Search

TNPSC| TRB | TET | STUDY MATERIALS| TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் | PART-7

Sunday, 4 November 2018

 TNPSC | TRB | TET | STUDY MATERIALS| பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ் | PART-7
===========================
601) படப்பிடிப்புக்க் கருவியை இதில் பொருத்துவதும் உண்டு?
நகர்த்தும் வண்டி
602) கீழ்க்காணும் திரைப்படத்துறையில் பயன்படும் கலைச்சொற்களின் தமிழாக்கம் காண்க.
1. Persistence of vision பார்வை நிலைப்பு
2. Dubbing ஒலிச்சேர்க்கை
3. Director இயக்குநர்
4. Shooting படப்பிடிப்பு
5. cartoon கருத்துப் படம்
6. Negative எதிர்ச்சுருள்
7. Camera படப்பிடிப்புக்கருவி
8. Trolly நகர்த்தும் வண்டி
9. Microphone நுண்ணொலிப்பெருக்கி
10. Projector படவீழ்த்தி
11. Lense உருபெருக்கி
12. Motion Pictures இயங்குருப் படங்கள்
603) பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த இடம்?
கண்டி – இலங்கை
604) பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த ஆண்டு?
1917 - சனவரித் திங்கள் 17ஆம் நாள் (17.01.17)
605) பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரனின் பெற்றோர்?
கோபாலமேனன், சத்யபாமா
606) கோபாலமேனன், சத்யபாமா இணையருக்கு எத்தனையாவது மகனாக எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்தார்?
ஐந்தாவது மகன்
607) வறுமையின் காரணமாக எம்.ஜி.இராமச்சந்திரன் குடும்பம் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டில் எங்கு குடியேறியது?
கும்பகோணம்
608) அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல், பழகும் பண்பு, உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றால் கவரப்பட்டவர்?
எம்.ஜி.இராமச்சந்திரன்
609) நடிப்புக் கலையையும், அரசியலையும் தமது இரு கண்களாகக் கருதியவர்?
எம்.ஜி.இராமச்சந்திரன்
610) கடின உழைப்பே ஒரு நாட்டுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்று நம்பியவர்?
எம்.ஜி.இராமச்சந்திரன்
611) அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் கவர்ந்தவராக விளங்கியவர்?
எம்.ஜி.இராமச்சந்திரன்
612) அறிஞர் அண்ணா எம்.ஜி.இராமச்சந்திரனை எவ்விதம் போற்றினார்?
இதயக்கனி
613) எம்.ஜி.இராமச்சந்திரன் சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு?
1963
614) எம்.ஜி.இராமச்சந்திரன் பொதுத்தேர்தலில் எந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலில் வெற்றி பெற்றார்?
பரங்கிமலை – 1967
615) எம்.ஜி.இராமச்சந்திரன் தான் இருந்த இயக்கத்திலிருந்து விலகிப் புதிய கட்சி தொடங்கிய ஆண்டு?
1972
616) எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்முறையாக முதல்வராக பதவியேற்ற ஆண்டு?
1977
617) எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் முதல்வராக பணியாற்றிய காலம்?
பதினோராண்டுகள் (11 ஆண்டுகள்)
618) எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பணிகளைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பலகலைக்கழகம்?
சென்னை பல்கலைக்கழகம்
619) எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு இந்திய அரசு சிறந்த நடிகருக்காக வழங்கியது பட்டம்?
பாரத்
620) வறுமை, பசிக்கொடுமை ஆகிய இரண்டனையும் இளமையிலேயே உணர்ந்தவர்?
எம்.ஜி.ராமச்சந்திரன்
621) சத்துணவு திட்டத்தை செயல்படுத்தியவர்?
எம்.ஜி.ராமச்சந்திரன்
622) எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இயற்கை எய்திய நாள்?
24.12.1987
623) எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கிய ஆண்டு?
1988 – மறைவுக்குப்பின்
624) உவமை, உவமேயம் ஆகிய இரண்டனுக்கும் இடையில் வரும் உருபு?
உவம உருபு
625) நம் முன்னோர் தொன்றுதொட்டு எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது?
மரபு
626) அரியாசனம் உனக்கே ஆனால் உனக்கு சரி யாரும் உண்டோ தமிழே – இவ்வடிகள் இடம் பெறும் நூல்?
தமிழ்விடு தூது
627) உண்ணப்படும் தேனே உன்னோடு வந்து உரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் – இவ்வரிகள் இடம்பெறும் நூல்?
தமிழ்விடு தூது
628) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலின் வரப்புகளாக அமைவது?
நால்வகை பாக்கள்
629) நால்வகை பாக்கள் எவை?
1) வெண்பா, 2) ஆசிரியப்பா, 3) கலிப்பா, 4) வஞ்சிப்பா - வரப்புகள்
630) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலின் மடைகளாக அமைவது?
துறை, தாழிசை, விருத்தம் எனும் பாவினங்கள் - மடைகள்
631) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலில் நல்ல ஏர்களாக விளங்குவது?
நாற்கரணங்கள்
632) நாற்கரணங்கள் எவை?
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் -ஏர்கள்
633) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலில் உழவு செய்ய விதைகளாக அமைவது?
செய்யுள் நன்னெறிகள்
634) செய்யுளின் நன்னெறிகள் எவை?
வைதருப்பம், கெளடம், பாஞ்சாலம், மாகதம் – விதைகள்
635) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலில் கிடைக்கும் விளைபொருள்கள் எவை?
அறம், பொருள், இன்பம், வீடு - விளைபொருள்கள்
636) தமிழ் கிளைத்துச் செழித்து வளரும் வயலில் பயிர்களின் இடையே வளரும் களைகள் எவை?
போலிப்புலவர்கள் (களைகள்)
637) போலிப்புலவர்களின் கூட்டம் பெருகாமல் அவர்களின் தலையை குட்டுவதற்கு இருந்தவர்?
அதிவீரராம பான்டியன் - குட்டுவதற்கு
638) போலிப்புலவர்களின் கூட்டம் பெருகாமல் அவர்களின் செவியை அறுப்பதற்கு இருந்தவர்?
வில்லிபுத்தூரார் - அறுப்பதற்கு
639) போலிப்புலவர்களின் கூட்டம் பெருகாமல் அவர்களின் தலையை வெட்டுவதற்கு இருந்தவர்?
ஒட்டக்கூத்தர் - வெட்டுவதற்கு
640) தூது இலக்கியம் எவ்வகை இலக்கியம்?
96 சிற்றிலக்கியங்களில் ஒன்று
641) சந்து இலக்கியம் எனப்படுவது?
தூது இலக்கியம்
642) தூது இலக்கியம் பாடப்படும் பா வகை?
கலிவெண்பா
643) தூது இலக்கியத்தில் தூது அனுப்படுவது?
உயர்திணைப் பொருளையோ அஃறிணைப் பொருளையோ தூது அனுப்பப்படும்
644) மதுரையில் கோவில்கொண்டிருப்பவர்?
சொக்கநாதர்
645) சொக்கநாதர்மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி தூதாக அனுப்பப்படுவது யாது?
தமிழ்
646) தமிழ்விடு தூது என்ற நூலின் ஆசிரியர்?
இதுவரை அறியப்படவில்லை
647) முதல் மாந்தன் (மனிதன்) தோன்றிய இடம்?
இலெமுரியா
648) மனித நாகரிகத் தொட்டில் எனப்படுவது?
இலெமுரியா
649) தமிழகம் இன்றுபோல் இல்லாமல் குமரிமுனைக்கு தெற்கே விரிந்த நிலையில் உள்ளடக்கிய தமிழகத்தின் நதியும் மலையும் எவை?
பஃறுளி ஆறு, குமரிமலை
650) பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள – என்ற வரிகள் இடம்பெறும் நூல்?
சிலப்பதிகாரம்
651) திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் – என்று தமிழின் பழஞ்சிறப்பினை பாடியவர்?
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
652) தனக்குவமையில்லா ஒரு தனி இனம்?
தமிழினம்
653) தமிழக ஆடவர்கள் உயிராக கருதியது?
வினையை (தொழில், வேலை, பணி)
654) கல்வியின் முடிவெனப் போற்றப்படுவது?
சான்றோனாதல்
655) பழந்தமிழர்கள் எதன் வழியே வாணிகம் செய்தனர்?
அறத்தின் வழியே
656) கிறித்து பிறப்பதற்கு முன்பே அரிசி, மயில்தோகை, சந்தனமும் தமிழகத்திலிருந்து எந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டன?
கிரேக்கம், உரோமபுரி, எகிப்து
657) கி.மு. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன்?
சாலமன்
658) அரசன் சாலமனுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட பொருள்கள்?
யானைத் தந்தம், மயில்தோகை, வாசனைப் பொருள்கள்
659) தமிழர்களுக்கு கடல் வாணிகத் தொடர்பு இருந்த நாடு?
சாவக நாடு
660) கிறித்துவுக்கு முன்னரே மதுரையில் தமிழ்ச்சங்கம் இருந்தது வருகிறது, இத்தகைய மரபுச்செய்தி இடைவிடாது இருந்துவருகிறது, இந்தியாவில் இத்தகைய மரபுச்செய்தி வேறெங்கும் இல்லை – என்று கூறியவர்?
தனிநாயகம் அடிகள்
661) மதுரை தமிழ்ச்சங்கத்தினை தமிழ்கெழு கூடல் என்று குறிப்பிடும் நூல்?
புறநானூறு
662) மதுரை தமிழ்ச்சங்கத்தினை தமிழ்வேலி என்று குறிப்பிடும் நூல்?
பரிபாடல்
663) பழந்தமிழ்ச் சங்கத்தினை “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” – என்று கூறும் நூல்?
திருவாசகம் – மாணிக்கவாசகம்
664) உலகில் உள்ள உயரிய மனித இனத்தின் மரபுச் செல்வமாக விளங்குவது?
