Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் - PART -3

Saturday, 3 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்- PART -3
===========================
201) கொற்கை என்னும் துறைமுகத்தை உடைய மன்னன்?
பாண்டிய மன்னன்
202) வெற்றிதரும் வேலினை தம்பெரிய கையில் ஏந்தியவள்?
கொற்றவை
203) குருதி ஒழுகும் பிடர்தலை பீடத்தில் ஏறிய இளங்கொடியாகியவள்?
கொற்றவை
204) கன்னியர் எழுவருள் இளையவள்?
பிடாரி
205) இறைவனை நடனமாடச் செய்தவள்?
பத்ரகாளி
206) அச்சம் தரும் காட்டைத் தாம் விரும்பும் இடமாகக் கொண்டவள்?
காளி
207) தாருகன் என்ற அசுரனின் பரந்த மார்பைப் பிளந்தவள்?
துர்க்கை
208) இளமையான கொடி போன்றவளே! நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்? - என வினவியவன்?
பாண்டிய மன்னன்
209) புறாவின் துன்பத்தை போக்கிய மன்னன்?
சிபி மன்னன்
210) பசுவின் துயரை அறிந்து, தன் ஒப்பற்ற மகனை தேர்ச் சக்கரத்திலிட்டு கொன்ற அரசன்?
மனுநீதிச்சோழன்
211) கண்ணகி பிறந்த ஊர்?
புகார் நகரம்
212) கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று: அதுவே அரச நீதி – என்று கூறியவன்?
பாண்டிய மன்னன்
213) கண்ணகியின் காற்சிலம்பில் உள்ள பரல்கள்?
மாணிக்கப் பரல்
214) கண்ணகி உடைத்த காற்சிலம்பில் வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று அரசன்மேல் எந்த இடத்தில் பட்டுத்தெறித்தது?
மன்னனின் உதட்டில்
215) அறநெறி தவறிய, நானோ அரசன்! நானே கள்வன் – என்பது யாருடைய கூற்று?
பாண்டிய மன்னன்
216) கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது – என்று கூறியவள்?
கோப்பெருந்தேவி
217) இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்?
சேரமரபினர் – சேர நாடு
218) இளங்கோவடிகளின் பெற்றோர்?
தந்தை  =  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
தாய்  =  நற்சோனை
219) இளங்கோவடிகளின் தமையன் (அண்ணன்) பெயர்?
சேரன் செங்குட்டுவன்
220) இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு தங்கியிருந்த இடம்?
குணவாயிற்கோட்டம்
221) அரசியல் வேறுபாடு கருதாதவர்?
இளங்கோவடிகள்
222) சமய வேறுபாடற்ற துறவி?
இளங்கோவடிகள்
223) இளங்கோவடிகள் வாழ்ந்த காலம்?
கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
224) இளங்கோவடிகளின் சிறப்பினை உணர்ந்து பாரதியார் பாடிய வரிகள்?
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே கண்டதில்லை…
225) சிலப்பதிகாரத்தின் அமைப்பு?
மூன்று காண்டங்கள், முப்பது காதைகள்
226) சிலப்பதிகாரத்தில் உள்ள மூன்று காண்டங்கள் எவை?
1) புகார்க்காண்டம் - பத்துக் காதைகள்
2) மதுரைக்காண்டம் - பதின்மூன்று தாதைகள்
3) வஞ்சிக்காண்டம் - ஏழு காதைகள்
227)  உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் எனவும் வழங்கப்பெறும் நூல்?
சிலப்பதிகாரம்
228) சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்?
1) முதற் காப்பியம்
2) முத்தமிழ்க் காப்பியம்
3) குடிமக்கள் காப்பியம்
4) ஒற்றுமைக் காப்பியம்
229) நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு – என்றவர்?
பாரதியார்
230) சிலப்பதிகாரத்தில் உள்ள மதுரைக் காண்டத்தின் பத்தாவது காதை எது?
வழக்குரை காதை
231) தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்கள்?
1) சிலப்பதிகாரம்
2) மணிமேகலை
3) சீவகசிந்தாமணி
4) வளையாபதி
5) குண்டலகேசி
232) ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது?
சிலப்பதிகாரம்
233) இரட்டைக்காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
234) சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என வழங்கக் காரணம்/
காலத்தாலும் கதைத்தொடர்பாலும் பாவகையாலும் ஒன்றுபட்டுள்ளதால்
235) சிலப்பதிகாரத்தின் கதை உருவம் என்ன?
