Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS | GEOGRAPHY FREE DOWNLOAD| 10 ஆம் வகுப்பு புவியியல் |PART-1

Sunday, 4 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS | 10 ஆம்  வகுப்பு | GEOGRAPHY  PART-1
1)  தெற்கு ஆசியக்கண்டத்தின் வளமையான நாகரிகம் கொண்ட மிகப்பெரிய நாடு?
இந்தியா
2) இந்திய கலாச்சாரத் தாக்கம் இந்திய எல்லையையும் தாண்டி எதுவரை அடைந்துள்ளது?
கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள்
3) உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து இணைக்கும் நாடு எது?
இந்தியா
4) கீழை நாடுகளையும் மேலை நாடுகளையும் இணைக்கும் பாலமாக திகழும் நாடு?
இந்தியா
5) வரலாற்றுக் காலங்களில் இந்தியா எவ்வாறு அழைக்கப்பட்டது?
பாரதம் என்றும் இந்துஸ்தான் என்றும் அழைக்கப்பட்டது
6) எந்த வலிமையான அரசனை பின்பற்றி இந்தியாவை பாரதம் என அழைக்கப்பட்டது?
பரதன்
7) எந்த ஆற்றின் பெயரால் இந்தியாவை இந்துஸ்தான் என அழைக்கப்பட்டது?
சிந்து
8) எந்த சொல்லின் அடிப்படையில் இந்தியா என பெயரிடப்பட்டது?
சிந்து
9) இந்தியாவை ஒரு துணைக் கண்டம் என அழைக்க காரணங்கள்?
1) இயற்கை அமைப்பு
2) காலநிலை
3) இயற்கைத் தாவரங்கள்
4) பல்வேறு இனங்கள் மொழிகள்
5) மிகப்பரந்த நிலப்பரப்பு
10) உலக வரைபடத்தில் ஒரு அமைவிடத்தை அறிந்துகொள்ள உதவுவது?
அட்சக்கோடுகளும் தீர்க்கக்கோடுகளும்
11) இந்தியாவின் பரவல்?
வட அட்சம்  = 8.4 முதல் 37.6 வரை
கிழக்கு தீர்க்கம்  = 68.7 முதல் 97.25 வரை
12) இந்தியாவை இரு பகுதிகளாக பிரிக்கும் அட்சக்கோடு எது?
கடகரேகை
13) கடகரேகை இந்தியாவின் குறுக்காகச் சென்று எந்த வகையில் பிரிக்கிறது?
வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலம்
14) இந்தியாவின் பரப்பளவு?
32,87,263 சதுர கிலோ மீட்டர்
15) 2011-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு?
1.2 பில்லியன்
16) இந்தியாவின் வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரையான நீளம்?
3214 கிலோ மீட்டர்
17) இந்தியாவின் மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை எத்தனை கிலோ மீட்டர் அகலத்தைக் கொண்டுள்ளது?
2933 கிலோ மீட்டர்
18) இந்தியக் கடற்கரையின் நீளம்?
6000 கிலோ மீட்டர்
19) அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் இலட்சத் தீவு கடற்கரையும் சேர்த்து இந்தியாவின் மொத்த கடற்கரையின் நீளம்?
7516 கி.மீ
20) இந்தியா ஐரோப்பா நாடுகளுடன் வணிகம் மற்றும் பொருளாதார செயல்களில் ஈடுபட ஏதுவாக அமைந்துள்ளது எது?
சூயஸ் கால்வாய்
21)  இந்தியா சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் வணிகம் மற்றும் பொருளாதார செயல்களில் ஈடுபட ஏதுவாக அமைந்துள்ளது எது?
மலாக்கா நீர்ச்சந்தி
22) ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய நாடு?
இந்தியா
23) இந்தியா பாகிஸ்தானைவிட எத்தனை மடங்கு பெரியது?
நான்கு மடங்கு
24) ஜப்பானைவிட இந்தியா எத்தனை மடங்கு பெரியது?
எட்டு மடங்கு
25) இங்கிலாந்தைவிட இந்தியா எத்தனை மடங்கு பெரியது?
பன்னிரெண்டு மடங்கு
26) இந்தியாவைவிட ஐக்கிய அமெரிக்க நாடு எத்தனை மடங்கு பெரியது?
மூன்று மடங்கு
27) ஓர் இடத்தின் நேரத்தை கணக்கிடப் பயன்படுவது?
தீர்க்கக்கோடுகள்
28) இந்தியாவின் திட்ட நேரத்தை கணக்கிட உதவும் தீர்க்கக்கோடு எது?
82° 30´ கிழக்கு தீர்க்கம்
29) இந்தியாவில் 82° 30´ கிழக்கு தீர்க்கம் எந்த நகரத்தின் வழியாக செல்கிறது?
அலகாபாத்
30) இந்திய திட்ட நேரம் கிரின்விச் 0° தீர்க்கநேரத்தைவிட எத்தனை மணி முன்னதாக உள்ளது?
5 மணி 30 நிமிடம் முன்னதாக
31) இந்தியாவின் கிழக்கு மேற்க்காக சுமார் எத்தனை தீர்க்கங்களைக் கொண்டுள்ளது?
29° தீர்க்கங்களை கொண்டுள்ளது
32) இந்தியாவின் மேற்கு பகுதியைக் காட்டிலும் கிழக்குப் பகுதியில் சூரியன் எவ்வளவு நேரம் முன்னதாக உதிக்கவோ அல்லது மறையவோ செய்கிறது?
1 மணி 56 நிமிடம்
33) இந்தியாவை மியான்மரிலிருந்து பிரிக்கும் மலைத்தொடர்?
அரக்கோயோமா மலைத்தொடர்
34) இந்தியாவிற்கு தெற்கில் உள்ள இலங்கையை பிரிப்பது எது?
பாக் நீர்ச்சந்தி
35) இந்தியாவின் வடக்கு இயற்கை எல்லையாக அமைந்துள்ளது எது?
இமயமலைத்தொடர்
36) இந்தியாவின் அண்டை நாடுகள்களும் அவற்றின் திசைகளும்?
1) மேற்கில் பாகிஸ்தான்
2) வடமேற்கில் ஆப்கானிஸ்தான்
3) வடகிழக்கில் நேபாளம், பூடான் மற்றும் சீனா
4) கிழக்கில் வங்காள தேசம் மற்றும் மியான்மர்
37) இந்தியாவின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள கடல்?
அரபிக்கடல்
38) இந்தியாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ள நீர்பரப்பு?
வங்காள விரிகுடா
39) வங்காள விரிகுடாவில் உள்ள இந்திய யூனியன் பிரதேசம்?
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
40) அரபிக்கடலில் உள்ள இந்திய யூனியன் பிரதேசம் எது?
இலட்சத் தீவுகள்
41) இந்தியாவின் தனித்துவமான நில அமைப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன?
1) மிக உயர்ந்த மலைச்சிகரங்கள்
2) மிகக்குறைந்த சமவெளிகள்
42) உலகின் மிக உயர்ந்த சிகரம்?
எவரெஸ்ட்
43) எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள மலைத்தொடர்?
இமயமலைத்தொடர்
44) எவரெட்ஸ் சிகரம் அமைந்துள்ள இடம்?
நேபாளம் மற்றும் சீன எல்லையில்
45) கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?
8848 மீட்டர்
46) இந்தியாவின் கடகரேகைக்கு வடக்கே அமைந்துள்ள காலநிலை?
மிதவெப்பமண்டலக் காலநிலை
47) இந்தியாவின் கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள காலநிலை?
வெப்பமண்டலக் காலநிலை
48) மேற்கு தொடர்ச்சி மலையில் ஈரமிக்க பகுதிகளில் அமைந்துள்ள காடுகள்?
வெப்பமண்டலக் காடுகள்
49) மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள காடுகள்?
மாங்குரோவ் மரங்கள் கொண்ட சுந்தரவனக் காடுகள்
50) வேறுபட்ட இயற்கைச்சூழ்நிலை, காலநிலை, பல்வேறு வகையான தாவரங்கள், விளங்குகள் ஆகியவற்றிற்கு உகந்த ஓர் வாழிடமாத் திகழும் நாடு?
இந்தியா
51) இந்தியா 29 மாநிலங்களாகவும் 7 யூனியன் பிரதேசங்களும் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது?
1) மொழி அடிப்படையில்
2) நிர்வாக வசதிக்காக
52) பெரிதும் மாறுபட்ட நிலத்தோற்றங்களைக் கொண்ட நாடு?
இந்தியா
53) புவியிலுள்ள உறுதியான, தொன்மையான பாறை அமைப்புகளில் ஒன்றாக விளங்குவது?
இந்திய தீபகற்ப பீடபூமி
54) இந்தியாவின் நிலத்தோற்றங்களின் அடிப்படையில் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது?
ஐந்து பெரும்பிரிவுகள்
55) இந்தியாவின் நிலத்தோற்றங்களின் ஐந்து பிரிவுகள் யாவை?
1) வடக்கு மலைகள்
2) வடபெரும் சமவெளிகள்
3) தீபகற்ப பீடபூமி
4) கடற்கரைச் சமவெளிகள்
5) தீவுகள்
56) வடக்கு மலைகள் என்பது எதனைக் குறிக்கும்?
இமயமலை
57) பனி உறைவிடம் என அழைக்கப்படுவது?
இமயமலை
58) இமையமலை அமைந்துள்ள வடிவம் என்ன?
வில் போன்ற வடிவம்
59) வில் போன்ற வடிவில் அமைந்துள்ள இமையமலையின் நீளம்?
2,500 கிலோமீட்டர் (மேற்கு கிழக்காக)
60) இமயமலை மேற்கு கிழக்காக எதுவரை நீண்டுள்ளது?
1) மேற்கு = சிந்து பள்ளத்தாக்கு (ஜம்மு காஷ்ம்மீர்)
2) கிழக்கு = பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு (அருணாச்சல பிரதேசம்)
61)  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் புவியின் ஒரே நிலப்பகுதியின் பெயர்?
பாஞ்சியா
62)  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் புவியிலிருந்த ஒரே நிலப்பகுதியான பாஞ்சியாவை சுற்றியிருந்த நீர்ப்பகுதியின் பெயர்?
பாந்தலசா
63)  பரந்த நிலப்பகுதி இரு பகுதிகளாக பிரிந்த வடபகுதி மற்றும் தென்பகுதிகளுக்கு எவ்வாறு பெயரிடப்பட்டது?
வடபகுதி = அங்காரா (லாராஷியா)
தென்பகுதி = கோண்டுவானா
64)  அங்கார் மற்றும் கோண்டுவான ஆகிய நிலப்பகுதியை பிரிக்கும் நீர்ப்பகுதியின் பெயர்?
டெத்தீஸ் கடல்
65)  டெத்தீஸ் கடல் எந்த திசைகளில் பரவியிருந்தது?
கிழக்கு மேற்காக
66)  டெத்தீஸ் கடல் அடியில் இருந்த படிவு மடிக்கப்பட்டு உயர்த்தப்பட்டதால் தோன்றிய மலை?
இமயமலை என்ற மடிப்புமலை
67)  இமயமலையின் மூன்று உட்பிரிவுகள் யாவை?
1) மேற்கு இமயமலைகள்
2) மத்திய இமயமலைகள்
3) கிழக்கு இமயமலைகள்
68)  வடமேற்கு இந்தியாவில் உள்ள பாமீர் முடிச்சிலிருந்து கிழக்காக செல்லும் மலைகள் பெயர்?
காரகோரம்
69)  தென்மேற்கு காஷ்மீரில் அமைந்துள்ள மலை?
காரகோரம்
70)  ஆப்கானிஸ்தானிற்கும் சீனாவிற்கும் இடையில் இந்திய எல்லைகளாக அமைந்துள்ள மலை?
காரகோரம்
71)  உலகில் இரண்டாவது உயர்ந்த சிகரம்?
K2 எனப்படும் காட்வின் ஆஸ்டின்
72)  K2 எனப்படும் காட்வின் ஆஸ்டின் சிகரம் எந்த இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது?
காரகோரம் மலைத்தொடர்
73)  காரகோரம் மலைகளின் தெற்கே அமைந்துள்னொரு பெரும் பனியாறுகள் யாவை?
1) பல்டோரா
2) சியாச்சின்
74)  காரகோரம் மலைத்தொடருக்கு இணையாக அமைந்துள்ள மலைத்தொடர்கள் யாவை?
1) லடாக்
2) ஜாஸ்கர்
75)  லடாக் மலைத்தொடரின் தொடர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லடாக் பீடபூமி
76)  இந்தியாவின் மிக உயர்ந்த பீடபூமியாக அமைந்துள்ளது எது?
லடாக் பீடபூமி
77)  லடாக் பீடபூமி அமைந்துள்ள இடம்?
வடமேற்கு காஷ்மீர்
78)  பாமீர் முடிச்சிலிருந்து தென்கிழக்கு திசை நோக்கிச் செல்லும் இமயமலைகளின் பெயர்?
மத்திய இமயமலைகள்
79)  மத்திய இமயமலைகளில் வடக்கு தெற்காக இணையாக அமைந்துள்ள மலைத்தொடர்கள் எவை?
1) ஹிமாத்ரி
2) ஹிமாச்சல்
3) சிவாலிக்
80)  ஹிமாத்ரி மலையின் வேறு பெயர்?
 பெரிய இமயமலை
81) இமயமலையின் வடக்கு மலைத்தொடர்?
ஹிமாத்ரி மலைத்தொடர்
82)  ஹிமாத்ரி மலைத்தொடரின் சராசரி உயரம்?
 6000 மீட்டர்
83) ஹிமாத்ரி மலைத்தொடர் எல்லை எதுவரை அமைந்துள்ளது?
 வடமேற்கில் உள்ள சிந்து பள்ளத்தாக்கு முதல்
 வடகிழக்கில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை
84) உலகில் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் பல சிகரங்கள் அமைந்துள்ள மலைத்தொடர்?
 ஹிமாத்ரி மலைத்தொடர்
85) உலகிலேயே மிக உயரமுள்ள 8848 மீ உயரம் கொண்ட எவரெஸ்ட் மலைச்சிகரம் அமைந்துள்ள மலைத்தொடர்?
ஹிமாத்ரி மலைத்தொடர்
86) ஹிமாத்ரி மலைத்தொடரில் காணப்படும் சிகரங்கள்?
 1) கஞ்சன்ஜங்கா = 8598 மீட்டர்
 2) நங்கபர்வத் = 8126 மீட்டர்
 3) தவளகிரி = 8167 மீட்டர்
 4) நந்ததேவி = 7817 மீட்டர்
87) பல ஆறுகளின் உருவாக்கத்திற்கு ஆதாரமாக விளங்கும் பனியாறுகள் அமைந்துள்ள மலைத்தொடர்?
ஹிமாத்ரி மலைத்தொடர்
88) கங்கையின் பிறப்பிடம்?
 கங்கோத்ரி பனியாறு
89) கங்கோத்ரி அமைந்துள்ள மலைத்தொடர்?
 ஹிமாத்ரி மலைத்தொடர்
90) யமுனையின் பிறப்பிடம்?
 யமுனோத்ரி பனியாறு
91) மலைகளின் குறுக்கே காணப்படும் இயற்கைப் பாதைகளை எவ்வாறு அழைக்கிறோம்?
 கனவாய்
92) அண்டை நாடுகளுக்குச் செல்ல உதவும் மலைகளின் குறுக்கே காணப்படும் பாதைகளை எவ்வாறு அழைக்கிறோம்?
கணவாய்கள்
93) காஷ்மீரில் உள்ள கணவாய் பெயர்?
சொஜிலா கணவாய்
94) ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கணவாய்?
ஷிப்கிலா கணவாய்
95) சிக்கிமில் உள்ள கணவாய்?
நாதுலா கணவாய் & ஜலபுலா கணவாய்
96) ஹிமாத்ரி மலைத்தொடரில் உள்ள முக்கிய கணவாய்கள்?
1) சொஜிலா (காஷ்மீர்)
2) ஷிப்கிலா (இமாச்சல பிரதேசம்)
3) நாதுலா (சிக்கிம்)
4) ஜலபுலா (சிக்கிம்)
97) ஹிமாச்சல் மலைத்தொடரின் வேறு பெயர்?
சிறிய இமயமலை
98) ஹிமாச்சல் மலைத்தொடர் அமைந்துள்ள பகுதி?
வடக்கே ஹிமாத்ரி மலைத்தொடருக்கும் தெற்கே சிவாலிக் மலைத்தொடருக்கும் இடையே
99) இமாச்சல் மலைத்தொடரின் சராசரி அகலம்?
 80 கி.மீ
100) எந்த இமையமலைத்தொடரில் காஷ்மீரின் பீர்பாஞ்சல் மலைத்தொடர் அமைந்துள்ளது?
 ஹிமாச்சல் மலைத்தொடர்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One