Search

TNPSC-TET STUDY MATERIALS GK-தென்னிந்தியாவில் பாயும் நதிகள் பற்றிய குறிப்புக்கள்

Monday, 22 October 2018

தென்னிந்தியாவில் பாயும் நதிகள் பற்றிய குறிப்புக்கள் :
⛲ தென்னிந்திய ஆறுகள்:-
1. காவேரி
2. தென்பெண்ணை
3. பாலாறு
4. நர்மதா
5. தபதி
6. மகாநதி
7. கோதாவரி
8. கிருஷ்ணா
9. வைகை
10. தாமிரபரணி

1. காவேரி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - குடகுமலை
🌊 முக்கிய துணை ஆறுகள் - அமராவதி, பவானி, நொய்யல், திருமணிமுத்தாறு
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - மேட்டூர், கல்லணை
🌊 காவேரி ஆறு தோற்றுவிக்கும் தீவு - ஸ்ரீரங்கம்
🌊 கடலில் கலக்கும் இடம் - பூம்புகார்

2. தென்பெண்ணை:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - சென்னகேசவ மலை (கர்நாடகா)
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - சாத்தனூர் அணை
🌊 கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

3. பாலாறு:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - நந்தி தர்கம் மலை (கர்நாடகா)
🌊 இதன் துணை ஆறுகள் - செய்யாறு, வேகவதி
🌊 கடலில் கலக்கும் இடம் - சதுரங்கப் பட்டினம்

4. நர்மதா:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - அமர்கண்டக் மைக்கால் மலைதொடர் (மத்திய பிரதேசம்)
🌊 விந்திய சாத்புரா மலைகளுக்கு இடையே பாய்கிறது.
🌊 மேற்கு நோக்கி பாய்கிறது.
🌊 அரபிக் கடலில் கலக்கிறது.
🌊 கடலில் கலக்கும் இடம் - காப்பே வளைகுடா

5. தபதி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - சாத்புரா மலை மகாதேவ் குன்று
🌊 மேற்கு நோக்கி பாய்கிறது
🌊 கம்பே வளைகுடாவில் அரபிக் கடலில் கலக்கிறது.

6. மகாநதி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - அமர்கண்டக் பீடபூமி
🌊 சமவெளி அடையும் இடம் - சத்தீஸ்கர்
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - ஹீராகுட்
🌊 வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

7. கோதாவரி:-
🌊  உற்பத்தி ஆகும் இடம் - நாசிக் திரியம்பக்
🌊 முக்கிய துணை ஆறுகள் - பெண் கங்கா, வெயின் கங்கா, கங்காவர்தா, மஞ்சிரா, இந்திராவதி, சபரி, வார்தா
🌊 தென்னிந்திய நதிகளில் மிக நீளமானது
🌊 இது வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

8. கிருஷ்ணா:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - மகாபலேஸ்வர் மலை
🌊 இது வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

9. வைகை:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - மேற்கு தொடர்ச்சி மலை (ஏலகிரி மலை)
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - கம்பன் அணை
🌊 இதன் வேறுபெயர் - பெய்யாகுலகொடி
🌊 கடலில் கலக்கும் இடம் - மன்னர் வளைகுடா

10. தாமிரபரணி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - அகஸ்தியர் மலை
🌊 இதன் துணை ஆறுகள் - மணிமுத்தாறு, சிற்றாறு
🌊 இதற்கு முற்காலத்தில் இருந்த பெயர் - பொருநை நதி
🌊 இந்த ஆறு ஏற்படுத்தும் அருவிகள் - பாபநாசம், குற்றாலம்
🌊வங்காள விரிகுடாவில் கடலில் கலக்கும்
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE 100 QU

TNPSC-TET STUDY MATERIALS -GENERAL KNOWLEDGE-100 QUESTIONS

1. இந்தியாவில் முதன் முதலில் நெட்பிளிக்ஸ் நோயாளி எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்?

பெங்களூர்.

2.இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் தூதராக இருந்த பெண்மணி யார்?

ஈஷா பஹல்.

3. தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு எந்த மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது?

புதுச்சேரி.

4. ஒராஸ் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது?

அஸ்ஸாம்.

5. பூரி ஜகநாதர் ஆலயம் எந்த மாநிலத்தில் உள்ளது?

ஒடிசா.

6. பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை (ISI) அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

அசிம் முனிர்.

