இந்திய நிகழ்வுகள்
சுகாதாரம், வேளாண்மை மற்றும் திறன்சார் போக்குவரத்து ஆகிய துறையில் ஏற்படும் சவால்களை தீர்க்கும் நோக்கில், NITI ஆயோக், இன்டெல் (Intel) மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) ஆகியவை இணைந்து அமைத்துள்ள சர்வதேச செயற்கை நுண்ணறிவு உருமாற்றி மாதிரி மையம் (Model International Center for Transformative Artificial Intelligence) பெங்களுரில் அமைய உள்ளது.
போக்குவரத்து துறையின் நாட்டின் முதலாது பல்கலைக் கழகமானது வதோதராவில் செப்டம்பர் 11ல் தேசிய இரயில் போக்குவரத்து நிறுவனம் (NRTI – National Rail and Transportation Institute) தொடங்கியுள்ளது.
கடலோர காவற்படையை நவீனப்படுத்தும் நோக்கில், கடந்த 2015ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் L & Tகப்பல் கட்டுமான நிறுவனம் 7 ரோந்து கப்பல்களை வடிவமைத்து கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றது.
அதன்படி, “விஜயா” என்னும் இரண்டாவது அதிநவீன ரோந்து கப்பல் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.
குறிப்பு:
முதலாவது அதிநவீன ரோந்து கப்பல் “விக்ரம்” ஏப்ரல் மாதம் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலக நிகழ்வுகள்
தற்போது நடைமுறையில் இருக்கும் இரயில்வே பிரிவின் மின் இணைப்பை புனரமைப்பது தொடர்பான 3 திட்டங்களை இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டாக தொடங்கி உள்ளன.
வங்கதேச இரயில்வேயின் குலரா – ஷாபஸ்பூர் பிரிவின் புனரமைப்பு
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு 500 மெகாவாட் திறன் கூடுதல் மின் இணைப்பு
அகாரா – அகர்தலா இரயில்வே இணைப்பு
புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் வட பகுதியான கரோலரை விர்ஜீனியா போன்ற பகுதியில் ஃபுளோரன்ஸ் புயல் தாக்கியுள்ளது.
இந்த புயலின் வேகம் மணிக்கு 225 கி.மீ. அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு நிகழ்வுகள்
தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்;று வரும் 52வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் உதய்வீர் சித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் 25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் இந்திய அணி (உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கியது) தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
நோவாசார் – எஸ் – செயற்கை கோள்:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் அதன் வணிக கிளையுமான ஆண்டிரிக்ஸ் (Antrix) நிறுவனமும் இணைந்து இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான “நோவாசார் – எஸ் (NovaSAR-S) மற்றும் எஸ்.எஸ்.டி.எல்.எஸ் 1-4 (SSTL S 1-4) உள்ளிட்ட செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (PSLV – C42 ) மூலம் செப்படம்பர் 16 அன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
குறிப்பு:
NovaSAR-S – செயற்கைகோள், வெள்ள கண்காணிப்பு, விவசாய பயிர் மதிப்பீடு, காடுகள் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, கடல் பயன்பாடுகள் உள்ளிட்ட புவி கண்காணிப்புக்காக 430 கிலோ எடை கொண்ட நேவாசார் – எஸ் செயற்கைகோள் செலுத்தப்பட உள்ளது. SSTL – Survey Satelite Technology Ltd.
விருதுகள்
இந்தியா – ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கிடையே அமைதி, நட்பு, இணைந்து செயலாற்றுதல் மற்றும் புரிதல் ஆகியவற்றிற்காக பாடுபட்டவர்களுக்கு “ரஷியா நாடு” வழங்கும் உயரிய விருதான “நட்புறவு விருது (ழசனநச ழக கசநைனௌhip) இந்திய செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் செர்கெய் கோடோவ் என்பவர் இந்த “நட்புறவு விருதினை” சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில் நடைபெற்ற 40வது ஆசியா – பசுபிக் டென்டல் ஃபெடரேஷன் மாநாட்டில் இந்திய மருத்துவ பேராசிரியர் பாலாஜி என்பவருக்கு பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் மிக உயரிய மனிதநேய விருது வழங்கி கௌரவித்துள்ளது.
குறிப்பு:
இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர் பேராசிரியர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment