Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS| TAMIL FREE DOWNLOAD| 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் | PART -5

Sunday, 4 November 2018

TNPSC |TRB | TET STUDY MATERIALS|10ஆம்  வகுப்பு பொதுத்தமிழ் |PART -5
401) மாற்றார் ஆதிக்கத்தை நீக்கி, மக்களால் ஆளப்படும் மக்களாட்சியே நாங்கள் விரும்புகிறோம் – என்று உரைத்தவர்?
டாக்டர் அம்பேத்கர்
402) வெறும் எஜமான மாற்றத்தை நாங்கள் விரும்பவில்லை; எங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் வந்தாலொழிய, எங்கள் குறைகள் நீங்கா – என மொழிந்தவர்?
டாக்டர் அம்பேத்கர்
403) விடுதலைக்குப் பிறகு இந்திய அமைச்சரவையில் அண்ணல் அம்பேத்கரையும் இடம்பெறச் செய்யவேண்டுமென்று பெரிதும் விரும்பியவர்?
பண்டித ஜவஹர்லால் நேரு
404) நேருவின் விருப்பத்திற்கேற்ப சட்ட அமைச்சராக பொறுப்பேற்றவர்?
டாக்டர் அம்பேத்கர்
405) இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுக்க எத்தனைபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது?
எழுவர் கொண்ட குழு
406) இந்தியா முழுமையான குடியரசு நாடாகத் தன்னை அறிவித்துக்கொண்ட நாள்?
26.01.1950 (சனவரித் திங்கள் இருபத்தாறாம் நாள் - 1950)
407) அறியாமைதான் அனைத்திற்கும் மூலகாரணம் என நன்குணர்ந்தவர்?
டாக்டர் அம்பேத்கர்
408) செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம் – என்றவர்?
டாக்டர் அம்பேத்கர்
409) உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம் – என்றவர்/
டாக்டர் அம்பேத்கர்
410) கற்றல், கற்பித்தலின் உயர்ந்த குறிக்கோள்பற்றி குறிப்பிட்டுள்ளவர்?
டாக்டர் அம்பேத்கர்
411) மக்கள் கல்விக்கழகத்தை தோற்றுவித்தவர்?
டாக்டர் அம்பேத்கர் – 1946இல்
412) டாக்டர் அம்பேத்கரின் எந்த கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகிறது?
சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் – மும்பை
413) மும்பையில் டாக்டர் அம்பேத்கரின் அரிய முயற்சியால் உருவான கல்வி நிலையம்?
சித்தார்த்தா உயர்கல்வி நிலையம்
414) பொருளாதாரத் துறையில் சிறந்த நூலாக கருதப்படுவது?
இந்தியாவின் தேசியப் பங்குவீதம்
415) இந்தியாவி தேசியப் பங்குவீதம் – என்ற நூலின் ஆசிரியர்?
டாக்டர் அம்பேத்கர்
416) இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக்கதிர்?
டாக்டர் அம்பேத்கர்
417) சாதி களையப்பட வேண்டிய களை – என்று கருதியவர்?
டாக்டர் அம்பேத்கர்
418) சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது – என்றவர்>
டாக்டர் அம்பேத்கர்
419) இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்குச் சாதி என்பது, நன்மை தராது – என்றவர்?
டாக்டர் அம்பேத்கர்
420) இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சாதி எனும் நோய் தீங்கு விளைவிக்கிறது – என்றவர்?
டாக்டர் அம்பேத்கர்
421) சாதி, மக்களிடையே ஒருமைப்பாட்டை சீர்குலைத்துவிட்டது, இதனை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால் போதும்; அதுவே எனக்கு நிறைவு தரும் – என்றவர்?
டாக்டர் அம்பேத்கர்
422) ஓர் இலட்சிய சமூகம் எவற்றை அடிப்படையாகக் கொண்டது?
சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்
423) ஓர் இலட்சிய சமூகம் என்பது சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றவர்?
டாக்டர் அம்பேத்கர்
424) சனநாயகத்தின் மறுபெயர்?
சகோதரத்துவம்
425) சுயேச்சையாக நடமாடும் உரிமை; உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் உரிமை – என்பது?
சுதந்தரம்
426) எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது?
சமத்துவம்
427) சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தவர்?
அண்ணல் அம்பேத்கர்
428) சமத்துவத்தின் மறுபெயர்?
மனிதநேயம்
429) அம்பேத்கர் ஓர் அறிவுச் சுரங்கம் - என்றவர்?
தந்தை பெரியார்
430) அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர்; பகுத்தறிவுச் செம்மல்; ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, அப்பெருந்தலைவரைப்போல் வேறுயாரையும் காணமுடியாது – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
431) ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்தவர்?
அண்ணல் அம்பேத்கர்
432) பகுத்தறிவுத்துறையில் அவருக்கு இணை அவரே என அம்பேத்கரை புகழ்ந்தவர்?
ஜவஹர்லால் நேரு
433) ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை அம்பேத்கரையே சாரும் – என புழந்தவர்?
ஜவஹர்லால் நேரு
434) அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர்; மிகவும் ஆர்வத்துடனும் விரைந்து தன்னந்தனியாக செயல்பட்டவர் – என்று பாராட்டியவர்?
டாக்டர் இராசேந்திர பிரசாத்
435) அம்பேத்கர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர் – என்று பாராட்டியவர்?
டாக்டர் இராசேந்திர பிரசாத்
436) டாக்டர் அம்பேத்கர் புகழுடன் எய்திய நாள்?
06.12.1956 (திசம்பர் ஆறாம் நாள், 1956)
437) இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு வழங்கிய விருது?
பாரத ரத்னா (இந்தியா மாமணி)
438) அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு?
1990
439) இந்திய நாட்டின் ஒளிமிகுந்த எதிர்காலத்தைப் பற்றிய கனவு கண்ட இலட்சிய மனிதர்?
அண்ணல் அம்பேத்கர்
440) தாம் கண்ட இலட்சியக் கனவுகளை அறிவுத்திறனால் உறுதிப்படுத்தியவர்?
அண்ணல் அம்பேத்கர்
441) சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்தாக செயல்பட்டவர்?
அண்ணல் அம்பேத்கர்
442) கல்வி அறிவு இன்றி நாடு முன்னேற முடியாது – என்று உரைத்தவர்?
அண்ணல் அம்பேத்கர்
443) சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகத் தம்மை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்?
அண்ணல் அம்பேத்கர்
444) இந்தியாவில் சாதி எனும் பாறை உடைந்து சுக்கு நூறானதற்கு காரணமானவர்கள்?
1) வடக்கே அம்பேத்கர்
2) தெற்கே பெரியார்
445) சட்டம் என்பதற்கு என்ன பொருள்?
செம்மை
446) செம்மை என்ற சொல் இலக்கியங்களில் கூறும் பொருள் என்ன?
நடுவுநிலை
447) கொலைத்தொழில் புரியும் கொடியவர்களுக்கு மரணதண்டனை அளித்தல் என்பதை வள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
பயிருடன் வளர்ந்த களையை நீக்குதல் போன்றது – குறள்:- 550
448) சட்டங்கள் மனிதநேய அடிப்படையில் நெகிழ்வுத்தன்மை உடையவனாக அமைதல்வேண்டும் – என்றவர்?
திருவள்ளுவர் – குறள்:- 562
449) உலக நாடுகளிடையேயுள்ள தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டம்?
அனைத்து நாட்டுச் சட்டம்
450) நம் நாட்டின் முதன்மையான வாழ்வியல் அடிப்படைச் சட்டம்?
அரசியல் அமைப்புச் சட்டம்
451) இந்தியாவில் எந்த மதத்தினருக்கு தனியான மதச்சட்டங்கள் இல்லை?
பெளத்தர்களுக்கும் சமணர்களுக்கும்
452) பெளத்த மதத்தினருக்கும், சமண மதத்தவர்களுக்கும் எந்த சமய சட்டங்கள் பொருந்தும்?
இந்துச்சமயச் சட்டங்கள்
453) மாநிலத் தனிச் சட்டங்களுக்கு சான்று?
1) வேளாண்மைக் கடன் நிவாரணச் சட்டம்
2) கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம்
3) உள்ளாட்சித் துறைச் சட்டம்
454) தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
2005
455) குற்றங்களின் இரு வகைகள் எவை?
1) சட்டம், செய்யக்கூடாது என்று வலியுறுத்திச் சொன்னதைச் செய்தல்
2) சட்டம், செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதைச் செய்யாமல் இருப்பது
456) குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு எனக் கூறும் அரசியல் சாசனப்பிரிவு?
19 (1) பிரிவு
457) தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த விதியின் மூலம் தகவல் பெறலாம்?
பிரிவு 6
458) தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற விண்ணப்பத்துடன் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
பத்து உரூபாய்
459) ஒத்தது அறிவது உயிர்வாழ்வான் – என்ற வரிகள் இடம்பெறும் நூல்?
திருக்குறள்
460) தமிழ்த்திரைப்பட உலகின் வழிகாட்டியாகவும் பாதுகாவலனாகவும் திகழ்ந்தவர்?
ஏ.வி.மெய்யப்பர்
461) தம் வாழ்நாள் இறுதிவரை கருணை உள்ளத்தோடு இருந்தவர்?
ஏ.வி.மெய்யப்பர்
462) அரிக்கால் மாறிய அங்கண் அகல்வயல் – இப்பாடல் இடம்பெறும் நூல்?
நற்றிணை
463) அரிக்கால் மாறிய அங்கண் அகல்வயல் – என்ற நற்றிணைப் பாடலை பாடியவர்?
மிளைகிழார் நல்வேட்டனார்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One