7. “வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது என்பது கொலை செய்யும் குற்றத்துக்குச் சமம்” என்று கூறியுள்ளவர் யார்?

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுரு “போப் பிரான்சிஸ்”.

8. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் எந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது?

2009

9. உலகிலேயே மிக நீண்ட தூர விமான சேவையை தொடங்க உள்ள நிறுவனம்?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம். (A-350900 ULR), சிங்கப்பூர் to நியூயார்க் (16 ஆயிரத்து 700 கி.மீ) விமான பயண நேரம் 18 மணி, 45 நிமிடங்கள்.

10. ஹிரகவா உயிரியல் பூங்கா எந்த நாட்டில் உள்ளது?

ஜப்பான்.

11. உலகிலேயே மிகவும் வலிமையான பாஸ்போர்ட் என்று எந்த நாட்டின் பாஸ்போர்ட் தேர்வாகியுள்ளது?

ஜப்பான். (இந்த வருட தொடக்கத்தில் மியான்மர் நாட்டுக்கு விசா இன்றி பயணம் செய்ய வழிவகை செய்ததால் ஜப்பான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது). 2-வது இடம் சிங்கப்பூர், 3-வது இடம் ஜெர்மனி, தென் கொரியா, பிரான்ஸ். இந்தியா பாஸ்போர்ட் – 81 வது இடம்.

12. ஆண்ட்ராய்டு-ஐ சட்டவிரோதமாக பயன்படுத்தி இணையத்தில் கூகுள் நிறுவனம் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்ததாகக் கூறி கூகுள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய அபராதம் விதித்த நாடு?

ஐரோப்பிய யூனியன்.

13. Desh ka Sach எனும் மனுமேடை வலைப்பக்கத்தினை உருவாக்கியுள்ள நிறுவனம்?

சுபாஷ் சந்திரா அறக்கட்டளை

14. இந்தியாவில் பிளாஸ்டிக்கை எந்த ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது?

2022-ம் ஆண்டுக்குள்

15. 2018-ம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது பெற்றவர்கள் யார்?       

இந்திய பிரதமர் நரேந்திர மோடி & பிரான்ஸ் அதிபர் மேக்ரான்.

16. எந்த மாநிலத்தில் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மாதம் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது?

கர்நாடகா.

17. உலகிலேயே முதல் முறையாக கோவையில் ______________ நோய் விழிப்புணர்வுக்காக அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டது?

மார்பகப் புற்றுநோய்.

18. சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடப்படும் மாதம்?

அக்டோபர் மாதம்.

19. மகாத்மா காந்தியின் படம் முதல் முறையாக அஞ்சல் அட்டையில் எப்போது இடம்பெற்றது?

அக்டோபர் 2, 1951 (82-வது பிறந்த தினத்தில்)

20. இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு தம்பதியின் புகைப்படம் அஞ்சல் தலையில் எப்போது இடம்பெற்றது?

1969-ல் (காந்தியின் நூற்றாண்டு விழாவின் போது, காந்தி – கஸ்தூரிபா படங்கள் அஞ்சல் தலைபில் இடம் பெற்றது.

21. காந்தி மற்றும் கஸ்தூரிபா பிறந்த ஆண்டு?

இருவருமே 1869-ல் பிறந்தவர்கள்.

22. கஸ்தூரிபா அவர்களின் படம் எப்போது அஞ்சல் தலையில் இடம் பெற்றது?

அவர் இறந்து 20 வருடங்களுக்குப் பிறகு 1964 பிப்ரவரி 22-ம் தேதி 15 பைசா மதிப்பில் கஸ்தூரிபா படத்துடன் கூடிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

23. கஸ்தூரிபா எப்போது உயிரிழந்தார்?

பிப்ரவரி 22, 1944.

24. மகாத்மா காந்தி அவர்களுக்கு எத்தனை நாடுகளில் அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது?

86 நாடுகளில்.

25. பல்லவ மன்னர்களின் வரலாற்றை விளக்கும் வகையில் தமிழகத்தில் எங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது?

மாமல்லபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்)

26. 2018-ம் ஆண்டிற்கான பார்முலா 1 கார் பந்தயம் உலகம் முழுவதும் எத்தனை சுற்றுக்களாக நடத்தப்பட்டது?

21 சுற்றுகள்.

27. ஹோல்கர் ஸ்டேடியம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?

