Search

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 12.09.2018

Friday, 14 September 2018

தமிழக நிகழ்வுகள்


ஊரகத் துறையில் சிறந்த செயல்பாடு: தமிழகத்துக்கு 3 தேசிய விருதுகள்.
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் மூன்று தேசிய விருதுகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாவட்ட அளவில் சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்டங்களில், தமிழகத்தின் தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.



இந்திய நிகழ்வுகள்


தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்)-ன் கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.



முக்கிய தினங்கள்


உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10
Theme: Working Together to Prevent Suicide



உலக நிகழ்வுகள்


இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான விஸ்டோக்-2018 போர் ஒத்திகையை ரஷியா தொடங்கி உள்ளது.
சீனா மற்றும் மங்கோலியாவுடன் இணைந்து நடத்தப்படும். இந்தப் போர் ஒத்திகையில் 1000 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள்; 3 லட்சம் வீரர்கள் 36000 ராணுவ தளவாடங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழல் நிகழ்வுகள்


நாகாலந்து மாநில அரசனது சிங்பன் வனவிலங்கு சரணாலயத்தை யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளது.
இது நாட்டில் 30 வது யானைகள் காப்பகம் ஆகும்.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த விண்வெளி ஆடையை அந்நிறுவனம் காட்சிப்படுத்தியது.
பெங்களுர் விண்வெளிக் கண்காட்சியின் 6-வது பதிப்பின்போது அந்நிறுவனம் இந்த விண்வெளி ஆடையை காட்சிப்படுத்தியது. ஆரஞ்சு நிற முன்வடிவம் கொண்ட இந்த விண்வெளி ஆடையை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதை வடிவமைத்து வந்தது.



விளையாட்டு நிகழ்வுகள்

தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் சமீபத்தில் 5-வது கேரம் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கே. சகாயபாரதி அணிகள் பிரவிலும், ஓபன் டபுள்ஸ் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One