நிகழ்வுகள்
பிறப்புக்கள்
இறப்புகள்
- 1297 – ஸ்டேர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.
- 1541 – சிலியின் சண்டியாகோ நகரம் மிச்சிமாலொன்கோ தலைமையிலான பழங்குடிகளினால் அழிக்கப்பட்டது.
- 1609 – ஹென்றி ஹட்சன் மான்ஹட்டன் தீவைக் கண்ணுற்றார்.
- 1649 – ஒலிவர் குரொம்வெல்லின் இங்கிலாந்து நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.
- 1708 – சுவீடனின் பன்னிரண்ட்டாம் சார்ல்ஸ் மன்னன் தனது மாஸ்கோவின் மீதான படையெடுப்பை ஸ்மொலியென்ஸ்க் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன.
- 1709 – பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகியன பிரான்ஸ் மீது போர் தொடுத்தன.
- 1802 – பிரான்ஸ் சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது.
- 1857 – யூட்டாவில் மெடோஸ் மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டனர்.
- 1889 – யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் (The Hindu Organ) என்ற ஆங்கிலப் பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
- 1893 – முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.
- 1897 – எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மன்னன் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினான்.
- 1906 – மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.
- 1914 – ஆஸ்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகளை வெளியேற்றினர்.
- 1916 – கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
- 1919 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஹொண்டுராசினுள் நுழைந்தனர்.
- 1926 – பெனிட்டோ முசோலினி மீதான கொலைமுயற்சி தோல்வியடைந்தது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பக்கிங்ஹாம் அரண்மனை ஜேர்மனியினரின் வான் தாக்குதலில் சேதமடைந்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..
- 1945 – இரண்டாம் உலகப் போர்: போர்ணியோ தீவில் ஜப்பானியரினால் அடைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆஸ்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15இல் கொல்லப்படவிருந்தனர்.
- 1961 – டெக்சாசை 4ம் கட்ட சூறாவளி கார்லா தாக்கியது.
- 1968 – பிரான்சில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் கொல்லப்பட்டனர்.
- 1973 – சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. சனாதிபதி சல்வடோர் அலெண்டே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் ஆகுஸ்டோ பினொச்சே ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.
- 1974 – வட கரோலினாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
- 1978 – அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், எகிப்திய அதிபர் அன்வர் சதாத், இஸ்ரேல் பிரதமர் பெகின் ஆகியோர் மத்திய கிழக்கு அமைதீ முயற்சிகளை முன்னெடுக்க காம்ப் டேவிட்டில் சந்தித்தனர்.
- 1982 – பாலஸ்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூட் நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.
- 2001 வான் தாக்குதல்களில் உலக வர்த்தக மையம் எரிகிறது
- 1989 – ஹங்கேரிக்கும் ஆஸ்திரியாவுக்குமான எல்லை திறந்து விடப்பட்டதில் ஆயிரக்கணக்கான கிழக்கு ஜேர்மனி மக்கள் தப்பியோடினர்.
- 1992 – ஹவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.
- 1997 – ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தை அமைக்க ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தன்னர்.
- 2001 – நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 – ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புக்கள்
- 1862 – ஓ ஹென்றி, ஆங்கில எழுத்தாளர் (இ. 1910)
- 1917 – பேர்டினண்ட் மார்க்கோஸ், பிலிப்பீன்ஸ் அதிபர் (இ. 1989)
- 1982 – ஷ்ரியா சரண், தென்னிந்திய நடிகை
இறப்புகள்
- 1921 – சுப்பிரமணிய பாரதியார், (பி. 1882)
- 1948 – முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் தாபகர்
- 1957 – இம்மானுவேல் சேகரன், தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவர்.(பி. 1924
- 1971 – நிக்கிட்டா குருசேவ், சோவியத் ஒன்றியத் தலைவர் (பி. 1894)
- 1973 – சல்வடோர் அலெண்டே, சிலியின் அதிபர் (பி. 1908)
- 2009 – யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (பி. 1927)
No comments:
Post a Comment