இந்தூர் (மத்திய பிரதேசம்)

28. செவ்வாய் கிரக மணல் மாதிரி விற்பனைக்கு வந்துள்ள நாடு?

அமெரிக்கா

29. நோபல் பரிசு எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது?

1895

30. இந்து திருமணச் சட்டம் பிரிவு ___________ ன்படி கணவன், மனைவி இருவரும் நண்பர்களாக பிரிய 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை?

பிரிவு 13(பி)

31. இந்தோனேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்ற வீரர்?

தமிழகத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன்.  

32. சமீபத்தில் மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாடு எங்கு நடைபெற்றது?

டெல்லி

33. ‘தங்கப்பதக்கம்’ விருது எந்த நாட்டில் வழங்கப்படுகிறது?

அமெரிக்கா.

34. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலின் படி 2018-ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த நிறுவனம் எது?

வால்ட் டிஸ்னி.

35. உலகின் தலை சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து எத்தனை நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன?

12 நிறுவனங்கள்.

36. உலகின் தலை சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் அமேசான் நிறுவனம் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?

8 –வது இடம்.

37. மகா புஷ்கர விழா எத்தனை ஆண்டுகளுக்கொருமுறை நடத்தப்படுகிறது?

144 வருடங்களுக்கு ஒரு முறை.

38. “இண்டியன் ஒபீனியன்” என்ற பத்திரிக்கையை வெளியிட்டவர்?
மகாத்மா காந்தி.

39. காந்தி எத்தனை வயதில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார்?

24 வயதில்.

40. இளம் வயதிலேயே(21) ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள கிரிக்கெட் வீரர் யார்?

கிறிஸ் கார்டர் (ஹாங்காங்)

41. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் எண்ணிக்கை?

121.

42. 2014-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்தியா-பாகிஸ்தான் இடையே 2015 முதல் 2023 வரை எத்தனை தொடர்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது?

6 தொடர்கள்

43. “கங்கை நதி” தூய்மை குறித்து “கங்கா இயக்கம்” பெயரில் பயணம் மேற்கொண்டுள்ள குழு யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?

திருமதி. பச்சேந்திரி பால்.

44. “கங்கா இயக்கம்” பயணக் குழுவினர் எங்கிருந்து எதுவரை பயணம் மேற்கொண்டுள்ளனர்?

“ஹரித்துவார்” லிருந்து “பாட்னா” (நதியில் பயணம் செய்கின்றனர்)

45. ஆஸ்கர் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிரிவு?

சிறந்த பிரபலமான திரைப்படம்.

46. இந்தியாவில் வாழத்தகுதியான நகரங்கள் பட்டியலில் “திருச்சி” எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது?

12 –வது இடம் (தமிழகத்தில் திருச்சி முதல் இடம்)

47. இந்தியாவில் வாழத்தகுதியான நகரங்கள் பட்டியலில் முதல் இடம்?

புனே

48. சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி எங்கு நடைபெற்றாது?

ஜப்பான்.

49. “குடிசைப் பகுதியின் பின்புலத்திலிருந்து வந்தவன் நான்” என்று கூறியவர்?

பிரபல குத்துச்சண்டை வீரர் “மைக் டைசன்”

50. புடவை கட்டிய ஓர் இந்தியப் பெண் தன்னிடம் இருக்கும் விளக்கு அணைந்து விடக்கூடாது எனக் கைகளால் அணைக்கட்டியிருக்கும் இந்த வரைபடத்தை (GLOW OF HOPE) வரைந்தவர்?

ஓவியர் ஹல்டான்கர்

51. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எத்தனை சதவீதம்?

7.4 %

டெல்லி

52. ரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

ஆடிட்டர் குருமூர்த்தி

53. பணம் திரும்பப்பெறும் விதிமுறைப்படி 200 ரூபாய் நோட்டுக்கள் எத்தனை ச.செ.மீ வரை கிழிந்திருந்தால் அதற்கு முழுப்பணம் அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது?

78 ச.செ.மீ (2000 ரூபாய் நோட்டு – 88 ச.செ.மீ)

54. புகழ்பெற்ற டைம் வார இதழை தற்போது யார் வாங்கியுள்ளனர்?

மெரிடித் கார்பிடம் இருந்து பெரும் கோடீஸ்வரரான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் "மார்க் பெனிஆப்", அவரின் மனைவி "லினி"யும் ரூ.1,395 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளனர்.

