Search

TNPSC |TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் -PART -2

Saturday, 3 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ் | PART -2
===========================
101) இயற்கையோடு இயைந்த நூல்கள்?
சங்க இலக்கியங்கள்
102) உலகத்தார் ஏற்கும் பொதுக் கருத்துக்கள் உடைய நூல்கள்?
சங்க இலக்கியங்கள்
103) மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களை மொழிபவை?
சங்க இலக்கியங்கள்
104) சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்தும் பண்பாட்டு நெறிமுறைகள் ஏஆஈ?
1) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
2) யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
3) பிறன்மனை நோக்காப் பேராண்மை
105) உலக மக்களை ஒன்றிணைத்து உறவுகளாக்கிய உயர்சிந்தனை மிக்க நூல்?
புறநானூறு
106) உரிமைக்கு உறவுகோல் ஊன்றும் புறநானூற்று பாடல் வரி?
யாதும் ஊரே யாவரும் கேளிர்
107) மக்கட் பண்பில்லாதவரை மரம் எனப் பழிக்கும் நூல் எது?
திருக்குறள்
108) குடிமக்கள் காப்பியம் என போற்றப்படுவது?
சிலப்பதிகாரம்
109) அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் – என்னும் அறநெறியை உலகாள்வோருக்கு உணர்த்தும் நூல் எது?
சிலப்பதிகாரம்
110) தமிழர்களின் கலைநுட்பச் செய்திகள், சங்ககாலத் தமிழர்களின் கலை, இலக்கியத் தனித்தன்மைகளுக்குச் சான்றுகளாகத் திகழும் நூல்?
சிலப்பதிகாரம்
111) மொழி நூலாரையே வியப்பில் ஆழ்த்தும் தொல்காப்பியர் கூறும் முறை யாது?
எழுத்து பிறப்புமுறைகள்
112) இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றன – என கூறியவர்?
முனைவர் எமினோ
113) ஒரு மொழிக்கு எத்தனை ஒலிகள் இருந்தால் போதுமானது?
முப்பத்துமூன்று ஒலிகள்
114) தமிழ்மொழி மொத்தம் எத்தனை ஒலிகளை கொண்டுள்ளது?
ஐந்நூறு
115) ஒரு மொழியில் மனித உணர்வுகள் அனைத்தையும் எண்ணியவாறு வெளிப்படுத்தப் போதுமானது?
ஐந்நூறு ஒலிகள்
116) நடுவணரசு எந்த ஆண்டு தமிழை செம்மொழியாக ஏற்பளித்தது?
2004 அக்டோபர் மாதம்
117) தமிழ்மொழி இக்காலத்திற்கேற்ப எவ்வாறு அமைந்துள்ளது?
1) காலப்புதுமையைப் பெறத்தக்க வல்லது
2) கணினி பயன்பாட்டிற்கு ஏற்றது
118) தமிழை செம்மொழி என அறிவித்தல் வேண்டும் என்ற முயற்சி என்று தொடங்கி என்று முடிந்தது?
1901 இல் தொடங்கி 2004 வரை
119) மதுரை தமிழ்ச் சங்கத்தின் இதழ்?
செந்தமிழ்
120) பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளிவந்த இதழ்?
செந்தமிழ் – வெளிவந்த ஆண்டு 1901
121) தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டி 1918 இல் தீர்மானம் நிறைவேற்றியவை?
1) மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபை
2) சைவ சித்தாந்த மாநாடு
122) தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றி, அதை இந்திய அரசுக்கும், இந்திய பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வற்புறுத்தியது எது?
மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபை
123) தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டி 1919 இல் தீர்மானம் நிறைவேற்றியது எது?
கரந்தைத் தமிழ்ச்சங்கம்
124) உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூலை எழுதியவர்?
தேவநேயப்பாவாணர்
125) உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் வெளிவந்த ஆண்டு?
