
நிகழ்வுகள்
கிமு 490 – மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.
1185 – முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார்.
1609 – என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்.
1634...