Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS| TAMIL FREE DOWNLOAD | 8 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்

Saturday, 3 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS|எட்டாம் வகுப்பு - பொதுத்தமிழ்
============================
வாழ்த்து

“முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே”

பெயர் : தாயுமானவர்

பெற்றோர் : கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்

மனைவி : மட்டுவார்குழலி

ஊர் :  திருமறைக்காடு (வேதாரண்யம்) நாகப்பட்டினம் மாவட்டம்

நூல் :தாயுமானவர் திருப்பாடல் திரட்டு

பணி  : கருவூலர் ( திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம்)

காலம் : 18 நூற்றாண்டு

பாரபரக்கண்ணி என்னும் தலைப்பு

நூலின் சிறப்பு : தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் மனத்தூய்மை பக்திச்சுவை  கொண்டது.

திருச்சிராப்பள்ளி மலைமீது உள்ள இறைவன்  தாயுமானவர் திருவருளால் பிறந்தவர் .

நினைவு இல்லம் : இலட்சுமிபுரம்  ( இராமநாதபுரம் )
===========================
திருக்குறள்

பெயர் : திருவள்ளுவர்

வேறுபெயர்கள்  : முதற்பாவலர் , செந்நாப்போதார், பொய்யில் புலவர்,  பெருநாவலர்,

காலம் : கி.மு. 31

சிறப்பு : “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – பாரதியார்

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே
புகழ் வையகமே” – பாரதிதாசன்

நூல் குறிப்பு : பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. மேன்மை கருதி திரு என்ற அடைமொழிடன் அழைக்கப்படுகிது

நாடு, மொழி, இனம், சமயம் கடந்து எக்காலதிற்கும் பொருந்துவதற்காக அமைந்தமையால்  

உலகப்பொதுமை எனப்போற்றப்படுகிறது

மக்கள் வாழ்வில் அடையத்தக்க உறுதிப்பொருள்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளைக் கூறுவதால் முப்பால் என்பர்.

130 – அதிகாரம், 1330 – பாடல்கள்

வேறுபெயர்கள் : வாயுரை வாழ்த்து, உலக பொது மறை, பொய்யா மொழி, தெய்வ நூல்.

வீரமாமுனிவர் – இலத்தீனில் மொழிபெயர்த்தவர்.

ஜி.யு. போப் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தவர்.

திருக்குறளின் பெருமை கூறும் நூல் : திருவள்ளுவ மாலை.

உருசியா நாட்டில் அணுதுளைக்காத கிரெம்ளின் மாளிகை சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ளது.

இங்கிலாந்து நாட்டு காட்சிசலையில் திருக்குறள்  விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

பேதையர் நட்பு என்பது தேய்பிறை போன்றது.

அறிவுடையார் நட்பு என்பது வளர்பிறை போன்றது

பண்புடையார் நட்பு என்பது நவில் தோறும் நூல் நயம் போன்றது.

இடுக்கண் களையும் நட்பு என்பது  உடுக்கை இழந்தவர் கைபோன்றது.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு”  - இக்குறள் படிக்கும்போது  உதடுகள் ஒட்டி நிற்கும் குறள் இதன் பொருள் இறைவனைப்பற்றி நிற்கும், 

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்ற வந்த பொருள்” - முப்பாலும் தப்பாமல் உணர்த்த வந்த குறள்.
==========================

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One