1966
126) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்கு தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்?
பரிதிமாற்கலைஞர்
127) தன்பெயரை பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர்?
சூரியநாராயண சாஸ்திரி
128) பரிதிமாற்கலைஞர் பிறந்த ஊர்?
விளாச்சேரி எனும் சிற்றூர் (மதுரை அருகில்)
129) பரிதிமாற்கலைஞரின் பெற்றோர்?
கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள்
130) பரிதிமாற்கலைஞர் தம் பெற்றோருக்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார்?
மூன்றாவது மகன்
131) பரிதிமாற்கலைஞர் பிறந்த ஆண்டு?
1870 ஆம் ஆண்டு சூலை மாதம் ஆறாம் நாள்
132) பரிதிமாற்கலைஞருக்கு வடமொழியை கற்பித்தவர்?
தந்தை கோவிந்தசிவனார்
133) பரிதிமாற்கலைஞர் யாரிடம் தமிழ்மொழி கற்றார்?
மகாவித்துவான் சபாபதி முதலியார்
134) பரிதிமாற்கலைஞர் இளங்கலை (பி.ஏ) பயின்ற கல்லூரி?
சென்னை கிறித்தவக் கல்லூரி
135) தாம் பயின்ற கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியர் பணி வழங்கியதை ஏற்காது, தமிழ்த்துறை ஆசிரியர் பணி விரும்பிக்கேட்டு ஏற்றவர்?
பரிதிமாற்கலைஞர்
136) தாம் கற்பிக்கும் பாடங்களைச் செந்தமிழ் நடையில் சுவைபட விவரிக்கும் ஆற்றல் பெற்றிருந்தவர்?
பரிதிமாற்கலைஞர்
137) ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் இவருக்கு பேராசிரியர் பணி வழங்க முன்வந்த நிலையில், அதனை ஏற்க மறுத்தவர்?
பரிதிமாற்கலைஞர்
138) தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் பரிதிமாற்கலைஞர் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை எந்த பெயரிட்டு அழைத்தார்?
இயற்றமிழ் மாணவர்
139) பரிதிமாற்கலைஞரின் ஒவ்வொரு செயலும் எதனை நோக்கியே அமைந்திருந்தது?
தமிழ் வளர்ச்சி
140) மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் யாருடைய தலைமையில் நிறுவப்பட்டது?
பாசுகரசேதுபதி
141) மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் யாருடைய மேற்பார்வையில் நிறுவப்பட்டது?
பாண்டித்துரை
142) மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் எவருடைய துணையுடன் நிறுவப்பட்டது?
பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாத ஐயர், இராகவனார்
143) தமிழின் மேன்மையைத் தாம் உணர்ந்ததோடு, உலகிற்கு உணர்த்துவதிலும் தலைசிறந்து விளங்கியவர்?
பரிதிமாற்கலைஞர்
144) திராவிட சாஸ்திரி என்னும் சிறப்புப் பட்டத்தை பெற்றவர்?
பரிதிமாற்கலைஞர்
145) தமிழ்ப்புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு பரிதிமாற்கலைஞருக்கு திராவிட சாஸ்திரி என்னும் சிறப்புப்பட்டத்தை வழங்கியவர்?
யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார்
146) தனிப்பாசுரத்தொகை என்னும் நூலை எழுதியவர்?
பரிதிமாற்கலைஞர்
147) தாம் இயற்றிய எந்த நூலில் தன் பெயரை சூரியநாராயண சாஸ்திரி என்னும் வடமொழிப் பெயரை பரிதிமாற்கலைஞர் என தனித்தமிழ்ப் பெயரை சூட்டிக்கொண்டார்?
தனிப்பாசுரத்தொகை
148) தனிப்பாசுரத்தொகை என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?
ஜி.யூ.போப்
149) ஆர்த்தரின் இறுதி என்னும் நூலினை இயற்றியவர்?
