Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS | GEOGRAPHY FREE DOWNLOAD| 9 ஆம் வகுப்பு புது பதிப்பு-புவியியல்| PART-3

Monday, 5 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS | 9 ஆம் வகுப்பு புது பதிப்பு - புவியியல் |PART-3
61) வேகமாக பயணிக்கக்கூடிய அலை – முதன்மை அலை

62) முதன்மை அலையின் சராசரி வேகம் – 5.6 கி.மீ முதல் 10.6 கி.மீ வரை

63) புவி அதிர்வு அளவையைக் கண்டுபிடித்தவர் – C.F.ரிக்டர்

64) புவியில் மிக உயர்ந்த அதிர்வாக 9.5 ரிக்டர் அளவு எங்கு பதிவானது – சிலி நாட்டில் பயோ-பயோ என்ற இடத்தில் 1960 ஆம் ஆண்டு

65) திட, திரவ, வாயு ஆகியவற்றில் பயனிக்கும் புவி அலைகள் – முதன்மை அலைகள்

66) திடப்பொருள் வழியாக மட்டும் பரவும் புவி அலைகள் – இரண்டாம் நிலை அலைகள்

67) இரண்டாம் நிலை அலைகளின் சராசரி வேகம் – 1 கி.மீ முதல் 8 கி.மீ வரை

68) முதன்மை அலைகளைப் போன்று காணப்படும் அலைகள் – மேற்பரப்பு அலைகள்

69) புவியின் மேற்பரப்பில் நீண்ட தூரம் பயணம் செய்யும் அலைகள் - மேற்பரப்பு அலைகள்

70) அதிக அளவில் அழிவை ஏற்படுத்தும் அலைகள் - மேற்பரப்பு அலைகள்

71) மேற்பரப்பு அலைகளின் சராசரி வேகம் - 1 கி.மீ முதல் 5 கி.மீ வரை

72) புவி அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி – நில அதிர்வு அளவைப் படம் அல்லது நில அதிர்வு மானி

73) நில அதிர்வு பற்றிய படிப்பு – நில அதிர்வியல் (Seismology)

74) சுனாமி என்பது எம்மொழிச்சொல் – ஜப்பானிய சொல்

75) சுனாமி என்பது எந்த அலைகளை குறிக்கும் – துறைமுக அலைகள்

76) கடலில் மிகப்பெரிய அலைகள் உருவாகக் காரணங்கள் :-
1) கடலடியில் தோன்றும் புவி அதிர்ச்சி
2) எரிமலைச் செயல்பாடு
3) கடலோரப் பகுதியில் நடைபெறும் மிகப்பெரிய நிலச்சரிவு

77) சுனாமி அலைகளின் மணிக்கு சராசரியாக பயணிக்கும் வேகம் – 500 கி.மீ

78) சுனாமி அலைகளின் நீளம் – 600 கி.மீ

79) சுனாமி அலைகள் கடற்கரையை அடையும்போது அதன் உயரம் எவ்வளவு – 15 மீட்டர்

80) இந்தியப் பெருங்கடலில் புவி அதிர்ச்சியால் ஆழிப்பேரலை ஏற்பட்ட ஆண்டு – 2004

81) 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, பெரிய இயற்கை பேரிடர்களில் உலகளவில் எத்தனையாவது இடம் – ஆறாவது இடம்

82) 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அலையின் வேகம் – மணிக்கு 600 கி.மீ

83) 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்கள் – 2,80,000 பேர்

84) இந்தோனேஷியாவின் அருகில் அதிகாலை 00.58 மணிக்கு ஏற்பட்ட புவி அதிர்ச்சியால் உண்டான ஆழிப்பேரலை சென்னைக் கடற்கரையை வந்தடைய எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு – 7 மணி நேரம்

85) இந்தியப் பெருங்கடலில் ஆழிப்பேரலை உருவான நாள் – 2004, டிசம்பர் 26

86) 2004 சுனாமிக்கு காரணம் – இந்தோ-ஆஸ்திரேலியத் தட்டு யுரேசியத்தட்டின் கீழே அமிழ்ந்ததனால்

87) 2004 சுனாமிக்கு காரணமான புவி அதிர்வின் அளவு – 9 ரிக்டர் அளவு

88) புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழும் நிகழ்வு – எரிமலை வெடிப்பு

89) புவியின் மேற்பரப்பில் வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு – லாவா

90) எரிமலைகள் உருவாகக் காரணம் – புவித்தட்டுகள் நகர்வதால்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One