Search

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு | GEOGRAPHY PART -1

Thursday, 8 November 2018

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS| 10 ஆம் வகுப்பு | GEOGRAPHY PART-1
இந்தியாவின்_கடல்வழி_போக்குவரத்து

1) இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்?
7516 கி.மீ
2) இந்திய கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை?
13
3) இந்திய கடற்கரையில் அமைந்துள்ள நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் எத்தனை?
187
4) இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் வழியாக எத்தனை சதவீதம் வெளிநாட்டு வணிகம் நடைபெறுகிறது?
95 சதவீதம்
5) இந்தியாவில் உள்ள 13 பெரிய துறைமுகங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது?
துறைமுக பொறுப்புக் கழகம்
6) இந்தியாவில் உள்ள 187 சிறிய துறைமுகங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது?
மாநில அரசு
==================================
7) மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் யாவை?
1) கண்ட்லா துறைமுகம்
2) மும்பை துறைமுகம்
3) ஜெவஹர்லால் நேரு துறைமுகம்
4) மர்மகோவா துறைமுகம்
5) புது மங்களூர் துறைமுகம்
6) கொச்சி துறைமுகம்
==================================
8) கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் யாவை?
1) தூத்துக்குடி துறைமுகம்
2) சென்னை துறைமுகம்
3) எண்ணூர் துறைமுகம்
4) விசாகப்பட்டினம் துறைமுகம்
5) பாரதீப் துறைமுகம்
6) ஹால்தியா துறைமுகம்
7) கொல்கத்தா துறைமுகம்
==================================
9) இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் எத்தனையாவது இடம்?
இரண்டாவது இடம்
10) உலக அளவில் கப்பல் கட்டும் தொழிலில் இந்தியா எத்தனையாவது இடம்?
16-வது இடம்
11) இந்தியாவில் எத்தனை கப்பல் கட்டும் தளங்கள் அமைந்துள்ளது?
நான்கு
12) இந்தியாவில் உள்ள நான்கு கப்பல் கட்டும் தளங்கள் எவை? அமைவிடம்?
1) இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் - விசாகப்பட்டனம்
2) கார்டன் ரீச் தொழிற்சாலை - கொல்கத்தா
3) மேசகாண்டக் - மும்பை
4) கொச்சி கப்பல் கட்டும் தளம் – கொச்சி
13) இந்திய அரசு, துறைமுகத்துறையில் தனியார் முதலீடு செய்வதற்காக வழிகோலி சட்டங்கள் எவை?
1) இந்திய துறைமுகச்சட்டம் – 1908
2) துறைமுகச்சட்டம் – 1963
==================================
#இந்தியாவின்_வான்வழி_போக்குவரத்து

