Search

கலிங்கத்துப்பரணி பற்றி முழு தகவல்கள்

Saturday, 8 September 2018





நூல் குறிப்பு :

கலிங்கத்துப்பரணி ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற விரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி எனப்படும்.

96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல்.

கலிங்க மன்னன் அனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான்.

அவ்வெற்றியைப் போற்றி பாடப்பட்ட நூலான இது. தோல்வியுற்ற கலிங்கநாட்டின் பெயரால் அமைந்துள்ளது.

இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.

#பரணி_இலக்கியங்கள்:

தக்கயாகப் பரணி
இரணியன் வதைப் பரணி
பாசவதைப் பரணி
மோகவதைப் பரணி
வங்கத்துப் பரணி
திராவிடத்துப் பரணி
சீனத்துப் பரணிதிருச்செந்துர்ப் பரணி சூரன் வதைப் பரணி)

#ஆசிரியர்_குறிப்பு:

ஆசிரியர் : சயங்கொண்டார்

காலம் : கி.பி. 12-ஆம் நூற்றாண்டு

ஊர் : தீபங்குடி, திருவாரூர் மாவட்டம்

முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்.

இவர் இயற்றிய மற்ற நூல்கள் : இசையாயிரம், உலா மற்றும் மடல்
பரணிக்கோர் சயங்கொண்டார்" எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்

எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே என்றார் அறிஞர் அண்ணா.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One