Search

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 11.09.2018

Friday, 14 September 2018

தமிழக நிகழ்வுகள்


திறந்த வெளிச் சிறைச்சாலை – திருமலைசமுத்திரம்


தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமலைசமுத்திரம் கிராமத்தில் 4 வது திறந்த வெளி சிறைச்சாலை விரைவில் தொடங்கப்படவிருக்கிறது
தமிழ்நாட்டு சிறைச்சாலை கையெட்டின்படி திறந்த வெளி சிறைச்சாலை என்பது தற்பொழுது உள்ள சிறைசாலையில் கூட்டத்தைக் குறைப்பது சிறையில் உள்ளவர்களின் எதிர்கால மறுவாழ்விற்க்கான சரியான விவசாய முறையை கற்றுத் தருவது மற்றும் விவசாய உற்பத்தியில் சிறைச்சாலைகள் தன்னிறைவடைவதாகும். மேலும் இதன் நோக்கம் சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறிதளவு சுதந்திரத்தை அளிப்பதாகும்.




தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் வேலைவாய்ப்பைப் பெருக்கக் கூடிய வகையிலும் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் கொள்கை 2018 என்ற தகவல் தொழில் நுட்பக் கொள்கையை துவங்கியுள்ளது.




இந்திய நிகழ்வுகள்


மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு உலகளாவிய சுகாதார மாநாடு
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் துவக்கத்தை குறிக்கும் வகையில் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் உலகளாவிய துப்புரவு மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இது ஸ்வச் பாரத் மிஷன் துவக்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை கொண்டாடும்.


மத்திய அரசாங்கம் மின் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளால் இயங்கும் தானூர்திகளை இயக்குவதற்கான அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. நாட்டில் மாசுபாடுகளை குறைப்பதற்கு இந்த வகையான வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது
புதுதில்லியில் நடைபெற்ற இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்க உச்சி மாநாட்டின் (SIAM –Society of Indian Automobile Manufacturers) போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநர் உரிமம் உட்பட இனி வீட்டுக்கே வந்துவிடும் அரசின் 40 சேவைகள் டெல்லியில் முதல்வர் அரிவந்த் கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார்.



விளையாட்டு நிகழ்வுகள்


தமிழ்நாட்டின் திண்டுகல்லில் உள்ள என்பிஆர் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2017-18 ஆம் ஆண்டிற்கான துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய புளு அணி நடப்பு சாம்பியனான இந்திய ரெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One