பத்தாம் வகுப்பு
===========================
சமூக அறிவியல்
===========================
19 ஆம் நூற்றாண்டில் சமூகம் மற்றும் சமய சீர்த்திருத்த இயக்கங்கள்
===========================
1) இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நூற்றாண்டு எது?
விடை = பத்தொன்பதாம் நூற்றாண்டு
2) இந்திய மக்களால் மிகவும் கவரப்பட்ட மேற்கத்திய கருத்துக்கள் யாவை?
விடை = பகுத்தறிதல், சமத்துவம், சுதந்திரம், மனிதாபிமானம்
3) இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டவை?
விடை = சமூக சமய சீர்த்திருத்த இயக்கங்கள்
4) இந்திய சீர்த்திருந்த்தங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர்?
விடை = இராஜாராம் மோகன்ராய்
5) இராஜாராம் மோகன்ராய் எங்கு பிறந்தார்?
விடை = வங்காளம்
6) இராஜாராம் மோகன்ராய் கற்ற மொழிகள் யாவை?
விடை = அராபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு
7) இராஜாராம் மோகன்ராய் எந்த மொழிகளில் நூல்கள் பல இயற்றியுள்ளார்?
விடை = வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் ஆங்கிலம்
8) இராஜாராம் மோகன்ராய் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்க நூல்கள்?
விடை = ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி
9) இராஜாராம் மோகன்ராய் அவர்கள் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய காலம்?
விடை = 1805 முதல் 1814 வரை
10) இராஜாராம் மோகன்ராய் இங்கிலாந்து செல்ல காரணம்?
விடை = முகலாய மன்னர் இரண்டாம் அக்பருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை உயர்த்திப் பெற
11) இராஜாராம் மோகன்ராய் இறந்த ஆண்டு மற்றும் இடம் என்ன?
விடை = 1833 ஆம் ஆண்டு பிரிஸ்டல் என்னும் இடத்தில் இறந்தார்
12) இராஜாராம் மோகன்ராய் அவர்களுக்கு இராஜா என்ற பட்டம் வழங்கியவர்?
விடை = முகலாய மன்னர் இரண்டாம் அக்பர்
13) நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர்?
விடை = இராஜாராம் மோகன்ராய்
14) இந்து சமுதாயம் மற்றும் சமயத்தில் காணப்பட்ட பல்வேறு மூடப்பழக்கவழக்கங்களை நீக்கப் பாடுபட்டவர்?
விடை = இராஜாராம் மோகன்ராய்
15) ஆத்மீய சபாவை தோற்றுவித்தவர் யார் மற்றும் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
விடை = இராஜாராம் மோகன்ராய், 1815 ஆண்டு
16) 1815 ஆம் ஆண்டு தோற்ற்றுவிக்கப்பட்ட ஆத்மீய சபா, பின்னர் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
விடை = பிரம்ம சமாஜம்
17) பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை = 1828 ஆம் ஆண்டு
18) ஒரே கடவுள் என்ற கொள்கையின் அடிப்படையில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக அமைந்தது எது?
விடை = பிரம்ம சமாஜம்
19) இராஜாராம் மோகன்ராய் எதனை வன்மையாக கண்டித்தார்?
விடை = உருவ வழிபாடு, ஆடம்பரமான சடங்குகள், சமய விதிகள், சாதி வேறுபாடு, தீண்டாமை, உடன்கட்டை ஏறும் பழக்கம்
20) சதி எனும் சட்டத்தை கொண்டுவந்த ஆங்கில தலைமை ஆளுநர்?
விடை = வில்லியம் பெண்டிங் பிரபு
21) யாருடைய சீரிய முயற்சியினால் சதி எனும் சட்டம் கொண்டுவரப்பட்டது?
விடை = இராஜாராம் மோகன்ராய்
22) சதி எனும் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
விடை = 1829 ஆம் ஆண்டு
23) சதி சட்டத்தின் மூலம் வழங்கப்படும் அதிகப்பட்ச தண்டனை என்ன?
விடை = மரண தண்டனை
24) பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகப் போராடியவர்?
விடை = இராஜாராம் மோகன்ராய்
25) இராஜாராம் மோகன்ராய் அவர்கள் ஆதரித்தவை யாவை?
விடை = விதவைகள் மறுமணம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், கலப்புத் திருமணம்
26) இந்தியர்கள் எவற்றை பெறுமாறு இராஜாராம் மோகன்ராய் அவர்கள் வற்புறுத்தினார்?
விடை = மேலைநாட்டுக் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம்
27) மேலநாட்டுக்கல்வி எவற்றை நீக்க வழிவகுக்கும் என இராஜாராம் மோகன்ராய் நம்பினார்?
விடை = மூடநம்பிக்கைகள், கண்மூடித்தனமான பழக்கவழக்கங்கள்
28) இராஜாராம் மோகன்ராய் மறைவிற்கு பிறகு பிரம்ம சபையை ஏற்று நடத்தியவர்கள்?
