Search

TNPSC | TRB | TET STUDY | TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் | PART-6

Sunday, 4 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்| PART -6
===========================

501) மேடைப்பேச்சின் உயிர்நாடி எது?
கருத்துக்கள்
502) பேச்சுக்கலையில் வெற்றிபெற தேவையானது?
வலிமையான கருத்துக்கள்
503) மேடைப்பேச்சில் கருத்தை விளக்க கருவியாக அமைவது எது?
மொழி
504) மேடைப்பேச்சின் பேச்சு முறைகள் எத்தனை வகைப்படும்?
மூன்று வகைப்படும் - முக்கூறுகள்
505) மேடைப்பேசின் முக்கூறுகள் எவை?
1) தொடக்கம், 2) இடைப்பகுதி, 3) முடிவு
506) மேடைப்பேச்சின் முக்கூறுகளான தொடக்கம், இடைப்பகுதி, முடிவு ஆகியவற்றை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) எடுத்தல், 2) தொடுத்தல், 3) முடித்தல்
507) மேடைப்பேச்சினை தொடங்கும்போது எவ்வாறு தொடங்குதல் வேண்டும்?
எடுப்புடன் தொடங்குதல் வேண்டும்
508) பேச்சைத் தொடங்குவது?
எடுப்பு
509) மேடைப்பேச்சில் தொடக்கம் எவ்வாறு அமைதல் வேண்டும்?
கேட்போரை வயப்படுத்தும் முறையில்
510) மேடைப்பேச்சில் தொடக்க உரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை?
தொடுத்தல்
511) மேடைப்பேச்சின் இடையிடையே சுவைமிக்க சொற்களும் குணமிக்க கருத்துக்களும் பிணைத்துப் பேசுவது?
தொடுத்தல்
512) மருந்தின்மேலிட்ட இனிப்புப்போன்றது எது?
இலக்கியக்கூறுகள்
513) மேடைப்பேச்சில் சிறந்த பேச்சு எத்தகையதாக இருத்தல் வேண்டும்?
இடையிடையே உவமைகள், எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல்வேறு நடைகள், சிறுசிறு கதைகள் முதலியவற்றை அமைத்து பேசுதல்
514) உயிருள்ள பேச்சு எது?
உணர்ச்சியுள்ள பேச்சு
515) மேடைப்பேச்சினை எவ்வாறு முடித்தல் வேண்டும்?
1) பேச்சின் சுருக்கத்தை கூறி முடித்தல்
2) உணர்ச்சியை தூண்டும் முறையில் முடித்தல்
3) பாராட்டி முடித்தல்
4) பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல்
516) தொல்காப்பியத்தைப் படித்து படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன்; வள்ளுவர் குறளைப் படித்து என் உள்ளம் தழைத்தேன் – என்று கூறியவர்?
ரா.பி.சேதுபிள்ளை
517) உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு! – என்று அன்பு ஆணையிட்டவர்?
அறிஞர் அண்ணா
518) தமிழர் திருநாள் தை முதல் நாளாம், அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாளாம் – என்று பாடியவர்?
கவிஞர் முடியரசன்
519) காஞ்சி இதழ் மூலம் கருத்து விருந்து அளித்தவர்?
அறிஞர் அண்ணா
520) காஞ்சி இதழ் மூலம் தம்பிக்கு கடிதம் எழுதிய நாள்?
14.01.1968
521) அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெற்ச் செய்தவர்?
பேரறிஞர் அண்ணா
522) பொருத்தமாகவும் தெளிவாகவும் விரைவாகவும் விடைகூறும் ஆற்றல் எவரிடம் இயல்பாக அமைந்திருந்தது?
அறிஞர் அண்ணா
523) அப்பூதியடிகள் எங்கு தோன்றினார்?
திங்களூர்
524) திருநாவுக்கரசரிடம் பேரன்புடையவர்?
அப்பூதியடிகள்
525) திருநாவுக்கரசரிடம் பேரன்புகொண்டமையால் அபூதியடிகள் எதற்கெல்லாம் திருநாவுக்கரசர் என பெயரிட்டார்?
தம்மக்கள், அளவை, நிறைகோல், பசுக்கள், எருமைகள், தாம் வைத்த தண்ணீர் பந்தல்
526) திங்களூர் வந்த திருநாவுக்கரசர் முதலில் எதைக்கண்டு வியப்புற்றார்?
தண்ணீர் பந்தல்
527) ஒன்றுகொலாம் என்னும் திருப்பதிகம் பாடியவர்?
திருநாவுக்கரசர்
528) களவு, பொய், காமம், சினம் முதலிய குற்றங்கள் நீங்கியவர்?
அப்பூதியடிகள்
529) தன் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் திருநாவுக்கரசரின் பெயரை சூட்டி வாழும் வழக்கம் உடையவர்?
அப்பூதியடிகள்
530) வாசீகர் என அழைக்கப்படுபவர்?
