Search

Tnpsc பொதுஅறிவு வினாக்கள்

Monday, 24 September 2018

51.குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க? சோம்பல்

52.இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்? கட்டளை வாக்கியம்

53.மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக? பண்புப்பெயர்

54.வாழ்க இலக்கணக்குறிப்பு?வியங்கோள் வினைமுற்று

55.தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொடர்

56.ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை

57.முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர்

58.வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்

59.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்

60.தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்

61.தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்

62.இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்

63.மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை

64.சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு

65.ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்

66.டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக அமைப்பின் கூறுகள்

67.ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி

68.200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்

69.உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்

70.பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982

71.எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது

72.காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915

73.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957

74.தி.மு.கவை நிறுவியவர் யார்? அண்ணாதுரை

75.தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ

76.சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்

77.கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று வானம்பாடி

78.தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? கோமல் சுவாமிநாதன்

79.ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது? குளத்தங்கரை அரச மரம்

80.குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம்

81.தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக? உம்மைத் தொகை

82.மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு? உவமைத் தொகை

83.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர்? அறிஞர் அண்ணா

84.பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி

85.நல்வழி இலக்கணக்குறிப்பு- பண்புத்தொகை

86.சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி ஸ்டீஃபனின் நான்மடி விதி

87.தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால்

88.எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்? ஒளி

89.அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல்

90.நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் யூரியா

91.பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது? வைட்டமின்கள்

92.தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் சிவப்பு பாஸ்பரஸ்

93.பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?அலெக்சாண்டர் ஃப்ளெமிங்

94.பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் பேபேஸி

95.மலேரியா நோயை உண்டாக்குபவை புரோட்டோசோவா

96.அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை

97.புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின்

98.சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின்

99.பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்

100.கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம் சாரநாத்
Read More »

Tnpsc பொதுஅறிவு வினாக்கள்

1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 4-ம் தேதி

2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்

3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்

4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்

5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்

6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்

7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்

8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்

9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்

10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை

11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்

12.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்

13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்

14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை

15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை

16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு

17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்

18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

19.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்

20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971

21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது

22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்

23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்

24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்

25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா

26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்

27.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்

28.நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்

29.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949

30.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20

31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்

32.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்

33.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்

34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949

35.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை

36.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்

37.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்

38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்

39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்

40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்

41.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா

42.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்

43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா

44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்

45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916

47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்

48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857

49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்

50.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை


















Read More »

Tnpsc -tet study materials-பொதுத்தமிழ் முக்கிய குறிப்புக்கள்

முக்கிய பொதுத்தமிழ் குறிப்புகள்.....

1. விப்ரநாராயணர் என்ற இயற்பெயர் உடையவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

2. ஆதி உலா என்று அழைக்கப்படுவது திருக்கைலாய ஞான உலா

3. தமிழ் மூவாயிரம் என்று சொல்லப்படுவது திருமந்திரம்

4. மூவர் பாடிய தேவாரம் இப்படியும் அழைக்கப்படும் அடங்கன்முறை

5. பதினோராந் திருமுறையில் பத்து நூல்களைப் பாடியோர் நக்கீரர்,நம்பியாண்டார் நம்பி

6. மருள்நீக்கியார் என்னும் இயற்பெயர் உடையவர் திருநாவுக்கரசர்

7. திருமாலுக்குத் திருப்பள்ளியழுச்சி பாடியவர் தொண்டரடிப் பொடி ஆழ்வார்

8  திருவாய்மொழியின் ஆசிரியர் நம்மாழ்வார்

9.  நாவுக்கரசரை 'அப்பரே' என்று, முதலில் அழைத்தவ திருஞான சம்பந்தர்

10. வாதவூர் அடிகள் என்றழைக்கப்படுபவர் மாணிக்கவாசகர்

11. "கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ;திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ" என்று, ஆண்டாள் பாடியது

    எந்த நூலில்?.....நாச்சியார் திருமொழியில்

12. "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்" எனச் சொன்னவர் நாவுக்கரசர்

13. "மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்"........பாடியவர் ஆண்டாள்

14. "ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்;மாணிக்கக் குறளனே தாலேலோ என்று இறைவனுக்குத் தாலாட்டு பாடியவர்

    பெரியாழ்வார்

15. சமணர்கள் நாவுக்கரசருக்குச் சூட்டிய பெயர் தருமசேனர்

16. திருஈங்கோய்மலை எழுபது நூலைத் தந்தவர் நக்கீரதேவ நாயனார்

17. "மாசில் வீணையும் மாலை மதியமும்;வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்" எனும் பாடலைப் பாடியவர் திருநாவுக்கரசர்

18 "ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை.....புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே" என்ற பாடல் எந்த நூலின் கடவுள் வாழ்த்தாக

    அமைந்துள்ளது?................திருமந்திரம்

19. "அன்பே சிவமானது ஆரும் அறிகிலார்"..........இடம் பெறும் நூல் திருமந்திரம்

20. "பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று,சிவபெருமானால் கேட்கப்பட்டவர் மாணிக்கவாசகர்

21. வள்ளலாரின் பாக்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார்

22. முருகப்பெருமானை வழிபடுவோர் எச்சமயம்?....... கௌமாரம்

23. தாண்டகப் பாடல்கள் பாடிய ஆழ்வார் திருமங்கையாழ்வார்
Read More »

Tnpsc-tet study materials ஆறாம் வகுப்பு- சமூகஅறிவியல் -வரலாறு என்றால் என்ன?

ஆறாம்  வகுப்பு- சமூக அறிவியல்- வரலாறு என்றால் என்ன?
# கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசை பதிவு- வரலாறு
#  இஸ்டோரியா  என்பதன் பொருள்-விசாரிப்பதன்  மூலம் கற்றல்
# வரலாறு என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது -கிரேக்கம்(இஸ்டோரியா  )
# நாணயம் , அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை -நாணயவியல்
# வரலாற்றுக்கும் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் இடைப்பட்ட காலம்- வரலாற்றுத் தொடக்க காலம்
# கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை- கல்வெட்டியல்
#'தம்மா' என்பது எம்மொழி சொல்ல -பிராகிருதம்
#தர்மா என்பதன் பொருள் -அறநெறி
#சார்லஸ் ஆலன் எனும் ஆங்கில எழுத்தாளர் அசோகர் பற்றி எழுதிய நூல் -The search for the India's Lost Emperor
# வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர்- அசோகர்
# உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்த அரசர்- அசோகர்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One