விடை = திரு.கேசவ் சந்திரசென் & தேவேந்திரநாத் தாகூர்
29) பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடை செய்யும் சட்டம் யாருடைய முயற்சியால் இயற்றப்பட்டது மற்றும் இயற்றப்பட்ட ஆண்டு?
விடை = திரு.கேசவ் சந்திரசென், 1872 ஆம் ஆண்டு
30) கலப்புத் திருமணத்தையும் விதவைகள் மறுமணத்தையும் ஆதரித்த சட்டம்?
விடை = 1872 ஆண்டு சட்டம்
31) பிரார்த்தன சமாஜம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
விடை = ஆத்மராம் பாண்டுரங்
32) பிரார்த்தன சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை = 1867 ஆம் ஆண்டு
33) பிரார்த்தன சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட இடம்?
விடை = மும்பை
34) பல்வேறு சமூக சீர்த்திருத்தங்கள் ஏற்படக் காரணமாக இருந்த சபை?
விடை = பிரார்த்தன சமாஜம்
35) பிரார்த்தன சாமாஜம் ஈடுபட்ட நடவடிக்கைகள் எவை?
விடை = சமபந்தி உணவு, கலப்புத் திருமணம், விதவைகள் மறுமணம், பெண்கள் நலனை மேம்படுத்துதல், பிந்தங்கிய மக்களின் நலனை உயர்த்துதல், பர்தா அணியும் முறையை ஒழித்தல், குழந்தைத் திருமணம் ஒழிப்பு
36) தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இரவுப்பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களை நடத்திய அமைப்பு?
விடை = பிரார்த்தன சமாஜம்
37) பிரார்த்தன சபையின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்பணித்தவர்?
விடை = மகாதேவ கோவிந்தரானடே
38) ஆரிய சமாஜம் தோற்றுவித்தவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
39) ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை = 1875 ஆம் ஆண்டு
40) சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த ஊர்?
விடை = மூர்வி – குஜராத் – கத்தியவார் மாவட்டம்
41) சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர்?
விடை = மூல் சங்கர்
42) சுவாமி தயானந்த சரஸ்வதி யாருடைய சீடர்?
விடை = சுவாமி விராஜனந்தர்
43) வேதங்களிள் கூறப்பட்டுள்ள அனைத்துமே உண்மை என கண்டறிந்தவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
44) வேதங்களை பரப்புவதிலேயே தன் வாழ்க்கையை அர்பணித்தவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
45) சுவாமி தயானந்த சரஸ்வதியின் குறிக்கோள்?
விடை = வேதங்களை நோக்கிச் செல் என்பதாகும்
46) இந்து சமூகத்தை சீர்த்திருத்த எண்ணியவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
47) ஆரிய சமாஜம் எதிர்த்தவை எவை?
விடை = விலங்குகளை பலியிடுதல், உருவ வழிபாடு, மூடப்பழக்கங்கள், சொர்க்கம், நரகம் போன்ற கோட்பாடுகள், குழந்தை மணம், பலதார மணம், பர்தா அணியும் முறை, சாதி வேறுபாடுகள், உடன்கட்டை ஏறும் வழக்கம்
48) சுவாமி தயானந்த சரஸ்வதி தொடங்கிய இயக்கம்?
விடை = சுத்தி இயக்கம்
49) மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் எது?
விடை = சுத்தி இயக்கம்
50) ஆரிய சமாஜம் எதற்காக பாடுபட்டது?
விடை = பெண் கல்வி, கலப்பு மணம், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம்
51) சுவாமி தயானந்த சரஸ்வதியின் முக்கிய சீடர்கள்?
விடை = லாலாலஜபதி ராய், லாலா ஹன்ஸ்ராஜ், பண்டித குருதத்
52) ஆரிய சமாஜ கொள்கைகளை பரப்பியவர்கள்?

53) ஆரிய சமாஜத்தின் தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்கள்?
விடை = பாலகங்காதரத் திலகர் & கோபால கிருஷ்ண கோகலே
54) சுதேசி மற்றும் இந்தியா இந்தியருக்கே போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கியவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
55) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்பட்டவர்?
விடை = சுவாமி தயானந்த சரஸ்வதி
56) பிரம்மஞான சபை எதற்காக துவங்கப்பட்டது?
விடை = கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவை பெறுவதற்காக
57) பிரம்மஞான சபை எங்கு துவங்கப்பட்டது?
விடை = நியூயார்க் நகரம் – அமெரிக்கா
58) பிரம்மஞான சபை எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
விடை = 1875 ஆம் ஆண்டு
59) பிரம்மஞான சபை யாரால் துவங்கப்பட்டது?
விடை = மேடம் பிளவாட்ஸ்கி அம்மையார் & ஹென்ரி எஸ்.ஆல்காட்
60) மேடம் பிளவாட்ஸ்கி அம்மையார் எந்த நாட்டை சேர்ந்தவர்?
விடை = இரஷ்ய பெண்மணி
61) ஹென்ரி எஸ்.ஆல்காட் எந்த நாட்டை சேர்ந்தவர்?
விடை = அமெரிக்கா
62) தியோஸ் என்றால் என்ன பொருள்?
விடை = கடவுள்
63) சோபாஸ் என்றால் என்ன பொருள்?
விடை = அறிவு
64) தியோசோபி என்றால் என்ன பொருள்?
விடை = கடவுளைப் பற்றிய அறிவு
65) பிரம்மஞான சபையின் முக்கிய நோக்கம்?
1) மக்களிடையே சகோதரத்துவம் வளர்ப்பது
2) பண்டைய சமயங்களைப் பற்றியும் மற்றும் தத்துவங்கள்
3) அறிவியல் மற்றும் இயற்கையின் நியதிகளை அறிந்து மக்களிடையே தெய்வீக சக்தியை வளர்ப்பது
66) திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார் பிரம்மஞான சபையின் தலைவராக பொறுப்பேற்ற ஆண்டு?
விடை = 1893 ஆம் ஆண்டு
67) இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்காவும், இந்தியக் கல்விக்காகவும் தன்னை அர்பணித்துக்கொண்டவர்?
விடை = திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார்
68) திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார் ஆற்றிய முக்கிய பணி?
விடை = கல்விப்பணி
69) திருமதி. அன்னிபெசன்ட் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்ட கல்லூரி எது?
விடை = பனாரஸ் இந்து கல்லூரி (காசி)
70) பிற்காலத்தில் பனாரஸ் இந்து கல்லூரி எவ்வாறு வளர்ச்சியுற்றது?
விடை = பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (காசி)
71) பிரம்மஞான சபையின் நோக்கங்களை பரப்புவதற்காக அன்னிபெசன்ட் அவர்கள் நடத்திய செய்தித்தாள்?
விடை = நியூ இந்தியா
72) பிரம்மஞான சபையின் தலைமையிடத்தை அன்னிபெசன்ட் அம்மையார் எங்கு நிறுவினார்?
விடை = சென்னை அடையார்
73) அடையாறில் ஒரு நூலகத்தை நிறுவி பழமையான சமஸ்கிருத நூல்களை பாதுகாத்து வந்தவர்?
விடை = அன்னிபெசன்ட் அம்மையார்
74) இந்தியர்களின் மறுமலர்ச்சிக்காக ஒரு முன்னோடி இயக்கமாக செயல்பட்ட சபை?
விடை = பிரம்மஞான சபை
75) இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
விடை = 1897 ஆம் ஆண்டு
76) தன்னார்வத் தொண்டு நிறுவனமாக செயல்படும் இயக்கம்?
விடை = இராமகிருஷ்ண இயக்கம்
77) இராமகிருஷ்ண இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
விடை = சுவாமி விவேகானந்தர்
78) இராமகிருஷ்ண இயக்கம் துவங்கப்பட்ட நாள்?
விடை = 01.05.1897
79) இராமகிருஷ்ணரின் முக்கிய சீடர்களில் ஒருவர்?
விடை = சுவாமி விவேகனந்தர்
80) இராமகிருஷ்ணரின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்பியவர்?
விடை = சுவாமி விவேகனந்தர்
81) இராமகிருஷ்ண மடம் யாரால் எங்கு எப்போது தொடங்கப்பட்டது?
விடை = சுவாமி விவேகானந்தர், பேலூர் (கல்கத்தா அருகே), 1897 ஆம் ஆண்டு
82) இராமகிருஷ்ண மடத்தின் தொண்டுகள் யாவை?
1) உடல் நலம்
2) பேரழிவு நிவாரணம்
3) கிராம முன்னேற்றம்
4) ஆதிவாசிகள் நலன்
5) துவக்கக்கல்வி
6) உயர்கல்வி
83) இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த இடம் மற்றும் ஆண்டு?
விடை = வங்காளம், 1836 ஆம் ஆண்டு
84) இராமகிருஷ்ண பரமஹம்சரின் துணைவியார் பெயர்?
விடை = சாரதாமணிதேவி
85) தட்சிணேஸ்வரம் எனும் இடத்தில் உள்ள காளி கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவர்?
விடை = இராமகிருஷ்ண பரமஹம்சர்
86) அனைத்து சமயங்களின் அடிப்படை உண்மைகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தவர்?
விடை = இராமகிருஷ்ண பரமஹம்சர்
87) விவேகானந்தர் என அழைக்கப்பட்டவர்?
விடை = நரேந்திரநாத் தத்தா
88) அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை = 1893 ஆம் ஆண்டு
89) 1893 ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு சகோதர சகோதரிகளே என உரையாற்றியவர்?
விடை = சுவாமி விவேகானந்தர்
90) இராமகிருஷ்ண இயக்கத்தின் நோக்கங்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தும் எதன் அடிப்படையில் அமைந்தன?
விடை = சமயம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில்

No comments:
Post a Comment