Search

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 05.09.2018

Wednesday, 5 September 2018

இந்திய நிகழ்வுகள்




கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்வதை தடுப்பதற்காகவும், அவர்களுக்கு வேளாண்மையில் ஈடுபாடு அதிகரிப்பதற்காகவும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் மாயா(MAYA – Motivating and Attracting Youth in Agriculture) என்ற பெயரில் ஆராய்ச்சி ஒன்றை நடத்த உள்ளது.


நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர், தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு 2016 -2017ம் கல்வி ஆண்டு முதல் – தேசிய, மாநில அளவில் தூய்மை பள்ளி விருது(ஸ்வத் வித்யாலயா) மத்திய மனிதவள மேம்பாட்டு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
2017 – 2018ம் கல்வி ஆண்டில் தேசிய அளவில் விருது பெற 52 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் புதுச்சேரி கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப்பள்ளி 100 சதவீத புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது.


உலக  நிகழ்வுகள் 

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் முதல் முறையாக இரண்டு வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அவர்களது பெயர்கள் பின்வருமாறு:
ஹஸ்ஸா அல் மசூரி மற்றும் சுல்தான் அல் நேயாதி ஆகிய இரு வீரர்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
குறிப்பு
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக Hope Mars Mission என்ற பெயரிலான திட்டம் 2021ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என UAE அறிவித்துள்ளது.


சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் உச்சி மாநாடு – 2018, நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் செப்டம்பர் 03 முதல் செப்டம்பர் 05 வரை நடைபெற்றுள்ளது.
இம்மாநாட்டின் கருத்துரு: சமத்துவம் பொருளாதார ஆற்றல் மூலம் தொடங்குகிறது (Equality begins with Economic Empowerment)


பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹீசைனான் பதவிக்காலம் முடிவுக்கு வருவதையொட்டி புதிய அதிபருக்கான தேர்தல் செப்டம்பர் 04 நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆரிப்-உர்-ரஹ்மான்-ஆல்லி 13வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


பேரிடர் மேலாண்மைக்கு பெரிதும் பயன்படும் வகையில் வடதுருவத்தில் தனது முதல் அயல்நாட்டு ஆய்வுக் கூடத்தை இஸ்ரோ அமைக்க உள்ளது.
இந்தியன் தொலை உணர்வு திறன் செயல்பாடுகளை இதன் மூலம் அதிகரிக்க முடியும்
குறிப்பு
பல்வேறு செயற்கை கோள்களின் தகவல்களைப் பெற்று செயல்படும் தேசிய தொலை உணர்வு மையம் ஹைதராபாத்தில் உள்ளது.


முக்கிய தினங்கள்


தேசிய ஆசிரியர் தினம் – செப்டம்பர் 05
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர். ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் 1962ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 05ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One