத்தவர்?
பிரான்சிஸ் சென்கின்சு – என்ற அமெரிக்கர்
571) பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப்படத்தை எங்கு வடிமைத்தார், எந்த ஆண்டு?
ரிச்மண்ட் – கி.பி 1894
572) புதிய படவீழ்த்திகளை உருவாக்க யாருடைய கருத்துக்கள் அடிப்படையாக அமைந்தன?
பிரான்சிஸ் சென்கின்சு
573) பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் பலரும் பார்க்கும் வகையில் அமைத்த இயக்கப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள்?
நாட்டியம் & கடல் அலைகள் கரையில் மோதுதல்
574) ஒரு மொழிப்படத்தை மற்ற மொழியில் மாற்றி அமைக்கும் முறை?
மொழிமாற்றம்
575) நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே, நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் “நுண்மான் நுழைபுலம்” உடையவர்?
இயக்குநர்
576) திரைப்படத்துறை அடைந்துள்ள வளர்ச்சி நிலைகள்?
கதைப்படங்கள், கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள்
577) உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை படமாக்கிக் காட்டுவது?
செய்திப்படங்கள்
578) உலக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே, காணும் வாய்ப்புகளை உருவாக்குபவை?
செய்திப்படங்கள்
579) ஒருநாட்டு மக்களின் வாழ்க்கைமுறைகளை உள்ளது உள்ளவாறு அறிதல்?
விளக்கப்படங்கள்
580) உலப் போரின்போது சுட்டுக் கொல்லப்பட்ட பலர் எந்த கண்டத்தை சேர்ந்தவர்கள்?
ஆப்பிரிக்கா, ஐரோப்பா
581) திரைப்படம் எடுக்கப்பயன்படும் படச்சுருள் எந்த பொருளால் ஆனது?
செல்லுலாய்டு
582) படம் எடுக்கப்பயன்படும் சுருள்?
எதிர்ச்சுருள்
583) படபிடிப்புக் கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் எத்தனை படங்கள் தொடர்ச்சியாக எடுக்கப்படும்?
பதினாறு படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாக
584) திரையரங்குகளில் திரைப்படம் காட்டப் பயன்படும் கருவி?
ஒளிஒலிப்படக்கருவி
585) எக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இருபெட்டிகள் காணப்படும்?
ஒளிஒலிப்படக்கருவி
586) ஒளிஒலிப்படக்கருவின் முன்புறத்தில் உள்ள மூடி நொடிக்கு எத்தனை முறை சுழலும்?
எட்டுமுறை
587) ஒளிஒலிப்படக்கருவின் முன்புறத்து மூடியில் அமைந்துள்ள பாகம்?
இரண்டு கைகள்
588) ஒளிஒலிப்படக்கருவின் முன்புறத்து மூடியில் அமைந்துள்ள கைகள் நொடிக்கு எத்தனை முறை சுழலும்?
பதினாறு முறை
589) கருத்துப்படம் அமைக்கப்படத் தொடங்கியவர்?
வால்ட் டிஸ்னி
590) ஒரே செயலைக் குறிக்கும் பல்லாயிரக்கணக்கான படங்களை வரையும் ஓவியர்?
வால்ட் டிஸ்னி
591) படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் தயாரிக்கும் படங்கள்?
கருத்துப்படங்கள்
592) பார்பதற்கு வேடிக்கையாக அமைந்துள்ள படங்கள்?
இயங்குரு படங்கள்
593) உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்சிகளை படமாக்கிக் காட்டுவது?
செய்திப்படம்
594) திரைப்படம் எடுப்பதைவிட கடினமான பணி எது?
செய்திப்படம் எடுப்பது
595) ஒரு நிகழ்வினை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப்பற்றிய முழு விளக்கத்தினையும் தருவது?
விளக்கப்படம்
596) உலகத்தமிழ் மாநாட்டு நிகழ்வை மட்டும் காட்டும் படம்?
விளக்கப்படம்
597) கல்வி கற்பிப்பதற்கென உருவாக்கப்படும் படங்கள்?
கல்விப்படங்கள்
598) வாழ்க்கையில் நேரில் காண முடியாத பல இடங்களையும் நேரில் பார்ப்பதனைப் போலவே காட்டுவதற்கு வழிவகை செய்வது?
கல்விப்படம்
599) மக்களைத் தன்பால் ஈர்த்துக் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது?
திரை உலகம்
600) கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே – என்ற வரிகள் எதற்கு பொருந்தும்?
திரைப்படம்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One