இசை நாடகம்
236) சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காண உடன் சென்றவர்?
சேரன் செங்குட்டுவன்
237) கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறியவர்?
சீத்தலைச்சாத்தனார்
238) அடிகள் நீரே அருளுக –என்று கூறியவர்?
சீத்தலைச்சாத்தனார்
239) முப்பெரும் உண்மைகளைக் கூறும் நூல்?
சிலப்பதிகாரம்
240) சிலப்பதிகாரம் உணர்த்தும்  முப்பெரும் உண்மைகள் எவை?
1) அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்
2) உரைசால் பத்தினியை உஅய்ர்ந்தோர் ஏத்துவர்
3) ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
241) யாரையோ நீமடக்கொடி – யார், யாரிடம் கூறியது?
பாண்டிய மன்னன் கூறியது, கண்ணகியிடம்
242) நற்றிறம் படராக் கொற்கை வேந்தே – யார், யாரிடம் கூறியது?
கண்ணகி கூறியது, பாண்டிய மன்னனிடம்
243) எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் – என்று பாடியவர்?
பாரதிதாசன்
244) தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர் – என முழங்கியவர்?
பாரதிதாசன்
245) வறுமையினால் தமிழன் ஒருவன் கல்லாத நிலை ஏற்படுமாயின், இங்குள்ளோர் நாணம் அடைதல் வேண்டும் என கூறியவர்?
பாரதிதாசன்
246) பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர்?
சுப்புரத்தினம்
247) பாரதிதாசனின் பிறந்த நாள்?
29.04.1891
248) பாரதிதாசன் எங்கு பிறந்தார்?
புதுவை
249) பாரதிதாசனின் பெற்றோர்?
கனகசபை, இலக்குமி
250) சுப்புரத்தினம் என்ற பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொள்ள காரணம்?
பாரதியின்மேல் கொண்ட பற்றால்
251) பாரதிதாசனின் சிறப்புப்பெயர்கள் எவை?
பாவேந்தர், புரட்சிக்கவிஞர்
252) பாரதிதாசனின் படைப்புகள் எவை?
குடும்பவிளக்கு
இருண்டவீடு
தமிழிழக்கம்
பாண்டியன் பரிசு
அழகின் சிரிப்பு
253) “பாரதிதாசன் பரம்பரை” என்றொர் கவிஞர் பரம்பரை யாருடைய காலத்தில் உருவானது?
பாரதிதான் காலத்தில்
254) பாவேந்தர் பாரதிதாசனுக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள் யாவை?
1) இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கப்பட்டது
2) ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு பாவேந்தர் பரிசு வழங்கப்படுகிறது
3) திருச்சியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது
255) தமிழ்நாடு தவம் செய்து பெற்றவர் ஒருவர் உண்டென்றால் அவர் யார்?
தந்தை பெரியார்
256) பழந்தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களை மான்புடை மன்னர்கள் எவ்வாறு மதிக்கப் பெற்றார்கள்?
புலவர்களாகவும், பாடினியாகவும், விறலியாகவும் மதிக்கப்பெற்றனர்
257) நாட்டு விடுதலைக்கு போராடிய பெரியார், வேறு எதற்கு போராடினார்?
பெண்களின் சமூக விடுதலைக்கு
258) பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் படப்பிடிப்பு எவ்வாறு அமைந்துள்ளது?
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மணக்குகையில் சிறுத்தை எழும்
259) பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் எத்தனை வகை? அவை யாவை?
இரண்டு, அவை:- 1) அடிப்படைத் தேவைகள், 2) அகற்றாப்படவேண்டியவை
260) பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளில் “அடிப்படை தேவைகள்” எவை?
1) பெண்கல்வி
2) பெண்ணுரிமை
3) சொத்துரிமை
4) அரசுப்பணி
261) பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளில் “அகற்றப்பட வேண்டியவை” எவை?
1) குழந்தைத் திருமணம்
2) மணக்கொடை
3) கைம்மை வாழ்வு
262) நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்கள் கொண்டு வர இயலாது – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
263) பெண்கள் மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்கள் வெளியேறவேண்டும் – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
264) பெண்கள் கல்வி பெறுவது சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
265) பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது - என்று உறுதியாக எடுத்துரைத்தவர்?
தந்தை பெரியார்
266) பெண்களுக்கு எந்தெந்த படிப்புகளை தாராளமாக கொடுக்கவேண்டும் என்று பெரியார் கூறுகிறார்?
உலகப் படிப்பும் ஆராய்ச்சி படிப்பும்
267) “நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு” - எது என்று பெரியார் கூறுகிறார்?
பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை
268) எந்த இழிநிலை ஒழிக்கப்படவேண்டும் என பெரியார் குறிப்பிடுகிறார்?
பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை
269) பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர்?
தந்தை பெரியார்
270) ஆணுக்குப் பெண் இளைப்பில்லை – என்று சிந்தித்தவர்?
தந்தை பெரியார்
271) பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனிதச் சமுதாயத்திற்கு தொண்டாற்றும் புகழ்பெற்ற பெண்மணிகளாக விளங்கவேண்டும் என்று வலியுரித்தியவர்?
தந்தை பெரியார்
272) பெண்ணுரிமை மறுப்புக்கான காரணங்களை நன்கு ஆராய்ந்தவர்?
தந்தை பெரியார்
273) பெண்களின் அடிமை வாழ்வுக்கு அடிகோலியது எதுவென்று பெரியார் கூறுகிறர்?
சொத்துரிமை மறுக்கப்பட்டமையே
274) பெண்கள் எதற்காக போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டும் என பெரியார் கூறுகிறார்?
சொத்துரிமை மறுக்கப்பட்டதற்கு
275) பெரியாரின் சிந்தனைகளில் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது எது?
பெண்களுக்கான சொத்துரிமை
276) பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தவர்?
தந்தை பெரியார்
277) விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் ஒன்று?
குழந்தை மணம்
278) சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு என பெரியார் குறிப்பிடுவது எதனை?
குழந்தைத் திருமணம்
279) குழந்தைத் திருமணத்தை நீக்கப் பாடுபட்டவர்?
தந்தை பெரியார்
280) தமிழர்களிடையே இன்று பரவியுள்ள பெருநோய்?
மணக்கொடை (வரதட்சனை)
281) தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாய் இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாறவேண்டும் – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
282) தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் - என்று நாப்பறை ஆர்த்தவர்?
தந்தை பெரியார்
283) கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை – என்று தெரிவித்தவர்?
தந்தை பெரியார்
284) ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற வள்ளுவர் வாய்மொழியை நன்குணர்ந்தவர்?
தந்தை பெரியார்
285) ஒழுக்கம் என்பதும் கற்பு என்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது – என்பது யாருடைய கருத்து?
தந்தை பெரியார்
286) சமூக முரண்களை எதிர்த்தவர்?
தந்தை பெரியார்
287) பெண்களே சமுகத்தின் கண்கள் – என்று கருதியவர்?
தந்தை பெரியார்
288) பெண்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டவர்?
தந்தை பெரியார்
289) யாருடைய வழிகாட்டுதலால், தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது?
தந்தை பெரியார்
290) மெல்ல மெல்ல மற – என்ற சிறுகதையின் மையக்கரு?
புகைப்பழகத்தை மறக்க வைப்பது
291) மெல்ல மெல்ல மற – என்ற சிறுகதையின் ஆசிரியர்?
இலட்சுமி
292) சொல் என்ற சொல்லின் வேறு பெயர்கள்?
பதம், மொழி, கிளவி
293) முக்கனி என்பது?
தொகைச் சொல்
294) தொகை எனும் சொல்லுக்கு என்ன பொருள்?
தொகுத்தல்
295) கவனிப்பாரற்றுச் சாலையில் திரிபவர்களையும், முதியோர்களையும் அரவணைத்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதில் நாட்டம் கொண்டவர்?
அன்னை தெரேசா
296)  தன்னலம் கருதாது பிறர்க்கு உதவுவதையே சிறந்த தொண்டாகக் கருதி வாழ்ந்த பெண்மணி?
அன்னை தெரேசா
297) அயோத்தி நாட்டு மன்னன் தசரதனுக்கு எத்தனை மக்கள்?
நால்வர்
298) தசரதனின் மனைவி?
கைகேயி
299) கைகேயின் தோழி?
மந்தரை
300) இராமன் முடிசூட்டுவதை விரும்பாததால், கைகேயின் மனத்தை வஞ்சக உரைகளால் மாற்றியவர்?
மந்தரை
===========================

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One