Search

TNPSC-TET STUDY MATERIALS -GEOGRAPHY FREE DOWNLOAD- புவி பற்றிய தகவல்கள்

Monday, 29 October 2018

TNPSC -TET STUDY MATERIALS-புவி பற்றிய தகவல்கள்
#வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள்:-

நைட்ரஜன் - 78%
ஆக்ஸிஜன் - 21%
ஆர்கான் - 0.934%
கார்பன் டை ஆக்சைடு - 0.033%
பிற வாயுக்கள் - 0.033%
===============================
#வளிமண்டல அடுக்குகள் - 5
1. ட்ரோபோஸ்பியர்
2. ஸ்ட்ரோடோஸ்பியர்
3. மீசோஸ்பியர்
4. அயனோஸ்பியர்
5. எக்சோஸ்பியர்
===============================
1. ட்ரோபோஸ்பியர்:

வேறுபெயர் - கீழ் அடுக்கு

8 கி.மீ முதல் 16 கி.மீ வரை பரவியுள்ளது.

இடி, மின்னல், மேகம், புயல் மற்றும் மழை ஆகிய வானிலை மாற்றங்கள் நிகழும் அடுக்கு

வானிலை அடுக்கு என்றும் கூறுவர்

வளிமண்டலத்தில் மொத்த காற்றில் 80% இவ்வடுக்கில் தான் உள்ளது.
===============================
2. ஸ்ட்ரோடோஸ்பியர்:

வேறுபெயர் - படுக்கை அடுக்கு

16 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பரவியுள்ளது.

விமானங்கள் பறக்கும் அடுக்கு

இதில் 20 கி.மீ. முதல் 35 கி.மீ வரை ஓசோன் அடுக்கு காணப்படுகிறது

சூரியனில் இருந்து  பூமிக்கு வரும் புற ஊதா கதிர்களை தடுப்பது - ஓசோன்

ஓசோனை பாதிக்கும் வாயு - குளோரோ ஃப்ளுரோ கார்பன் (CFC)

ஓசோன் குறியீடு - O3
===============================
3. மீசோஸ்பியர்:

வேறுபெயர் - இடை அடுக்கு

50 கி.மீ முதல் 80 கி.மீ வரை பரவியுள்ளது.

எரிகற்கள் வாழும் அடுக்கு
===============================
4. அயனோஸ்பியர்:

வேறுபெயர் - வெப்ப அடுக்கு

80 கி.மீ முதல் 500 கி.மீ வரை பரவியுள்ளது.

வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பும் நிகழ்ச்சி மின்காந்த அலைகளை அனுப்பப்படுகிறது.

100 கி.மீ முதல் 300 கி.மீ வரை நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் காணப்படுகிறது

இவ்வடுக்கு வானொலி அடுக்கு என்றும் அழைக்கப்படும்
===============================
5. எக்சோஸ்பியர்:-

வேறுபெயர் - வெளி அடுக்கு

500 கி.மீ க்கு மேல் காணப்படுகிறது

இவ்வடுக்கில் காணப்படும் வாயுக்கள் - ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

இவ்வடுக்கில் பிறகு விண்வெளி வெற்றிடமாகவே இருக்கும்
===============================

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One