- ஃபுளோயம் சூழ் சைலம் – பாலிபோடியம்
- சைலம் சூழ் ஃபுளோயம் – அக்கோரஸ்
- வேரின் அகத்தோல் பீப்பாய் வடிவ பாரன்கைமாவினால் ஆனது.
- பக்க வேர்கள் – அகத்தோன்ற்றிகள் – பெரிசைக்க்கிளில் இருந்து
- இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புறத்தோலிற்கு பதிலாக வருவது – பெரிடெர்ம்.
- உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது – மண்புழு
- கணுக்காலிகளின் புறச்சட்டகம் எதனால் அமைக்கப்பட்டது – கைட்டின்
- கணுக்காலிகளின் இரத்தம் ஏ வெள்ளை நிறமாக உள்ளது – ஈமோகுளோபின் இல்லாததால்
- ஆக்டோபஸ் என்ற உயிரினம் உள்ள தொகுதி – மெல்லுடலிகள்
- விலையுயர்ந்த முத்துக்களை உருவாக்கும் முத்துச் சிப்பியினம் இருக்கும் தொகுதி – மெல்லுடலிகள்
- முட்தோலிகள் எதன் மூலம் இடப்பெயர்ச்சி அடைகின்றன – குழல் கால்கள்
- பறக்கும் தன்மையற்ற பறவை – ஆஸ்ட்ரிச் எனப்படும் நெருப்புக்கொழி
- பறக்கும் தன்மையற்ற பாலூட்டி – வெளவால்
- மனிதனின் விலங்கியல் பெயர் – ஹோமோசேப்பியன்ஸ்
- ஆந்த்ரோபாலஜி என்பது – மனித இனத்தைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு
- தாவரங்களின் புறத்தோற்றத்தைப் பற்றி விளக்கும் அறிவியல் பிரிவு – தாவர புற அமைப்பியல்
- செல்லின் சைட்டோபிளாசத்தில் பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்கு செல் நுண்ணுறுப்புகள் என்று பெயர்
- எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலைக் கண்டறிந்தவர் – போர்ட்டர் (1945-ல்)
- எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் எனப் பெயரிட்டவர் – போர்ட்டர் (1945-ல்)
- சில மனித செல்களும் அவற்றின் பணிகளும் தட்டு எபிதீலியம் – வடிவம் மற்றும் பாதுகாப்பு
- தசை செல்கள் – சுருங்கி விரிதல்
- கொழுப்பு செல்கள் – கொழுப்புகளைச் சேமிக்க
- நரம்பு செல்கள் – நரம்புத் தூண்டலைக் கடத்தல்
- எலும்பு செல்கள் – உறுதி மற்றும் உடலைத் தாங்கவும்
- கூம்பு மற்றும் குச்சி செல்கள் – பார்வை மற்றும் நிறத்தை உணர
- நத்தை கூடு செல்கள் – ஒலி அலைகள் உணர்வதற்கு
- சுரப்பி செல் – சுரத்தல்
- வேதியில் அமைப்பினை ஆராய்ந்து 2009-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்ற மூன்று அறிவியல் அறிஞர்கள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(இந்தியா), தாமஸ் ஸ்டெய்ஸ்(அமெரிக்கா), அடாயத்(இஸ்ரேல்)
- செல்லின் முக்கிய துணை நுண்ணுருப்பு – உட்கரு
- இரத்த செல்களின் மூன்று வகைகள்: 1. இரத்தச் சிவப்பு அணுக்கள் (எரித்ரோசைட்) 2. இரத்த வெள்ளை அணுக்கள் (லீயூகோசைட்டுகள்) 3. இரத்தத் தட்டுகள் (த்ரோம்போசைட்டுகள்)
- நமது உடலின் காவல் படை – இரத்த வெள்ளை அணுக்கள்
- ஹீமோகுளோபின் எனும் சுவாச நிறமியைப் பெற்றுள்ள இரத்த செல் வகை இரத்தச் சிவப்பு அணுக்கள்
- மனிதர்கள் தம் தேவைகளுக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு வேளாண்மை என்று பெயர்.
- உலகிலேயே மிகவும் நீளமான பாசனகால்வாய் துர்க்மேனிஸ்தானிலுள்ள காராகும் (1300கிமீ)
- நீரைத் தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரியது பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.
- உலகில் உள்ள முதல் பத்து மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்று இந்தியாவில் உள்ள பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.
- இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கால்வாய்களுள் ஒன்று இந்திராகாந்தி கால்வாய்
- இந்திராகாந்தி கால்வாய் தொடங்கும் இடம் சுல்தான்பூர் எனும் ஊரிலுள்ள ஹரிகே பாரேஜ்
- பூஞ்சை மற்றும் பாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி களைத் தாவரங்களை அழித்தலுக்கு உயிர்களைக் கொல்லிகள் என்று பெயர்.
- தமிழக அரசு உழவர் சந்தை என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது.
- நீண்ட நேரம் ஈரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள இயலாத மண் வகைகள் கொண்ட நிலத்தில் பயன்படுத்தும் நீர் பாசன முறை – தெளிப்பு நீர் பாசனம்
- மழை குறைவாக கிடைக்கும் இடங்களில் பயன்படுத்தப்படும் நீர் பாசன முறை – சொட்டு நீர் பாசனம்
- வயலானது நீரால் முழுமையாக நிரப்பப்படும் நீர் பாசன முறை – தேக்கு நீர் பாசனம்
- வயல் வெளிகளில் பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள உழவுக்கால்(சால்) மூலமாக நீர் பாய்ச்சப்படும் நீர்பாசன முறை கால்வாய்ப் பாசனம்.
