Search

TNPSC | TRB | TET CIVICS STUDY MATERIALS FREE DOWNLOAD| 9 ஆம் வகுப்பு புது பதிப்பு |CIVICS PART-2

Tuesday, 6 November 2018

TNPSC | TRB | TET CIVICS STUDY MATERIALS| 9 ஆம் வகுப்பு புது பதிப்பு | CIVICS PART-2
#குடிமக்களின் உரிமைகளுக்கு – அரசியலமைப்பு மூலம் உத்திரவாதம் அளிக்ககப்படுகிறது.

#இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதி – உரிமைகளும் கடமைகளும்.

#42-வது அரசியலமைப்புத் சட்ட திருத்தம் – 1976, பகுதி IV-ல் குடிமக்களின் அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

#ஒரு ஜனநாயக நாடு உருவாக அடிப்படையாக உள்ளவை:-

#அரசு நெறிசெய் கோட்பாடுகள் பகுதி IV-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

#பகுதி – III , IV மற்றும் IVA.
அடிப்படை உரிமைகள்:-

இந்திய அரசியலைமைப்பு – பகுதி – III , சட்டப்பிரிவு 12 முதல் 35 வரை.

இதில் சில உரிமைகள் அடிப்படை உரிமைகள்
#சமத்துவ உரிமை – விதி 14 முதல் 18 வரை.

#சுதந்திர உரிமை – விதி 19 முதல் 22 வரை.

#சுரண்டலுக்கு எதிரான உரிமை – விதி 23 முதல் 24 வரை.

#பண்பாடு மற்றும் கல்வி உரிமை – பிரிவு 29 முதல் 30 வரை.

#அரசியலமைப்பிற்கு தீர்வுகாணும் உரிமை – பிரிவு 32.

கல்வி உரிமை:-
#விதி – 21A, 2009-ல் இலவச கட்டாயக் கல்வி 6 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம்.

அடிப்படை கடமைகள்:- {பகுதி- IVA, பிரிவு 51A }
#42-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் = 1976.

#42-வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் பகுதி- IVA, பிரிவு 51A-ல் இந்திய குடிமக்களின் கடமைகள் வலியுறுத்துகிறது.

அடிப்படை கடமைகள்:-
#ஒவ்வொரு இந்திய குடிமகனும், அரசியல் சட்டம், தேசிய சின்னம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு மதிப்பு அளித்தல்.

#சுதந்திரப் போராட்ட வீரர்களின் உன்னத உணர்வை நினைத்துப் பேனுதல்.

#நாட்டின் பாதுகாப்பிற்காக செயலாற்றுதல்.

#நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாத்தல்.

#மதம், மொழி, இனம், வகுப்பு வேற்றுமைகளைத் துறந்து, சகோதர உணர்வுடன் ஒற்றுமை ஓங்கச்செய்தல்.

#நம்முடைய பண்பாடு பன்முகப் பாரம்பரியக் கலாச்சாரத்தின் மென்மையை மதித்தல்.

#இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மேம்படுத்துதல்.

#அறிவியல் மனப்பான்மை மற்றும் மனித நேயம் வளர்த்தல்.

#பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.

#தன்னுடைய முயற்சியினால் அனைத்துத் துறைகளிலும் தனிமனித மற்றும் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.

#பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்களது குழந்தைகளுக்கு கல்வி பெறுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.

அரசு நெறிசெய் கோட்பாடுகள் அல்லது வழிகாட்டும் கோட்பாடுகள்:-
#பகுதி 4-ல் விதி 36 முதல் 51 வரை

#இந்திய அரசியலமைப்பு, நாட்டை வழிநடத்த அரசு நெறிமுறைக் கோட்பாடுகளை வழங்கியுள்ளது.

#அனைத்து குடிமக்களுக்கும் போதுமான சமூகப்பொருளாதார குறிக்கோள் மூலம் சமூக நலனை உருவாக்குவது.

#இந்திய அரசியலமைப்பு முகவுரை – பெரும்பான்மையான நெறிமுறை கோட்பாடுகள் – சமய, பொருளாதார நெறிகளை நிலைநாட்டுவதற்கு வழிகாட்டும் கோட்பாடுகள்.

#அரசு நெறிசெய் கோட்பாடுகள் 3 தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன:-
#அரசின் குறிக்கோள்.
#அரசின் திட்டங்களை வடிவமைப்பது.
#அனைத்து குடிமக்களுக்கும் பாராபட்சமின்றி நேர்மையாக செயல்படுதல்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One