Search

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [CURRENT AFFAIRS] 31.08.2018

Saturday, 1 September 2018


இந்தியா நிகழ்வுகள் பற்றி அறிவோம் : 




ராஜஸ்தான் மாநிலத்தின் ‘‘24 × 7 மின்சார வழங்கல்’ திட்டத்தின் கீழ் அதன் மின்சாரம் விநியோகத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் (Develop Policy loan) மத்திய அரசு, ராஜஸ்தான் மற்றும் உலக வங்கி கையெழுத்திட்டுள்ளது.


உலகின் மிகப்பெரிய வெளிப்படையான புதியனகாண் இயக்கத்தின் மூன்றாவது பதிப்பு – ஸ்மார்ட் இந்தியா ஹாகதான் 2019-(SIH) என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டிற்கான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புது டெல்லியில் தொடங்கி, வைத்தார்.
Smart India Hackathon 2019 (SIC- 2019)-ன் மூலம் நாட்டில் உள்ள தனியார், பொதுத்துறை தொழிற்சாலைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கேள்விகளுக்கு, இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப மாணவர்கள் தங்களது பதிலினை அனுப்ப ஒரு பிளாட்பார்ம் அமைத்துள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொணரவும் முடியும்.


மத்திய பிரதேச மாநிலத்தின் நீர்பாசன மறைகள் மற்றும் அவற்றின் திறன்களை அதிகரித்து அம்மாநிலத்தில் உள்ள ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க 375 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசு மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி(ADB) இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

குறிப்பு:
ADB – Asian Development Bank
ADB– டிசம்பர் 19, 1966ல் தொடங்கப்பட்டது.
 இதன் தலைமையகம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலாவில் உள்ளது.


உலக நிகழ்வுகள்  பற்றி அறிவோம் :


பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC – South Asian Association For Regional Cooperation) சார்பில், முதன் முதலாக விவசாய கூட்டுறவு வணிக மன்றம் (Agri Cooperative Business Form) நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்று வருகிறது.
இம்மன்றத்தின் கருப்பொருள்:
தெற்கு ஆசியாவின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்கு பண்னைகளை ஒழுங்கமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் (Organizing and Strengthening Family Farmers)
குறிப்பு: SAARC:
சார்க் அமைப்பானது டிசம்பர் 8, 1985ல் வங்காளதேசத்தின் டாக்கா நகரில் தொடங்கப்பட்டது.
இதன் தலைமையகம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ளது.
 Secretary General of SAARC – H.E. Mr. Amjad Hussain – B.Sail


விளையாட்டு நிகழ்வுகள்  பற்றி அறிவோம் :


இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்றுவரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு டிரிபிள் ஜம்ப் பிரிவில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் 16.77மீ தொலைவுத் தாண்டி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
உஸ்பெகிஸ்தான் வீரர் ரஸ்லன் குர்பனோவ் வெள்ளிப்பதக்கதையும் சீன வீரர் ஷீ காவோ வெண்கலத்தையும் கைப்பற்றினர்.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி அறிவோம்  : 


டெல்லியில் நடைபெற்ற Google for India – வின் நான்காவது பதிப்பில், இந்திய வட்டார செய்தி வெளியீட்டாளர்கள் ஆன்லைனில் அவர்களின் உள்ளடக்கத்தை வெளியிட உதவுவதற்காக ‘புராஜெக்ட் நாவலேகா’ என்னும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.


முக்கிய தினங்கள் பற்றி அறிவோம்  : 


தேசிய விளையாட்டு தினம் – ஆகஸ்ட் 29
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி இந்தியாவின் விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த்-ஐ கௌரவிக்கும் விதமாக அவர் பிறந்த நாளின் (ஆகஸ்ட் 29, 1905) நினைவாக தேசிய விளையாட்டு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வர்த்தக நிகழ்வுகள்


நடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும் என ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது.
ஜி.டி.பி கடந்த ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்தது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One