Search

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மொகலாயர் வருகை முக்கிய குறிப்புகள்

Wednesday, 19 September 2018

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - தலைப்பு- மொகலாயர்கள் வருகை.
# பாபர் பிறந்த ஆண்டு -கிபி 1483.
# பாபரின் தந்தை-உமர்  ஷேக் மிர்ஷா ( ஆசியாவில் உள்ள பர்கானா  பகுதியை ஆண்டவர்)
# பாபர் பர்கானா வின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது அவருக்கு வயது- 11 .
# முதல் பானிபட் போர்- கிபி1526 .
# முதலாம் பானிபட் போரில் தோற்கடிக்கப்பட்ட மன்னர்- இப்ராகிம் லோடி .
# முகலாயப் பேரரசின் அடித்தளத்தை இந்தியாவில் உருவாக்கியவர்- பாபர் .
# பாபர் ராணா சங்கவை போர்க்களத்தில் தோற்கடித்த ஆண்டு -1527 (கான்வா போர்க்களம் )
# பாபரின் சுயசரிதை எழுதப்பட்ட மொழி -துருக்கி.
# பாபாவின் சுயசரிதை  பாபரின் நினைவுகள் அல்லது துசிக்-கி- பாபரி.
# அக்பர் பிறந்த ஆண்டு மற்றும்  இடம்- கிபி 1542- அமரக்கோட்டை.
# உமாயூன் என்றால் பொருள் -அதிர்ஷ்டசாலி.
# அக்பரின் பாதுகாவலனாக விளங்கியவர்- பைராம்கான் .
# ஷெர்ஷா சூரி பிறந்த ஆண்டு- கி. பி1472-ஃபரித் .
# ஷெர்ஷா சூரி நிறுவப்பட்ட வம்சம்-சூர்  வம்சம்.
# ஷெர்ஷா சூரி நிர்வாக அமைச்சரவையில் 4 முக்கிய அமைச்சர்கள்
1 . திவானி -இ -விசாரத் ( வரவு மற்றும் செலவு பொறுப்பாளர்) .
2 . திவானி -இ -ஆரிஷ் ( இராணுவ பொறுப்பாளர்).
3. திவானி-இ -ரசலாத் ( வெளியுறவு மற்றும் தூதரக பொறுப்பாளர்)
4. திவானி-இ -இன்ஹா ( அரசு ஆணைகள் மற்றும் கடிதப் போக்குவரத்து பொறுப்பாளர்) .
# மொகலாயர் ஆட்சி காலத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் -ஷெர்ஷா
# முகலாயர் காலத்தில் நில உரிமை (பட்டா) விவசாயிகளுக்கு வழங்கியவர்- ஷெர்ஷா.
# நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர்- ஷெர்ஷா.
# டெல்லியில் புகழ்பெற்ற 'புராணா கில"  கட்டடத்தை உருவாக்கியவர்- ஷெர்ஷா.
# இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு கி-பி 1556.
# ஜிஸியா மற்றும் புனித பயணம் ரத்து செய்தவர் -அக்பர் 
# பாகவத புராணத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர்- ராஜா தோடர்மால்
# அக்பரின் அவையை அலங்கரித்த இசைஞானி- தான்சேன்.
# அக்பரின் புகழ்  பெற்ற வரலாற்று நூல்கள்- அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா.
# அக்பரின் சமயக் கொள்கை- தீன் இலாஹி.
# அக்பர்" இபாதத் கானா " தொழுகை இல்லத்தை கட்டி ஆண்டு கி.பி  1575.
# தவறுபடா  ஆணையை  பிரகடனப்படுத்தியவர்- அக்பர் .
# அக்பர் தீன் இலாஹி அல்லது தெய்வீக மதத்தினை  வெளியிட்ட ஆண்டு- 1582 .
# மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்- அக்பர் .
# குஜராத் வெற்றியின் நினைவாக அக்பர் கட்டிய கட்டடக் கலை -பதேபூர் சிக்ரி
# புலந்தார்வாசா  என்னும் நுழைவு  வாயில் முறையில் கட்டப்பட்ட அரசர் காலம்- அக்பர் காலம் .
# உலகினை வென்றவர் எனப் போற்றப்படுபவர் -ஜஹாங்கீர்.
#ஜஹாங்கீரின் சுயசரிதை- தூசுக் -இ -ஜஹாங்கிரி .
#நீதி சங்கிலி மணி யார் அரசன் காலத்தில் கட்டப்பட்டிருந்தது -ஜஹாங்கீர்.
# நீதி சங்கிலி மணி கட்டப்பட்ட  அரண்மனையின்  பெயர் -ஹாபர்ஜி .
# ஜஹான்கீரை  மணந்தவர் நூர்ஜகான் கி பி 1611.
# மெஹருன்னிஷா  சிறப்புப் பெயர் - நூர் மஹால் (அரண்மனை ஒளி).
# உலகின் ஒளி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர்- நூர்ஜஹான்.
#ஜஹாங்கிரின் மகன்- ஷாஜகான் கிபி 1592.
# உலகில் அரசன் என்று போற்றப்படுபவர்- ஷாஜஹான் 
# யாருடைய ஆட்சிக்காலத்தில் முகலாயர்களின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது -ஷாஜஹான்
# கட்டடக் கலையின் இளவரசர் மற்றும் பொறியாளர் பேரரசன் என்று அழைக்கப்பட்டவர் -ஷாஜகான்.
# வெள்ளை பளிங்கு கற்களால் ஆன ஜும்மா மசூதியைக் கட்டியவர்- ஷாஜஹான்
# தாஜ்மகாலை கட்டிய சசிற்பியின்  பெயர் உஸ்தாத் இஷா (22ஆண்டுகள் )
# மயில் ஆசனத்தை உருவாக்கி அதில் கோகினூர் வைரத்தை பதித்தவர் ஷாஜகான் .

1 comment

  1. Naan ketatuku inga answer kedikala naan romba sad a feel panren

    ReplyDelete

 

Most Reading

Tags

Sidebar One