Search

202 உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்ணப்பிக்கலாம்

Thursday, 27 September 2018

202 உதவி ஆய்வாளர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி வரும் அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பதவிக்கான தேர்வுக்கு ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்களிடமிருந்து கணினி வழி விண்ணப்பங்களை வரவேற்கின்றது. விண்ணப்பதாரர்கள் இக்குழும www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் 1.7.2018 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (1.7.1990 அன்று அல்லது அற்கு பின்னர் பிறந்தவராகவோ, 1.7.1998 அன்று அல்லது முன்னர் பிறந்தவராகவோ இருத்தல் வேண்டும்).


பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு 30 வயது, ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினருக்கு 33 வயது, ஆதரவற்ற விதவை 35 வயது, முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப்படையினர் (பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்) 45 வயது, 20 சதவீதம் காவல் துறையினருக்கான ஒதுக்கீடு விண்ணப்பதாரர் (29.8.2018 அன்று 5 வருடங்கள் காவல் துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்) 45 வயது. விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதியாக பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது கல்வி நிறுவனத்திலிருந்து அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இணையதள விண்ணப்பம் பதிவேற்றம் துவங்கும் நாள் 29.8.2018, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.9.2018 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அக்டோபர் 13.10.2018ம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One