டென்னிசன்
150) பரிதிமாற்கலைஞர், சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்தபோது அக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர்?
வில்லியம் மில்லர்
151) சென்னை கிறித்தவக் கல்லூரியின் முதல்வராக இருந்த வில்லியம் மில்லர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
ஸ்காட்லாந்து
152) படகின் துடுப்பு அழகிய அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்ட ஆங்கில நூல்?
ஆர்த்தரின் இறுதி
153) விடுநனி கடிது என்னும் பாடல் அமைந்துள்ள நூல்?
கம்பராமாயணம்
154) கம்பராமாயணத்தில் விடுநனி கடிது என்னும் வரிகள் இடம்பெறும் படலம்?
குகப்படலம்
155) கம்பராமாயணம் இயற்றப்பட்ட காலம்?
பன்னிரனண்டாம் நூற்றாண்டு
156) தமிழ்ச்சொற்களோடு வடமொழிச்சொற்களைக் கலந்து எழுதுதல் என்பது தமிழின் அருமை உணர்ந்தோர் எவ்வாறு கூறினர்?
மணியும் பவளமும் கலந்து கோத்த மாலைபோலாகும்
157) தமிழ்ச்சொற்களோடு வடமொழிச்சொற்களைக் கலந்து எழுதுதல் என்பது பரிதிமாற்கலைஞரின் கருத்து யாது?
தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் உடையதான மிளகாய்ப் பழம் கலந்தது போன்ற பயனையே தந்தது
158) தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடம்பிற்கு எரிச்சலைத் தருவது எது?
மணிபிரவாள நடை
159) தமிழ்மொழியோடு பிறமொழிச்சொற்களை சேர்த்து எழுதுவதும் பேசுவதும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மணிபிரவாள நடை
160) தமிழ்மொழியில் வடசொற்கலப்பைக் கண்டித்தவர்?
பரிதிமாற்கலைஞர்
161) பல்கலைக்கழக பாடத்திட்டத்தில், தமிழை விலக்கி, வடமொழியை கொண்டுவர முடிவெடுக்கப்பட்ட ஆண்டு?
1902
162) 1902 இல் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில், தமிழை விலக்கி, வடமொழியை கொண்டுவர முடிவெடுக்கப்பட்டதற்கு யாருடைய எதிர்ப்பால் கைவிடப்பட்டது?
பரிதிமாற்கலைஞர்
163) பரிதிமாற்கலைஞரின் நற்றமிழ் நாடகங்கள் எவை?
ரூபவதி, கலாவதி
164) ரூபவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களை புனைந்து நடித்து நாடக்ககலை வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கு துணைபுரிந்தவர்?
பரிதிமாற்கலைஞர்
165) சித்திரக்கவி எழுதும் ஆற்றலை பெற்றவர்?
பரிதிமாற்கலைஞர்
166) சித்திரக்கவி என்னும் நூலை எழுதியவர்?
பரிதிமாற்கலைஞர்
167) நீதிநெறி விளக்கம் என்ற நூலின் ஆசிரியர்?
குமரகுருபரர்
168) நீதிநெறி விளக்கத்தில் உள்ள எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதியுள்ளார்?
ஐம்பத்தொரு பாடல்கள் (51 பாடல்கள்)
169) ஞானபோதினி என்னும் இதழை தொடங்கிவைத்தவர்?
மு.சி.பூர்ணலிங்கம்
170) ஞானபோதினி என்னும் இதழை தொடந்து நடத்தியவர்?
பரிதிமாற்கலைஞர்
171) பரிதிமாற்கலைஞர் எந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?
தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம்
172) மாணவப் பருவத்திலேயே ஆங்கிலப் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்தவர்?
பரிதிமாற்கலைஞர்
173) தமிழ்மொழி “உயர்தனிச்செம்மொழி” என முதன்முதலாக நிலைநாட்டியவர்?
பரிதிமாற்கலைஞர்
174) பரிதிமாற்கலைஞர் தமது எத்தனையாவது வயதில் இயற்கை எய்தினார்?
முப்பத்து மூன்றாம் அகவை (02.11.1903)
175) நடுவணரசு பரிதிமாற்கலைஞருக்கு எவ்வாறு சிறப்புச் சேர்த்துள்ளது?
அஞ்சல்தலை வெளியிட்டது
176) பரிதிமாற்கலைஞரின் சொல்லாக்கங்கள் எவை?
1) Aesthetic  –  இயற்கை வனப்பு
2) Biology  –  உயிர்நூல்
3) Classical Language  –  உயர்தனிச்செம்மொழி
4) Green Rooms  –  பாசறை
5) Instinct –  இயற்கை அறிவு
6) Order of Nature –  இயற்கை ஒழுங்கு
7) Snacks –  சிற்றுணா
177) பேசும் செய்திகள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் தொடர்களாக இருந்தால் அவற்றை எவ்வாறு கூறவேண்டும்?
உணர்ச்சித் தொடர்கள்
178) ஒரு தனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது?
கலவைத்தொடர்
179) எழுவாய், செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்?
செய்வினைத் தொடர்
180) வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை – என்று பாடியவர்?
வள்ளலார்
181) ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிப்பற்றே – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
182) மொழிப்பற்று இல்லாதாரிடத்தில் இது இராது என்பது உறுதி?
தேசப்பற்று
183) தேசம் என்பது எதனை அடிப்படையாகக்கொண்டு இயங்குகிறது?
மொழி
184) தமிழர்களுக்கு தாய்மொழிப்பற்று பெருக வேண்டும் என்பது யாருடைய பிரார்த்தனை?
தந்தை பெரியார்
185) காவிரிபூம்பட்டினத்துப் பெருவணிகர்கள்?
மாசாத்துவன், மாநாய்கன்
186) கோவலனனின் தந்தை?
மாசாத்துவன்
187) கண்ணகியின் தந்தை?
மாநாய்கன்
188) திருமகள் போன்ற அழகு மிக்கவள் யார்?
கண்ணகி
189) பெண்கள் போற்றும் பெருங்குணச் சிறப்பு மிக்கவள்?
கண்ணகி
190) கற்புத்திறம் மிக்கவள்?
கண்ணகி
191) ஆடலரசி என இளங்கோவடிகள் குறிப்பிடுவது யாரை?
மாதவி
192) ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தவன்?
கோவலன்
193) மாதவி இந்திரவிழாவில் பாடிய பாடல்?
கானல்வரிப் பாடல்
194) கோவலன் மாதவியை விட்டு பிரிய காரணம்?
கானல்வரிப் பாடலின் பொருளை தவறாக புரிந்துகொண்டதால்
195) வாணிகம் செய்தற்பொருட்டு கண்ணகியுடன் கோவலன் சென்ற ஊர்?
மதுரை
196) மதுரைக்குச் சென்ற கண்ணகி மற்றும் கோவலனுக்கும் வழித்துணையாக சென்றவர்?
கவுந்தியடிகள் என்னும் சமணத்துறவி
197) கவுந்தியடிகள், கண்ணகியையும் கோவலனையும் யாரிடம் அடைக்கலப்படுத்தினார்?
மாதரி என்னும் இடைக்குல மூதாட்டி
198) பொய்யான பழியை கோவலன்மேல் சுமத்தியவன்?
பாண்டிய மன்னனின் பொற்கொல்லன்
199) பாண்டிமாதேவியின் காற்சிலம்பு களவுபோனதை ஆராய்ந்து பாராத மன்னன் எவ்வாறு ஆணையிட்டான்?
அவனைக் கொன்று, சிலம்பைக் கொணர்க
200) கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை கண்ணகி யார் மூலம் அறிந்தாள்?
மாதரி
===========================

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One