Search

குரூப் 2தேர்விற்காக இந்தியாவில் உள்ள மின்சக்தி திட்டங்கள்

Monday, 17 September 2018

இந்தியாவில் மின்சக்தி திட்டங்கள்:

* இந்தியாவில் முதன்முதலாக 1902-ம் ஆண்டு காவிரி ஆற்றின் மீது கர்நாடகாவில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சிப் பகுதியில்தான் முதல் நீர்மின்சக்தித் திட்டம் துவங்கப்பட்டது.

* இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகருக்கு மின்சக்தி வழங்குவதற்காக துவங்கப்பட்டதுதான் டாடா நீர்மின்சக்தித் திட்டம்.

* தமிழகத்தில் பைக்காரா நீர்மின்சக்தித் திட்டமே முதல் திட்டமாகும்.

* இமயமலையின் வட பகுதியான மாண்டி என்னும் பகுதியில்தான் இந்தியாவின் முதல் திட்டம் துவங்கியது எனலாம்.

* மேட்டூர் திட்டம் - தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள ஸ்டான்லி அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

* கர்நாடகாவில் மலப்ரபா ஆற்றின் மீது மலப்ரபா திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் பெரியாற்றின் மீது இடுக்கி திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் சபரகிரி நதியில் 300 மெகாவாட் திறனுடன் சபரகிரி திட்டம் அமைந்துள்ளது.

* கோதாவரி மீது ஆந்திரப்பிரதேசத்தில் போச்சம்பேட் திட்டம் அமைந்துள்ளது.

* பலிமேளா திட்டம், உக்காயா திட்டம் - ஒரிசாவில் அமைந்துள்ளது.

* உத்திரப்பிரதேசம் ராம்கங்கா நதியின் மீது ராம்கங்கா திட்டம் அமைந்துள்ளது.

* ஒரிசாவில் மகாநதி மீது மகாநதி டெல்டா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* குஜராத்தில் தபதி ஆற்றின் மீது காக்ரபாரா திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசத்தில் நர்மதையின் துணை ஆறு தவா ஆற்றின் மாது தவா திட்டம் அமைந்துள்ளது.

* போங் அணை பியாஸ் நதியின் மீது பியாஸ் திட்டம் அமைந்துள்லது. இத்திட்டத்தால் பஞ்சாப், அரியானா மற்றும் இராஜஸ்தான் மாநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

* சலால் திட்டம் - ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் முரளி ஆற்றின் மீது மயூராக்ஷி திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான்,மகாராஷ்டிரா ஆகியவற்றால் நர்மதை மீது அமைக்கப்பட்டது - நர்மதா பள்ளத்தாக்குத் திட்டம்.

* நர்மதை நதி மீது சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது.

* இந்திய அரசு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட திட்டம் - தேரி மின்சக்தி திட்டம். இத்திட்டத்தின் நோக்கம் 2400 மெகாவாட் மின் உற்பத்தியே.

* ஃபராக்கா திட்டம் - இந்தியாவும் பங்காளதேஷூம் பயன்பெற்று வரும் திட்டம் ஃபராக்கா திட்டம். மேற்கு வங்காளத்தில் கங்கை நதி மீது அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமே கொல்கத்தாவிற்கு குடிநீர் வழங்கும் திட்டமாகும்.

* கெய்னா திட்டம் - இத்திட்டத்தால் மகாராஷ்டிரா மாநிலம் பயன்பெற்று வருகிறது. சமீபத்தில் நிலநடுக்கத்தால் இத்திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One