Search

குரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழ் முக்கிய குறிப்புகள்

Thursday, 6 September 2018



* மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
* திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி
* பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்
* மதுரை என்பது - இடப் பெயர்
* மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது - தெற்குகோபுரம்
* பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது - முத்து
* மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் - செல்லத்தம்மன் கோயில்
* நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை
* மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்
* மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்
* பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு
* மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி
* மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்
* மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891
* சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19
* முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
* இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்
* நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் - பம்மல் சம்பந்தனார்
* மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்
* தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி
* தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி
* உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15
* உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது - கலீலியோ
* "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது - சந்திர கிரகணம்
* உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் - வாய்மை
* ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது - சார்பெழுத்து
* திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 430
* திரு.வி.க . பிறந்த ஊர் - தண்டலம்
* உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் - பள்ளு
* நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் - கி.பி.17
* அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு - கி.பி.18
* தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன - புராணக்கதைகள்
* குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது - நாயக்க மன்னர்கள் காலத்தில்
* ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் - ராசராசேச்சுவரம்
* மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் - மகோந்திரவர்ம பல்லவன்
* மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் - கி.பி. 7
* நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் - சிலப்பதிகாரம்
* தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு - நாட்டியம் என்று பெயர்
* கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது - அடியார்க்கு நல்லார்
* நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது - நாடகம்
* மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் - திரு.வி.க
* திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - வெஸ்லி பள்ளி
* அக இருளை போக்கும் விளக்கு - பொய்யா விளக்கு
* நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் - 72
* சார்பெழுத்துக்கள் எத்தனை வகை - 10
* அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது - முதுமொழிக்காஞ்சி
* முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 100
* மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
* நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் - மோசிக்கீரனார்
* முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 10
* முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்
* கற்றலை விட சிறந்தது - ஒழுக்கமுடைமை
* மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு - 1815
* வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு
* "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் - உள்
* "பால் பற்றி செல்லா விடுதலும்" என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் - ஒருபக்க சார்பு பற்றி
* காளமேகப் புலவர் பிறந்த ஊர் - நந்திக்கிராமம்
* சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் - சீனிவாச ராமானுஜம்
* ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் - துறைமுகம்
* ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு -இங்கிலாந்து
* ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் - 0

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One