55. இந்தியாவில் முதன்முறையாக எந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது?

டார்ஜிலிங் தேயிலை (2004-ம் ஆண்டு)

56. இந்தியாவில் இதுவரை எத்தனை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

325 பொருட்கள்

57. இந்தியாவில் எந்த மாநிலம் புவிசார் குறியீடுகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது?

கர்நாடகா (இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 2-ம் இடம்)

58. இந்தியாவில் 20-வது தேசிய கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது?

தமிழ்நாடு (தேசிய கால்நடைகள் கணக்கெடுப்புப்பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது)

59. பிரித்வி-2 ஏவுகணை இந்திய பாதுகாப்புப் படையில் எப்போது சேர்க்கப்பட்டது?

2003-ம் ஆண்டு

60. 16 வயதுக்குட்பட்டோருக்கான ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடர் எங்கு நடைபெற்றது?

ரஷ்யா

61. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக அறிவித்த நாடு?

பிரிட்டன்

62. சோஹோ (Solar and Heliospheric Observatory- SOHO) என்பது என்ன?

நாசாவின் சூரிய மற்றும் கதிர்மணடல கண்காணிப்பு செயற்கைக்கோள்.

63. FBI என்பது என்ன?

அமெரிக்க புலனாய்வு அமைப்பு.

64. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நாடு எது?

ஈரான்

65. விவசாய உற்பத்தியைக் காப்பதற்கான புதிய சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து எந்த நாடு பொதுமக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தியது?

சுவிட்சர்லாந்து

66. புலிகளின் எண்ணிக்கை எந்த நாட்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது?

நேபாளம்

67. காணாமல் போன 1000 ஆண்டுகள் பழமையான செம்பியன் மாதேவியின் ஐம்பொன் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி அருங்காட்சியகத்தில்.

68. 2019-ம் ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஸ்ஸாமிய திரைப்படம்?

வில்லேஜ் ராக்ஸ்டார்

69. நடிகை ஜெயப்பிரதா எந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறைக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?

நேபாளம்

70. யுடிராக் என்பது என்ன?

இந்தியாவின் சொந்த GPS மாட்யூல்

71. ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் எந்த மாதத்தில் நடைபெறும்?

செப்டம்பர் மாதம்

72. இந்த ஆண்டு(2018) நடைபெற்ற ஐ.நா. சபை பொதுக்கூட்டம் எத்தனையாவது பொதுக்கூட்டம்?

73-வது

73. இந்தியாவிற்கான Whatsapp குறைதீர்ப்பு அதிகாரி?

கோமல் லகிரி.

74. ‘கோபா டிராபி’ விருது (21 வயதுக்குட்பட்டோருக்கான) முதல் முறையாக பெண் விளையாட்டு வீரர்களுக்கு எந்த விளையாட்டில் வழங்கப்பட உள்ளது?

கால்பந்து விளையாட்டு வீரர்கள்

75. இந்தியாவின் எந்த மாநிலத்தில் முதல் முறையாக விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது?

சிக்கிம்.

76. இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த _____________ மற்றும் __________ நிறுவனங்களுடன் BSNL ஒப்பந்தம் செய்துள்ளது?

சாஃப்ட்பேங்க் மற்றும் என்.டி.டி கம்யூனிகேஷன்.

77. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 4.59 லட்சத்துக்கு ஏலம் போன காந்தி எழுதிய கடிதம் எதைப் பற்றி குறிப்பிடுகிறது?

கதர் ஆடைகளை நூற்பது குறித்தும், நூல்களை தயாரிக்கும் ராட்டை குறித்தும்

78. ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெரிகளில் ஊசி இருந்த விவகாரத்தில் இந்த செயலை செய்தவர்களை அந்நாட்டு அரசு எவ்வாறு அறிவித்தது?

உணவு பயங்கரவாதிகள்

79. ஒரு பெண் நல்ல மனைவி மற்றும் மருமகளாக இருப்பதைக் கற்றுக் கொடுப்பதற்காக இந்தியாவில் எங்கு புதிய படிப்பு (மருமகள் எனும் புதிய பயிற்சி வகுப்பு) தொடங்கப்பட உள்ளது?

