Search

Monday, 3 September 2018

🔰 வங்கிகள் தேசியமயமாக்கப்படல் :
சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா ஒரு
திட்டமிட்ட பொருளாதார மேம்பாட்டுக்
கொள்கையைக் கையாண்டது. இதற்காக 1951 ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்கள்
உருவாயின.


 பொருளாதாரத் திட்டமிடலின்
முதன்மை நோக்கம் சமூக நலமாகும்.
சுதந்திரத்திற்கு முன்னர் வணிக வங்கிகள் தனியார் வசமிருந்தன. இவ்வங்கிகள் அரசாங்கம்
திட்டமிடலுக்கான சமூக இலக்குகளை
அடைவதற்கு உதவி செய்யத் தவறின. ஆகையால் அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜீலை 19, 1969 அன்று தேசியமயமாக்க முடிவு செய்தது. 1980 ஆம் ஆண்டில், அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது.
தேசியமயமாக்கலின்நோக்கங்கள் :

1)  பின்வரும் நோக்கங்களை அடைவதற்காக இந்திய அரசு வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது.

2) தேசிய மயமாக்கலின் முதன்மையான நோக்கம் சமூக நலத்தை அடைவதேயாகும். வேளாண்மை, சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை
விரிவுபடுத்துவதற்கும், பொருளாதார
முன்னேற்றத்திற்கும் நிதி தேவைப்பட்டது.

3)  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் முற்றுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கும் சமூகத்தில் தேவையான பகுதிகளுக்கு
இலகுவாகக் கடன் அளிப்பதற்கும் பேருதவியாக இருந்தன.

🔰 இந்தியாவிலுள்ள மொத்த வங்கிகளில், 72.9% வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகவும்,
மீதமுள்ளவை தனியாரால் நிர்வகிக்கப்படும் வங்கிகளாகவும் உள்ளன. எண்ணிக்கைஅடிப்படையில் 27 பொதுத்துறை வங்கிகளும், 22 தனியார் வங்கிகளும் உள்ளன. தலைமைவங்கி இந்திய ரிசர்வ் வங்கி .

🔰 நிதி ஆயோக் :

திட்டக்குழு என்பதற்கு மாற்றாக " நிதி
ஆயோக் " என்னும் அமைப்பு 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இது நீடித்த நிலையான வளர்ச்சியை
மேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் செயல்படுத்தவும் செயல்படும். நிதி
ஆயோக் என்பது இந்திய அரசின்
திட்டங்களையும் கொள்கைகளையும்
கண்காணிக்கும் அறிவு மையமாகும். தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறைகளையும், புதிய
கொள்கைகளையும் ஏற்படுத்தவும், தனிப்பட்டபிரச்சினைகளுக்கான ஆதரவையும் தரும். இது சார்ந்த சாதனைகளை புரிந்து கொள்ளதனிப்பட்ட ஆராய்ச்சியை
மேற்கொள்ளவேண்டும். வெற்றி

🔰 முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951 - 1956)

� இது ஹாரேட் டாமர்(Harrod-Domar) மாதிரியைஅடிப்படையாக் கொண்டது.

� இதன் முதன்மை நோக்கம் நாட்டின்
வேளாண்மை முன்னேற்றமாகும்.

� இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கைவிட அதிகம்) வெற்றி பெற்றது.

 🔰 இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம்
(1956 - 1961)

� இத்திட்டம் PC மஹலநோபிஸ் (P.C. Mahalanobis) மாதிரியை அடிப்படையாக்க் கொண்டது

� இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதாகும்.

� இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.

 🔰 மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டம்
(1961 - 1966)

� இத்திட்டம் ”காட்கில் திட்டம்”  (Gadgil) என்றும் அழைக்கப்பட்டது.

� இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்
சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்.

� சீன - இந்தியப் போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6% ஐ அடைய இயலவில்லை.

 🔰 திட்ட விடுமுறை காலம் (1966 - 1969)

� இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியே இத்திட்டவிடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும்.

� இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள்உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார்
துறைகள் மற்றும் தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

🔰நான்காம் ஐந்தாண்டுத்திட்டம்
(1969 - 1974)

� இத்திட்டத்தின் இரண்டு முக்கிய நோக்கங்கள்நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதலாகும்.

� இத்திட்டம் அதன் இலக்கினை 5.7%
வளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை
மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

🔰ஐந்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (1974 - 1979)

� இத்திட்டத்தில் வேளாண்மை தொழில் துறைமற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமைவழங்கப்பட்டது.

� ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4% ஐ விட அதிகமாக 4.8% வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.

� இத்திட்டத்திற்கான முன் வரைவு D.P.தார்(DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978
ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே)
கைவிடப்பட்டது.

🔰சுழல் திட்டம்

1978-79 ஆம் ஆண்டு ஒரு வருட காலத்திற்காக இச்சுழல் திட்டம் தொடங்கப்பட்டது. இது ஐந்தாவது
ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கியது.

🔰ஆறாம் ஐந்தாண்டு திட்டம் (1980 - 1985)

� இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமைஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். ”வறுமை ஒழிப்பு ”  (GARIBI HATAO) என்பதேஇதன் இலட்சியமாகும்.

� இது முதலீட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டது.

� இத்திட்டதின் வளர்ச்சி இலக்கு 5.2% ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.

 🔰 ஏழாம் ஐந்தாண்டுத்திட்டம் (1985 - 1990)

� இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப்பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும்
ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல். ஆகியவற்றை உள்ளடக்கியது.

 � முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.

� இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.

🔰ஆண்டுத் திட்டங்கள்:

மைய அரசில் நிலையற்ற அரசியல்சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை
நடைமுறைப்படுத்த இயலவில்லை. எனவே 1990 - 91 மற்றும்
1991 - 92 ஆம் ஆண்டுகளுக்கு இரு ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

🔰எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992 - 1997)

� இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனித வள மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமைகொடுக்கப்பட்டது.

� இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கைஅறிமுகப்படுத்தபட்டது

� இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.6%. ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.

 🔰  ஒன்பதாம் ஐந்தாண்டுத்திட்டம்
(1997 - 2002)

� சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது

� இத்திட்டகால வளர்ச்சி இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை. இந்தியப் பொருளாதாரம் 5.6% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.

🔰  பத்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (2002 - 2007)

� இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.

� இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமைவிகிதத்தை 15% ஆக்க குறைக்கும் குறிக்கோளைக்
கொண்டிருந்தது.

� இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.0%. ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.

🔰 பதினொன்றாம் ஐந்தாண்டுத்திட்டம்
(2007 - 2012)

� இதன் முக்கிய நோக்கம் “விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்”

� இதன் வளர்ச்சி இலக்கு 8.1%. ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே.

 🔰 பனிரெண்டாம் ஐந்தாண்டுத்திட்டம்
(2012 - 2017)

� இதன் முதன்மை நோக்கம் ”விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே” ஆகும்.

� இதன் வளர்ச்சி இலக்கு 8% ஆகும்
சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஐந்தாண்டு
திட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன எனக் கொள்ளலாம். பற்றாக்குறையான வளங்களைப்பயன்படுத்தி, எவ்வாறு அதிகபட்ச பொருளாதாரப்
பலன்களைப் பெறலாம், என்று இத்திட்டங்கள்வழிகாட்டியுள்ளன. இந்திய அரசு ஐந்தாண்டுத்
திட்டங்கள் முறையை சோவியத் ரஷ்யாவிடமிருந்து எடுத்துக்கொண்டது என்று தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One