Search

Tnpsc-tet பொதுத்தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்

Saturday, 6 October 2018

பொதுத் தமிழ் ஆசிரியர்களும் அவர்கள் எழுதிய நூல்களும்

1) மனிதனின் வாழ்க்கை ஒரு நாடக மேடை - ஷேக்ஸ்பியர்

2) மத்தவிலாசப்பிரகடனம் - வடமொழி நகைச்சுவை நாடகம் - முதலாம் மகேந்திரவர்மன்

3) M.R. ராதா - சரஸ்வதி கானாசபை என்ற நாடக சபையை தோற்றுவித்தார்.( நாடகங்கள் - இராஜசேகரன், லட்சுமிகாந்தன் )

4) தேசபக்தியை வளர்த்த நாடகங்கள்
1- கதரின் வெற்றி
2- தேசபக்தி

5) நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் - கோபால கிருஷ்ண பாரதி - நந்தனார் சரித்திர கீர்த்தனைகள்

6) பாலசந்தரின் நாடகங்கள் - நீர்க்குமிழி, நாணல் , எதிர்நீச்சல் , மேஜர் சந்திரகாந்த் , சர்வர்சுந்தரம்

7) சோ - மனம் ஒரு குரங்கு, முகமது பின் துக்ளக் , எங்கே போகிறோம், உண்மையே உன் விலை என்ன

8) " தண்ணீர் தண்ணீர் " - கோமல் சுவாமிநாதன்

9) புராண நாடகம் -
பி.எஸ்.ராமையா - தேரோட்டி மகன்

பாரதியார் - பாஞ்சாலி சபதம்

10) நாடக மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்கள் - டி.கே.சண்முகம் சகோதரர்கள்  .

11) நாடகக் காவலர் - R.S.மனோகர் - துரோணர் , விஸ்வாமித்ரா , மாலிக்காபூர் , சுக்ராச்சாரியார்

12) தொ.பெ .மீனாட்சிசுந்தரம் பிள்ளை - லிட்டன் பிரபு எழுதிய
 " The Secret Way " ஆங்கிலக் கதையை கருவாகக் கொண்டு " மனோன்மனியம் " நாடகத்தை எழுதினார் .

13) திருமுருகாற்றுப்படை , நெடுநல்வாடை , மதுரைக்காஞ்சி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை .

14) சூரிய நாராயண சாஸ்திரி - இவர் மறைமலையடிகளைப் பின்பற்றி தனது பெயரை " பரிதிமாற் கலைஞர் " என்று மாற்றிக் கொண்டார்.

15) மறைமலையடிகள் - வேதாச்சலம்

16) " ஞானபோதினி " என்ற தமிழ்ப்பத்திரிக்கையின் ஆசிரியர் - பரிதிமாற் கலைஞர்

17) " நாடகவியல் " எனும் நாடக இலக்கண நூலை எழுதியவர் - பரிதிமாற் கலைஞர்

18) ரூபாவதி , கலாவதி, மானவிஜயம் எனும் நாடகங்களை இயற்றியவர் - பரிதிமாற் கலைஞர்

19) தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்.
- ஷேக்ஸ்பியரின் " ஹேம்லெட் " நாடகத்தை அமலாதித்யன் என்று மொழிபெயர்த்தவர்.
- இவரது முதல் நாடகம் - புஷ்பவல்லி
- இதர நாடகங்கள் மனோகரா, லீலாவதி

20) அண்ணாவின் நாடகங்கள் - ஓர் இரவு, வேலைக்காரி , சொர்க்கவாசல் , நீதிதேவன் மயக்கம், நல்லதம்பி, சந்திரோதயம்
21) அண்ணாவை  "தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா " என்று. அழைத்தவர் கல்கி

22) கருணாநிதி - முதல் நாடகம் - பராசக்தி
வெள்ளி கிழமை, மந்திரிகுமாரி , ஒரே முத்தம் , தூக்குமேடை , போர்வாள்

23) கருணாநிதிக்கு கலைஞர் என்று பட்டம் கொடுத்தவர் - பட்டுக்கோட்டை அழகிரி

24) கருணாநிதி எழுதிய புதினம் - புதையல்
வரலாற்று புதினம் - ரோமாபுரி பாண்டியன் , தென்பாண்டி சிங்கம்

25) தமிழ் நாடகத்தின் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
- இவரது நாடகங்கள் - அபிமன்யு , வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி , சிறுதொண்டர்

- இவர் மிருச்சிககடிகம் என்னும் வடமொழி நாடகத்தையும் , ரோமியோ ஜூலியட், ஒத்தல்லோ ஆகிய ஆங்கில நாடகங்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

26) அரசியலில் தலைசிறந்த நாடகம் - முகம்மது பின் துக்ளக்

27 ) உயிரோவியம் - நாரண துரைக்கண்ணன்

28) வாழ்வின் இன்பம் - அகிலன்

29 ) சந்திரமோகன் நாடகம் - அறிஞர் அண்ணா

30) பிரபுலிங்க லீலை - சிவப்பிரகாசர்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One