போபால் ( பர்கதுல்லா பல்கலைக்கழகம்)

80. மத்திய அரசின் ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் வாழ்க்கையை மிக எளிதாக வாழக்கூடிய மாநிலங்களின் பட்டியலில் எந்த மாநிலம் முதல் இடம் பிடித்தது?

ஆந்திரா

81. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற உள்ளது?

இங்கிலாந்து

82. மியான்மரை ஒட்டியுள்ள வங்கதேச பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதிகள் முகாம்களிலிருந்து 1 லட்சம் அகதிகள் எந்த தீவிற்கு மாற்றப்பட உள்ளனர்?

மனிதர்கள் இதுவரை வாழ்ந்திராத தீவுப்பகுதியான “பாஷன் சர்”.

83. தேவாலயங்களுக்கு பாதிரியார்களை நியமனம் செய்வது தொடர்பாக ____________ மற்றும் ____________ நாடுகளுக்கிடையே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

சீனா – வாடிகன்

84. சர்வதேச படகுப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர்?

அபிலாஷ் டோமி(39)

85. “கோல்டன் குளோப்” என்பது?

உலகைக் கடல்வழி சுற்றிவரும் சர்வதேச படகுப்போட்டி

86. அப்துல்கலாம் தீவு என அழைக்கப்படுவது எது?

ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்ச் (ITR) வீலர் தீவு.

87. புலிகளுக்கான உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

செயின்ட் பீட்டஸ்பர்க்

88. புலிகளுக்கான உச்சி மாநாட்டில் ‘புலிகளின் வழித் தடங்களைக் கொண்டுள்ள நாடுகள் தத்தம் நாடுகளில் புலிகளின் எண்ணிக்கையை _____________ ஆண்டிற்குள் இரு மடங்காக உயர்த்த வேண்டுமென்று உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது?

2022-ம் ஆண்டிற்குள்

89. “டெராய் ஆர்க்” பகுதி எந்த நாட்டில் உள்ளது?

நேபாளம் (நேபாளத்தில் புலிகள் அதிகம் வாழும் பகுதி இது)

90. உலகிலேயே முதல் முறையாக 80 மீ உயரத்தில் விமான நிலைய தடுப்புச்சுவர் எந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது?

இந்தியா (சிக்கிம் விமான நிலையம்)

91. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றிலேயே முதல் முறையாக விண்கல்லில் ரோவரைத் தரையிறக்கி உலக சாதனை படைத்த நாடு?

ஜப்பான்.

92. ஜப்பான் விண்வெளிக்கு அனுப்பியுள்ள “ஹயபுசா” விண்கலம் எந்த ஆண்டு பூமியை வந்தடையும்?

2020

93. மண்டல கிராம வங்கிகளின் எண்ணிக்கை எத்தனை வங்கிகளாக குறைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது?

56 லிருந்து 36 வங்கிகளாக.

94. 7C திட்டம் எனப்படுவது?

எதிர்கால இந்தியாவை மொபிலிட்டியை ஸ்மார்ட்டாகவும், மாற்று எரிபொருள் கொண்ட வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

95. “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினம் கொண்டாட காரணமாக விளங்கும் நாள்?

செப்டம்பர் 29, 2016. (காஷ்மீரை ஒட்டியுள்ள எல்லையை தாண்டிச் சென்ற இந்திய இராணுவ வீரர்கள் அங்கிருந்த தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதை நினைவுகூறும் வகையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினம் கொண்டாடப்படுகிறது).

96. உலகில் எளிமையாக வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நகரம்?

ஹவாயின் தலைநகரமான "ஹோனலூலு".

97. டேராடூன் -ல் இருந்து ________ க்கு முதல் முறையாக விமானச்சேவை தொடங்கப்பட்டுள்ளது?

பித்தோரோகார்

98. இந்தியா - ஜப்பான் இடையே கடற்படை போர்ப்பயிற்சி எத்தனை ஆண்டுகளுக்கொருமுறை நடத்தப்படுகிறது?

5 ஆண்டுகளுக்கொருமுறை

99. குறிப்பிட்ட நாடுகளில் இந்திய நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பட்டியலில் புதியதாக சேர்ந்துள்ள நாடு?

ஆஸ்திரேலியா (இந்த குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது இணைந்துள்ளது)

100. இரசாயன உரங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ள மாநிலம்?

சிக்கிம்.

Read More »
 

Most Reading

Tags

Sidebar One