திருநாவுக்கரசர்
531) கல்லோடு சேர்த்துக்கட்டிக் கடலில் எறிந்தபோது, அக்கல்லினையே தெப்பமாக்கிக் கொண்டு கரையேறியவர்?
திருநாவுக்கரசர்
532) சூலை எனும் கொடிய வயிற்று வலியால் ஆட்கொள்ளப்பட்டு சைவ சமயம் வந்தடைந்தவர்?
திருநாவுக்கரசர்
533) நல்ல தாயும் தந்தையும் ஏவ, அதன்படி நான் இப்பணி செய்யும் பேறு பெற்றேன் – என்று கூறியவர்?
மூத்த திருநாவுக்கரசு
534) திருநாவுக்கரசருக்கு அமுது படைக்க அப்பூதியடிகள் தன் மூத்த மகனாகிய மூத்த திருநாவுக்கரசரை வாழைக்குருத்தை அரிந்து வரச்செய்யுமாறு கட்டளையிட்டார், அதன்படி வாழைக்குருத்து அரியும்போது மிக வருந்தும் வகையில் கூரிய பற்களால், அவனை பாம்பு எங்கு தீண்டியது?
உள்ளங்கையில்
535) அப்பூதியடிகளும் அவர் மனைவியாரும் தம் மூத்த திருநாவுக்கரசர் இறந்ததை எவ்வாறு அறிந்துகொண்டனர்?
கையினில் குருதி வழியும் வடு, உடற்குறியைக் கண்டும் விடம் ஏறியதை கண்டும்
536) நான்மறை கற்று வாய்மை தவறாத அந்தணர்?
அப்பூதியடிகள்
537) அன்புடைய உங்கள் மூத்த பிள்ளையையும் திருநீறு அணியச் செய்வதற்குக் காட்டுவீராக – என்று கூறியவர்?
திருநாவுக்கரசர்
538) இப்போது, இங்கு அவன் உதவான் – என்று கூறியவர்?
அப்பூதியடிகள் (திருநாவுக்கரசரிடம் கூறியது)
539) ஒன்றுகொலாம் – எனத்தொடங்கும் திருப்பதிகம் பாடி, பாம்பின் விடத்தைப் போக்கியருளியவர்?
திருநாவுக்கரசர்
540) பணிவிடம் – என்பதன் பொருள்?
பாம்பின் நஞ்சு
541) பெரியபுராணத்தை அருளியவர்?
சேக்கிழார்
542) சேக்கிழார் பிறந்த ஊர்?
குன்றத்தூர்
543) சேக்கிழார் பிறந்த குன்றத்தூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
காஞ்சிபுரம்
544) சேக்கிழாரின் இயற்பெயர்?
அருண்மொழித்தேவர்
545) சேக்கிழார் யாருடைய அரசவையில் தலைமை அமைச்சராக பணியாற்றினார்?
அனபாயச்சோழன்
546) உத்தமசோழ பல்லவர் – என்னும் பட்டம் பெற்றவர்?
சேக்கிழார்
547) சேக்கிழார் எவ்வாறு போற்றப்படுகிறார்?
தெய்வ சேக்கிழார், தொண்டர் சீர்பரவுவார்
548) சேக்கிழார் வாழ்ந்த காலம்/
கி.பி.12 ஆம் நூற்றாண்டு
549) தனியடியார்கள் எத்தனை பேர்?
அறுபத்துமூவர் – 63
550) தொகையடியார்கள் எத்தனை பேர்?
ஒன்பதின்மர் – 9 பேர்
551) சிவனடியார்கள் எத்தனை பேர்?
எழுபத்திருவர் – 72 பேர்
552) எழுபத்திரு சிவனடியார்களின் வரலாற்றை கூறி, பெருமை பெற்றது என்னும் பொருளில் அமைந்த நூல்?
பெரியபுராணம்
553) பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்?
திருத்தொண்டர் புராணம்
554) தில்லை நடராசப்பெருமான், “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்றதென கூறும் நூல்?
பெரியபுராணம்
555) எவருடைய பாடல்கள் அனைத்தும் தெய்வ மணம் கமழும் தன்மையுடையன?
சேக்கிழார்
556) பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ – என்று போற்றப்பட்டவர்?
சேக்கிழார்
557) சேக்கிழாரை பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ – என்று புகழ்ந்துரைத்தவர்?
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
558) உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் – எது?
பெரியபுராணம்
559) உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரியபுராணம் – என்று கூறியவர்?
திரு.வி.கல்யாணசுந்தரனார்
560) அங்கணர் – என்பதன் பொருள்?
அழகிய நெற்றியை உடைய சிவன்
561) அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே – என்று பாடியவர்?
தாயுமானவர்
562) நம் வாழ்வின் உயிர்நாடி எனப்படுவது?
கலைகள்
563) உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் உலகமொழி?
திரைப்படம்
564) உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி?
திரைப்படம்
565) மக்களை தன்வயப்படுத்தும் ஆற்றல் எந்த கலைக்கு உண்டு?