தமிழ்மொழி
665) உலகில் மொழி உருவம் பெருவதற்கு முன் பிறந்த கலை?
இசைக்கலை
666) பண்டைய காலத்து வாணிகப் பொருள்கள் துறைமுக நகரங்களிலிருந்து ஏற்றுமதி ஆயின எனக் கூறும் நூல்கள்?
பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி
667) நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும்  - இவ்வரிகள் இடம்பெரும் நூல்?
பட்டினப்பாலை
668) மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு கருவியாகத் திகழ்வது?
இசை
669) இசை மரபுகளை வெளிப்படுத்தும் நூல்கள்?
தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும்
670) இசை இலக்கணநூல் உண்டென உணரச்செய்யும் தொல்காப்பிய வரி?
நரம்பின் மறை
671) பண்டைய காலத்து இயலிசை நாடகக் கலைஞர்கள்?
பாணன், பாடினி, கூத்தன், விரலி
672) தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்புவரை முதலிடம் பெறுவது?
இசை
673) குழந்தையை தொட்டிலிட்டு பாடுவது?
தாலாட்டு
674) இறந்தவரைப் பற்றிப் பாடுவது?
ஒப்பாரி
675) ஒப்பாரி என்பதன் பொருள்?
இவருக்கு ஒப்பார் ஒருவரும் இல்லை
676) இன்றைய கருநாடக இசைக்குத் தாய்?
தமிழிசை
677) பண்ணொடு தமிழொப்பாய் – பண்ணும் தமிழும் பிரிக்க முடியாத ஒன்று எனக் கூறும் நூல்?
தேவாரம்
678) குழலினிது யாழினிது – என்று இசைபொழியும் கருவிகளை குறிப்பிடும் நூல்?
திருக்குறள்
679) பழந்தமிழர்களில் உயர்ந்தோராக மதிகப்பெற்றவர்கள்?
உழுபவர்
680) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் – என்று கூறும் நூல்?
திருக்குற்ள்
681) உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – என்று கூறும் நூல்?
மணிமேகலை, புறநானூறு
682) உழவுக்கு சிறப்புப் பெற்ற நிலம்?
மருதநிலம்
683) வயலும் வயல் சார்ந்த இடம்?
மருதநிலம்
684) களிறு எறிந்து பெயர்த்தல் காளைக்கு கடனே – என்று வீரத்தினை முதற்கடமையாக போற்றும் நூல்?
புறநானூறு
685) பெண்களின் பெருவீரத்தை பாடிய பெண்பாற்புலவர்?
ஒக்கூர் மாசாத்தியார்
686) திருவண்ணாமலையில் அமைந்துள்ள கல்வெட்டு எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டு
687) திருவண்ணாமலை கல்வெட்டில் எழுதப்பெற்ற சங்ககால மன்னன்?
நன்னன்
688) திருவண்ணாமலை கல்வெட்டில் எழுதப்பெற்ற சங்ககால நூல்?
மலைபடுகடாம்
689) மலைபடுகடாம் – என்ற நூலின் ஆசிரியர்?
பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
690) தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்பது?
தொல்பழங்காலத்தைப் பற்றிய ஆய்வு செய்தல்
691) தொல்லியலின் முதன்மையான நோக்கம்?
தொன்மையான காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வாணிகம், வேளாண்மை, அரசியல், நுண்கலைகள் முதலியவைபற்றி ஆராய்தல்
692) தொல்லியலை ஆங்கிலத்தில் எவ்வாறு குறிப்பிடுவர்?
ஆர்க்கியாலஜி
693) மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்திலிருந்து, வரலாற்றுக்கு முந்தைய காலம்வரை உள்ள காலத்தை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
தொன்மைக்காலம்
694) 1963 ஆம் ஆண்டு தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி செய்த இடம்?
கீழார்வெளி – பூம்புகார் அருகில் உள்ளது
695) 1963 ஆம் ஆண்டு தொல்லியல் துறையினர் கீழார்வெளியில் அகழாய்வின்போது கண்டறியப்பட்டவை?
கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டட இடிபாடுகள்
696) கீழார்வெளியில் அகழாய்வின்போது கண்டறியப்பட்ட எச்சங்கள்?
1) செங்கற்களால் கட்டப்பட்ட படகுத் துறை
2) அரைவட்ட வடிவ நீர்த்தேக்கம்
3) புத்தவிஹாரம் (பித்தபிக்குகள் தங்கும் இடம்)
4) வெண்கலத்தாலான புத்தர் பாதம்
697) மொகஞ்சதாரோவில் காணப்படும் தமிழர்களின் வீரவிளையாட்டு?
ஏறுதழுவுதல்
698) அகழாய்விற்குரிய இடங்களை தெரிவுசெய்வதற்கு உறுதுணையாக இருப்பவை?
பழமையான இலக்கியங்கள்
699) பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் எவ்வாறு புதைத்தனர்?
முதுமக்கள்தாழி

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One