தமிழக நிகழ்வுகள்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குன்னங்குடிபட்டியில் பெருங்கற்கால கல்திட்டு, எண்கள் வட்டங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்க காலத்திற்கு சற்று முந்தைய காலம் ‘பெருங்கற்காலம்’ எனப்படுகிறது.
குறிப்பு
திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் 11ம்; நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய நிகழ்வுகள்
இந்தியா – வங்கதேசம் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர்கள் அளவிலான உயர்நிலை பேச்சுவார்த்தை, டெல்லியில் செப்டம்பர் 03 முதல் செப்டம்பர் 08 வரை நடைபெறுகிறது.
இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநர் கே.கே. சர்மா தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினரும், வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் ஷஃபீனுல் இஸ்லாம் தலைமையிலான 13 பேர் குழுவினரும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பு
இந்தியா-வங்கதேசம் எல்லைப் படைகளின் தலைமை இயக்குநர் தலைமையிலான மாநாடு, 1975ம் ஆண்டிலிருந்து நடைபெறுகிறது. தற்போது நடைபெறுவது 47வது பேச்சுவார்த்தை ஆகும்.
இந்தியப் பிரதமரால் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘டிஜிட்டல் இந்தியா’ பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, இராஜஸ்தான் மாநில அரசு பாமஷா யோஜனா-வின் கீழ் (Bhamashah Yojana) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL – Below Poverty Line) பெண்கள் அனைவருக்கும் மொபைல் போன் வழங்க உள்ளது.
குறிப்பு:
இராஜஸ்தான் மாநில அரசு, ஏற்கனவே 5000 கிராம பஞ்சாயத்துக்கு இலவச Wi-Fi வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக நிகழ்வுகள்
இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் அன்ஸ்டாசியாடிஸ் ஆகியோருக்கிடையே சட்ட விரோத பணப்பரிவர்த்தனைகள் தடுப்பு, சுற்றுச் சூழல் துறையில் ஒத்துழைப்பு ஆகிய இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
குறிப்பு
இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் சைப்ரஸ் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
KAZIND – 2018 – இந்தியா மற்றும் கஜகஸ்தான் நாடுகளுக்கிடையேயான, பாதுகாப்பு துறைக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான, இரு நாடுகளின் இராணுவங்களிடையேயான போர் ஒத்திகை கஜகஸ்தான் நாட்டின் ஓடார் பகுதியில் செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 23 வரை நடைபெற உள்ளது.
இப்போர் ஒத்திகையானது இரு நாடுகளின் இராணுவத்திற்கிடையேயான 3வது பதிப்பாகும்.
குறிப்பு:
2வது பதிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு நிகழ்வுகள்
தென் கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஒம்பிரகாஷ் மிதர்வால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
செர்பியாவின் தமிர் மைக் என்பவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
குறிப்பு
பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இநதியாவின் அஞ்சும் முட்ஜில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment