நிகழ்வுகள்
- 70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.
- 1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.
- 1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- 1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார்.
- 1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆத்திரேலியாவில் மூழ்கியதில் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
- 1813 – கூல்ம் நகர சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆத்திரிய-புருசிய-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.
- 1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
- 1835 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
- 1896 – பிலிப்பீனியப் புரட்சி: சான் யுவான் டெல் மொண்டே சமரில் எசுப்பானியா வெற்றி பெற்றதை அடுத்து, பிலிப்பீன்சின் எட்டு மாகாணங்களில் எசுப்பானிய ஆளுநர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
- 1914 – முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.
- 1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
- 1922 – கிரேக்கத்-துருக்கியப் போரின் இறுதிச் சமர் தும்லுபினாரில் இடம்பெற்றது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: அலம் ஹல்பா சண்டை எகிப்தின் அருகே ஆரம்பமானது.
- 1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
- 1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.
- 1974 – டோக்கியோவில் மிட்சுபிசி தொழிற்சாலையில் குண்டு ஒன்று வெடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 378 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 1975 மே 19 இல் எட்டு இடதுசாரி செய்ற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
- 1981 – ஈரானில் அரசுத்தலைவர் முகம்மது-அலி ராஜாய், பிரதமர் முகம்மது-யாவாத் பகோனார் ஆகியோர் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டனர்.
- 1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
- 1990 – தர்தாரிஸ்தான் உருசிய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. உருசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.
- 1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1992 – மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
- 1995 – பொசுனியப் போர்: நேட்டோ படைகள் பொசுனிய செர்பியர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தன.
- 1999 – கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- 2014 – லெசோத்தோவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றதை அடுத்து பிரதமர் டொம் தபானி தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.
பிறப்புகள்
- 1748 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825)
- 1797 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)
- 1850 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)
- 1852 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (இ. 1911)
- 1869 – ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (இ. 1910)
- 1871 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)
- 1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)
- 1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)
- 1903 – பகவதி சரண் வர்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1981)
- 1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)
- 1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்
- 1936 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1954 – அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசின் 1வது அரசுத்தலைவர்
- 1954 – டி. கே. எஸ். இளங்கோவன், தமிழக அரசியல்வாதி
- 1954 – இரவி சங்கர் பிரசாத், இந்திய அரசியல்வாதி
- 1963 – ஆனந்த் பாபு, இந்தியத் திரைப்பட நடிகர்
- 1972 – கேமரன் டியாஸ், அமெரிக்க நடிகை
- 1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை
- 1982 – ஆண்டி ரோடிக், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்
இறப்புகள்
- 1181 – மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)
- 1329 – குதுக்து கான், சீனப் பேரரசர் (பி. 1300)
- 1659 – தாரா சிக்கோ, முகலாய இளவரசன் (பி. 1615)
- 1877 – தோரு தத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1856)
- 1928 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1864)
- 1940 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1856)
- 1957 – என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)
- 1963 – டி. ஆர். சுந்தரம், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1907)
- 1988 – கே. வி. எஸ். வாஸ், இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1912)
- 1995 – எஸ். எஸ். கணேசபிள்ளை, ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937]])
- 2001 – ஜி. கே. மூப்பனார், தமிழக அரசியல்வாதி (பி. 1931)
- 2001 – கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)
- 2004 – பிரெட் இலாரன்சு விப்பிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1906)
- 2006 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (பி. 1911)
- 2008 – கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1918]])
- 2014 – பிபன் சந்திரா, இந்திய வரலாற்றாளர் (பி. 1928)
- 2015 – மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி, இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1938)
- 2015 – ஆலிவர் சாக்சு, ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் (பி. 1933)
சிறப்பு நாள்
அனைத்துலக காணாமற்போனோர் நாள்
No comments:
Post a Comment