Search

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 07.09.2018

Friday, 7 September 2018


தமிழக நிகழ்வுகள்


தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களையும் தீவுகளையும் உள்ளடக்கிய கடல்சார் சூழலைப் பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசு, கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தின் (Coastal zone Management) இறுதி வரைவை மத்திய சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இதில், தமிழக கடற்கரையை 6 பிரிவுகளாக பிரித்துள்ளது.
அவை CRZ IA, CRZ IB, CRZ II, CRZ III, CRZ IV A kw;Wk; CRZ IV B எனப் பெயரிடப்பட்டுள்ளது.
குறிப்பு
தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா, தூத்துக்குடி மற்றும் தனுஷ்கோடிக்கு இடையே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 இந்திய நிகழ்வுகள்


அலுவல் பணியில் ஹிந்தி மொழியை செயல்படுத்துவது தொடர்பான செயல்பாட்டையும் சிக்கல்களையும் பற்றி விவாதிக்க அலுவல் மொழித்துறையின் முதல் சீராய்வுக் கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
குறிப்பு
கந்தஸ்த் – கணினி மென்பொருள் – அனைத்து வகையான அலுவல் கோப்புகளை ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும், ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்ப்பதற்காக அலுவல் மொழித்துறை உருவாக்கியுள்ளது.


சுனாமி பேரிடர் ஒத்திகை மற்றும் மீட்பு நடடிவடிக்கை – 2018 (Coastal zone Management) இந்தியா முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் செப்டம்பர் 4-5 தேதிகளில் சுனாமி பேரிடர் ஒத்திகை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 இந்தியா மற்றும் 23 நாடுகள் இணைந்து இந்த சுனாமி பேரிடர் ஒத்திகை மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. ஐ.நா அமைப்பின் யுனெஸ்கோ சர்வதேச அரசாங்க கடற்சார் ஆணையம் (IOC – Inter governmental Oceanographic commission) மற்றும் இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் மட்டுப்படுத்தும் அமைப்பு (IOTWMS – Indian Ocean Tsunami weaning Mitigation System) ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.


இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான பாதுகாப்புத் துறை சம்பந்தமான டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது.
இதில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மைக்பாம்பியோ, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தையில், இரு நாட்டுத் தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான கோம்காஸா(COMCASA – Communications Compatibility and Security Agreement) ) ஒப்பந்தம்; கையெழுத்தானது.
குறிப்பு
இவ்வொப்பந்தத்தின் மூலம் இராணுவம் சார்ந்த முக்கிய தொழில்நுட்பங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா பெற்றுக் கொள்ளவும் அமெரிக்கா மற்றும் இந்திய இராணுவத்துக்கு இடையே தகவல் தொடர்பு வசதிகள் அமைக்கவும் முடிவு செய்துள்ளது
அமெரிக்காவிற்கு Major Defence partner என்னும் அந்தஸ்தை 2016ல் கொடுத்தது குறிப்பிடத்தக்து.


ஆசிய அளவில் அலுவலக வாடகையில் அதிக பயன்பெற்ற நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் பெங்களுரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களுரில் ஏப்ரல் – ஜுன் காலாண்டில் அலுவலக வாடகை 7 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
பெங்களுருவைத் தொடர்ந்து 5.5 சதவீகித உயர்வுடன் ஜப்பானின் டோக்கியோ நகரம் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் 3வது இடத்திலும் உள்ளது.


உலக நிகழ்வுகள்


ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதியில் ‘ஜெபி’ என்ற புயல் மிகப் பெரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் மிகக் கடுமையான புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெபி(Typhoon Jebi) புயலுக்கு தென்கொரியா இந்த பெயரை வைத்துள்ளது. ஜெபி என்றால் கொரிய மொழியில் விழுங்கு என்று பொருள்.


விண்வெளித் துறையில் இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இணைந்து செயல்படுத்துவதற்கான புரிந்துணர்;வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்
குறிப்பு
சுகன்யா திட்டத்தின் கீழ், வரும் 2022ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசானது முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு நிகழ்வுகள்


தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் 52வது சர்வதேச தப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
குறிப்பு
இந்தியாவின் அர்ஜுன் சிங் சீமா இதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One