பத்தாம் வகுப்பு சமச்சீர் - புவியியல்
1) விரைவான, விலையுயர்ந்த, வசதியான மற்றும் நவீன போக்குவரத்து எது?
வான்வழி போக்குவரத்து
2) வான்வழி போக்குவரத்தில் பயணிப்பவை?
1) பயணிகள்
2) சரக்குகள்
3) அஞ்சல்
3) உயர்ந்த மலைகள், பாலைவனங்கள், அடர்ந்த காடுகளையும் இணைக்கும் போக்குவரத்து?
வான்வழி போக்குவரத்து
4) இந்தியாவில் முதல் வான்வழி போக்குவரத்து தொடங்கிய ஆண்டு?
1911
5) இந்தியாவில் உண்மையான வான்வழி போக்குவரத்து தொடங்கிய ஆண்டு?
1932
6) J.R,D.டாடா அவர்களால் டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்ட ஆண்டு?
1932
7) டாடா ஏர்லைன்ஸ் பின்னாளில் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
ஏர் இந்தியா
8) டாடா ஏர்லைன்ஸ் பின்னாளில் ஏர் இந்தியா என பெயர் மாற்றப்பட்ட ஆண்டு?
1946
9) வான்வழி போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு?
1953
10) உள்நாட்டு வான்வழி போக்குவரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்?
இந்தியன் ஏர்லைன்ஸ்
11) வெளிநாட்டு வான்வழி போக்குவரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்?
ஏர் இந்தியா
12) இந்தியாவில் தனியார் வான்வழி நிறுவனங்கள் இணைந்த ஆண்டு?
1986
13) ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்த ஆண்டு?
2007
14) ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஒருங்கிணைத்து பின்னர் எந்த பெயரில் உருவானது?
நேஷனல் ஏவியேஷன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டெட்
15) இந்தியாவில் பன்னாட்டு விமான சேவைக்காக விமானங்களை இயக்கிவருவது?
NACIAL (A)
16) இந்தியாவில் உள்நாட்டு மற்றும் ஆசிய நாடு தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்லும் விமானங்களை இயக்கிவருவது?
NACIAL (I)
17) NACIAL (I) இயக்கிவரும் விமானங்களின் எண்ணிக்கை?
159 வானூர்திகள் மற்றும் போயிங் விமானங்கள்
18) இந்திய நகரங்களை உலகின் பெரும்நகரங்களுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது?
NACIAL (A) மற்றும் NACIAL (I)
19) NACIAL-ஐத் தவிர வான்வழி சேவைகளைச் செய்துவரும் தனியார் நிறுவனங்கள் எவை?
1) ஸ்பைஜெட்
2) இண்டர்குளோப் ஏவியேஷன்
20) இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு?
1995 (AIRPORT AUTHORITY OF INDIA)
21) உலகத் தரத்திற்கு இந்திய விமான நிலையங்களுக்குப் பாதுகாப்பை அளிப்பதற்காக நிறுவப்பட்டது எது?
இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம்
22) தற்போது இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் மொத்தம் எத்தனை விமான நிலையங்களை இயக்கி வருகிறது?
129 விமான நிலையங்கள்
23) இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் எத்தனை பன்னாட்டு விமான நிலையங்களை இயக்கி வருகிறது?
17 பன்னாட்டு விமான நிலையங்கள்
24) எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் கடல் சார்ந்த பணிகளுக்கு ஹெலிகாப்டர் சேவையை அளிக்கும் இந்திய நிறுவனம்?
பவான் ஹான்ஸ்ஹெலிகாப்டர் லிமிட்டெட்
25) பல்வேறு மாநில அரசுகளுக்கு சேவைபுரியும் ஹெலிகாப்டர் நிறுவனம்?
பவான் ஹான்ஸ்ஹெலிகாப்டர் லிமிட்டெட்
26) வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எளிதில் செல்ல முடியாத பகுதிகளையும் தொடர்புகொள்ளச் செய்வது?
பவான் ஹான்ஸ்ஹெலிகாப்டர் லிமிட்டெட்
==================================
#இந்தியாவின்_உள்நாட்டு_நீர்வழி_போக்குவரத்து –

1) இந்தியாவில் நீர்வழிப்போக்குவரத்து மொத்தம் எத்தனை கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது?
14,500 கி.மீ
2) எந்திரப்படகுகள் முலம் ஆறுகளில் நடைபெறும் நீர்வழிப்போக்குவரத்து எத்தனை கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது?
5685 கி.மீ
3) எந்திரப்படகுகள் முலம் கால்வாய்களில் நடைபெறும் நீர்வழிப்போக்குவரத்து எத்தனை கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது?
400 கி.மீ
4) இந்திய நீர்வழி ஆணையம் எத்தனை தேசிய நீர்வழிகளைக் கண்டறிந்துள்ளது?
ஐந்துதேசிய நீர்வழிகள்
5) தேசிய நீர் வழி எண் – 1 எந்த  இடங்களை இணைக்கிறது?
கங்கையில் உள்ள அலகாபாத் முதல் ஹால்டியா வரை
6) தேசிய நீர் வழி எண் – 2 எந்த இடங்களை இணைக்கிறது?
பிரம்மபுத்திராவில் உள்ள சையதியா முதல் துபரி பாதை வரை
7) தேசிய நீர் வழி எண் – 3 எந்த  இடங்களை இணைக்கிறது?
சம்பகரா கால்வாய் – உத்யோக மண்டல்கால்வாய் – கொல்லம் – கோட்டபுரம் கால்வாய்
8) தேசிய நீர் வழி எண் – 4 எந்த  இடங்களை இணைக்கிறது?
கிருஷ்ணா கோதாவரி ஆறுகளில் உள்ள
1) வசீராபாத் – விஜயவாடா பாதை
2) காக்கிநாடா – புதுச்சேரி பாதை
3) பத்ராசலம் – ராகமுந்திரி பாதை
9) தேசிய நீர் வழி எண் – 5 எந்த  இடங்களை இணைக்கிறது?
1) தல்ச்சார் – தம்மாரா பாதை (மகாநதி, பிராமணி ஆறுகள்)
2) மங்கல்காடி – பாரதீப் வரை
10) மலிவான போக்குவரத்து எது?
நீர்வழி போக்குவரத்து
11) அதிக எடையுள்ள கனமான பொருள்களை குறைந்த செலவில் கொண்டு செல்ல தகுந்த வ்ழி?
நீர்வழி
12) எரிபொருள் சிக்கனமாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமலும் உள்ள போக்குவரத்து?
நீர்வழி போக்குவரத்து
13) நீர்வழிப் போக்குவரத்து எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும்
1) உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து
2) வெளிநாட்டு நீர்வழிப்போக்குவரத்து
==================================

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One