Search

கல்பனா சாவ்லா விருது பற்றிய முக்கிய தேர்வு குறிப்புகள்

Friday, 24 August 2018

 கல்பனா சாவ்லா விருது பற்றிய முக்கிய தேர்வு குறிப்புகள் : 

-  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -
விண்வெளி வீரங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக தமிழ்நாட்டில் வீர, தீர, சாகசச் செயல் புரியும்  பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சுதந்திரத் தினத்தன்று முதலமைச்சரால் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

 *2018 : கட்டையால் சிறுத்தையை விரட்டிய கோவை மாவட்டம் வால்பாறை - பெரியகல்லார் கிராமத்தை சேர்ந்த முத்துமாரி

* 2017: செல்வி. பிரீத்தி, மாற்றுத் திறனாளி, திருவண்ணாமலையில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

* 2016 : ஜெயந்தி,  மயான பணியாளர், நாமக்கல் மாவட்டம்

* 2015 : ஜோதிமணி, ஈரோடு, பார ஊர்தி ஓட்டுநர்

* 2014 : ஆர். பொன்னி,  துணிச்சலான காவல் துறை அதிகாரி

* 2013 : சுகி பிரமிளா, வட்டாட்சியர், நாகர்கோவில். உணவுப் பொருட்கள் கடத்தலை தடுத்தவர்

* 2012:  ராஜலட்சுமி, அவரின் மகள் சிவரஞ்சனி, திருடனை பிடித்தவர்கள், கடலூர் மாவட்டம்.

* 2011 : எஸ். சங்கீதா,  வருவாய் கோட்ட அலுவலர், திருச்சி

* 2010 : ஜெ.தீபா, மாற்றுத் திறனாளி குண்டு எறிதல் வீராங்கனை, மதுரை

* 2009 : டாக்டர் ராஜ மகேஷ்வரி (சென்னை மருத்துவர்),  ராஜலட்சுமி (மதுரை தடகள வீராங்கனை), புஷ்பாஞ்சலி (உறுப்புதானம் அளித்த ஹிதேந்திரன் தாயார், திருக்கழுக்குன்றம்)

* 2008 : பி.ஜோதி நிர்மலா ஐ.ஏ.எஸ்.  பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ வாக இருந்தபோது மணல் கொள்ளையை தடுத்ததற்காக.

* 2007 : நிர்மலா பால்சாமி

* 2006 : வசந்தா கந்தசாமி, சென்னை ஐ.ஐ.டி கணித பேராசிரியை.

* 2005 : மீரா, சுல்தான்பேட்டை, சுனாமியின் போது பலரை காப்பாற்றியவர்.

* 2004 : அமலமேரி, கன்னியாகுமரி, ரெயில் விபத்தை தடுத்தவர்.

* 2003 :ரேஷ்மா சர்மா, கராத்தே வீராங்கனை

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One