வல்லினம் மிகும் இடங்கள்
1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளை அடுத்தும், எ என்னும் வினாவை அடுத்தும் வரும் வல்லினங்களாகிய க், ச், த், ப் மிகும்.
அ + பையன்
= அப்பையன்
இ + செடி
= இச்செடி
எ + பணி
= எப்பணி
2. அந்த,
இந்த, எந்த; அங்கு,
இங்கு, எங்கு; அப்படி,
இப்படி, எப்படி என்னும் சுட்டு வினாச்சொற்களை அடுத்து
வல்லினம் மிகும்.
அந்த + கோவில்
= அந்தக்கோவில்
அங்கு + சென்றான்
= அங்குச்சென்றான்
எங்கு + போனான்
= எங்குப்போனான்
3. இரண்டாம் வேற்றுமை
விரியில் வல்லினம் மிகும்.
நூலை + படி
= நூலைப்படி
பாலை + குடி
= பாலைக்குடி
4. நான்காம் வேற்றுமை
விரியில் வல்லினம் மிகும்.
அவனுக்கு + கொடுத்தான்
= அவனுக்குக் கொடுத்தான்
பணிக்கு + சென்றான்
= பணிக்குச் சென்றான்.
5. இரண்டு,
மூன்று, நான்கு, ஐந்தாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.
தண்ணீர் + குடம்
= தண்ணீர்க்குடம்
மரம் + பெட்டி
= மரப்பெட்டி
பூட்டு + சாவி
= பூட்டுச்சாவி
விழி + புனல்
= விழிப்புனல்.
6. பண்புத்தொகையில்
வல்லினம் மிகும்.
பச்சை + பட்டு
= பச்சைப்பட்டு
பச்சை + கிளி
= பச்சைக்கிளி
7. இருபெயரொட்டுப்
பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
சாரை + பாம்பு
= சாரைப்பாம்பு
மல்லிகை + பூ
= மல்லிகைப்பூ
8. உவமைத்தொகையில்
வல்லினம் மிகும்.
மலர் + கண்
= மலர்க்கண்
தாமரை + கை
= தாமரைக்கை.
9. ஓரெழுத்து ஒரு
மொழியின் பின் வல்லினம் மிகும்.
தீ + சுடர்
= தீச்சுடர்
பூ + கூடை
= பூக்கூடை
10. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின்
பின் வல்லினம் மிகும்.
அழியா + புகழ்
= அழியாப்புகழ்
ஓடா + குதிரை
= ஓடாக்குதிரை
11. வன்தொடர்க்
குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
பத்து + பாட்டு
= பத்துப்பாட்டு
எட்டு + தொகை
= எட்டுத்தொகை
12. ட,
ற ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின்
பின் வல்லினம் மிகும்.
ஆடு + பட்டி
= ஆட்டுப்பட்டி
நாடு + பற்று
= நாட்டுப்பற்று
13. முற்றியலுகரத்தின்
பின் வல்லினம் மிகும்.
பொது + தேர்வு
= பொதுத்தேர்வு
திரு + குறள்
= திருக்குறள்
14. சால,
தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.
சால + பேசினான்
= சாலப்பேசினான்.
தவ + சிறிது
= தவச்சிறிது.
15. ஆய்,
என, இனி, ஆக முதலிய இடைச்சொற்களின்
பின் வல்லினம் மிகும்.
என + கூறினான்
= எனக் கூறினான்.
இனி + காண்போம்
= இனிக் காண்போம்.
வல்லினம்
மிகா இடங்கள்
1. அது, இது, அவை, இவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும்
எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
அது + பறந்தது
= அது பறந்தது.
அவை + பறந்தன
= அவை பறந்தன.
எது + தங்கம்
= எது தங்கம்
எவை + சென்றன
= எவை சென்றன.
2. ஆ, ஏ, ஓ என்னும் வினா எழுத்துகளின்பின் வல்லினம் மிகாது.
அவனா + சென்றான்
= அவனா சென்றான்.
அவனோ + பேசினான்
= அவனோ பேசினான்.
அவனே + சிரித்தான்
= அவனே சிரித்தான்.
3. எழுவாய்த்தொடரில்
வல்லினம் மிகாது.
மலர் + பூத்தது
= மலர் பூத்தது
வண்டு + பறந்தது
= வண்டு பறந்தது.
4. அத்தனை,
இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம்
மிகாது.
அத்தனை + படங்கள்
= அத்தனை படங்கள்
இத்தனை + பறவைகள்
= இத்தனை பறவைகள்
எத்தனை + காக்கைகள்
= எத்தனை காக்கைகள்
5. வினைத்தொகையில்
வல்லினம் மிகாது.
ஊறு + காய்
= ஊறுகாய்
சுடு + சோறு
= சுடுசோறு
6. உம்மைத்தொகையில்
வல்லினம் மிகாது.
கபிலபரணர்
இரவுபகல்
7. இரண்டாம் வேற்றுமைத்தொகையில்
வல்லினம் மிகாது.
தமிழ்+ கற்றார்
= தமிழ் கற்றார்.
கடல் + கடந்தார்
= கடல் கடந்தார்.
8. மூன்றாம் வேற்றுமை
உருபுகளின் பின் ( ஒடு, ஓடு ) வல்லினம் மிகாது.
பூவொடு + சேர்ந்த
= பூவொடுசேர்ந்த
கபிலரோடு + பரணர்
= கபிலரோடுபரணர்
9. எட்டு,
பத்து தவிரப் பிற எண்களுக்குப்பின் வல்லினம் மிகாது.
ஒன்று + கொடு
= ஒன்றுகொடு
இரண்டு + பேர்
= இரண்டுபேர்
10. வியங்கோள்
வினைமுற்றுக்குப்பின் வல்லினம் மிகாது.
வாழ்க + தமிழ்
= வாழ்க தமிழ்
வாழிய + பல்லாண்டு
= வாழிய பல்லாண்டு
11. இரட்டைக்கிளவி,
அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.
சல + சல
= சலசல
பாம்பு + பாம்பு
= பாம்பு பாம்பு
12. ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.
கற்ற + சிறுவன்
= கற்ற சிறுவன்
சிறிய + பெண் = சிறிய பெண்
No comments:
Post a Comment