திரைப்படக்கலை
566) ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடித்த ஆண்டு?
கி.பி 1830
567) முதன்முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றவர்?
எட்வர்டு மைபிரிசு – என்ற ஆங்கிலேயர்
568) படச்சுருள் உருவாக்கும் முறையை கண்டுபிடித்தவர்?
ஈஸ்ட்மன்
569) ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர்?
எடிசன்
570) இயக்கப்படத்தை பலரும் பார்க்கும் வகையில் அமைத்தவர்?
பிரான்சிஸ் சென்கின்சு – என்ற அமெரிக்கர்
571) பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப்படத்தை எங்கு வடிமைத்தார், எந்த ஆண்டு?
ரிச்மண்ட் – கி.பி 1894
572) புதிய படவீழ்த்திகளை உருவாக்க யாருடைய கருத்துக்கள் அடிப்படையாக அமைந்தன?
பிரான்சிஸ் சென்கின்சு
573) பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் பலரும் பார்க்கும் வகையில் அமைத்த இயக்கப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள்?
நாட்டியம் & கடல் அலைகள் கரையில் மோதுதல்
574) ஒரு மொழிப்படத்தை மற்ற மொழியில் மாற்றி அமைக்கும் முறை?
மொழிமாற்றம்
575) நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே, நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் “நுண்மான் நுழைபுலம்” உடையவர்?
இயக்குநர்
576) திரைப்படத்துறை அடைந்துள்ள வளர்ச்சி நிலைகள்?
கதைப்படங்கள், கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள்
577) உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை படமாக்கிக் காட்டுவது?
செய்திப்படங்கள்
578) உலக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே, காணும் வாய்ப்புகளை உருவாக்குபவை?
செய்திப்படங்கள்
579) ஒருநாட்டு மக்களின் வாழ்க்கைமுறைகளை உள்ளது உள்ளவாறு அறிதல்?
விளக்கப்படங்கள்
580) உலப் போரின்போது சுட்டுக் கொல்லப்பட்ட பலர் எந்த கண்டத்தை சேர்ந்தவர்கள்?
ஆப்பிரிக்கா, ஐரோப்பா
581) திரைப்படம் எடுக்கப்பயன்படும் படச்சுருள் எந்த பொருளால் ஆனது?
செல்லுலாய்டு
582) படம் எடுக்கப்பயன்படும் சுருள்?
எதிர்ச்சுருள்
583) படபிடிப்புக் கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் எத்தனை படங்கள் தொடர்ச்சியாக எடுக்கப்படும்?
பதினாறு படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாக
584) திரையரங்குகளில் திரைப்படம் காட்டப் பயன்படும் கருவி?
ஒளிஒலிப்படக்கருவி
585) எக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இருபெட்டிகள் காணப்படும்?
ஒளிஒலிப்படக்கருவி
586) ஒளிஒலிப்படக்கருவின் முன்புறத்தில் உள்ள மூடி நொடிக்கு எத்தனை முறை சுழலும்?
எட்டுமுறை
587) ஒளிஒலிப்படக்கருவின் முன்புறத்து மூடியில் அமைந்துள்ள பாகம்?
இரண்டு கைகள்
588) ஒளிஒலிப்படக்கருவின் முன்புறத்து மூடியில் அமைந்துள்ள கைகள் நொடிக்கு எத்தனை முறை சுழலும்?
பதினாறு முறை
589) கருத்துப்படம் அமைக்கப்படத் தொடங்கியவர்?
வால்ட் டிஸ்னி
590) ஒரே செயலைக் குறிக்கும் பல்லாயிரக்கணக்கான படங்களை வரையும் ஓவியர்?
வால்ட் டிஸ்னி
591) படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் தயாரிக்கும் படங்கள்?
கருத்துப்படங்கள்
592) பார்பதற்கு வேடிக்கையாக அமைந்துள்ள படங்கள்?
இயங்குரு படங்கள்
593) உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்சிகளை படமாக்கிக் காட்டுவது?
செய்திப்படம்
594) திரைப்படம் எடுப்பதைவிட கடினமான பணி எது?
செய்திப்படம் எடுப்பது
595) ஒரு நிகழ்வினை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப்பற்றிய முழு விளக்கத்தினையும் தருவது?
விளக்கப்படம்
596) உலகத்தமிழ் மாநாட்டு நிகழ்வை மட்டும் காட்டும் படம்?
விளக்கப்படம்
597) கல்வி கற்பிப்பதற்கென உருவாக்கப்படும் படங்கள்?
கல்விப்படங்கள்
598) வாழ்க்கையில் நேரில் காண முடியாத பல இடங்களையும் நேரில் பார்ப்பதனைப் போலவே காட்டுவதற்கு வழிவகை செய்வது?
கல்விப்படம்
599) மக்களைத் தன்பால் ஈர்த்துக் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது?
திரை உலகம்
600) கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே – என்ற வரிகள் எதற்கு பொருந்தும்?
திரைப்படம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One