Search

TNPSC GROUP2 SCIENCE STUDY MATERIALS FOR 2018 FREE DOWNLOAD

Sunday, 26 August 2018


  1.  ஃபுளோயம் சூழ் சைலம் – பாலிபோடியம்
  2.  சைலம் சூழ் ஃபுளோயம் – அக்கோரஸ்

     
  3.  வேரின் அகத்தோல் பீப்பாய் வடிவ பாரன்கைமாவினால் ஆனது.
  4.  பக்க வேர்கள் – அகத்தோன்ற்றிகள் – பெரிசைக்க்கிளில் இருந்து
  5.  இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புறத்தோலிற்கு பதிலாக வருவது – பெரிடெர்ம்.
  6.  மனிதர்கள் தம் தேவைகளுக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு வேளாண்மை என்று பெயர்.
  7.  உலகிலேயே மிகவும் நீளமான பாசனகால்வாய் துர்க்மேனிஸ்தானிலுள்ள காராகும் (1300கிமீ)
  8.  நீரைத் தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரியது பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.
  9.  உலகில் உள்ள முதல் பத்து மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்று இந்தியாவில் உள்ள பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.
  10.  இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கால்வாய்களுள் ஒன்று இந்திராகாந்தி கால்வாய்
  11.  இந்திராகாந்தி கால்வாய் தொடங்கும் இடம் சுல்தான்பூர் எனும் ஊரிலுள்ள ஹரிகே பாரேஜ்
  12.  பூஞ்சை மற்றும் பாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி களைத் தாவரங்களை அழித்தலுக்கு உயிர்களைக் கொல்லிகள் என்று பெயர்.
  13.  தமிழக அரசு உழவர் சந்தை என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது.
  14.  நீண்ட நேரம் ஈரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள இயலாத மண் வகைகள் கொண்ட நிலத்தில் பயன்படுத்தும் நீர் பாசன முறை – தெளிப்பு நீர் பாசனம்
  15.  மழை குறைவாக கிடைக்கும் இடங்களில் பயன்படுத்தப்படும் நீர் பாசன முறை – சொட்டு நீர் பாசனம்
  16.  வயலானது நீரால் முழுமையாக நிரப்பப்படும் நீர் பாசன முறை – தேக்கு நீர் பாசனம்
  17.  வயல் வெளிகளில் பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள உழவுக்கால்(சால்) மூலமாக நீர் பாய்ச்சப்படும் நீர்பாசன முறை கால்வாய்ப் பாசனம்.
  18.  அடோலஸன்ஸ் (வளரிளம் பருவம்) என்கிற சொல் இலத்தீன் மொழியான அடொலஸ்ரே (வளர்ச்சி) என்னும் சொல்லில் இருந்து வந்தது.
  19.  உலக சுகாதார அமைப்பு 11-19 வயது வரையுள்ள பருவத்தை விடலைப் பருவம் என்று கூறுகிறது.
  20.  இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடைவதை பருவமடைதல் என்கிறோம்.
  21.  இனப்பெருக்க உறுப்புகளி்ன் வளர்ச்சி ஆண்களுக்கு 14 முதல் 15 வயதிலும்,பெண்களுக்கு 11 முதல் 12 வயதிலும் முதிர்ச்சியடைகிறது.
  22.   குரல் வளை ஆடம்ஸ் ஆப்பிள் என்று கூறப்படுகிறது.
  23.  சுரப்பி என்பதன் பொருள் ஏதாவது ஒன்றைச் சுரத்தல் ஆகும்.
  24.   நம்மிடம் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள்: 1. பிட்யூட்டரி 2. தைராய்டு 3. கணையம் 4. அட்ரீனல் 5. விந்தகம்(ஆண்) 6.அண்டகச் சுரப்பி(பெண்)
  25.  தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது – பிட்யூட்டரி சுரப்பி
  26.  உடலில் உள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிட்யூட்டரி சுரப்பி
  27. பிட்யூட்டரி சுரப்பி சில நேரங்களில் வயது முதிர்ந்தவுடன் அதிகமாக சுரந்தால் அதனை அக்ரோ மெகாலி
  28. மூளையின் கீழ் பாகத்தில் பிட்யூட்டரி அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One