Search

HISTORY OF THE DAY 31.08.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD

Thursday, 30 August 2018

நிகழ்வுகள்

  1. 1422 – ஆறாம் ஹென்றி 9 மாத அகவையில் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
  2. 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகர் மீது தாகுதலைத் தொடுத்தனர்.
  3. 1886 – தென் கரோலினாவில் சார்ல்ஸ்டன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
  4. 1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.
  5. 1897 – தொமஸ் எடிசன் முதலாவது திரைப்படம் காட்டும் கருவியான கினெட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்.
  6. 1919 – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
  7. 1920 – போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்ஷெவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.
  8. 1942 – மேற்கு உக்ரைன், டெர்னோப்பில் என்ற இடத்தில் காலை 4:30 மணிக்கு 5,000 யூதர்கள் பெல்செக் என்ற நாசி வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
  9. 1945 – ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
  10. 1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்றது.
  11. 1962 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து திரினிடாட் டொபாகோ விடுதலை பெற்றது.
  12. 1968 – கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார்.
  13. 1978 – இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
  14. 1986 – கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.
  15. 1986 – சோவியத் பயணிகள் கப்பல் “அட்மிரல் நகீமொவ்” கருங்கடலில் மூழ்கியதில் 423 பேர் கொல்லப்பட்டனர்.
  16. 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடாக அறிவித்தது.
  17. 1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
  18. 1997 – வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.
  19. 1998 – வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது.
  20. 1999 – புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
  21. 2005 – பக்தாத்தில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 1,199 பேர் கொல்லப்பட்டனர்.
  22. 2007 – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத் குமார் ஆரம்பித்தார்.




பிறப்புக்கள்

  1. 1569 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசின் மன்னன் (இ. 1627)
  2. 1870 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலியக் கல்வியாளர் (இ. 1952)
  3. 1905 – எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (இ. 2000)
  4. 1944 – கிளைவ் லொயிட், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாளர்
  5. 1979 – யுவன் சங்கர் ராஜா, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்


இறப்புகள்

  1. 1814 – ஆர்தர் பிலிப், பிரித்தானிய கடற்படை அட்மிரல், காலனித்துவ நிர்வாகி (பி. 1738)
  2. 1963 – ஜோர்ஜெஸ் பிராக், பிரெஞ்சு ஓவியர் (பி. 1882)
  3. 1997 – டயானா, வேல்ஸ் இளவரசி (பி. 1961)
  4. 2001 – ஜி. கே. மூப்பனார் தமிழக காங்கிரஸ் தலைவர் (பி. 1931)



சிறப்பு நாள்

  1. மலேசியா – விடுதலை நாள் (1957)
  2. திரினிடாட் டொபாகோ – விடுதலை நாள் (1962)
  3. கிர்கிஸ்தான் – விடுதலை நாள் (1991)

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One