- அடோலஸன்ஸ் (வளரிளம் பருவம்) என்கிற சொல் இலத்தீன் மொழியான அடொலஸ்ரே (வளர்ச்சி) என்னும் சொல்லில் இருந்து வந்தது.
- உலக சுகாதார அமைப்பு 11-19 வயது வரையுள்ள பருவத்தை விடலைப் பருவம் என்று கூறுகிறது.
- இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடைவதை பருவமடைதல் என்கிறோம்.
- இனப்பெருக்க உறுப்புகளி்ன் வளர்ச்சி ஆண்களுக்கு 14 முதல் 15 வயதிலும், பெண்களுக்கு 11 முதல் 12 வயதிலும் முதிர்ச்சியடைகிறது.
- குரல் வளை ஆடம்ஸ் ஆப்பிள் என்று கூறப்படுகிறது.
- சுரப்பி என்பதன் பொருள் ஏதாவது ஒன்றைச் சுரத்தல் ஆகும்.
- நம்மிடம் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள்: 1. பிட்யூட்டரி 2. தைராய்டு 3. கணையம் 4. அட்ரீனல் 5. விந்தகம்(ஆண்) 6.அண்டகச் சுரப்பி(பெண்)
- தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது – பிட்யூட்டரி சுரப்பி
- உடலில் உள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிட்யூட்டரி சுரப்பி
- பிட்யூட்டரி சுரப்பி சில நேரங்களில் வயது முதிர்ந்தவுடன் அதிகமாக சுரந்தால் அதனை அக்ரோ மெகாலி
- மூளையின் கீழ் பாகத்தில் பிட்யூட்டரி அமைந்துள்ளது.
- தொண்டை பகுதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள சுரப்பி தைராய்டு சுரப்பி
- வளர்ச்சி, சுவாசம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தைராய்டு சுரப்பி
- குழந்தைகளுக்கு தைராக்ஸின் சுரப்பி குறைவாக சுரப்பதால் ஏற்படும் நோய் – கிரிடினிஸம்.
- நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மைகளை உடையது கணையம்
- இன்சுலின் குறைபாட்டினால் வரும் நோய் நீரிழிவு நோய்
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும் ஹார்மோன்கள் குளுக்கான், இன்சுலின்
- விந்தகம் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனையும், ்ண்டகம் ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனையும் சுரக்கிறது.
- தைராய்டு சுரப்பி சார்ந்த நோய்களைத் தடுக்க உதவுவது அயோடின்
- இரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படும் நோய் அனீமியா.
- 80 விழுக்காடு புற்றுநோய் புகைத்தலால் வருபவை
- ஒர் உயிருள்ள நொதிகள் நிறைந்த, குறைவான கலோரிகளையுடைய இயற்கை உணவு முளைப்பயிர்
- சாதாரணமாக செல்கள் ஒர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் ிறக்கும் சுழற்சி முறைக்கு அபோப்டாசிஸ் என்று பெயர்.
- ஒவ்வொரு சிகரெட்டும் புகைக்கும் போதும், அதிலுள்ள நிகோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடும் மேலும் 400 வேதிப்பொருள்கள்
- மரணத்தை விளைவிக்கக் கூடிய திடீர் மாற்றக் காரணிகளாகவும் 40 வகையான புற்றுநோய்க்கு காரணிகளாகவும் அமைகிறது.
- நம் உடலில் எல்லா இயக்கங்களும் தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே ஆகும்.
- எலும்பின் மையத்தில் எடைக்குறைவானதும் மிருதுவானதுமான உறிஞ்சும் தன்மையுள்ள கடற்பஞ்டு போன்ற பொருள் எலும்பு மஞ்சை எனப்படும்.
- பிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது – சீனோப்சில்லா
- பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா – எர்சினியாபெஸ்டிஸ்
- இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் – இவியா பிரேசியன்சிஸ்
- இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் – கிறிஸ்டோபர் கொலம்பஸ்
- இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர் – ஜோசப் பிரிஸ்ட்லி
- இரப்பர் தாவரத்தின் தாயகம் – தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு
- தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இர்ப்பர் சாகுபடி நடைபெறுகிறது – கன்னியாகுமரி
- இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர் – லேடக்ஸ்
- இட்லி பூவின் தாவரவியல் பெயர் – இக்சோரா
- மகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர் – மகரந்தச் சேர்க்கை
- ஒரு மலரின் மகரந்தத் தூள் அதே மலரின் சூலகத்தை சென்றடைவதன் பெயர் – தன் மகரந்தச் சேர்க்கை
- ஒரு மலரின் மகரந்தத் தூள் வேறு மலரின் சூலகத்தைச் சென்றடைவதன் பெயர் – அயல் மகரந்தச் சேர்க்கை
- யூக்கா எனப்படும் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எதன் மூலம் – பூச்சிகளின் மூலம்
- காற்றினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் – முருங்கை, பருத்தி, எருக்கு
- நீரினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் – தேங்காய்
- விலங்குகளினால் விதைகள் பரவுவதற்கு உதாரணம் – நாயுருவி
- விலங்குகளின் கழிவின் மூலம் விதை பரவுதலுக்கு உதாரணம் – கருவேல்
Search
TNPSC GROUP2 SCIENCE STUDY MATERIALS 2018 DOWNLOAD
Thursday, 30 August 2018
Tags:
SCIENCE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment